பெரியவரின் சந்தி சிரிக்கும் சவுக்கடி [OLD MAN ATTACK]

முகம் சுளிக்க வைக்கும் பங்கங்களோடு கம்பி நீட்டும் சரவெடி கண்ணாமூச்சி அரசியல்"அட பாவிகளா என்னடா இது என்று சார்பு இலா பெரியவரின் சந்தி சிரிக்கும்  சவுக்கடி" [OLD MAN ATTACK]★ புரட்சி கவிஞர்V.ரா.SivaSaravanaLingam

இது முழுக்க முழுக்க ஒரு உண்மை போன்ற கற்பனையில் ஓர் சுருக்க கதையே.  மற்றபடி எந்தவொரு இயக்கத்தையும்நபர்களையும் கூற அல்ல.




நீதி ராஜ் விஜயம்(நீராவி) என்கிற இயக்கம் உலகம் முழுக்க என்னுடைய அதிகார பூர்வம் இல்லாமல் தோற்றுவிக்கபட்டதுபல வருடங்களுக்கு பிறகு என்னுடைய கொடி உலகம் முழுக்க பறக்கிறது மற்றும் என்னுடைய கொள்கைகள்கோட்பாடுகள் இனி மேல் பின்பற்றபட போகிறது. அதில் நடந்த முகம் சுளிக்க வைக்கும் பங்கங்களோடு கம்பி நீட்டும் சரவெடி கண்ணாமூச்சி அரசியல்"அட பாவிகளா என்னடா இதுஎன்று சவுக்கடி கொடுப்பது போன்ற உண்மை போன்ற கற்பனை கதை.

நான் உலகம் முழுக்க பிரபலமானால் அனைத்து நேரங்களிலும் கூட்டம் கூடாதுநான் அனைவராலும் அறியபட்ட ஒருவர் மட்டுமே.  ஆனால் நான் அனைவரையும் காந்தம் போல் அனைத்து திசைகளிலும் உள்ள மக்களை மற்றும் அனைத்து கட்சிகளிலும் மற்றும் அனைத்து ஆன்மீக இயக்கங்களிலும் Etc உள்ளவர்களையும் சேர்த்தே ஈர்த்துவிட்டால் நான் மானசீக தலைவர் ஆகிவிட்டதாகவே அர்த்தம்.  அவர்கள் எனக்காக எதையும் செய்ய துணிந்து விட்டால் அவர்கள் மனதை நான் தீவிரமாக ஆட் கொண்டு விட்டேன் என்றே அர்த்தம்.

இவ்வாறு ஆகிவிட்டால் அது இயக்கமாகவோமன்றமாகவோ நிச்சயம் என் அனுமதியோடு அல் அனுமதியில்லாமல் உருவெடுக்கும். அப்படி உருவெடுத்தால் அதில் நிதி என்பது பிரதானமானது.  ஏனென்றால் இயக்கத்திற்கு அலுவலகம் மற்றும் Application Form, IT Wing, Memes கலாய்ப்புஏதாதவது நமக்கும் மற்றவருக்கும் எதாவது பிரச்சனை என்றால் அதற்கு மற்றும் இயக்க கொண்டாட்டங்களுக்கு செலவு செய்வது என்று பல இருக்கிறது. இதற்கெல்லாம் நிதி வசூலிக்க வேண்டும்.நிதி என்றால் பணம் ஆகும்.  நிதி என்று வந்துவிட்டால் நிதியில் நீதி என்பது சற்று தள்ளி வைக்க வாய்ப்புகள் இருக்கிறது. அதனால் அதற்காகவும் மற்றும் பல அணிகளுக்கும் பல பேரை பல இயக்க பதவிகளுக்கு வட்டம்சதுரம்செவ்வகம் என்றும் சரியான ஆட்களை தேர்ந்தெடுத்து பதவியில் அமர்த்த வேண்டும். இதனை கிராம புறம் வரை சரியாக எடுத்து கொண்டு செல்ல வேண்டும்.  இதனை உலகம் முழுக்க அந்த நாட்டிற்கு தகுந்தாற்போல் எடுத்து செல்ல வேண்டியது முக்கியமானது ஆகும்.

இயக்கம் என்பது பல வகைபடும்.  அவற்றுள் சில மக்கள் இயக்கம்புரட்சி இயக்கம்ஆன்மீக இயக்கம்திராவிட இயக்கம்பகுத்தறிவு இயக்கம்மத இயக்கம் etc  .  இதில் நம்முடையது மக்கள் இயக்கம் மட்டுமே அதுவும் உலகம் முழுக்க.

இயக்கம் என்று வந்துவிட்டால் கொள்கைகள்கோட்பாடுகள் என்பது கண்டிப்பாக இருக்க வேண்டும் என்பது எனது கருத்து. அந்த கொள்கைகள்கோட்பாடுகள் இயக்கங்களுக்கு தகுந்தாற்போல் மாறுபடும்.  நம்முடையது உலக மக்கள் இயக்கம்.  அதனால் நம்முடையது அனைத்தும் உலக மக்கள் சார்ந்ததாகவே இருக்க வேண்டும்.  ஒரு சிலவைகள் மட்டும் வேண்டுமென்றால் அந்த நாட்டிற்கு தகுந்தாற்போல் இருக்கலாம்.

கோட்பாடுகள்:-

1)நூல்கள்செய்தி தாள்கள் நம்முடைய அனைத்து அலுவலகங்களிலும் இருக்க வேண்டும்.

2)நம்முடைய நீதி ராஜ் இயக்க அலுவலகங்கள் ஆக்க பூர்வமான பேச்சுவிவாதம் மட்டுமே நடக்க வேண்டும்.  கட்சி பிரச்சனைகளை தீர்க்க மட்டுமே கட்சி அலுவலகங்களை பயன்படுத்த வேண்டும்.

3)மதுசிகரெட் ETC போன்ற போதை வஸ்துக்கள் பயன்படுத்துவது கூடாது.

4)பெண்களுடன் அரட்டையோகாதல் சம்பந்தபட்ட விஷயங்களையோ அலுவலகங்களில் பேச கூடாது.

5)நம்முடைய அலுவலகங்களில் தொலைகாட்சி இருந்தால் அதில் News Channels மற்றும் என்னுடைய பேச்சுகள் மட்டுமே பார்க்க வேண்டும் அதோடு கேட்க வேண்டும்.

6)யாரையும் தேவையில்லாமல் இயக்க அலுவலகத்திற்கு அழைக்க கூடாது.

7)சொந்த பிரச்சனைகளுக்கு இயக்க அலுவலகங்களையோஅதிகாரத்தையோவண்டிகளையோ etc பயன்படுத்த கூடாது. நம் இயக்க ஆட்களை அழைத்து செல்லவும் கூடாது.

