என்னவனே சரவணா! வேலவா! [LOVE POETRY MURUGHA]


ELECTION REST GOD "KANTHA"BEAUTIFUL SPIRITUAL LOVE POETRY:-



சண்டை சச்சரவின்றி வளமான வாழ்வை அருளும் வரமான பழம்பெரு பகவான் என்னவனே சரவணா! சுப்ரமணியா! குமரா! வேலவா! மயில்வாகனா! சண்முகா! கந்தா! ஸ்ரீ முருக பெருமானே! "முருகனையே நேசிஅவனையே வாசிஅவன் பக்தியையே சுவாசிஓம் சரவண பவ!" என்று இருப்பவனையா! EXCELLENT DIVINITY LOVE POETRY LORD MURUGHA★புரட்சி கவிஞர் Valavanur V.ரா.SivaSaravanaLingam Chettiyar B.A.,B.E.,D.M.E.,

ஓம் சரவண பவ

வைராவீராராச என்று பல பெயர்களுடன்ஒரு பெயராய்ஓர் மனிதராய் என்னுள் கொண்டு உங்களில் ஒருவனாய் ஓர் Messenger ஆக கட்டுரை வாயிலாக All In One ஆக வரார் JMN -ன் ரிதம் F.M 605 108-ல் justicemayel.blogspot.com தளத்தின் வாயிலாக அஸ்திவாரங்களாகிய  வாசகர்களேஎன் கட்டுரை எதுவும் ending அல்ல அது மனதிற்கான Begining ஆகும்.


இந்த கவிதை எனக்குள் வந்ததே ஒரு சுவாரஸ்யமான நிகழ்வு தான்.  அதாவது கவுண்டமணி ஐய்யப்பன் சன்னதியில் இருந்து ஈஸ்வரன் வருகிறார் என்பது போன்ற ஒன்று.  அதாவது காளி தெய்வத்தை பற்றி கவிதை எழுதலாம் என்று எண்ணினால் என்ன எழுதுவது என்று யோசித்து கொண்டிருந்தேன்.  ஒன்றுமே புலப்படவில்லை [ஏனென்றால் கவிதை என்பது நம் விருப்பத்திற்கு எப்போதும் வேண்டுமென்றாலும் தோன்றாது.  தோன்றும் போதே தற்போது உள்ள டிஜிட்டல் பேனாவில் எழுதினால் தான் உண்டு. எழுதாமல் விட்டால் அது நம்மை விட்டு சென்றுவிடும்.  வேறு வரி கவிதை தான் எழுத முடியும்].  சில நாட்கள் கடந்து இரவு 2 மணிக்கு திடிரென்று கவிதைகள் ஆக கொட்டுகிறது.  யாருடையது என்றால் முருகருடைய கவிதைகள்.  என்னடா இது "காளி தெய்வத்தை" எழுத நினைத்தால் "முருகர் உள்ளே வந்து எழுதுடா" என்கிறார் என்று டிஜிட்டல் பேனாவில் டிஜிட்டல் பேப்பரில் எழுதிய கவிதைகளே இவைகள்.


பக்தி பரவசத்துடன் மூக்கு மேல் விரல் வைக்கும் அழகான 
 ஏழு வரி  கவிதைகள்


சண்டை சச்சரவின்றி வளமான வாழ்வை அருளும் வரமான பழம்பெரு பகவான் என்னவனே சரவணா! சுப்ரமணியா! வேலவா! மயில்வாகனா! சண்முகா! ஸ்ரீ முருக பெருமானே!  

1★

ஸ்ரீ வேலவா! என்னை காக்கவா! என்னவனே முருகா! உன்னையே நினைத்து உருகுபவனிடம் ஓடோடி வா! என்னவனே முருகா! கார் இருளுக்கு ஓர் வெளிச்சமாய் வந்த என்னவனே! கார்த்திகேயா! எங்கள் மன இருளை போக்க வா! என்னவனே முருகா! என் வாழ்வில் பூத்து  குலுங்கும் ஆனந்தத்தை வரமாக தர வா! என்னவனே முருகா! என் குடும்பத்தில் உன் குழந்தை சிரிப்பை நிறைக்க வா! என்னவனே முருகா! சீக்கிரமாக பறந்து வா! என்னவனே மயில்வாகனா!

2★

ஆறு படை வீட்டில் உன்னை கண்ட தரிசனத்தில்   தீரா பக்தியில் மயங்கி சுருண்டு கிடக்கும் என்னை காக்க வைக்காதே! என்னவனே ஆறுமுகா! விரைந்து வா! என்னவனே! சிவனுக்கே உபதேசித்த என்னவனே சிவமுருகா! எனக்கும் உபதேசி! என்னவனே சண்முகா! ஞான பழத்திற்காக உலகையே சுற்றியவனே! என்னவனே குமரா! உன்னையே சுற்றும் இந்த அடியேனையும் கண்டு கொள்ளப்பா! என்னவனே முருகா! தேவ லோகத்தின் சேனாபதியே! என்னவனே! முருகசேனா!

3★

என்னவனே வேலவா!  என்னவனே மயில்வாகனா! என்னவனே சரவணா! வீரம் நிறைந்த என்னவனே! V.ரா.சரவணா! வைரம் போல் மின்னுபவனே! என்னவனே! வை.ரா.சரவணா! என்னவனே! சரவணலிங்கா! என்னவனே சிவமுருகா!

