உன்னை கண் தேடுதே ஜெய் அங்காளி [Keep Your Eyes Peeled JaiAngali]

 


 Welcome To வாசகர்கள்

நீதி மயில் செய்திகள் (செம நீதி மக்களுக்கு செம தீநி)

Justice Mayil News (JMN)-ன் ரிதம் F.M 605 108-ன் Frequency -லிருந்து வரும் ஆர்டிக்கல் எப்போதும் Mass ஆக  அதிரவைக்கும் ஷாக்காக

.

      ALL  IN  ONE  SARAVANA 200


JUSTICE MAYIL News (JMN) மூலம்  கட்டுரையானது பெயருக்கு தகுந்தாற்  போல் நீதியானது மயில்(Mayil) வழியாக பறந்து சென்று உலகமே பார்த்து ,படிக்கிறது.

இதற்கு காரணம் வாசகர்களாகிய நீங்கள்.

ஆதலால் வாசகர்களாகிய  பத்திரிக்கையாளர்கள், அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், Lawyers, Auditors, IAS அதிகாரிகள், IPS அதிகாரிகள், பல Company அதிகாரிகள்அரசு அதிகாரிகள், App Developers, Yahoo and HOT Mail, Google, Blogspot M.D மற்றும் ஊழியர்கள், பொதுநலவாதிகள் மக்கள், ரசிகர்களுக்கும் நன்றி.

இந்த கட்டுரைகள் உங்களை ஒரு நிமிடம் (or) One Second-வது சிந்திக்க வைக்க வேண்டும் என்பதற்காக தான்.  இந்த Justice -ன் கொள்கையும் இதுவே.  அப்ப சிந்திக்கலாமா? 

200-வது கட்டுரை "உன்னை கண் தேடுதே ஜெய் அங்காளி "  உங்கள் பார்வைக்கு

அகிலத்தில் பற்பல நூற்றாண்டு கற்காலங்களை மாமாங்களாக கடந்தும் பிரம்மாண்டமாய் புடம் போட்ட தங்கமாய் ஆக்ரோஷமாய் கம்பீரமாய் நிற்பவள்! கோபம் உண்டு ஆனால் சாபம் கொடுக்காதவள்! கடைந்தெடுத்த இளகிய கரிசன உள்ளம் உடையவள்!  இவளை தேடி ஓடி வந்து உள்ளம் உருகி போற்றி விரதம் இருந்து கை கூப்பி வணங்கி தொழுது நின்றால்  தக்க தருணத்தில் எதையும் தாண்டி சீக்கிரம் கருணையுடன் நொடியில் நமக்கான தொல்லையை பங்கத்தை தாண்டவம் ஆடி களைபவள்! காப்பவள்! என் அபாயத்திற்கான உபாயம் நீயே! எலுமிச்சையின் நாயகியே! "உன்னை கண் தேடுதே பக்தியில் பைத்தியமாய் என்  வீர திலகவதி அம்மா ஜெய் அங்காளி மாகாளி வக்ரகாளி பரமேஸ்வரி  தேவியே"[Keep Your Eyes Peeled Jai Angali]★Puratchi Kavighar Valavanur M.V.ரா.SaravanaLingam Chettiyar B.A.,B.E.,D.M.E.,

வைராவீராராச என்று பல பெயர்களுடன் ஒரு பெயராய்ஓர் மனிதராய் என்னுள் கொண்டு உங்களில் ஒருவனாய் ஓர் Messenger ஆக கட்டுரை வாயிலாக All In One ஆக வரார் JMN -ன் ரிதம் F.M 605 108-ல் justicemayel.blogspot.com தளத்தின் வாயிலாக அஸ்திவாரங்களாகிய வாசகர்களே.