8)உங்களுக்கு எதாவது கட்சிக்குள் பிரச்சனை என்றாலோ அல் முறைகேடுகளில் ஈடுபட்டாலோஇயக்கத்திற்கு எதிராக செயல்பட்டாலோ அதனை அந்த மாவட்ட அல் கிராமத்தில் இருக்கும் உயர் பொறுப்பு பதிவியில் இருப்பவரிடம் முறையிடலாம்.  முறையிட்டும் பயனில்லை என்றால் அதனை தலைமை அலுவலகத்தில் ஆடியோவீடியோ என்றோ அல் வேறு ஆதாரங்களுடன் முறையிடலாம்.

 

9)நம்முடைய தலைமை இயக்க அலுவலகத்திற்கு என்று Whats Up Number மற்றும் Email ID, Face Book, Twitter etc என்று சமூக வலைதள கணக்குகள் தொடங்க பட்டு அதை நகர்புறம் முதல் கிராமம் வரை கொண்டு சேர்க்க வேண்டும்.  அதில் இயக்கத்தில் உள்ள அனைவரும் Followers ஆக இருக்க வேண்டும்.  இது ஒவ்வொரு நாட்டிற்கும் சமூக வலை தள கணக்குகள் மாறும். Email Id என்பது Yahoo, Hot Mail என்று இருக்க வேண்டும்.   Rediff Mail, AOL கூடாது.

10)இதில் நம் இயக்க செய்திகள் அனைத்தும் அனைவருக்கும் தெரியபடுத்தபடும்.  அது கொண்டாட்டங்கள் முதல் நீக்கங்கள் வரை இருக்கும். இயக்க உறுப்பினர்கள் நீக்கபட்டால் நம்முடைய அனைத்து சமுக வளை தள பக்கங்களிலும் நீக்கபட வேண்டும்.  இதில் உங்களுடைய கட்சி சம்பந்தபட்ட அனைத்து தகவலையும் அதாவது புகார் வரை தெரிவிக்கலாம்.  வேறு எதையும் பகிர கூடாது.

 

11) ஒவ்வொரு உறுப்பினரின் முழு தகவலும் அந்தந்த அலுவலகங்களில் பராமரிக்கபட வேண்டும்.

12) வற்புறுத்தி யாரையும் உறுப்பினராக சேர்க்க கூடாது.

13) தீவிரவாதம்கஞ்சாஹெராயின்விபச்சாரம், Pub etc நடத்துபவர்களை சேர்க்க கூடாது.

14) கொள்கைகளை விளக்கி மற்றும் அதை படித்த பிறகே உறுப்பினராக சேர விரும்புபவர்கள் சேர்க்க பட வேண்டும்.

15)இயக்கத்திற்கு நிதி அளிக்க விரும்புபவர்கள் இயக்க தலைமை அலுவலகத்தில் மட்டுமே காசோலையாகவோ அல் நேரிலோ, Google Pay போன்ற சாதனங்கள் மூலமாகவோ அனுப்பலாம். அது இந்த இயக்கம் சார்ந்த Trust போன்ற அமைப்பாக  இருக்க வேண்டும். அந்த நிதி திரும்ப தர பட மாட்டாது.  அதோடு அந்த பணத்தை என்னுடைய மற்றும் நிதி பொருளாளர் அனுமதியோடு மட்டுமே எடுக்க முடியும் மற்றும் செலவழிக்க முடியும்.  அதோடு அந்த பணத்தில் சொத்துக்கள் வாங்கபட்டாலும் அல் அலுவலகங்கள் சொந்த இடங்கள் ஆக்கபட்டாலும் அது அனைத்தும் விற்கபடுவது வரை அத்தலைவருக்கு மட்டுமே உரித்தானது. அதில் யாரும் உரிமை கோர முடியாது. ஏனென்றால் அது அனைத்தும் தலைவருக்காக மட்டுமே கொடுக்கபட்ட ஒன்றாகும்.  இயக்கம் தான் பொதுவான மக்கள் இயக்கம்.  ஆனால் இயக்கம் என்னுடையது.  என்னால் ஈர்க்கபட்ட நீங்கள் என்னுடைய இயக்க பணிகளை சிரம் தாழ்ந்து செய்கிறீர்கள் அவ்வளவே. அதோடு இயக்கம் களைக்கபட்டாலும் யாரும் எதையும் உரிமை கோர முடியாது. ஏனென்றால் கொள்கைகள் முதல் கோட்பாடுகள் வரை அனைத்தும் என்னுடையது.  இதில் இயக்கம் வளம் பெற மற்றும் ஆலோசனை கூற மட்டுமே உங்களுக்கு பொறுப்புகள் அடங்கிய பதவிகள் கொடுக்கபடுகிறது.  மற்றபடி என்னை பொறுத்தவரை அனைவரும் ஒன்றே.  அதாவது தெய்வம் ஒன்று பக்தர்கள் வேறு அவர்களுக்கான பொறுப்புகள்பணிகள் வேறு.  ஆனால் தெய்வத்தை பொறுத்த வரை அனைவரும் பக்தர்கள் மட்டுமே.  இவ்வாறாக பல கோட்பாடுகள் இருக்கிறது. இதனை அனைத்தையும் அனைவரும் கருத்தில் கொண்டே இயக்க பணியை மேற்கொள்ள வேண்டும்.

16) இயக்கத்தினுடைய அனைத்து சாதனங்களும்உபகரணங்களும்வண்டிகளும் இயக்க பணிகளுக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

17)அனைவரையும் மரியாதையோடு நடத்த வேண்டும்.  அதோடு தோழாநண்பா என்ற வார்த்தைகளை நம் இயக்கத்தில் பயன்படுத்த வேண்டும்.

18)மற்ற கட்சி காரர்களிடம் பேசும் போது மரியாதையுடன் பேச வேண்டும்.

19)மீடியா அல் பொது வெளியில் அல் மேடையில் பேசுவது என்பது கட்சி தலைமை கூறாமல் எதுவும் பேச கூடாது.

20)என்னுடைய குடும்ப உறுப்பினர்களுக்கு உதவிகளை செய்யலாம்.  மற்றபடி இயக்கம் சார்ந்தவற்றை எதையும் விவாதிக்க கூடாது. அதோடு தேவையில்லாமல் பேச கூடாது.

21)இயக்கத்தின் வேத வாக்கு என்பது என்னுடைய இயக்க பேச்சு மட்டுமே.

22)ஜாதிமதம் சார்ந்து இயக்கத்தில் எந்த பதவிகளும் கொடுக்கபட மாட்டாது.  ஜாதி ஒதுக்கீடு என்பது கிடையாது.  இயக்க பணிகளை திறம்பட செய்வது மற்றும் தலைவரிடம் அவருக்கு இருக்கும் நல்ல பெயரை வைத்தே பதவிகள் கொடுக்கபடும். என்னுடைய குடும்ப உறுப்பினர்கள் நேரடியாக கூறி எந்த பதவியும் கொடுக்க பட மாட்டாது.  பதவிகள் முதல் நீக்கம் வரை என்னுடைய அனுமதி இருந்தால் மட்டுமே தர முடியும் மற்றும் நீக்க முடியும்.  எந்த பதவிகளுக்கானதாக இருந்தாலும்.

