ஒரு கேள்வி [ONE QUESTION]

ஒரு கேள்வி [ONE QUESTION]★புரட்சி கவிஞர் Valavanur வை.ரா.SivaSaravanaLingam.

நாட்டில் அதிகமாக வாங்க சென்றாலும், வாங்கிய  பொருள் தரமற்று இருந்தாலும் சொல்லக் கூடிய பதில் அந்த காலத்தில் பொருட்கள் எப்படி இருந்தது தெரியுமா?  சுமார் 15 அல் 20 வருடங்களுக்கு முன்பு .   அந்த பொருட்கள் விற்பர்களிடம் கேட்டால் லாபம் அதிகம் இருக்க தரமற்ற பொருட்கள் தயாரிக்கபடுகிறது என்று கூறுகின்றனர். உண்மை அவர்களுக்கு தெரியவில்லை இதற்கு பெயர் கொள்ளை லாபம்.  ஏனென்றால் இந்த பணத்திற்கு இவ்வளவு அதிக தரம் இருக்க வேண்டும் என்று நிர்ணயித்து அதற்கான லாபம், வரியும் சேர்ந்தது தான் MRP RATE.  ஆனால் அதற்கான தரம் இல்லை.

உலகத்தில் உள்ள அனைத்து Company -களிலும் தயாரிக்க கூடிய பொருட்கள் இந்த தரத்தில் தான் இருக்க வேண்டும் என்று முடிவு செய்பவர்கள் 75% Owner அல்ல.  அவர்களுக்கு அவர்கள் பொருள் தரமானது என்றே நினைத்து கொண்டுள்ளனர். அதோடு உள்ளே என்ன நடக்கிறது என்பது அவர்களுக்கே தெரியாது.  முதலில் நம்முடைய BRANCHES எந்த முகவரியில் இருக்கிறது என்று தெரியுமா என்றே தெரியவில்லை.

E.g :- 3  முதல் அதற்கு மேற்பட்ட Channel-களை வைத்திருக்கும் Channel Owner-களே அவர்கள் Channel - களை முழுமையாக அத்தனை Channel-களையும் பார்ப்பதில்லை. அதில் வரும் செய்திகளையும் அவர்கள் முடிவு செய்வதில்லை. அது போலவே இவர்களும் அனைத்து Company-யிலும் என்ன நடக்கிறது என்பது தெரியாது.  சொல்ல போனால் Middle Class-ற்கு தயாரிக்கபடும் பொருட்களை அவர்கள் உபயோகிப்பார்களா என்பதே சந்தேகம் தான்.  ஏனென்றால் அவர்கள் கோடிஸ்வரர்கள் அதனால் அதற்கு தகுந்த பொருட்களை தான் வாங்குவார்கள்.  பணக்காரர்கள் பயன்படுத்தும் பொருட்களையே உபயோகிப்பார்களா என்பதே சந்தேகம் தான்.  E.G:- CYCLE, TWO WHEELER முதல் குடிக்கும் BRAND-கள் வரை.  குறைந்தபட்சம் வண்டியாவது ஓட்ட தெரியுமா என்பதே சந்தேகம் தான்.  BEER, RUM, BRANDY, WHISKY, சிகரெட் தயாரிப்பார்கள். ஆனால் அந்த பழக்கம் அவர்களுக்கு இருக்காது.   இது போலவே அனைத்து துறைகளும். 