வீர திலகவதி அம்மா அங்காளி ஜெய் காளி தேவி அம்மன்:-

இவளை போன்ற புடம் போட்ட தங்கமான கற்கால கடவுள் யாருமில்லை.  காளி தேவிக்கான குணம் அது காளி தேவிக்கான குணம் மட்டுமே. அக்குணத்தை பாராட்ட, சீராட்ட வார்த்தைகளே இல்லை. அசாத்திய குணம் அசாதாரணமான காரியத்தையும் சாதாரணமாக முடிக்கும். அதுவே காளி தேவியின் அளப்பறியா குணம். என்ன குணம் என்றால் நம்மை தேடி ஓடி வருபவர்க்கு இல்லையென்றே கூறாத குணம்.  தர்மம், அதர்மம், பாவம், புண்ணியம் என்றெல்லாம் பார்க்காத குணம். அது பக்தன் மீதான பாசத்தால் உள்ள அசாத்திய குணம்.  ஒரு அம்மா, அப்பா தன் செல்ல மகன் மீது உள்ள பற்றுதலின் தன்னிகர் இல்லா ஒப்பற்ற குணம்.  இக்குணம் எந்த கடவுளுக்கும் இல்லை. நமக்கான ஜெயம் இவளை பற்றுதலில் உள்ளது. இவளை பற்றி விட்டால் அனைத்திலும்  ஜெயம் நமக்கே.  அதனால் தான் தலைப்பு "உன்னை கண் தேடுதே பைத்தியமாய் என் ஜெய் காளி தேவி"



இவளிடம் கோபம் உண்டு! ஆனால் என்றும் சாபம் கொடுக்காதவள்! நொடியில் எதையும் தாண்டவம் ஆடி போக்குபவள்!  இடிதாங்கியாய் என்றும் நம்முடன் இருப்பவள்! இவளை தேடி ஓடி வந்து உள்ளம் உருகி போற்றிவிரதம் இருந்து  கை கூப்பி வணங்கி  தொழுது நின்றால் தக்க தருணத்தில் எதையும் தாண்டி சீக்கிரம்  கருணையுடன் நொடியில் காப்பவள்! என் அபாயத்திற்கான உபாயம் நீயே! தீர்க்கதரிசியே! எலுமிச்சையின் நாயகியே! உன்னை கண் தேடுதே பக்தியில் பைத்தியமாய் என் அங்காளி ஜெய் காளியம்மா!

 

1★

மிக்க பக்தியுடன் பூஜித்தால் தக்க நேரத்தில் காப்பபவள் காளி தேவி! குடும்பத்தில்  அங்கமாய் இருந்தால் நமக்கான பங்கத்தை தருணத்தில் தடுப்பாள் காளி தேவி! அங்கும் இங்கும் அசையாமல் உன்னையே துதித்தால் தலைவிதி விலகி ஓடும் காளி தேவி!

2★

அதர்வணத்தின் தலைவியும் நீயே! அதர்மத்திலிருந்து காப்பவளும் நீயே! உனக்கான தர்மம் என்பது பக்தனின் ஆசைக்கு பூர்த்தி! அதற்கான மூர்த்திகரமான தெய்வம் நீ மட்டுமே காளி தேவி!

3★

உனக்கான பக்தன் எப்பொழுதும் உன் பித்தன் காளி தேவி! உன் மீதான பைத்தியம் எனக்கான வைத்தியம் காளி தேவி! உன் மீது பித்து பிடித்து அலைவது எனக்கான முத்தான வாய்ப்பு காளி தேவி!

4★

பலி கேட்பாய் என் லட்சியத்தை பலி கொடுக்கமாட்டாய் காளி தேவி! உன்னிடம் பயத்துடன் நடுங்கினால் எனக்கான ஜெயம் கிடையாது காளி தேவி! உன்னிடம்  உரிமையுடன் அனுகினால் உரிமைக்குரலாய் என்னுடன் நிற்பாய் காளி தேவி!

5★

உனக்காக பக்தியுடன் செய்யும் யாகம் எனக்கான யோகம் காளிதேவி! உனக்கான விசேஷ மாலய அமாவாசை எனக்கான பௌர்ணமி காளி தேவி! உன்னை உஷகாலத்தில் போற்றினால் என்னை எந்த காலனாலும் பிடிக்க முடியாது காளிதேவி!

6★

உன்னுடைய துணை எனக்கான ஈடு இணையற்ற இணை என் காளி தேவி! உணர்ச்சி ததும்ப கேட்டால் பக்தனுக்கான உணர்ச்சிவசபட்டு என் கெட்ட வினைகளை வேரரறுப்பவள் என் காளி தேவி! எனக்கான எதிரிகளே இல்லாமல் செய்பவள் என் காளி தேவி!

7★

அங்காளபரமேஸ்வரி என்று என் அங்கத்தில் இருப்பவளே! வக்ர காளியாக என் வக்ரங்களை போக்குபவளே! மாகாளியாக என் சக்தியாய் இருப்பளே என் காளி தேவி!

