நேர்த்தியான வட்டி தொழில் [FINANCE BUSINESS]

 

நேர்த்தியான ஏவல் வட்டி தொழில் [ZERO ERROR 24 HRS SERVICE]★புரட்சி கவிஞர் Valavanur வை.ரா.SivaSaravanaLingam CHETTIYAR.

வட்டி தொழில் என்றதும் அதைபற்றி பலவிதமான கருத்துக்கள் நிலவும். அதைபற்றி தரக்குறைவாக கூறுபவர்கள் யாராவது வட்டிக்கு கடன் வாங்காமல் இருந்துள்ளார்களா?  வட்டிக்கு வாங்குவது பலவகைபடும் அவைகள் பின்வருமாறு:-

1)HOUSE MORTGAGE

2)தண்டல்

3) பேங்க்-ல் கடன் வாங்குவது.[கல்வி கடன் முதல் லோன் வரை].

இதில் பேங்க்கை கணக்கில் சேர்க்காமல் பேசுவோம்.

பெட்டிகடை முதல் Cine Industries, அரசியல்வாதி [ELECTION] வரை வட்டிக்கு வாங்காதவர்ளே இல்லை எனலாம். இந்த வட்டி தொழில் பலருக்கு கல்யாணம் செய்து வைத்திருக்கிறது மற்றும் அவர்களுக்கு வீடுகட்டி கொடுத்திருக்கிறது. ஏன் நோய்வாய் பட்டவர்களை காப்பாற்றியிருக்கிறது , பலரை படிக்க வைத்திருக்கிறது.  அதோடு பிஸ்னஸ் மேன் ஆக்கியிருக்கிறது. உடனே எனக்கு Loss ஆகியிருக்கிறது என்று கூற கூடாதுபெண்ணை கல்யாணம் தான் செய்து வைக்க முடியும். குழந்தை பெறுவது முதல் குடும்பம் நடத்துவதையெல்லாம் நாம் தான் பார்த்து கொள்ள வேண்டும். சுற்றாத Fan-க்கு எதற்கு கரண்ட் என்பது போல் உங்களுக்கு எதற்கு கரன்ஸி?  கரக்க தெரியாதவனுக்கு எதற்கு மாடு என்பது போல தான். மஹாலட்சுமி-யை நிலையாக கரம் பிடிக்க, நம் தொழிலில் கரகாட்டம் ஆட கர கரவென தொழில் சார்ந்த நேர்த்தியான சிந்தனையிலேயே சுற்ற வேண்டும். ஐங்கரன் போல பலருக்கு இன்னொரு கரம் தான் வட்டிக்கு வாங்குவது.  இது ஓர் ATM போன்றது. 24 hrs-ல் எந்த நேரத்திலும் Any Time Money-யை தந்து உங்களுக்கான துன்பத்தை Zero Error-ல் துடைக்க கூடியது. ஓர் சிசு சிசு உயிர் பெறுவது போல் நம்முடைய எண்ணத்தை செயல்படுத்த மற்றும் சிறக்க இது பலருக்கு பலவிதமாக துணை புரிந்துள்ளது.    

அடுத்தவர்களை வாழவைக்கும் இந்த தொழில் ஏனோ அதை கொடுத்தவர்களை பாடாய்படுத்துகிறது. ஆனால் பலரை ஆபத்தில் ஓர் ஆபத்தாண்டவனாய் காப்பாற்றியிருக்கிறது.  ஆனால் இந்த தொழிலில் பலருக்கு Operation Success Patient Dead என்பது போல தான் நிகழ்ந்து இருக்கிறது.