அப்படி இருக்க அங்கு இருக்கும் பெரிய அதிகாரிகள் தரமான பொருட்கள்  தயாரிக்காமல் நீங்கள் கூறும் கதையால் என்ன பயன்?  அந்த பணத்தை யார் எடுத்து செல்ல போகிறார்கள்?  உங்களுக்கு ஒரு வேலை லாபத்தில் பங்கு கொடுத்தாலும் எவ்வளவு கொடுத்துவிடுவார்கள்?  என்றாவது நாம் தரமான பொருட்களை தயாரிக்கிறோம் என்ற மன திருப்தி என்றாவது இருந்து உள்ளதா? நமக்கான துறையை திறம்பட நடத்துகிறோம் என்ற கர்வம் என்றாவது நம்மிடம் இருந்து உள்ளதா?  இதனை நாம் பெருமையாக குடும்பத்திலாவது சொல்ல முடியுமா? கொடுத்த காசிற்கு கூட உண்மையன, தரமான பொருட்களை தயாரித்து கொடுக்காமல், தரமற்ற பொருட்களை தயாரித்து மக்களுக்கு பாவம், துரோகம் செய்யும் நீ எல்லாம் பேச என்ன யோக்கிதை இருக்கு? மற்றும் லஞ்சம் வாங்கி சொத்து சேர்த்துவிட்டு நீ எல்லாம் இதை பற்றி பேச உனக்கு என்ன தகுதி இருக்கு என்ற ஏளனமான சொல்லை கேட்டது தான் மிச்சம். 

இது காய்கறிகள் முதல்  ஆடம்பர பொருட்கள் வரை.

கெடுதல் அதிகம் உள்ள பொருட்களை தயாரிப்பதால் நமக்கு என்ன பயன்?

CELL PHONE எடுத்தால் கதிர்வீச்சு அதிகமாக இருக்கிறது என்று COSTLY BRAND-களின் மாடல்கள் பெயர்கள் வெளியிடபடுகிறது.  பெரிய கார் நிறுவனம் POLLUTION-ல் மாட்டி பல கோடிகள் நஷ்ட ஈடு கொடுத்துள்ளது.  FACEBOOK வெளியில் தகவல்கள்களை வெளிட்டது என்று சொல்லி 35,000 கோடி கொடுக்கவேண்டும் என்று தண்டனை கொடுக்கபட்டுள்ளது.  இது போல் இந்த மாதிரியான பட்டியல் நீள்கிறது. 

இந்த மொத்த லாபத்தையும் யார் எடுத்து செல்கிறார்கள்?  நீங்களா?  சரி இதன் மூலமாக பெரிய அளவில் கோடிஸ்வரர்கள் ஆகிவிட்டீர்கள். 

உங்களுக்கு உண்மையிலேயே மனதில் பெரிய அளவு ஆத்ம திருப்தி ஏற்பட்டதா? இந்த பாவத்தில் உங்களுக்கு பாவம் இல்லையா?  பல பேரை கீழ்கண்டவாறு உறிஞ்சி சாம்பாதித்து கொடுப்பதால் உங்கள் பரம்பரையே நன்றாக இருக்குமா?  இவ்வாறாக பல தில்லுமுல்லுகள், பாவங்கள் செய்து சம்பாதித்த பணத்தை செலவு செய்யும் போது வெட்கமாக இல்லையா?

உதாரணத்திற்கு எல்லாருக்கும் தெரிந்த தவறை கூறுகிறேன். வசூல் ராஜா MBBS படத்தில் வருவதை போல் AUDIT என்றதும் நாம் COMPANY-யை தலை கீழாக புரட்டி போடுவது போல் அனைத்தையும் மாற்றுகிறோம், பழைய MACHINE-களுக்கு புது MACHINE போல PAINT அடிப்பது முதல் அனைத்து வேலைகளும் நடக்கிறதே அது தான் தவறு. அப்படி தான் வருடங்கள் முழுக்க இருக்க வேண்டும். இவ்வாறாக இருப்பதெல்லாம் தவறில்லை. 

ஒருவன் ஒரு COMPANY-யில் இருந்து வேறு ஒரு COMPANY-க்கு சென்றுவிட்டால் அது தவறு.  நீயும் சம்பளம் கொடுக்கமாட்டாய்  சம்பளம் அதிகம் கொடுக்கும் இடத்திற்கு சென்றால் அது தவறு. 

வேலையின் போது கொஞ்சம் அப்படி, இப்படி இருந்தால் அவன் ஒழுங்காக வேலை செய்யவில்லை என்று கூறபடுகிறது.  MACHINE, COMPUTER -கூட நாமும் MACHINE-போல உழைக்க வேண்டும் என்று கூறுகிறீர்கள்.  கீழ்கண்டவை, மேற்கண்டவை எல்லாம் சரி, இது தவறா?

