பேதங்களில் ஜாலங்கள் [Network in difference]

பேதங்களின் ஜாலங்களான தோரணங்களில் புரிதலுடன் பூரணமான  காதல் பந்தம்[Under Stand & Love Me]★புரட்சி கவிஞர் Valavanur V.ரா.SivaSaravanaLingam Chettiyar.

 


வைராவீராராச என்று பல பெயர்களுடன் ஒரு பெயராய்ஓர் மனிதராய் என்னுள் கொண்டு உங்களில் ஒருவனாய் ஓர் Messenger ஆக கட்டுரை வாயிலாக All In One ஆக வரார் JMN-ன்  ரிதம் F.M 605 108- லிருந்து  justicemayel.blogspot.com தளத்தின் வாயிலாக அஸ்திவாரங்களாகிய வாசகர்களே.

எனது கட்டுரைகள் அனைத்தையும் மற்றும் எனது புதிய கட்டுரையை உடனே படிக்க துடிக்கும் வாசகர்கள் justicemayel.blogspot.com என்ற என்னுடைய தளத்தை அனுகவும்.

ஆண் பெண் பேதமிருக்க கூடாது என்று கூறுவோம்.  அது ஏன் எதற்கு கூறியது என்றே தெரியாமல் பேதம் என்பதில் வாதம் செய்து இதனையே ஏதோ யாரோ வேதம் போல் கூறியதாக எண்ணி கோலி குண்டு விளையாடும் பையன்கள் போல் ஒரு சிலர் எவ்வளவு வயதாகியும் அனைத்திலும் இதை புரியாமல் கூறி கொண்டிருக்கின்றனர். 

ஆனால் ஆணில்  ஆணிற்குள்ளேயும், பெண்ணில் பெண்களுக்குள்ளேயும் பேதமிருக்கிறது அதை சுருக்கமாக காண்போம்.  நம் வயது ஆன ஆணோ, பெண்ணோ ஒருவர் நடந்து போகிறார் என்றால் இன்னொருவர் சைக்கிளிலும், இருசக்கர வாகனங்களிலும்காரிலும் செல்கின்றனர். இதிலும் பேதமிருக்கிறது அது விலை உயர்ந்த வண்டிகள் மற்றும் சராசரி விலை கொண்ட பைக்குகள்சைக்கிள்கள் என்று.  இது சினிமா தியேட்டரில் 1St Class, Balcony, Box இடைவெளியில் Snaks என்று ஆரம்பித்து ஆடைகள் வரை தொடர்கிறது. இது அனைத்தும் ஒவ்வொரு ஆண்களுக்குள்ளும், பெண்களுக்குள்ளும் உள்ள பேதங்கள்.  இது காதல், SPORTS, வேலையில் இருந்து நம்முடைய குணாதிசயங்கள் வரை நீள்கிறது. 

அனைவரும் நம் மதம்இனம், மொழி, ஜாதி சார்ந்தவர்கள் தான்.  ஆனால் அதில் ஏழை, மிடில் கிளாஸ், பணக்கார வீட்டு ஆண், பெண் என்று பொருளாதாரத்தில் எத்தனை ஏற்ற தாழ்வுகள்.  சங்கங்கள்தேர்தலில்மகளிர் இயக்கம், இளைஞர் இயக்கம் மற்றும் கட்சிகளில் அணி திரளும் தொண்டனில் ஆரம்பித்து மாவட்ட செயலாளர், நகர செயலாளர், கவுன்சிலர், பேரூராட்சி தலைவர், M.L.A, M.P, சங்க தலைவர், தலைவி என்று எவ்வளவு ஆண்கள், பெண்கள் நிற்கும் பதவிகளில்  ஆண்களுக்குள்ளும், பெண்களுக்குள்ளும் பிரிவினை கருத்துக்கள், பேச்சுக்கள் பேதங்கள் ஒருவரின் அதிகார சீட்டில் இன்னொருவர் அமர முடியுமா?  அல் அதிகாரத்தை இன்னொருவரிடம் செலுத்த முடியுமா?  ஏதாவது என்றால் ஆணை தான் பிறப்பிக்க முடியுமா?  அப்படி எதாவது உண்மையாக உழைத்து கூறினாலும் உடனே நம்மை அமர வைத்து அவர்கள் உங்கள் காலடியில் அமர்ந்து ஆணையிடு நிறைவேற்றுகிறேன் என்று கூற தான் போகிறார்களா? குளறு படி வார்த்தை ஜாலத்தில் ஏதாவது கூறினாலும் எடுபடத்தான் போகிறதா?  பொறாமையில் பொசுங்குகிறான் என்று தான் கூறுவார்கள்.    