23)இயக்கவாசிகளின் பேராதரவு இருந்தால் தான் பல பொறுப்புகளுக்கு வர முடியும்.  அதோடு பதவிகள் இயக்கவாசிகளிடம் ஓட்டெடுப்பு நடத்தியே நியமிக்கபடுவார்கள்.

24)இவ்வாறு பொறுப்பிற்கு வருபவர்களுக்கு எந்த  குற்ற பின்னனியும் இருக்க கூடாது. அதோடு நீதிமன்றத்தால் குற்ற தண்டனை பெற்றவர்களுக்கு எந்த பதவியும் வழங்கபட மாட்டாது. குற்ற பின்னனி என்பது நாட்டிற்கு நல்லது செய்தாலும் தேச துரோக வழக்குகள் மற்றும் பல வழக்குகள் அரசே போடுவதால் எந்த மாதரியான குற்ற பின்னனி என்று பரிசீலித்தேவிசாரித்தே உறுப்பினர்களாகவும்பல இயக்க பதவிகளுக்கும் அமர்த்தபடுவார்கள்.  குற்ற பின்னனிகள் என்பது குற்றம் என்று எதை கூறினார்கள் என்பதை வைத்தே முடிவெடுக்கபடும்.

25)மாநில பற்றுநாட்டு பற்று உடையவர்கள்சமூக சேவை செய்தவர்கள்நாட்டிற்காக தன்னார்வ உணர்வுடன் போராடியவர்கள்நேர்மையானவர்கள்மக்களுக்கு பொது தொண்டு செய்தவர்களுக்குபிற கட்சிகளில் நல்ல சேவை செய்தவர்களுக்கு இயக்கத்தில் முன்னுரிமை அளிக்கபடும்.

26)ஜாதிமதம் சார்ந்து அலுவலகங்களில் பேச கூடாது.   நம்முடைய கொடியை தேவையில்லாத இடங்களில் பறக்க விட கூடாது.  அதோடு இயக்க வாசிகள் மட்டுமே இயக்கம் சார்ந்த அத்தனையும் இயக்க பணிகளுக்காக பயன்படுத்தலாம்.  அவர்களுடைய எந்த குடும்ப உறுப்பினர்களும் எதையும் பயன்படுத்த முடியாது. இயக்க தலைமை அனுமதி இல்லாமல் இயக்க அதிகாரத்தை இயக்க பணிகள் இல்லாத மற்றவற்றிற்கு பயன்படுத்த கூடாது.  சொந்த காரியங்களுக்கும் உபயோகிக்க முடியாது.    

27) அதிகார மீறல்முறை கேடுதிருட்டு வேலைதுரோக வேலைஅசிங்கமான வார்த்தைகள்மற்றவர்களின் மனதை புண்படுத்துவதுகாயபடுத்துவது மற்றும் கவர்ச்சியான உடைகள் கூடவே கூடாது. பெண்கள் சுடிதார்சேலை அணிந்து வர மட்டுமே அனுமதி உண்டு.  ஆண்கள் கைலிவேறு உருவங்கள்எழுத்துக்கள் பொறிக்கபட்ட டீ ஷர்ட்கள் அணிந்து வர கூடாது. இந்திய நாட்டை தவிர்த்து வேறு நாடுகளில் உள்ளவர்கள் அவர்களுக்கு உண்டான பாரம்பரிய டீசண்ட்டான உடைகளை அணியலாம்.  அதாதவது கட்சி உடையை தவிர்த்து வர வேண்டும் என்றால்அதே போல் நம் அலுவலகத்திற்கு வருபவர்களுக்கும் இது பொருந்தும்.

இயக்கம் சார்ந்தவற்றை தவிர்த்து எந்த விசேஷங்களும் நடத்த கூடாது.  கொண்டாட கூடாது இயக்க அலுவலகங்களில்.  இயக்க நண்பர்களின் பிறந்த நாள் என்றால் 30 நிமிடத்திற்கு கொண்டாடி கொள்ளலாம். கொண்டாட்டம் என்ற பெயரில் எந்த போதை வஸ்துக்களையும்தர குறைவான பாடல்களை போட்டு நடணமாட கூடாது. இயக்கம் சாரா எந்த விஷயத்திற்கும் Speaker பயன்படுத்த கூடாது.  மக்கள் பண்டிகைகளுக்கும் இது பொருந்தும்.

28)இயக்க உறுப்பினர் அட்டையில் நம்முடைய முக்கிய கோட்பாடுகளோ அல் கொள்கைகளோ கண்டிப்பாக இருக்க வேண்டும். 

29)நம்முடைய இயக்கத்தில் உறுப்பினர்களாக சேருபவர்கள் கருப்புசிவப்பு என்றும் ஜாதிமதம் என்றும் இனம்நிறம்பேதம் கிடையாது அதோடு இருக்க கூடாது.

30)பைத்திய காரர்கள் மற்றும் புத்தி சுவாதினம் சரியில்லாதவர்கள்பெரிதாக ஊனமுற்றவர்கள் உறுப்பினராக சேர்த்து கொள்ளபட மாட்டார்கள்.  குழந்தை தனத்துடன் இருப்பவர்கள் மற்றும் குருட்டோட்டமாக எதையும் பேசுபவர்கள் சேர்த்து கொள்ளபட மாட்டார்கள்.  இயக்கத்தில் படிப்பு தகுதி உறுப்பினராக சேர கிடையாது.    

31)பொது மக்களிடம் மற்றும் இயக்க வாசிகளிடம் கண்ணியத்துடன்மரியாதையுடன் நடக்க வேண்டும் நடத்த வேண்டும். இயக்கம் சார்ந்த அத்தனை விஷயங்களையும் இயக்க தோழர்களுக்கு தெரியபடுத்த வேண்டும்.  நான் அரசிற்கு ஆதரவாகவோஎதிர்ப்பாகவோ கூறுவதை மற்றும் மக்களுக்காக கூறும் அத்தனையையும் மற்றும் பிற கட்சிகள் மீது கூறும் விமர்சனங்கள்சாடல்கள் ஆகியவற்றை சரியாக அவர்கள் கட்சி காரர்கள் முதல் பொது மக்கள் வரை கொண்டு சென்று புரிய வைக்க வேண்டும்.  அவர்கள் கூறும் எதிர் கருத்து சரியாக இருந்தால் அதை நம் அலுவலகங்களில் ஆலோசித்து எதிர் தரப்பு அல் மக்கள் கூறியது சரி என்றால் அதை கட்சி தலைமைக்கு தெரியபடுத்த வேண்டும்.  தேவையில்லாமல் பொய்யாக உங்கள் விறுப்புவெறுப்புகள் காரணமாக எதையும் கூற கூடாது. 