ஒரு விஷயம் தெரியுமா உதாரணத்திற்கு MAHINDRA COMPANY-யில் ORDER எடுக்கும் போது அவர்கள் உங்கள் PARTS இவ்வளவு நிமிஷம் MACHINE-ல் ஓடும் என்று சொல்லும் நிமிஷத்திலோ, வினாடியிலோ MACHINE -ஐ RUN செய்து PRODUCT தயாரிக்கமாட்டார்கள்.  இது யாருக்கும் தெரியாது.  அதைவிட குறைந்த நிமிஷத்தில், வினாடியில் SET செய்து தான் MACHINE-ஐ RUN செய்வார்கள்.  எல்லா இடங்களிலும் இது போல் நடக்கவில்லை.  இது கேள்விபட்டது தான்.  உண்மையா, பொய்யா என தெரியவில்லை.  இவ்வாறாக பல மோசடி வேலைகள், பல பொருட்களுக்கு நடத்தபடுகிறது. 

இது போல்  வேலை செய்யும் ஊழியர்களுக்கு ரத்தத்தை உறியும் ரத்த பூச்சி போல  உழைக்கிறவர்களுக்கு குறைந்த  சம்பளம் கொடுப்பது வரை மொத்த முடிவையும் OWNER-கள் முடிவு செய்வதில்லை.  உடனே நான் நல்ல சம்பளம் தான்  20,000 வாங்குகிறேன் என்று கூறுவார்கள்.  இது ஒரு COMPANY-யில் வருடத்தில் வரும் மொத்த லாபத்தில் 15% தான் எல்லா செலவுக்கும் ஒதுக்குகிறார்கள்.  அதில் தான் DGM முதல் கடைசிமட்ட தொழிலாளர்கள் வரை சம்பளம், BONUS கொடுக்கபடுகிறது.  அதில் தான் ஒவ்வொருவரும் வாங்கும் சம்பளம்.  அது பதவியை பொறுத்து வேறுபடுகிறது.  அதிலும் எவ்வளவு பெரிய அதிகாரியானாலும் LEAVE அதிகம் கிடையாது. மொத்தமே வருடத்திற்கு 30 நாட்கள் கூட கிடையாது.  அந்த விடுமுறையும் பல COMPANY-கள் கொடுப்பதில்லை.  அன்றும் வேலை செய்ய வேண்டும்.  கல்யாணம் முதல் சாவு வரை எது நடந்தாலும் LEAVE அதிகமாக எடுக்க முடியாது.  நம் உறவினர்களின் விசேஷத்திற்கு பல பேர் போக முடியாமல் வேலை செய்த கதைகள் எல்லாம் உள்ளது.

COMPUTER துறையில் வாங்கும் சம்பளமே குறைவு.  அந்த PROJECT-ன் லாபத்தில் அங்கு உள்ள ஊழியர்களுக்கும், மற்ற செலவுகளுக்கும் மட்டும் கொடுப்பது லாபத்தில் 25% மட்டுமே இருக்கும் என்று நினைக்கிறேன். இந்த  25%  என்பது கொடுக்கிறார்களா அல்லது அதிகமா என்று வழக்கம் போல் உண்மையா, பொய்யா என்று தெரியவில்லை. 

ஆனால் மக்கள் பணத்தில் நடக்கும் ஒரு சில துறைகளை தவித்து, அனைத்து துறைகளிலும் பல நாட்கள் விடுமுறை.  வேலையில் உள்ளவர்களும் சரியாக வேலை செய்யாமல் நஷ்டம், திவால் என்று இருக்கிறது.  இதை கேட்க நாதியில்லை. பல அலுவலகத்தில் நேரத்திற்கு வருவதில்லை என்ற குறைபாடெல்லாம் உள்ளது.