கண்ணகிகாரைக்கால் அம்மையார்அன்னை தெரசாஔவையார் என்று நமக்கு பல வருடங்கள் ஆகியும் நினைத்தாலே இனிக்கும் என்பது போல் பலர் நினைவில் இருக்கிறார்கள் மற்றும் நினைவு படுத்தபடுகிறார்கள்.  ஆனால் ஒட்டு மொத்த பெண் சமூகமும் நினைவுபடுத்தபடுவதில்லை. அதே சமயம் இவர்கள் பெண்களில் ஒருவர்.  அதோடு இவர்களின் ஒவ்வொருவரின் வாழ்க்கை முறையும் பல வேறுபாடுகளை கொண்டது என்பது குறிப்பிடதக்கது.

குறைந்தபட்சம் நம் குடும்பத்திலாவது மாமியார் மருமகளையோ, மருமகள் மாமியாரையோநாத்தனாரையோ நினைவுபடுத்த தனி குடித்தனம் செல்லாமல், கூட்டு குடும்பத்திலோ அல் அவர்களுக்கு பல உதவிகள் செய்து நம் மனதில் எந்த பூட்டும் இல்லாமல் கூட்டாக அன்பை பரிமாறி வாழ்வோம். சண்டை சச்சரவுகளுக்கு வாய் பூட்டு போட்டு இருந்தால் உங்களுடைய உறவு சரியாக வேக வைக்காத புட்டு போன்று புட்டுக்காமல் என்றென்றும் நிலைத்திருக்கும்.     

இதிலேயே இவ்வளவு பேதமிருக்கும் போது ஆண் பெண்ணில் பேதமிருக்காதாஎல்லாவற்றிலும் பேதங்கள் உள்ள வாழ்க்கையில் பேதம் இருப்பதில் தவறில்லை. நீல வண்ணம் ஒன்று தான் ஆனால் அதற்கு வானம், கடல், நீலமை என்று எவ்வளவு பெயர்களில் இருக்கிறது. மனித இனத்திற்குள்ளேயே பேதம் இருப்பதற்கு காரணம் நீங்கள். இது உலகம் இருக்கும் வரை அழியாது. 

ஆனால் நமக்குள் பல பேதங்கள் இருந்தாலும் நாம் யாரும் ஒருவர் இன்னொருவரிடம் காட்டும் பூரணமான அன்பில்நேசத்தில், பாசத்தில் பேதமில்லாமல் ஒரு வித பந்தம் உடன் வாழ்ந்தால் சொர்க்கம் எல்லா இடங்களிலும் கிடைக்கும். மொத்தத்தில் பேதம் என்கிற ஜாலங்களின் தோரணங்களின் மத்தியில் அனைவரையும் காதல் செய்வோம் வேற்றுமையில் ஒற்றுமை காண்போம்.  

உம்மென்று இல்லாமல் வாழ்ந்தால் நம் வாழ்க்கை ஜம் ஜம் தான்.  அதற்கு தான் ஜாம் ஜாம் என்று பெண் இனத்திற்குள்ளேயே பல்வேறு விதமான பேதம் இருந்தாலும் ஒரு பெண்ணை ஆணிற்கு திருமணம் செய்து வைக்க காரணம் அங்கு பெண்கள் உள்ளார்கள் என்பதாலும் தான்.