இதில் கந்து வட்டி, ஸ்பீடு வட்டி, ராக்கெட் வட்டி, கடப்பாறை வட்டி என்று பலரின் வாழ்க்கையில் இது கடப்பாறை உட்டு ஆட்டியது போல் மோசமான விளைவுகளை ஒர் சிலர் பல இடங்களில் அரங்கேற்றியிருக்கலாம்.  அதற்காக ஒட்டு மொத்தமாக இந்த தொழில் செய்பவர்களை குறை கூறினால் ஏற்று கொள்ள முடியாது. பலருக்கு ஏற்றம் காண வைக்கும் இந்த தொழில் ஏளனமாக தூற்றியதால் ஒர் வேலை நிறுத்தபட்டால் உலகம் இயங்காது என்றே கூறலாம். ஏன் என்றால் 50/50 இதை நம்பிதான் தொழிலே நடக்கிறது. தொழிலை நடத்த செய்யும் இந்த தொழில் ஓர் ஏவல் தொழில் போல் ஆகியுள்ளது. ஏவல் ஆட்களாக நம்மிடம் கண்ணீர் விட்டு வாங்கியவர்களே இருக்கிறார்கள். ஆவல் உடன் வாங்கி சென்றவர்கள் பிறகு ஏவல் ஆவதால் கொடுத்தவர்கள் காவல்நிலையம் செல்ல வேண்டி இருக்கிறது.  அதோடு திட்டமிட்டு கட்டம் கட்டி வாங்கியது போல் ஏமாற்றுகின்றனர்.  இதனால் கட்ட பஞ்சாயத்திற்கு செல்ல வேண்டி இருக்கிறது. நம்மிடம் வாங்கி கட்டடம் கட்டியவர்கள் நாம் ஏதோ சட்டத்திற்கு புறம்பாக கட்டிங் கேட்பது போல் கூறுகின்றனர். பெரும்பாலும் வாங்கியவர்கள் கடனை கொடுக்காமல் இருக்க தான் இந்த தொழிலை புறம் மற்றும் குறை கூறுகின்றனர்.  புறம்போக்கு போன்ற இவர்கள் கொடுத்தவர்களுக்கு புறம்பாக குறை கூறுவது கொடுத்தவர்களை புறம் தள்ளி ஏமாற்ற தான். 

நம்முடைய விக்னங்களை அகற்றும் வட்டி தொழில் செய்பவர்களை "விக்போட்டு முடி அதிகமாக இருக்கிறது என்பது போல் பலர் மெய்யே இல்லாமல் பொய் கூறி பேய் போல நடந்து கொண்டு ஏகத்துக்கும் ஏமாற்ற முயல்கின்றனர். இந்த தொழில் முதலை பணயமாக வைத்து அடுத்தவர்களின் கஷ்டத்தை போக்கும் தொழில் ஆகும்.

ஏழையை பணக்காரனாக்கும் இந்த தொழில் சில சமயங்களில் கொடுத்த பணக்காரனை பணம் இல்லாதவனாக்கிவிடுகிறது. இந்த தொழில் ஓர் "பணபயிர்போன்ற தொழிலாகும்ஆனால் கொடுத்தவர்களுக்கு ஏனோ வஞ்சம் செய்கிறது. இதனால் இரக்கம் தூரமாகி ரொக்கம் கொடுப்பது இப்போது எட்டாக்கனியானது இதனால் தான். துர்க்கம், கலக்கம் என்பது இந்த தொழிலில் கொடுத்தவர்களுக்கு அதிகமாக நடக்கிறது. அதனால் தான் வாங்கியவர்கள் கொடுக்காத போது சில சமயங்களில் அவர்களை கலங்கடிக்கிறது.

நேர்த்தியான தொழில் சிலர் கீர்த்தி இல்லாமல்நன்றி விஸ்வாசம் இல்லாமல் நடந்து கொண்டதால் தான் சில சமயங்களில் நேர்த்தி இல்லாதது போல் தோற்றம் அளித்து பலர்-ஐ  திணறடிக்கிறது. வாங்கியவர்களை கலர் புல்லாக பிரகாசமாக வைத்திருக்கும் இந்த தொழில் கொடுத்தவர்களுக்கு வாழ்க்கையில் ஓர் கருப்பு பக்கம் போல் பலருக்கு ஆகி உள்ளது.

பிரகாரத்தை சுற்றி வந்து பிரம்மனை வணங்கி பிரசாதம் கிடைப்பது போல் கிடைக்கும் இந்த வரபிரசாதத்தை ஏனோ பலர் சாபமாக்கிவிட்டனர்.  அதனால் தான் உண்மையிலேயே நல்லவர்களே வந்து கேட்டாலும் மனித நேயமற்ற, இரக்கமற்ற முறையில் பலர் நடந்து கொள்கின்றனர். முன்னொரு நேற்றைய காலத்தில் வார்த்தைகே பணம் கொடுத்தார்கள். இன்றைய காலத்தில் வாங்கியவர்கள் காலைவாரி விடுகின்றனர். கொடுத்த பிறகு அவர்களிடம் பல "வார்செய்ய வேண்டி இருக்கிறது. இதனால் நேச வார், பாச வார், இரக்கவார் எல்லாம் அறுக்கபட்டுஅதோடு வாங்க வருபவர்களின் கண்களில் கண்ணீர் பீய்ச்சி அடித்து ஓர் ஆறு போல தண்ணீர்  ஓடினாலும் அவர்களுக்கு பன்னீர் தெளித்து செல்வத்தை கொடுப்பதாய் இல்லை.