இதில் நாம் உழைத்தால் ஒட்டு மொத்த நாடும் வளர்ச்சி பெறும். சரியோ, தவறோ    இதில் மோசடி வேலைகள், ஏமாற்று வேலைகள் செய்தால் அதிக லாபம் வந்து நாட்டிற்கான வளர்ச்சி திட்டங்களை அதிகபடுத்தலாம்.   

ஆனால் இதில் தவறு நடந்தால் GOVT அதனால் தான் இப்படி நடக்கிறது என்று வழக்கம் போல திறமையின்மைக்கு கதைகள் கூறுகிறார்கள்.  கூறுகிறார்களா என்று தெரியவில்லை.

ஒட்டு மொத்த மக்களின் பணத்தில் நடப்பதற்கு கூறபடும் கதைகள் ஒருவர் INVESTMENT-செய்து நடக்கும் COMPANY-களில் கூற முடியுமா? நஷ்டம் இல்லை, இலாபத்தில் சிறிய அளவு நஷ்டம் வந்தாலே வேலையை விட்டு எடுத்துவிடுகிறார்கள்.  எதற்கு ஒட்டு மொத்த மக்கள் பணத்தில் நடக்கும் துறைகளில் உள்ளது போல் ஒருவர் INVESTMENT செய்த COMPANY-களில் ஏன் இவ்வளவு லீவு இல்லை?.  கஷ்டபட்டு உழைத்து கொடுத்த மக்கள் பணம் கேவலம் என்றால் இந்த பணம் புனித பணமா? அது போல அரசு துறைகளில் இருக்கும் அதிகாரிகளை போல் மெத்தனத்தோடு, திறமையின்மை அதிகாரிகள் ஏன் PRIVATE COMPANY-களில் இல்லை?.  அங்கு இருப்பது போலவே SUSPENT, DISMISS என்று இங்கும் உள்ளதே, இருந்தும் ஏன் இப்படி நடக்கிறது?.  PRIVATE COMPANY-யில் உள்ளவர்களை 45 வயதில் DISMISS செய்தாலும் வேறு வேலைக்கு செல்ல முடியும்.  ஏனென்றால் EXPERIENCE உள்ளது.  ஆனால் இவர்களுக்கு 33 வயதில் எடுத்தாலே எந்த வேலையும் கிடைக்காது.  கிடைத்தாலும் பல இடங்களில் அதிக சம்பளத்துடன் கிடைக்காது. 

இதைபற்றிய படங்கள் வேலைக்காரன், கத்தி, உறியடிII, பூமராங், குரு, மன்னன் காமெடி.

இவ்வாறாக உழைக்க சொன்னவர்கள் யார்?  உடனே OWNER என்று கூறுவார்கள்.  அது 80% பொய். எத்தனை COMPANY OWNER களை இதுவரை நீங்கள் பார்திருக்கிறீர்கள் என்று கேட்டாலே பல பேர் இல்லை என்றே கூறுவார்கள்.  அப்படி இருக்க உள்ளே நடப்பது அவர்களுக்கு எப்படி தெரியும்.  5S MAINTAIN பண்ணுகிறோம் என்று கூறுவார்கள்.  5S என்றாலே OWNER-க்கு முழு விளக்கம் தெரியாது. இது உண்மையா என தெரியவில்லை.  தெரிய வேண்டிய அவசியமில்லை.  அதற்கு தான் சம்பளம் போட்டு அதிகாரிகளை பணியில் அமர்த்தி உள்ளனர்.  அனைத்தையும் தெரிந்து வைத்து கொள்ள யாராலும் முடியாது.