பறவைகள் பலவிதம் என்று கேள்விபட்டிருப்போம்.  ஆனால் ஒரே பெண்ணில், ஒரே வயதில் எத்தனை உறவுமுறை பெயர்கள் போண்டாடீ, விதவை, காதலி, கள்ள காதலி, தங்கை, அக்காஅம்மா, சித்தி, பெரியம்மா, சின்னம்மாஅத்தை என்று.  இதிலேயே ஒரே வயது உடைய அழகான பெண்கள் உறவு முறைகளில் இருந்தாலும் ஒரு பெண் மாமன் மகள், அத்தை மகள், அக்கா பொண்ணு.  இன்னொன்றில் தங்கச்சி முறை கிட்டவே நெருங்க முடியாது அண்ணன் என்ற உறவை தவிர்த்து. பெயரளவில் அனைவரும் பெண்கள் ஆனால் அவர்களுக்கு எத்தனை பெயர்கள் அதில் எவ்வளவு சம்பிரதாயங்கள்.

அனைவரும் பெண்கள் ஆனாலும் அனைவரின் சடங்கு முறைகளும்குடும்ப முறைகளும், பண்பாட்டு முறைகளும் ஒன்றாகவா இருக்கிறது?.  ஒரு பெண் சைவம் சாப்பிடுகிறார் என்றால் இன்னொருவர் அசைவம் சாப்பிடுகிறார்கள்.  பெண்கள் கல்லூரி மற்றும் பெண்கள் வேலை செய்யும் இடத்திலேயே ஒவ்வொரு பெண் ஊழியருக்கும் ஒவ்வொரு பொறுப்பு, ஒவ்வொரு வேலை. மோசமான குற்றங்கள் செய்து மகளிர் காவல் நிலையத்தில் மகளிராலேயே கைது செய்யபட்ட பெண் கைதிகளும் இருக்கிறார்கள்.  அதே போலிஸ் ஸ்டேஷனில் குற்றங்களை களையும் மகளிர் போலிஸ் அதிகாரிகளும் இருக்கிறார்கள்.  அவர்களுக்குள் பேசும் போது பெண்கள் மற்றபடி அவரவர் வீடு, ஊர்தெரு, மாவட்டம், மாநிலம், ஜாதி, மதம் என்பது அனைவருக்கும் பொதுவானதல்ல.  அனைத்துமே வேறுபட்ட ஒன்று. பெண்களே  பெண்ணை திட்டினாலும், வாழ்த்தினாலும் அவரவரோடு அது முடிந்து போக கூடிய ஒன்று.  ஆனால் பொதுவான பெயரில் பெண் என்று தான் கூறுவார்கள்.  அதனால் தான் பெயர் வைத்தார்களோ?  நான் உன்னை கூறவில்லை அவளை கூறினேன் என்கிறார்களோ? இதில் ஒரே பெயரோடு ஒரே இடத்தில் இருந்தாலும் இரண்டு பெண்ணும் ஒரே பெண் ஆக முடியாது.  ரத்த உறவுகளுக்குள்ளேயே ஒரே ரத்த பிரிவு குடும்பம் முழுக்க இல்லை.  ஒருவளுக்கு தந்தை இரத்தம் இன்னொருவளுக்கு தாயின் ரத்தம் என்று இருக்கிறது. 

வாழ்க்கை எனும் அழகிய மெத்தையில் சொத்தை பல் போன்ற பல் பிரச்சனையில்லாமல் சுகமாக வாழ்வோம்.  பிரிவுகள் என்று A, B, C, D என்று விரிவுபடுத்தினாலும் நம் ஒருவர் மீது வைக்கும் பாசத்தைஅன்பை சுருக்கி விட முடியாது.  அதை சுருக்கமாக அதில் விளக்கமாக கூறவே இந்த கட்டுரை.