4★

அப்பனுக்கே பாடம் எடுத்த  என்னவனே! முருகப்பா! என் மீதும் கரிசனம் கொள்ளப்பா! உனக்காகவே வாழ்கிறேனப்பா! உன்னை மட்டுமே துதிக்கிறேனப்பா! உன்னை மட்டுமே நினைக்கிறேனப்பா! உன் தரிசனத்தை எனக்கு அருளப்பா! வேல் கொண்டு என் ஜென்ம வினையை அகற்றப்பா!

5★

வேல் கொண்டு என் இன்னல்களை நொடியில் மின்னல் போல போக்கப்பா! என்னவனே சரவணா! வேல் கொண்டு என்னை காத்து நில்லப்பா! என்னுடைய காவலா! என்னவனே சரவணா! வேண்டுவது உன்னிடம் மட்டுமே! என்னவனே சரவணா! சரண் புக நினைப்பது உன்னிடம் மட்டுமே! என்னவனே சரவணா! பக்தியில் கரைவது உன்னிடம் மட்டுமே! என்னவனே சரவணா! காவடி சுமப்பது உன் சேவடி அடையவே! என்னவனே சரவணா! வேல் அலகு குத்தி கொள்வது உனக்காகவே! என்னவனே சரவணா! 

6★

நேர்த்தி கடன் செலுத்துவது நேர்த்தியான உன்னை நேரில்  காணவே! என்னவனே சரவணா! உத்திராட நட்சத்திரத்தில் பிறந்தவனே! எனக்கான உத்திரமாய் இருப்பவனே! என்னவனே சரவணா!  கார்த்திகை பெண்களிடம் வளர்ந்தவனே! கார்த்திகை நட்சித்திரமாய் ஒளிர்பவனே! என்னவனே கார்த்திகேயா! என் வாழ்வின் செங்கதிர் நீயே! என்னவனே கதிரேசா! மயிலை மலையில் மயிலைநாதனாக வீற்றிருப்பவனே! என்னவனே மயில்வாகனா! என் வாழ்விற்கான திவ்யமான செந்தூரத்தை அருள திருச்செந்தூரில் வீற்றிருப்பவனே! என்னவனே முருக செந்தூரா! உன்னுடைய பஞ்சாமிர்த பிரசாதம் எனக்கான தெகிட்டா அமுதம் அமிர்தம்  என்னவனே ஸ்ரீ முருகா!

7★

 வளமுடன் வாழ்வை அருள வளவனூரில் சுப்ரமணியனாய் வீற்றிப்பவனே! என்னவனே சுப்ரமணியா! பழம்பெரு பகவானாக பழனியில் அருள்பாலிப்பவனே! என்னவனே பழனிசாமியே! தருமத்தை நிலைநாட்டுபவனே! என்னவனே தண்டாயுதபாணியே! கிருத்திகை நட்சத்திரத்தில் பல கிருபைகளை வழங்குபவனே! என்னவனே கிருபா! சூரனை வென்ற தேவ சூரா! உன்னில்  என்னை கலக்க நான் என்றுமே கலக்கமடைந்ததில்லை! என்னவனே திருமுருகா! யாமிருக்க பயமேன் என்று எங்களின் தைரியமாய் இருப்பவனே! என்னவனே சக்தி வேலா! கந்த வேலா! உனக்கு அரோகரா! 

 

யாரும் கண்டு கொள்ளாதீர்! இது முருகனுக்கும் எனக்கும் உள்ள பக்தி பஞ்சாயத்து:-

உன்னை பற்றி எழுத எனக்கு அருள் புரிந்ததற்கு கோடான கோடி நன்றியப்பா! என்னவனே சரவணா! இந்த பெயரை அதிகமாக உச்சரித்திருப்பேன் என்னவனே முருகா! அதை கண்டுகொள்ளாதேயப்பா! ஏனென்றால் அது என் பெயரப்பா! உன்னோடு உன் பெயரில் என்னுயிராய் நீ கலந்துள்ளாய்யப்பா! அரசியலில் இதெல்லாம் சகஜம் என்பது போல் கவிதை எழுதும் போதும் இதெல்லாம் சகஜமப்பா! கவிதை எப்படி இருக்கிறதப்பா! என்னவனே முருகா!

நீயும் லொள்ளு பிடித்தவன் தான்! நானும் லொள்ளு பிடித்தவன் தான்! ஆனால் ஜொல்லு உன்னை போன்ற தெய்வங்களிடம் மட்டுமே கவிதை வடிவில் விட்டிருக்கிறேன் என்னவனே! உன்னை போலவே நானும் காதலித்தால் காதலிலும் விட வாய்ப்பு இருக்கிறது என்னவனே! அது காதலுக்காக என்னவனே! காதலும் கடவுள் போன்று புனிதமானது தானே இறைவா! உன்னிடம் பொய் கூற கூடாது என்பதால் தான் இதை உரைக்கிறேன் என்னவனே முருகா! நன்றி சிவமுருகா! முருகசேனா! முருக பெருமானுக்கு அரோகரா!

"முருகனையே நேசி! அவனையே வாசி! அவன் பக்தியையே சுவாசி! ஓம் சரவண பவ!"

THIS IS THE EXCELLENT DIVINITY POETRY FOR LORD MURUGHA. 

https://justicemayel.blogspot.com/2020/11/justicemayelblogspotcom.html