8★

மேல்மலையனூரில் வீற்றிருந்து எங்களை மேலேற்றுபவளே என் அங்காளி! திருவக்கரையில் அமர்ந்து என்னை கரையேற்றுபவளே என் வக்ரகாளி! பாரிமுனையில் கோயில் கொண்டு வள்ளலாய் எதையும் அள்ளி கொடுப்பவளே என் மாகாளி!

9★

 மயான கொள்ளை திருவிழா! எனக்கான பெருவிழா! என் காளி தேவி! உனக்கான வீதி உலா! என்னை பக்தி பரவசத்தில் ஆழ்த்தும் பொன்னான உலா! என் காளி தேவி!

10★

உன் பக்தியில் கூத்தாடுவதால் நான் கூத்தன்! உன்னையே உருகி பித்து பிடித்து திரிவதால் நான் உனக்கான பித்தன்! உன்னையே பக்தியில் ஜித்தன் ஆக ஜூவித்திருப்பதால் நான் உனக்கான ஜித்தன் காளி தேவி!

11★

தில்லையின் எல்லையின் காவல் நீ! பில்லி சூன்யம் ஏவல் என்பதை சூன்யம் ஆக்குபவள் நீ! பக்தனின் கெட்டதை வேரோடு வெட்டி எறிபவள் நீ!

12★

உன்னை கஷ்ட காலத்தில் உள்ளம் உருகி கை கூப்பி தொழுது நின்றால் துஷ்ட சக்திகள் விலகி ஓடுகிறது என் காளி தேவி! உன்னை இஷ்டபட்டு வணங்கியவர்கள் நஷ்டபட்டு போனதில்லை என் காளி தேவி! உனக்கு அணிவிக்கும் எலுமிச்சை மாலை உனக்கான எதையும் மிஞ்சும் அழகிய மாலை என் காளி தேவி!

13★

பற்பல நூற்றாண்டு கற்காலங்களை மாமாங்கங்களாக கடந்தும் கம்பீரமாய் நிற்பவளே! என் காளி தேவியே! இளகிய மனது உடையவளே! என் காளி தேவியே! கோபக்காரியும் நீயே! பாசக்காரியும் நீயே! நேசக்காரியும் நீயே! என் காளி தேவியே!

14★

அண்ட பிரம்மாண்ட கோடியும் அஞ்சி நடுங்கும் தேவி! என் காளி தேவி! பக்தர்கள் கனவை கன பொழுதில் நனவாக்கும் தேவி! என் காளி தேவி! மண்டை ஓடுகளை அலங்கார மாலையாய் அணியும் தேவி! என் காளி தேவி!

15★

உன் மேல் பட்ட எலுமிச்சை என் மீது பட்டால் சாத்தான் அனைத்தையும் சாத்தி கொண்டு பறந்தோடுகிறது என் காளி தேவி! உன் மீது பட்ட எலுமிச்சை சாறை பருகினால் இரத்த காட்டேரி இரத்த வாந்தி எடுத்து மறைந்தோடுகிறது என் காளி தேவி! உன்னை தேடி ஓடி வந்து உள்ளம் உருகி தரிசித்தால் எந்த கரிசணம் இல்லாமல் எதிரிகளை கசக்குபவளே! வீரத்தின் திலகவதி என் காளி தேவி!

என்னடா கடைசி கவிதையில் பல கடைந்தெடுத்த நீக்கபட வேண்டிய கவிதைகள் போல் இருக்கிறதே என்று நினைக்க வேண்டாம். சிலர் இந்த கடைசி வரி கவிதை கவிதையா என்று கூட நினைக்கலாம். ஆனால் காளி தேவிக்கு இவ்வாறும் இதைவிட ஆக்ரோஷமாகவும்  கூறினால் தான் பிடிக்கும். ஏனென்றால் அவள் வீரத்திலகவதி.  வீரத்திலகன் வீரபத்ரன் ஆவான். இன்னும் இதை போல் இந்த V.ரா எழுதவா.

இது காளி தேவியின் கவிதைகள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். காளி "தேநீ" போல நமக்காக எதையும் உடனடியாக சுறுசுறுப்பாய் சீக்கிரம்  எதையும் முடிப்பவள். அவளின் தேன் கூடு என்பது பக்தனின் பேரானந்த குடும்பம். அதை யாராவது களைக்கவோ, சிதைக்கவோ முற்பட்டால் சீட்டு கட்டு போல் நொடியில் துடிப்புடன் களையெடுப்பவள் அங்காளபரமேஸ்வரி.

https://justicemayel.blogspot.com/2020/11/justicemayelblogspotcom.html