வயது வித்தியாசத்தை பற்றியெல்லாம் பேதத்தோடு பேசுகிறோம். சின்ன பையன் சொல்வதை கேட்கிறாய் அசிங்கமாக இல்லையா என்று.  ஆனால் நாம் நம்மை விட வயதில் சிறிய பெண்ணை திருமணம் செய்து விட்டு அவள் சொல்கிறாளே என்று நாம் இத்தனை வருடங்களாக நம்மை பாலூட்டி, சீரூட்டி வளர்த்த நம் தாய் தந்தையரை உதறி தள்ளிவிட்டு முழு சுயநலத்துடன் தனி குடித்தனம் செல்கிறோம். அதோடு அவளின் பல பேச்சை கேட்கிறோம் அது அசிங்கம் என்றால் இது அசிங்கம் இல்லையா?  நாம் திருமணம் செய்ததும் ஒரு பெண் தான் உன் தாயாகிய பெண்ணை துரத்திவிடவோ, உதறி தள்ள சொல்வதும்.  அப்படியென்றால் இதிலும் பேதம் உள்ளது தானே.  ஒரு சில இடங்களில் பெண்ணை திருமணம் செய்த கணவன் குடும்பத்தினர் சப்த நாடியும் அடங்கியது போல் வாழ்கிறார்கள்.  அதனை என்னவென்று சொல்வது? மருமகள் ராஜ்ஜியத்தில் கணவன் முதல் மொத்த குடும்பமே கூஜா தூக்கினால் அதனை என்னவென்று சொல்வது?  இவ்வாறு நடக்கும் மகளை ஏன் அந்த தாய் எதுவும் கேட்கவில்லை? அனைவரும் பெண்கள் தானே என்றால் பேதமிருக்கிறது அதனால் தான் அனைத்தும் அரங்கேறுகிறது.

இதே போல் தான் கணவனின் சில தாய்மார்கள் தன் மகளுக்கு அனைத்தும் அள்ளி கொடுத்து செய்வாள்.  ஆனால் நம் வீட்டில் மருமகளாய் தஞ்சம் புகுந்த மருமகளுக்கு எதையும் கிள்ளி கூட செய்யமாட்டார்கள் ஒரு சிலர் அது ஏன்?  பேதம் தான் காரணம்.

சின்னவனோ, பெரியவர்களோ யாராக இருந்தாலும் ஓர் ஆளாய் ஆலமரம், அரசமரம், வேப்பமரம், மாமரம் போல் தழைத்து வளர்வது என்பது எவ்வளவு கடினமான ஒன்று.  அதோடு அவர்கள் அனுபவம் முதல் அனைத்துமே வேறு.  அந்த நிழலில் அமர்ந்து இளைப்பாறுவது மற்றும் அதிலிருந்து காய், கனி போன்ற பலன்களை பெறுவது என்பது வேறு. பெறுபவர்கள் யாரும் இடி, மழை ,புயலை, வெயிலை, காட்டு தீயை தாங்கவில்லை.  தாங்கிய மரம் எந்த நிழலும் இல்லாமல் தவித்தாலும் நமக்கு நிழல் முதல் அனைத்தையும் கொடுக்கிறது.  அதற்காக நாம் குறைந்தபட்சம் தண்ணீர் கூட ஊற்றவில்லை.  அதோடு அதை யாராவது வெட்டினாலும் தன் முயற்சி கொண்டு மீண்டும் இலையுதிர் காலம் போய் வசந்த காலம் வந்தது போல் மீண்டும் தானும் மற்றவர்களும் வளம் பெற வளமாக வளர்கிறது.  இவ்வாறான மரம் போன்ற மனிதர்களும் உண்டு.  அவர்கள் சிறிய வயது முதல் பெரிய வயது வரை இருக்கிறார்கள்.  அவர்களும் இவர்களும் ஒன்றா?  பணக்கார வீட்டில் பிறந்து பிடிவாதம் முதல் அதிகாரம் செலுத்துவது வரை இருப்பவர்கள் வேறு.  தானாக வளர்ந்து வந்து மேற்கண்டவர்களை போலவே இருப்பவர்கள் என்பது வேறு சரியோ, தவறோ.  மரம் போன்ற மனிதர்கள் கூட இவ்வாறு பணக்காரனுக்கு மகளாய் பிறந்தவர்களை ஒன்றுபடுத்தி பேசுவதில் என்ன நியாயம் இருக்க முடியும்.  இருவரும் ஒன்றா?  அதோடு அவர்கள் முடிவெடுத்தால் சுயநலம் கலந்த குடும்ப நலம் இருக்கும் அது பல பேருக்கு புரியாது.  இவர்கள் முடிவெடுத்தால் சுயநலம் மட்டுமே மேலோங்கும்.  இது ஏழை, பணக்காரன் என்ற பேதமில்லை. நீ மரமா?  இல்லைஅப்படி இருக்க மரம் போன்றவர்கள் உன் பேச்சை கேட்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது எந்தவகையில் நியாயம்?  அவர்கள் கூறுவதை எதையாவது இழந்தோ அல் அப்படியே வாழ்ந்து கொண்டோ ஒரு சிலவற்றை புரிந்து கொள்ள பல காலம் பிடிக்கலாம்.  காரணம் நீ மரம் இல்லை.  ஆனால் உன்னுடைய சுயநலம் சார்ந்த ஊர் மேயும் மாடு என்பது போன்ற பேச்சுக்களை நொடியில் மரங்கள் போன்ற மனிதர்களால் புரிந்து கொள்ள முடியும்.  காரணம் அவர்கள் மரங்கள்.