தாய் உள்ளம் கொண்டு ஓர் சேய் போல நினைத்து நாம் கொடுத்தால் அவர்கள் நம் மாரை அறுக்கிறார்கள்.   மும்மாரி பெய்த மாரி எப்படி கிளைமேட் Change-ல் இப்பொது பெய்யவில்லையோ அது போல் இனி மேற்கண்ட கேப்மாரிகள் Change ஆகாமல் யாரும் அத்தனை சுலபத்தில் நீங்கள் சொல்லும் கதையில் Change ஆகி ஓர் Change போல எளிதில்  கொடுக்கமாட்டார்கள்.   இப்போது Change வாங்குவதே சிரமமாய் தான் உள்ளது. பலர் எதாவது பொருள் வாங்கினால் தான் Change-ஏ தருகிறார்கள்.

அதற்காக சேவை தொழில் செய்வதாக கூறவில்லைஇதில் ஓர் ஒப்பற்ற சேவையும் உள்ளது என்று தான் கூறுகிறேன். இப்போது இந்த தொழில் நியாயமாக நடத்தும் பலருக்கு ஓர் எழில் தோற்றத்துடன் இல்லை.

வாங்குபவர்கள் பலர் ஒப்பனையுடன் வந்து கையொப்பம் என்கிற ஒப்பம் இட்டுகூடவே ஜாமீன் ஆளுடன் ஒப்புதலுடன் வாங்கி சென்றுவிட்டு காசு கேட்டால் ஒப்புக்கு கூட ஒழுங்காக பதில் கூற மறுக்கிறார்கள்.

இந்த தொழில் கொடுத்தவர்கள் பலரை வாழாவிடாமல் செய்தாலும், இது பல நூற்றாண்டுகளாக வாழையடி வாழையாக விடாமல் பலரை இந்த தொழில் வாழ வைக்கிறது என்பதை உணர்த்தவே இக்கட்டுரை.  பல ஆட்டோ, பஸ்கள் முதல் சிறிய தொழிற்சாலைகள் வரை இந்த வட்டி தொழில் மூலமாக வளமாக வளர்ந்துள்ளது. கஷ்டபட்டு வரும் மனிதர்களுக்கு கிள்ளி கொடுக்காமல் அள்ளி கொடுக்கும் மனிதனில் ஓர் கிள்ளிவளவன் போல் இது செயல்படுகிறது. இந்த தொழில் ஓர் வளமான வளமிகுந்த வளவனூர்-ஆக செயல்படுகிறது. இதில் வாங்குபவர்களுக்கு பகலில் சூரியன் போலவும்இரவில் ஓர்  பௌர்ணமி போலவும்  செயல்படுகிறது.  ஏழைக்கு விடிவு கிடைக்க ஓர் வெளிச்சம் கிடைக்க நம்முடைய பெரும் பங்கை செலுத்தினாலும் பலருக்கு அமாவாசை போல இருந்ததும் மறுப்பதற்கில்லை.  அதற்கு காரணம் பேட்டரி நிற்காத டார்ச் லைட் வெளிச்சம் பெற நினைத்த கதை போல தான்.

சரம் சரமாக சரளமாக பொய்களை கூறி ஏமாற்றி துரோகம் செய்தால் நம் சரகத்தில் இருப்பவர்கள் நம்மை என்ன சொல்வார்கள். பிறகு எப்படி பணம் கொடுப்பார்கள். கஷ்டபடுவர்களை கண்டால் நல்லெண்ணம் எப்படி வரும். இவ்வாறான ஆட்களை கண்டால் கண்டும் காணதாதது போல் கண்டுக்காமல் தான் செல்வார்கள். எதிலும் நம்மை ஆட்படுத்தி கொள்ளமாட்டார்கள். ஏமாற்றி விட்டு  பல பேர் ஊரை வீட்டு ஓடி கோர்ட்டில் ஆட்கொணர்வு மனு போடுவது போல் கோர்ட்டில் கேஸ் போட்டு ஆளை பிடித்து பணம் வாங்கிய கதையெல்லாம் உள்ளது.