32)மக்களை தவிர்த்து பிற கட்சிகளுடன் உறவாட கூடாது.  அதே சமயம் அவர்கள் நம் இயக்க பணிகள் சார்ந்து நம்மிடம் எதாவது பேசினால் அதை மரியாதையாக கேட்டு அவர்களுக்கு சரியாக தெளிவு படுத்த வேண்டியது நம்முடைய கடமை ஆகும்.

33)நம் இயக்கம் சாரா யாரிடமும் நம்முடைய இயக்கம் சார்ந்த ஆவணங்கள் முதல் பல முக்கியமான எதையும் பகிர கூடாது மற்றும் ஆலோசிக்க கூடாது.

 34)நம்முடைய இயக்கம் நான் சொல்வது மற்றும் என்னுடைய இயக்க கோட்பாடுகள் மற்றும் கொள்கைகளுக்கு கட்டுபட்டு மட்டுமே நடக்க வேண்டும்.

35)தலைவர் பதவிக்கு எந்த தேர்தலும் நடக்காது. நானே நிரந்தர தலைவர். என்னால் ஈர்க்கபட்டு வந்தது தான் என்னுடைய இயக்க உறுப்பினர்கள் அதோடு இயக்கமே என்னுடையது தான் மற்றும் கோட்பாடுகள்கொள்கைகளும் என்னுடையதே.  எனக்கு பிறகு யார் தலைவராக வர வேண்டும் என்றாலும் தலைவருக்கான தேர்தல் நடத்தி ஓட்டெடுப்பின் மூலமாக மட்டுமே வர முடியும்.  அவர்கள் 7 வருடங்கள் மட்டுமே தலைவராக இருக்க முடியும்.  பிறகு அவர் தலைவர் தேர்தலில் நிற்க முடியாது.  வேறு பதவிக்கு வேண்டுமென்றால்  பரிசீலிக்கபடுவார்கள்.  அதே போல் தான் இயக்கத்தில் உள்ள அனைத்து முக்கியமான பொறுப்புகளுக்கும். அதே போல் சிறிய பொறுப்பு பதவிகளுக்கும் இயக்கம் மூலமாகவே அலுவலகங்களில் ஓட்டெடுப்பு நடத்தியே பதவிகளில் அமர்த்தபடுவார்கள்.

36)எனக்கு மட்டுமே இயக்கத்தில் முழு அதிகாரம் உள்ளது.  அதோடு இயக்கத்தில் எந்த மாற்றத்தையும்திருத்தங்களையும் நான் செய்ய யாரிடமும் எந்த அனுமதியும் வாங்க அவசியமில்லை.  ஆலோசனைகளையும் கேட்க தேவையில்லை.  ஆலோசனையோதகவல் தெரிவித்து தான் இயக்கம் சார்ந்த விஷயங்களில் நான் ஈடுபட வேண்டும் என்று அவசியமில்லை.  இயக்கத்தில் யாரையும் பதவி உயர்த்தவோபுதிய பதவியை ஏற்படுத்தவோநேரடியாகவே இயக்க பதவியில் அமர வைக்கவோநீக்கவோ எனக்கு மட்டுமே முழு அதிகாரம் உள்ளது.  வேறு யாருக்கும் கிடையாது.  மற்றவர்களுக்கு அவரவர் பொறுப்பு சார்ந்த அதிகாரத்தை அந்தந்த மாநிலங்களில்மாவட்டங்களில்ஊர்களில்கிராமங்களில் இயக்கத்திற்காக மட்டுமே பயன்படுத்த முடியும்.

ii) பொது கூட்டம்போராட்டம்கலவரம்ஆலோசனை கூட்டம்இயக்க வாசிகளை கூட்டுவது என்பது இயக்க தலைமை கூறாமல் ஈடுபட கூடாது.  இரவு நேரங்களில் 7 மணி கடந்து அலுவலகங்களை தலைமை அனுமதி இல்லாமல் திறக்க கூடாது மற்றும் பயன்படுத்த கூடாது.   

iii)இது அனைத்தும் கட்சி பதவியில் உள்ளவர்கள் முதல் கடைசி மட்ட இயக்க வாசி வரை பொருந்தும். இது எனக்கு பொருந்தாது.  ஏனென்றால் சூழ்நிலைகளுக்கு தகுந்தவாறு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ள நேரிடும் என்பதால்.  இதனை மாற்றும் உரிமையோநீக்கும் உரிமையோ எனக்கு மட்டுமே உரிமை உண்டு. யாருக்கும் கிடையாது.

iv)என் இயக்கம் சம்பந்தபட்ட எந்தவொரு விஷயத்திலும் என் குடும்பம் சார்ந்தவர்களோஉறவினர்களோசொந்த பந்தங்களோமகன்மகளோநண்பர்களோ என் அனுமதி இல்லாமல் பங்கேற்க முடியாது. அதோடு இயக்கம் சார்ந்த அதிகாரத்தையும் பயன்படுத்த முடியாது மற்றும் எந்தவொரு சாதனங்களையும்வண்டிகளையும் உபயோகிக்க முடியாது. அதோடு யாரையும் நீக்க முடியாது.  நீக்கும் அதிகாரம் எனக்கு மட்டுமே உண்டு.  இயக்கத்தில் உள்ளவர்கள் கோட்பாடுகளை பின்பற்றாமல் இருந்தாலோகொள்கை மீறல்கள் இருந்தாலோ அல் வேறு எந்த சமூக காரணங்கள் இருந்தாலும் அல் இயக்க நன்மைக்காகவோ இயக்கத்தில் உள்ள எவரையும் நீக்கும் அதிகாரம் உண்டு.  இது வேறு யாருக்கும் கிடையாது.

v)நீக்கபட்டவர்களுடன் நம் இயக்கம் சம்பந்தபட்ட யாரும் எந்த தொடர்பும் வைத்து கொள்ள கூடாது.  அதோடு அவர் நீக்கபட்டவுடன் நம்முடைய இயக்கம் சார்ந்த அத்தனை பணிகளில் இருந்தும்அதிகாரத்தில் இருந்தும் வெளியேற்றபட்டவராகிறார் மற்றும் விடுவிக்கபடுகிறார்.

vi)என்னிடம் மிகுந்த பணிவுடன்மரியாதையுடன் செயல்பட வேண்டும். நான் சொல்வதை சிரம் ஏற்று பின்பற்ற வேண்டும்.  கண்ணிய குறைவு என்பது கூடவே கூடாது.  அதே போல் இயக்கத்தில் பொறுப்பில் உள்ளவர்களுக்கு அவரவர் பொறுப்பிற்கு தகுந்த கண்ணியத்தை இயக்க வாசிகள் காக்க வேண்டும்.