பேதங்களின் மொத்த பூர்வீக சாம்ராஜ்யத்தில் பேதங்களுடன் அன்பில் பேதமில்லாமல் சுகமாக, அமைதியாக வாழ்வோம். 

இனியும் அனைவரும் பொய்யாக அனைவரும் சமம் என்று சம தளத்தில் பேசி நாம் ஏதோ சின்ன பையனின் சம வயதில் இருப்பது போல் Maturity இல்லாமல் உலராமல் உலகையே மனதால் நேசிப்போம் காதலிப்போமாக பேதங்களோடு.

முகமதியர்களின் சுல்தான் ஆட்சியில் "பராக்என்றால் "வரார்என்று அர்த்தம்பேட்ட பராக் போல வீரா வரார்வைரா வரார்ராச வரார் என்பது.  இது அனைத்தும் ஒன்றாக அதோடு பெயரில் பல PUNCH வசனங்களுடன் இருக்கும் நான் என்றென்றும் உங்களுக்காக நான் எழுத்துக்கள் அடங்கிய ஆர்டிகல்லாக உங்கள் மனதில் வரைய "வரார்என்று வந்து கொண்டே இருப்பேன் அதோடு என் கட்டுரை எதுவும் ending அல்ல அது மனதிற்கான Begining ஆகும்.

இது அனைத்தும் ரைட்டா, ராங்கா என தெரியவில்லை.

வினாயகர் சதுர்த்தி:-

வினாயகர் சதுர்த்தி என்பது ஒரு மத திருவிழா மட்டுமல்ல.  அதோடு இந்த திருவிழா இந்தியா முழுவதும் நடக்க கூடிய தீபாவளி போன்ற திருவிழா ஆகும்.  இதில் பல தொழில்கள் இந்த ஒரு நாள் திரு விழாவை சார்ந்து உள்ளது.  அதிலும் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமானால் இந்தியாவில் உள்ள குயவர்கள் என்பவர்களின் களிமண் மற்றும் மண்பாண்டு தொழிலின் பிராதனமானது  இந்த வினாயகர் சதுர்த்தி திருநாள்  ஆகும்.  கொரானாவில் பல தொழில்கள் துவண்டு போயிருக்கிறது.  அதில் இதுவும் ஒன்று.  அதோடு இது ஓர் குடிசை தொழிலாகும்.  அதாவது ஏழைகள் வெகுவாக இருக்கும் தொழிலாகும் என்பதை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.