உங்களை எல்லாம் அவர்கள் பெரிய அளவில் மதிக்கிறார்களா?  உங்களால் சம்பாதித்துவிட்டு ஏதாவது பிரச்சனை என்றால் உங்களை மிரட்டுவதிலிருந்து, வேலையைவிட்டு துரத்துவது வரை நடக்கிறது.  அரசியல்வாதிகள் முதல் அனைவரையும் தெரியும்.  என்னை உன்னால் ஒன்றும் செய்ய முடியாது என்றுவாறு குறிப்பிடுவார்கள்.  ஏதாவது உங்களுக்கும் அவருக்கும் ஏதாவது பிரச்சனை என்றால்.  நாயகி தொடரில் வரும் கலிவரதன் P.A போல இருப்பவனால் 10 கோடி வேறு யாரோ எடுத்து சென்றுவிடுவார்கள்.  உடனே மானாவாரியாக அடிப்பார்.  அது பல இடங்களில் நடக்கிறது என்றே கூறபடுகிறது.  அடிப்பது முதல் அசிங்கமாக திட்டுவது வரை.  அவனால் இவர்கள் எவ்வளவு சம்பாதிருப்பார்கள்.  அதை எல்லாம் நினைத்து பார்க்கிறார்களா? 

நீங்கள் இந்த COMPANY-யில் இருந்து வெளியேறி நீங்கள் புது COMPANY ஆரம்பித்தால் உங்களுக்கு உதவி செய்வார்களா?  வேலை தீர்ப்பதே அவர்களாகத்தான் இருக்கும்.  அனைவரையும் கூறவில்லை. 

இவ்வாறாக C.M முதல் அரசாங்க ஊழியர்கள் வரை COMPANY-க்கு தேவையான அத்தனை அனுகூலங்களையும், சலுகைகளையும் பெற பல எல்லா வேலைகளையும் சிவாஜி படத்தில் வருவதை போல் செய்கிறீர்கள்.  இதுவெல்லாம் தவறில்லையா?  இதையெல்லாம் சரி செய்யும் DOCUMENT-களை READY செய்கிறீர்கள்?  இது நாட்டிற்கான துரோக காரியம் இல்லையா? 

யாரோ கொள்ளை அடித்து செல்ல இவ்வளவு உழைத்த நீங்கள் அங்கு சிறிய  மோசடி வேலையில் சிக்கினால் உங்களை சும்மா விடுவார்களா?  மேற்கண்ட அனைத்து மிரட்டல்களும் வந்து சேரும்.  இப்படி உங்கள் நிலமை இருக்க எதற்கு இந்த கேவலமான பொழப்பு?.

இதில் கூறபட்டுள்ள அவர்களுக்கு தெரியாது, COMPANY-க்கே வந்திருக்க மாட்டார்கள், பொருட்களை உபயோகித்து இருக்க மாட்டார்கள், தரமற்ற பொருட்களை தயாரிக்கிறார்கள் என்பது எல்லாம் எல்லாரையையும் குறிப்பிடுவது அல்ல.  அதனால் தான் பதவி பெயரையோ, யார் தவற்றினால் இப்படி நடக்கிறது, அவர்கள் எந்த துறைகளில் இருக்கிறார்கள் என்று குறிப்பிடவில்லை.  ஏனென்றால் ஒரு Company-யில் RID, PRODUCTION, QUALITY, STORE, HOUSE KEEPING, HR DEPT, Marketing என்று பல பிரிவுகள் இருக்கின்றது. Company-யில் தான் இருப்பார்கள் ஆனால் யாருக்கும் தெரியாது, அவர்களை பார்த்திருக்கவே மாட்டார்கள்  RID என்று கூறுவார்கள்.

அனைத்தையும் தெரிந்து வைத்து கொண்டு, தரமான பொருட்களை தயாரிப்பவர்களும் இருக்கவே செய்கின்றனர் மற்றும் துறைகளை சிறப்பாக நடத்துபவர்களும் இருக்கவே செய்கின்றனர்.  பல விருதுகளை தரத்திற்காக வாங்கிய COMPANY-களும், துறை சார்ந்த அதிகாரிகளும் இருக்கவே செய்கின்றனர்.