vii)என்னையோஎன் குடும்பத்தையோஎன் இயக்க கோட்பாடுகளையோ,கொள்கைகளையோ இயக்க வாசிகள் எனக்கெதிராக விமர்சிக்க கூடாது மற்றும் பேச கூடாது.

viii)இயக்கத்தில் எந்த காரணங்கள் கூறியும் இயக்க கோட்பாடுகளை மற்றும் கொள்கைகளை பின்பற்றாமல் இருக்க கூடாது. என்னுடைய நல்லதிற்கு என்று கூறினாலும் அல் இயக்கத்திற்காக என்று கூறினாலும் ஏற்று கொள்ளபட மாட்டாது.  இயக்க தலைமை விருப்பபட்டால் விளக்கம் கேட்கும்.  விளக்கம் இயக்க தலைமை ஏற்று கொள்ளவில்லையென்றால் இயக்கம் எடுக்கும் முடிவுக்கு இயக்கமும் அதை மீறியவரும் கட்டுபட்டு ஏற்று கொள்ள வேண்டும்.

ix)இயக்கத்தின் உயிர் நாடி என்பது நானும்என்னுடைய கோட்பாடுகள் மற்றும் கொள்கைகள் மட்டுமே.  இதில் தான் இயக்க வாசிகளின் இதயங்கள் உயிரோட்டத்துடன் துடிக்கிறது.  அதில் தான் இயக்கமே இயங்குகிறதுகோட்பாடுகள்கொள்கைகள் துடித்தால் நான் இல்லாமலேயே என்றென்றும் என் இயக்கம் உயிர் ஓட்டத்துடன் இருக்கிறது என்று அர்த்தம்.

x)என்னை அப்படியே பின்பற்றுவதை விட இயக்கத்தின் கோட்பாடுகள் மற்றும் கொள்கைகளை பின்பற்றுவதே சால சிறந்தது.  என்னை பின்பற்ற வேண்டிய அவசியமில்லை மற்றும் அதற்கான எந்தவித நிர்பந்தமும் இல்லை.  அதோடு என்னுடைய இயக்க வாசிகளின் இதய துடிப்பு என்பது இயக்கம் மட்டுமே.  அதன் பிறகே மற்றவைகள் எல்லாம். என்னை தனிபட்ட முறையில் இயக்கத்தை தவிர்த்து என்னுடைய எதையும் பின்பற்றாமல் இருப்பதால் யாரும் இயக்கத்தை விட்டு நீக்கபட மாட்டார்கள் மற்றும் இயக்கத்தின் பொறுப்புகளும் கொடுக்கபடாமல் இருக்கபடாது.  அனைவருக்குமான தனிபட்ட குடும்ப ஜனநாயகம் என்பது காக்க பட வேண்டும் என்பது குறிப்பிடதக்கது. அதில் இயக்கம் தலையிடாது. அதே சமயம் இயக்க வாசிகளின் குடும்பத்தில் ஒழுங்கீன புகார்கள் இயக்க தலைமைக்கு ஆதாரங்களோடு வந்தால் இயக்கத்தின் நன்மை கருதி நீக்க பட வாய்ப்புண்டு.  மற்றபடி அவரவர் குடும்ப வாழ்க்கையை வாழ பூரண உரிமை அவரவர்க்கு இருக்கிறது.

xi)நான் குடும்பம் சகிதமாகவோ அல் இயக்கம் சாரா பேச்சுக்கள் பேசினால் அல் நண்பர்களிடம் அரட்டையடிப்பது என்பதெல்லாம் இயக்க பேச்சுக்கள் அல்ல.  அது இயக்கம் சார்ந்தவர்களை பின்பற்ற சொன்னது ஆகாது.

ஏனென்றால் நான் பல அவதாரங்கள் எடுத்து வாழ வேண்டி உள்ளது.  குடும்பத்திற்கும் நானே தலைவன் அதோடு நண்பர்களுக்கு நான் ஒரு நல்ல தலைவன் போன்ற நண்பன்அதோடு பொழுது போக்கு நிகழ்ச்சிகள் பார்த்து கமெண்ட் அடிப்பது என்பது தலைவனாக இருப்பதை மறந்து சிறிது நேரம் மக்களில் ஒருவனாக அனுபவிக்கும் ஓர் உரிமை ஆகும்.  மற்றபடி அரசை எதிர்த்தோ அல் ஆதரித்தோ அல் பல கட்சிகளை விமர்சனம் செய்வதோ etc என்பதை மட்டுமே இயக்க வாசிகள் பின்பற்ற வேண்டும் மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்.  அதுவும் அது இயக்க தலைமை மூலமாக உங்களை வந்தடைந்தால் பின்பற்றுவதே சால சிறந்தது. அதே போல் என்னுடைய கட்டுரைகளை அனைவரும் படிக்க வேண்டும் மற்றும் நம் இயக்க வாசிகளுக்கு தெரியபடுத்த வேண்டும்.  அதையும் யாரும் பின்பற்ற தேவையில்லை. பொது மக்களிடம் அதை கொண்டு சேர்க்க வேண்டும்.  மற்றபடி யாரையும் படிக்க சொல்லியோ அல் தலைவர் விழிப்புடன் இருக்க சொல்கிறார் அதனால் பின்பற்ற சொல்லியோ கட்டாயபடுத்த கூடாது.

நம்முடைய இயக்க வேலை என்பது தெரிய வைப்பது புரிய வைப்பது விழிப்படைய செய்ய வைப்பது அது மட்டுமே நமக்கு பிரதானமானது. அதை முதலில் நாம் செய்ய வேண்டியது இயக்க வாசிகளிடம் தான்.  அதன்பிறகே பொது மக்கள்.

xii) இயக்கத்தில் உள்ளவர்களை மற்றும் நிதியை மற்றும் சொத்துக்களை என் குடும்ப நலத்திற்காக பயன்படுத்த எனக்கு மட்டும் நான் விருப்பபட்டால் முழு அதிகாரம் உண்டு. அதற்காக இயக்கத்திற்கும் என் குடும்பத்திற்கும் சம்மந்தம் உள்ளதாக அர்த்தமில்லை. என் இயக்கம் என்பதால் என்னால் மட்டுமே பயன்படுத்த முடியும் என்பதனால் மட்டுமே இது.

xiii) இயக்கத்தில் உள்ளவர்கள் யாரும் இயக்க தலைமை அனுமதி இல்லாமல் தன்னுடைய சொந்த விஷயங்களுக்கு இயக்கம் சார்ந்த எதையும்எதற்காகவும் இயக்க நண்பர்கள் உட்பட பயன்படுத்த கூடாது. யாருக்கும் அதிகாரம் கிடையாது என்னை தவிர்த்து.