அலை போன்று அலைந்து கரையை தேடும் நபர்க்கு நம் மனது அலைபாயாமல் திடமாக ஓர் பங்காளி போல் அந்த நபர்க்கு பங்கம் இல்லாமல் பெட்ரோல் பங்க் முதல் பங்களா வீடு கட்டுவது வரை அந்த நபரின் ஆசையை நிறைவேற்றினால் பணத்தை திருப்பி தராமல் நமக்கு நிராசையை ஏற்படுத்தும் ஓசை மிகுந்த சொற்களை கூறுகிறார்கள்.   

உடைகளை களைவது போல் மனிதன் என்று சொல்வதற்கு உண்டான அத்தனையையும் களைந்து உடையவனிடம்  வாங்கிய பணத்தை கொடுக்காமல் அவரின் மனதை உடைப்பவர்களை களைஎடுக்காமல் மனித நேயம் வேண்டும் என்று சொல்வதில் எந்தவித அர்த்தமும் இல்லை. அந்தரத்தில் இவர்களின் கீழ்  தரத்தால் மனது நிலைப்பாடில்லாமல் இருக்கிறதுஅது நிலை பெற நிலையான மனிதன் ஆக வாங்குபவர்கள் இருக்க வேண்டும்.  கீழவையில் இருப்பவர்களை மேலவைக்கு எடுத்து செல்பவர்களின் நிலமை எந்த அவையிலும் இப்படி இருக்க கூடாது. மேற்கண்ட கேவலமான "அவைகளை சார்ந்தவர்களை"  அவை ஒத்திவைப்பு போல ஒத்தி வைக்க வேண்டும். ஒத்தரம் கொடுப்பது போல் இல்லாமல் ஒத்த அடியாக இருந்தாலும் நம் நல்ல கை மேலோங்கும் படியாக இருக்க வேண்டும்.  

பத்தினிகளை விருப்பமில்லாமல் தீயபழக்கமுடைய தீயவர்கள் மற்றும் கயவர்கள் களவாடினால் மற்றும் சரசமாடினால் அவர்களுக்கு நரகம் என்று வேதம் சொல்கிறது. அது போல் தான் மிருகம் போல் இருக்கும் இவர்களுக்கும். இவர்கள் இருப்பை பெருக்கி கொள்ள நம் இருப்பை கொடுத்தால் நம் நல்ல மனதை இரும்பு போல துருபிடிக்க செய்துவிடுகிறார்கள். பிறகு நமக்கு என்று இருக்க நல்ல இருக்கை கூட இல்லாத அளவிற்கு நம்மை ஆளாக்கி விடுகிறார்கள். பிறகு நம்மிடம் பணம் கேட்டு வருபவர்களிடம் உடனே தராமல்  இரு துருவங்கள் போல கொஞ்சம் காத்திரு என்று தான் சொல்ல வேண்டி இருக்கிறது.

அவசரநிலை பிரகடணம் செய்தது போல் அவசரகாலத்தில் அவசரம் அவசரமாக வாங்கி சென்றவர்கள் நாம் கேட்கும் போது அவசரபடாதீர்கள் பொறுமையாக வாங்கி கொள்ளுங்கள் என்று கூறுகிறார்கள்இந்த ஜனநாயக நாட்டில் ஜனநாயகமில்லாமல் சில ஜனங்க இருப்பதால் தான் பணம் கொடுப்பவர்களின் ஜனநடமாட்டம் குறைந்து கொண்டே வருகிறது.

இந்த தொழிலை மற்றவையுடன் ஒப்பிட்டால் இது Zero Error தொழில் தான்.  ஆனால் கொடுப்பவர்களுக்கு Full Error ஆகிறது.

இது அனைத்தும் ரைட்டா, ராங்கா என தெரியவில்லை.

https://justicemayel.blogspot.com/2020/11/justicemayelblogspotcom.html