இந்த கட்டுரையின் நோக்கம் இது போல் இருக்கும்அதிகாரிகள் சிந்திக்க வேண்டும் என்பதற்காக தான். சிந்தித்து விழிக்க வேண்டும் என்பதற்காக தான்.  எப்படி இருந்தாலும் நமக்கு என்று பெரிதாக ஒன்றுமில்லை என்பதை அவர்கள் உணர வேண்டும். நம்மை எல்லாம் அவர்கள் ஒரு பொருட்டாகவே கருதமாட்டார்கள் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். அவர்கள்  முன்னேறி கொண்டிருக்கும் வரை தான் நாம் அவர்களுக்கு தேவை.  மற்றபடி நஷ்டம் என்று சிறிதளவு வந்தாலும் தூக்கிபோட தயங்க மாட்டார்கள்.  அப்படி இருக்க இவர்களுக்கு ஏன் இப்படி ஒரு அசுர வளர்ச்சியை கொடுக்க நாம் ஏன் அத்தனை பாவ காரியங்களும், நாட்டிற்கே துரோக காரியங்களும் செய்ய வேண்டும்? கந்த சாமி, அந்நியன்  படத்தில் வருவது போல்.  நாடு முன்னேறாமல்  அனைவரும் கஷ்டபட்டு கொண்டிருக்க காரணம்  இவ்வாறான ஏமாளிகள் தான் காரணம்.  தவறே நடந்து மாட்டிக் கொண்டால் கம்பி எண்ணுவதும் நீங்கள் தான்.  அவர்கள் பரிசுத்தமானவர்களை போல எங்களுக்கு தெரியாது என்று SIMPLE-ஆக கூறிவிடுவார்கள்.  சரியோ, தவறோ, நமக்காக நடந்தால் பரவாயில்லை.  வேறுவழி இல்லை என்று நம்மை நாமே சமாதனபடுத்தி கொள்ளலாம். 

பொது நலம் வேண்டும் என்று கூறுவார்கள்.  அதை கூறுவதே அவர்களின் சுய நலத்திற்கு தான்.  உண்மையில் பொது நலம் என்றால் அனைத்து தொழிலாளர்களுக்கும் நடக்கும் நன்மையே.

ஏனென்றால் 80% எதுவுமே COMPANY OWNER-க்கு தெரியாது.  அப்படி என்றால்  ஒரு கேள்வி யார் காரணம்?  அவர்கள் ஏன் இவ்வாறு நடக்க வேண்டும்?  இவர்கள் என்ன ஏழைகளா?  பணக்காரர் ஆவதற்கு இப்படி செய்து விட்டார் என்பதற்கு?  இவர் ஒருவர் பணக்காரர் ஆவதிலிருந்து பெரும் பணக்காரராக இவ்வளவு பேர் பாதிக்கபடுவது சரி தானா?  வேலை கொடுக்கிறேன் என்று சொல்வார்கள்?  வேலை கொடுக்கவா அல்லது அவர்களின் உழைப்பை உறிஞ்சி கொடுத்து பணம் சம்பாதிக்கவா என்பது உங்களுக்கே தெரியும்.  இவர்கள் பெரிய சேவை செய்தது போல் அத்தனை சலுகைகளும் பெற்று கொள்கிறார்கள்.  இப்படி COMPANY ஆரம்பிக்கும் போதே கொள்ளை ஆரம்பித்து அது மாபெரும் கொள்ளையாக மாறிதான் COMPANY நடத்துகிறார்கள்.  இவர்கள் நாட்டை பற்றி என்றாவது கவலைபட்டுள்ளார்களா?  டெல்டா மாவட்டங்கள், விவசாயம் நடக்கும் இடங்கள் என்றாலும் கவலையில்லை, அழிந்தாலும் கவலையில்லை.  தண்ணீர் இல்லாமல் கஷ்டபட்டாலும் கவலையில்லை.  நமக்கு நம்முடைய பிரதான கொள்ளையே முக்கியம் என்று தான் உள்ளனர்.  இவர்கள் எல்லாம் பொதுநலத்தை பற்றி எல்லாம் பேசுவார்கள். 