இயக்கம் என்பது ஒரு குடும்பத்தை சார்ந்து நடத்தபடுவது அல்ல. ஒரு தலைவனை மையமாக வைத்து ஈர்ப்புடன் இயங்குவது. இது என்னுடைய ஈர்க்கபட்ட மக்களுக்காக தோற்றுவிக்கபட்ட ஒன்றாகும்.  ஈர்க்கபட்டவர்களுக்காக ஆரம்பித்து பொது மக்களுக்காகவும் துடிக்கும் இயக்கம் என்னுடைய இயக்கமாகும்.  இதில் கோட்பாடுகள் என்பது இயக்கத்தில் உள்ளவர்களை மற்றும் இயக்கத்தை நெறிபடுத்தலுக்கானது. கொள்கைகள் என்பது நாம் மக்கள் பணி செய்வதற்கானது. மக்கள் பணி என்பதில் எந்த வரையறையும்விதிமுறைகளும் இது வரை இயற்றபடவில்லை.

இயக்கம் ஆரம்பித்து விட்டாலே ஈர்க்கபட்டவர்களின் விருப்பம் பூர்த்தியடைந்துவிடும். அதில் நீங்கள் உறுப்பினர் என்றாலே ஈர்க்கபட்டவர்கள் அனைவருக்கும் ஒரு தனி சந்தோஷம் கிடைத்துவிடும் என்பது குறிப்பிடதக்கது.  அதோடு இந்த இயக்கம் முற்று பெற்றுவிட்டது.

ஏனென்றால் இது சமூக நீதி இயக்கம் அல்லஅரசியலுக்கு வர தொடங்கபட்டதும் அல்ல. முழுக்க முழுக்க என்னால் ஈர்க்கபட்டவர்களை வைத்து அவர்களுக்காகவே தோற்றுவிக்கபட்ட இயக்கம் ஆகும்.  அதனால் தான் என் அனுமதியில்லாமல் கூட நடப்பதாய் சொல்லபடுகிறது.  அது உண்மையாபொய்யா என தெரியவில்லை.  ஆனால் இதோடு முடிக்காமல் மக்களுக்காகவும் துடிக்க வேண்டும் என்பதற்காக தான் கொள்கைகள் என்பதெல்லாம். அந்த கொள்கைகள் என்பது எப்போது எதற்கு எப்படி பின்பற்ற நான் சொல்கிறேனோ அப்படி அதை பின்பற்றுவது என்பது மட்டுமே என் இயக்க வாசிகளின் முதல் கொள்கை மற்றும் கடமைகளாகும்.  அது ஒவ்வொரு இடத்திற்கும் வேறுபடலாம்.

அது ஒட்டு மொத்த மக்களின் ஒரு பொது பிரச்சனையானது மட்டுமே ஆகும்.  அது ஊராகவோகிராமமாகவோ,மாநிலமாகவோநாடாகவோ கூட இருக்கலாம்.  பொது மக்களின் தனிபட்ட குடும்ப விஷயங்கள் சம்பந்தபட்டதை எங்கு எதற்காகவோ அல் யாரிடமோ பேசி கொண்டிருப்பதெல்லாம் இயக்க வாசிகள் கேட்க தேவையில்லை.  அதை மக்களிடம் எடுத்து செல்ல வேண்டிய அவசியமில்லை. இதனை ஓர் கொள்கை போல்பின்பற்ற வேண்டிய அவசியமில்லை.  சரியோதவறோ அது மக்களின் ஜனநாயக உரிமை ஆகும். அது போன்றே நான் கூறும் ஆன்மீக சார்ந்த கருத்துக்களும்.  அதை யாரும் பின்பற்ற வேண்டும் என்று அவசியமில்லை.  ஜனநாயகம் என்பதில் தான் நம் நாட்டின் சுதந்திரம் வாங்கியதற்கான அர்த்தமே உள்ளது. இயக்கம் என்ற பெயரில் உங்களுடைய அனைத்தையும் கட்டி போட நான் விரும்பவில்லை.  

ஒரு வேலை பஞ்சாயத்திற்கு வந்து நாட்டாமை தீர்ப்பை சொல்லு என்பது போல் எங்காவது சொன்னாலும் அதை இயக்கத்தின் பஞ்சாயத்தாகவோ அல் ஒட்டு மொத்த மக்களின் பிரச்சனைகளை தீர்த்து வைத்தது போல் கருதிவிட முடியாது. அதோடு இதே போல் அனைத்திற்கும் நான் சொன்ன நாட்டாமை தீர்ப்பு என்கிற முடிவை தான் இயக்கவாசிகள் பின்பற்ற வேண்டும் என்று அர்த்தமில்லை. 

எதுவாயினும் இயக்க தலைமையில் இருந்து அதிகார பூர்வ அறிவிப்பு வெளி வரும்அதோடு அது அனைத்து இயக்க அலுவலகங்களுக்கும் சுற்றறிக்கை போன்று அனுப்பபடும்.  அதன் பிறகே இயக்க வாசிகள் களபணி ஆற்ற வேண்டும் மற்றும் பின்பற்ற வேண்டும். தனிபட்ட முறையில் எந்தவொரு இயக்க தோழரின் குடும்ப விஷயத்திலும் இயக்கமானது எந்த களங்கமும் ஏற்படாத வரை தலையிடாது.

உலக மக்களுக்காக துடிக்க இதோ கொள்கைகள்:-

1)முதலாளித்துவம் காக்கபடும்.

2)தொழிலாளித்துவம் காக்கபடும்.

3)இயற்கை வளங்கள்மரங்கள்காடுகள் காக்கபடும்.  அதே சமயம் நாட்டின் வளர்ச்சியும் கருத்தில் கொள்ளபடும்.

4)அந்தந்த நாட்டின் மாநிலத்தின் கலாச்சாரம்பண்பாடுமொழி காக்கபடும். மக்கள் நலனுக்காக சில சமயங்களில் பல எதிர்க்கபடலாம். அதே சமயம் தேசிய மொழி என்று அந்நாட்டில் இருந்தால் அதுவும் பேணி காக்கபடும்.

5)நூல்கள் வாசிப்பு பழக்கத்தின் முக்கியத்துவத்தை உலகம் முழுக்க பரப்பபடும்.  நூலகங்களுக்கு மக்கள் செல்லும் பழக்கத்தை ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளபடும்.

6)ஆளும் கட்சி ஆதரவுஎதிர்ப்பு நிலை மக்கள் நலனுக்காக எடுக்கபடும். நான் ஆதரவளித்து ஆட்சியில் அமர்த்தியிருந்தாலும்.

7)பிறகட்சிகளுக்கு மக்கள் நலனுக்காக ஆதரவுஎதிர்ப்பு நிலை மேற்கொள்ளபடும்.  அனைத்தும் மக்கள் நலனுக்காக.  சுருங்க சொன்னால் எங்கள் இயக்கமானது யாருக்கும் நிரந்தரமாக ஆதரவானதும் இல்லைஎதிரானதும் இல்லை. ஒரு மாநிலத்தில் தேசிய கட்சிக்கு ஆதரவாக என் இயக்கம் இருக்கும்.  அதே தேசிய கட்சிக்கு வேறொரு மாநிலத்தில் மக்களுக்கு எதிராக இருக்கும் பட்சத்தில் எதிரான நிலைப்பாடு எடுக்கும்.  எனக்கு மக்கள் நலனே பிரதானமானது. 