இது கொரானா காலம் தான் பலருக்கு ஒவ்வொரு நாளும் வெகுவாக பரவி கொண்டிருக்கிறது என்பதில் மாற்று கருத்து இல்லை.  அதே சமயம் அரசானது எல்லாவற்றையும் கருத்தில் கொண்டு செயல்பட கூடிய இடத்தில் இருக்கிறது என்பதும் குறிப்பிடதக்கது.  அதனால்தான் என்னவோ சிறிய கோயில்கள் முதல் பல மக்கள் தினமும் வரக்கூடிய  பல தொழில்களை திறந்து வைத்துள்ளனர்.  .தா:- டீ கடை,

டாஸ்மார்க்(கணக்கில் வராது). etc.  இது அனைத்து தொழில்களை போல் தானே இந்த நலிவுற்ற தொழிலும்.  இந்த தொழிலில் உள்ளவர்கள் மனிதர்கள் கிடையாதா?  அல் அவர்களுக்கு குடும்பம் தான் கிடையாதாதினமும் கூட்டம் கூடிய இடங்கள் மேற்கண்டவைகளாகும்.

அதோடு கிருஸ்துவ திருவிழாவும்முஸ்லீம் திருவிழாவிற்கும் அனுமதி கொடுத்து சிறப்பா அத்திருவிழாக்கள் நடந்து முடிந்துள்ளதுஇவ்வளவும் அரங்கேறலாம் ஆனால் இது மட்டும் புறக்கணிக்கபடும் என்றால் இது இந்து பக்தர்களையும் மற்றும் அந்த தொழிலில் உள்ளவர்களையும் புண்படுத்த கூடிய செயலாக ஆகாதா?  அதற்காக மொத்தமாக திறந்து விட கூறியது அல்ல.  இதுவெல்லாம் கொரானா விதிகளுக்கு உட்பட்டு நடக்கும் போது இதுவும் கொரானா விதிகளுக்கு உட்பட்டுபல விதிமுறைகளுடன் நடத்தலாமே.  அதோடு மக்களும் கொரானா பரவலை புரிந்து கொண்டு மேற்கண்ட இடத்தில் இருப்பது போல் இந்த வினாயகர் திருவிழாவிலும் கலந்து கொண்டு மக்கள் கொஞ்சமாவது மன அழுத்தத்தை கொரானா விதிக்குட்பட்டு குறைத்து கொள்ளலாமே

மக்களும் முக்கியம் மக்களின் உயிரும் முக்கியம் மக்களின் பாதுகாப்பும் முக்கியம் இதை அனைத்தையும் கொரானா விதிகளுக்கு உட்பட்டு அரசும், நீதிமன்றமும் மேற்கண்டதை கவனத்தில் கொண்டு முடிவெடுத்தால் நல்லது.  அதிக மக்கள் தொகை உடைய மஹாராஷ்டிராவிலேயே  பல விதி முறைகளுடன் நடக்கிறது.

மக்களும் இதை புரிந்து கொண்டு அரசு கூற கூடிய அனைத்து விதிமுறைகளையும் பின்பற்றி இனிமையாகசந்தோஷமாக வினாயகர் சதுர்த்தியை பாதுகாப்புடன் கொண்டாடுங்கள் மற்றும் வினாயகரை வழிபடுங்கள்.  அதோடு மக்களும் கொரானா பற்றிய விழிப்புணர்வு வெகுவாக அடைந்து உள்ளனர்அதனால் தான் இன்றளவும் சமூக பரவல் ஆகாமல் அவர்களின் விழிப்புணர்வே விழிப்பாக அவர்களை காத்து கொண்டிருக்கிறது.

வினாயகர் சதுர்த்தி வழக்கில் நீதிபதி அளித்த தீர்ப்பிற்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.