இவர்கள் எல்லாம் யாருக்கு சம்பாதிக்கிறார்கள் என்று தெரியவில்லை?  ஏனென்றால் இம்மாதிரி சம்பாதித்து சேர்த்து வைக்க கூடிய அளவிற்கு அவர்களின் வாரிசுகளுக்கு தகுதி இருக்கின்றதா என்று தெரியவில்லை.  குறைந்தபட்சம் எதுவும் தெரியாமல் சம்பளத்திற்கு வந்த அதிகாரிகளை வைத்தே ஏமாற்றி, அவர்களுக்கென்று எதுவும் பெரிதான லாபம் இல்லாமல் அத்தனை பாவ காரியங்களையும் செய்ய வைத்து, வரி ஏய்ப்பு போன்ற துரோக வேலைகள் செய்ய வைத்து  இந்த அளவு சம்பாதித்த திறமையாவது அவருக்கு இருக்குமா? என்று தெரியவில்லை. 

ஆனால் இவர்கள் மற்றவர்களை காப்பாற்றதான் இப்படி செய்கிறேன் என்று கூச்சம் இல்லாமல் அக்மார்க் பொய் கூறுவார்கள்.  முதலில் அங்கு நடக்கும் அக்கிரமத்திற்கு காரணமே இவர்கள் தான். இது அசிங்கமல்ல,  வெட்க கேடான செயல் இல்லையா?. 

இவர்களுக்கே நாம் இவ்வளவு வேலைகள் செய்யும் போது நமக்கு நாம் கஷ்டபடுவதால் தான் அது கூட. இப்படியே சென்றால் வாழ்க்கையை திரும்பி பார்த்தால் மகிழ்ச்சி, ஆத்ம திருப்தி என்று எதுவும் இருக்காதோ என்பதால் நம் Personal-ல் இருந்தால் அது கேவலமா?  அப்படி என்றால் இது?

மொத்தத்தில் காமெடியில் வருவது போல் நீ யாரென்று எனக்கு தெரியும்?  நான் யாரென்று உனக்கு தெரியும்இந்த ஏமாற்று வேலைகள் எல்லாம் மக்களுக்கு தெரியும்.  பருப்பு வேக வாய்ப்பில்லை.