என்னுடைய இரு கண்கள் சமூகத்தில் என்பது என்னால் ஈர்க்கபட்ட இயக்க நண்பர்கள் ஒரு கண் என்றால் மற்றொரு கண் என்னுடைய உலக மக்களின் நலன் என்பது.    

இது அனைத்தும் சூழ்நிலைக்கு ஏற்ப அந்தந்த நாட்டில்மாநிலத்தில்ஊர்களில்கிராமங்களில் மக்களின் நல்லதிற்காக மக்களே ஆதரவு அளித்தாலும்எதிர்த்தாலும் என்னுடைய குரல் கட்டுரை வாயிலாகவோ, Channel-கள் மூலமாகவோ அல் பல்வேறு விதமான சமூக வலை தளங்கள் மூலமாகவோ ஓங்கி ஒளிக்கும். அது இயக்கம் வாயிலாகவும் ஒலிக்கும். அதாவது இந்த கொள்கைகளை இயக்க தோழர்கள் இயக்க தலைமை அனுமதியில்லாமல் ஒலிக்க முடியாது.  அதாவது நான் எந்த குரலும் எதற்காகவும் ஒலிக்காமல் நீங்களாக சுயமாக என் இயக்கம் கொண்டு போராட முடியாது.  அதிகாரம் செலுத்த முடியாது மற்றும் கூட்டம் கூட்டவும் முடியாது.  இது அனைத்தும் அனுமதியில்லாமல் நடந்தால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளபடும்.  நான் கூறியவற்றிற்கு யாராவது உங்களிடம் அதை பற்றி கேட்டால் விளக்கலாம். இதனை இயக்க தலைமை அனுமதியோடு ஷேர் செய்யலாம். நீங்களாகவே ஷேர் செய்துபேசி தவறானால் இடை நீக்கம் செய்ய வாய்ப்பிருக்கிறது.

அணிகள்:-

1)இளைஞர் அணி.

2)மகளிர் அணி.

3)தொழில் நுட்ப அணி.

4)ஒருங்கிணைப்பு அணி.

5)தன்னார்வ அணி.

குழுக்கள்:-

1)ஆலோசனை குழு.

2)போராட்ட குழு.

3)புகார்களை சரி செய்யும் குழு.

4)ஒற்றுமை குழு.

5)சரிபார்க்கும் குழு.

6)Software குழு.

7)Electrical குழு.

8)மெக்கானிக்கல் குழு.

9)வாகனங்கள் குழு.

10)சேகரிப்பு குழு.

இந்த அணிகளும் எனக்கு கட்டுபட்ட ஒன்றாகும்.  இந்த அணிகளை களைக்கவோ,மாற்றியமைக்கவோ எனக்கு மட்டுமே அதிகாரம் உண்டு. இந்த அணிகளுக்கான பொறுப்பாளர்கள் என்பவர்கள் இந்த அணி சார்ந்தும் அதோடு என்னுடைய கருத்தை இந்த அணிகள் மூலமாகவும் கொண்டு செல்வார்கள்.  உதா:- மகளிர் அணி என்றால் மகளிருக்கு வரும் குடும்ப பிரச்சனைகளை தன் இஷ்டத்திற்கு தன் மனதில் பட்டதை சொல்லி பஞ்சாயத்து செய்வது அல்ல.  போராட்டம் செய்வதும் அல்ல.  அவ்வாறு எந்த அணிகள் இயக்க தலைமைக்கு தெரியாமல் எதில் ஈடுபட்டாலும் கடும் நடவடிக்கை அவர்கள் மீது பாயும்.  யாராக இருந்தாலும் நான் கூறும் என்னுடைய கருத்தை மையமாக கொண்டே செயல்பட வேண்டும்.  இயக்கம் சார்பில் எதில் ஈடுபட்டாலும் அது இயக்க தலைமை அனுமதியோடு மட்டுமே நடக்க வேண்டும்.  இயக்கத்தில் உள்ள அனைவருக்கும் இயக்கத்தின் கோட்பாடுகள் மற்றும் கொள்கைகள் பொருந்தும் என்னை தவிர.  மகளிர் அணி முதல் எந்த அணி இயக்க பதவிகளுக்கும் மற்றும் நேரடியான இயக்க பதவிகளுக்கும்உறுப்பினர்களுக்கும் ஆன சேர்க்கை முதல் பதவிகள் வரை அனைத்தும் கொள்கையின் மீதும்கோட்பாடுகள் மீதும்என் மீதும் ஆர்வம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கபடும். எந்த சூழ்நிலையிலும் கையாடல்திருட்டில் ஈடுபட கூடாது.  மகளிர் அணியை தவறான விதத்தில் மற்றும் சுய நல நோக்குடன் யாரும்  பயன்படுத்த முனைய கூடாது.  இங்கு அனைத்தும் இயக்கத்திற்கான பொது நலம் கருதியே செயல்பட வேண்டும்.  நான் மட்டுமே சுயநலமாக இருப்பேன்.

என்னுடைய சுய நலம் என்பது நீங்கள் தான்அதனால் தான் இத்தனை கோட்பாட்டு நெறிமுறைகள். இதில் பெண்களுக்கு என்று எந்த இட ஒதுக்கீட்டு முறையும் கிடையாது. இயக்க பணி சிறப்பாக செய்தால் எந்த இயக்க பதவிக்கும் எவரும் செல்லலாம் என்பது மட்டுமே உண்டு.  குழுக்களுக்கும் மேற்கண்டவைகள் பொருந்தும்.  இந்த குழுக்கள் அனைத்தும் இயக்க தலைமை  அலுவலகத்தில் கண்டிப்பாக இருக்க வேண்டும்.  மாவட்ட அலுவலகங்களிலும்கிராம புற அலுவலகங்களிலும் இந்த குழுக்கள் இருக்க வேண்டும்.  இதில் ஒரு சில குழுக்கள் கண்டிப்பாக அனைத்து இடங்களிலும் இருக்க வேண்டும். உறுப்பினர் சேர்க்கையின் போது வாங்கபடும் அனைத்து தகவல்களையும் வைத்து கொண்டு சிறந்த நபர்களை அந்தந்த அணியிலும்குழுக்களிலும்இயக்கத்தின் பொறுப்பு நிர்வாகிகளாக பதவியில் அமர்த்த வேண்டும். இயக்க பணிகள் மற்றும் வெளி வேலைகளுக்காக என்று எதற்கும் எந்த ஊதியமும் இயக்கம் சார்பாக தரபட மாட்டாது.  ஏனென்றால் இது இயக்கமாகும்.  நீங்கள் செய்வது வேலை அல்ல இயக்க சேவையாகும்  என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.  அதே போல் நீங்கள் எப்போது வேண்டுமானாலும் இயக்க பொறுப்பில் இருந்து இயக்க தலைமைக்கு தெரிவித்துவிட்டு  வெளியேறலாம்.  குழுக்கள் மற்றும் அணியில் பொறுப்பு வகிப்பவர்களுக்கும் கால வரையறை உள்ளது. மூன்று ஆண்டுகள் வரை இருந்து கொள்ளலாம். அதன் பிறகு வேறொருவர் அந்த பொறுப்பில் அமர்த்தபடுவார்கள்.  இடையில் நீக்கிவிட்டு வேறு நபரை பதவியில் அமர்த்த எனக்கு அதிகாரம் உண்டு.  இது போல் எண்ணற்றவைகள் உள்ளது.     