 குறிப்பு:-

Busness Advise பண்ணியதற்கே பணம் தராமல் ஏமாற்ற எவ்வளவு முயற்சிகள் நடைபெற்றது என்பது உங்களுக்கே தெரியும்.  திருநெல்வேலிக்கே அல்வா கொடுக்க Try பண்ணியவர்கள்.  நீங்கள் எல்லாம் ஒரு விஷயமே அல்ல. யார் எவ்வளவு கஷ்டம் அடைந்தாலும் கவலை இல்லை.  வேலை முடிந்ததும் நன்றி, விஸ்வாசம் இல்லாமல் கை கழுவுபவர்கள்? இப்போது புரிகிறதா ஏன் இப்படி இருக்கிறார் என்று. இவர்களின் பட்டையை கிளப்புகிறார் என்று இப்போது புரிகிறதா?  உங்கள் Group-தான் என்ன ஆனால் உங்களைவிட ஒருபடி மேல. உங்களை காரணமாக சொல்லி பணம் கொடுக்காமல் இருக்க Try செய்தார்கள்.  பிறகு வீட்டில், ரோட்டில்  பேசியது என்று கூறினார்கள், பிறகு இவர்களே மற்றவர்கள் நாங்களும் தான் கூறினோம் என்று கேட்டால் என்று நன்றியே இன்றி பல காரணங்களை கூறினார்கள்.  அதை எல்லாம் முறியடித்து திருப்பதிக்கே லட்டு கொடுக்க Try செய்யாதீர்கள் என்று கூறி பல கேள்விகளை கேட்ட பிறகு பணத்தை கொடுக்க ஒத்து கொள்ள வைக்கபட்டிருக்கிறது.  அதையும் கொடுக்க பல கதைகள் கூறி வருகிறார்கள். சரி இவ்வளவு கதைகள் கூறுகிறார்களே அதுவும் இவர்களின் வேலை அல்ல எந்த ஒரு முட்டாளோ, இளிச்சவாயனோ இப்படி எல்லாம் கூற சொல்லி இருக்கிறான்.  அதை அப்படியே கூறி உள்ளனர்.  அந்த அறிவாளி அடுத்தவனை ஏமாற்றவில்லை.  உன்னை போல இருக்க கூடிய உன்னை போல ஒருவனை தான் ஏமாற்ற நினைத்தான் என்று தெரியாது.  இப்படி ஏமாற்றுவதால் உனக்கு என்ன லாபம்?  இதில் என்ன பயன் நீ அடைய போகிறாய்?  இவ்வாறு ஏமாற்றி ஒரு வேலை பணம் எடுத்து கொண்டால் பத்தோடு பதினொன்றாக அசிங்கமான பல கோடிகளில் இதுவும் இருக்க போகிறது மற்றபடி என்ன நடந்துவிட போகிறது?  நன்றி இல்லாமல் என்னை ஏமாற்றும் போது உன்னை என்ன செய்வான்?  நானாவது உற்பத்தி செய்யும் ஊரே. நீயோ டுபாகர் வேலைகளை வைத்து கொண்டு காலத்தை ஓட்டுபவன்.  அவர் All Dept. Beer Factory-க்கே Beer Supply செய்ய நினைத்தால் நடக்குமா? என்னை ஏமாற்ற உன்னை அமர்த்தியது போல் உன்னை ஏமாற்ற வேறு ஒரு ஆள் வைக்க போகிறான் அவ்வளவே. அவர் எல்லாம்  Illuminati-களையே தூக்கி சாப்பிட்ட Master Illuminati.  அவர்களின் தந்திரம் எதுவும் அவரிடம் பலிக்காது.  வேண்டுமென்றால் கொள்ளலாம் அவ்வளவே.  அதுவும் பல பேரை காவு வாங்கும். வரலாற்று நாயகன் வேறு அதனால் கவலைபட ஒன்றுமில்லை.  இது வரை இப்படி ஒருவனை அவர்கள் கண்டதில்லை.  எல்லாரையும் ஏமாற்றிய மந்திரம் இவரிடம் பலிக்கவில்லை.  ஏனென்றால் வரம் கொடுக்கும் ஆபத்தாண்டவன் போல அவர்.  இவ்வாறு நடந்தால் அவர்களுக்கு பல ஆபத்துகளை ஏற்படுத்தும் ஆபத்து ஆண்டவன்.  இதை போல இருப்பவர்களுக்கு ஆபத்தான ஆண்டவன்.  நல்லவர்களுக்கு ஆபத்தை போக்கும் ஆபத்தாண்டவன்.

இது மிகப்பெரிய அவமானம், மானக்கேடு, களங்கம், அசிங்கம். சரியோ, தவறோ துரோகம் எதில் வேண்டுமென்றாலும் இருக்கலாம்.  காப்பாற்றியவரிடத்தில்  இருந்தால் யாரும் ஏற்று கொள்ளமாட்டார்கள். அதுக்கும் கதைகள் கூறினால் நாமே  அசிங்கத்தையும், மானக்கேட்டையும் ஏற்படுத்தி கொண்டு தற்கொலை பண்ணி கொள்வதற்கு சமம்.  நியாமமாக பார்த்தால் இவர்களே பணத்தை கொடுத்துவிட்டு நன்றியை தெரிவித்திருக்க வேண்டும்.  ஆனால் சொன்னதும் ஒத்து கொண்டார்கள். ஆனாலும் பணம் வரவில்லையே.  எனக்கே இப்படி என்றால் உன் நிலமை?  இதற்கே 10% Commission  மற்றும் சில விஷயங்கள்.

இனியாவது சிந்தித்து கொள் விழித்து கொள்.

துரோகம் செய்பவன் பிறருக்கு மட்டுமல்ல உனக்கும் செய்வான் என்பதை மறவாதே-  SS OF SARAVANA

நன்றி இல்லாதவன் இருந்தும் இல்லாதவனை போல- SS OF SARAVANA.

 இது அனைத்தும் உண்மையா, பொய்யா என தெரியவில்லை.

https://justicemayel.blogspot.com/2020/11/justicemayelblogspotcom.html