அட பாவிகளா என்னடா இது என்று இவர்களின் கண்ணா மூச்சி அரசியலை காண்போம். முகம் சுளிக்க வைக்கும் அனைத்தும் இவர்களுக்கு கிடைத்த தங்கம் போன்ற வாய்ப்பு என்று எண்ணி ஓர் புஸ்வானமான சரவெடி கண்ணாமூச்சி அரசியல் செய்துள்ளனர்.  சுருக்கமாக காண்போம்.

அரசியல் ஆனாலும்இயக்கம் ஆனாலும்கட்சி ஆனாலும் எப்போதும் நமக்கு எதிரே உள்ளவர்களை வைத்து தான் அரசியல் நடத்தி உள்ளனர்.  அதுவே ஆரோக்கிய அரசியல் ஆகும். அதுவே இயக்க வளர்ச்சிக்கு உதவும்.  மற்றபடி இயக்கத்தை கைபற்றவும் அதிலுள்ள நிதியை நம்முடைய இஷ்டத்திற்கு தாராளமாக செலவு செய்து வாழ துடிப்பது  முகம் சுளிக்க வைக்க கூடிய ஒன்றாகும்.  அதோடு இயக்க தலைவரையே திருத்துகிறேன் என்பதெல்லாம் இயக்கத்திற்கு பங்கம் விளைவிக்க கூடிய ஒன்றாகும்.  அதோடு இது அனைத்தும் ஈர்க்கபட்டு இயக்கத்திற்கு வந்ததாய் சொல்பவன் செய்யும் இயக்க வேலை இது அல்ல. அதோடு அவர் சின்ன பையன் என்று கூறியிருந்தால் அப்போதே நீங்கள் இயக்கத்தில் சேர தகுதியில்லையென்றே அர்த்தம்.  ஏனென்றால் நீங்கள் என்னால் ஈர்க்கபடும் போது தெரியவில்லையா நான் சின்ன பையன் என்று.  அதோடு இயக்கத்தில் சேரும் போது தெரியவில்லையா நான் சின்ன பையன் என்று. அதோடு எந்த சின்ன பையன் இவ்வளவு உலக மக்களை வரலாற்றில் ஈர்த்துள்ளான் என்று உன்னால் அருதியிட்டு கூற முடியுமாஎன்னை நீங்கள் சொன்ன சிறிய வயதிலேயே இயற்கையாகவே பெரியவர்ஜி என்று அன்பாக அழைத்துள்ளார்கள்.  இவ்வாறாக எந்த சிறிய பையன் அன்பாக கூறபட்டான்?  இவ்வளவு மக்களை ஈர்த்துள்ளான்.  எதிர்கட்சி செய்ய கூடிய வேலைகள் அனைத்தையும் விஸ்வாசமானவன் என்று குள்ள நரி கூட்டம் உள்ளே நுழைந்தது போல் அல் திறந்து வீட்டில் ஏதோ நுழைந்தது போல் நுழைந்து விட்டு கதை கூறினால் ஏற்க வேண்டுமானால் நான் கள்ள கபடமற்ற சின்ன பையனாக இருந்தால் மட்டுமே இவ்வாறு கூறி ஏமாற்ற முடியும்.

பெண்களை அவர் அப்படி கூறுகிறார் இப்படி கூறுகிறார் என்று என்னவெல்லாமோ கூற பட்டது.  இப்படி இருந்தால் பெண்களை எப்படி சேர்க்க முடியும் என்ற கேள்வி வேறு.  முதலில் இயக்கத்தில் நான் மட்டுமே யாரையும் கேள்வி கேட்க முடியும்.  மற்றபடி என்னிடம் வேண்டுகோள் தான் விடுக்க முடியும். ஏனென்றால் இயக்கம் என்னுடையது.  நீ அதில் அங்கம்.  நானோ தங்கத்தின் தங்கமாக தலைவராக இருப்பவன்.  அதோடு இதில் எதாவது பெண்ணை பற்றிய கோட்பாடுகளில் நான் சொன்னதாய் கூறபட்டது எதாவது இருக்கிறதா?  எதுவும் இருக்காது.  ஏனென்றால் இயக்கம் என்பது வேறு அதனுடைய பணிகள் என்பது வேறு.  அதிலும் என்னுடைய இயக்கம் ஈர்க்கபட்டவர்களால்  ஆரம்பிக்கபட்டு அதன் பிறகு மக்களுக்காக துடிக்கும் இயக்கமே.  அதாவது இன்று வரை நான் அதிகார பூர்வமாக எந்த இயக்கமும் நடத்தவில்லை என்பது குறிப்பிடதக்கது. பல இயக்கங்களின் கதை என்பது பல வேறுபாடுகள் கொண்டு இருக்கும். என்னுடையது ரசிகர் மன்றம் போல் என்றும் கூற முடியாது. புரியும்படி கூற வேண்டுமானால் ரசிகர் இயக்கம் மக்கள் இயக்கமாய் துடிக்கிறது என்று கூறலாம். 

ஏனென்றால் நான் மக்கள் சார்ந்த உலக மேடை அரசியலில் பிறந்த உடனே அதிலேயே வளர்ந்து அதிலேயே இருந்தவன். நான் பண்ணிய அரசியல் முழுக்க மக்கள் நலனுக்காக மட்டுமே.  அது வேறொரு இயக்கத்தை கொண்டு செய்தேன். ஏனென்றால் எனக்கு என்று இயக்கம் வேண்டாம்அரியணை வேண்டாம் என்று எண்ணியதால் தான்.

அஜித் ரசிகர் மன்றத்தை களைத்தாலும் இன்னும் அது அப்படியே Active-ல் தான் உள்ளது. அது போல் நடத்த வேண்டுமென்றால் ஒரு தகுதி வேண்டும்.  அந்த தகுதி என்பது நம்முடைய தலைவர் மீது நாம் கொண்ட பாசம்விஸ்வாசம் இருந்தால் மட்டுமே முடியும்.   

நான் பேசிய பெண்ணை பற்றிய பேச்சு அனைத்தும் எதையும் சார்ந்தது அல்ல.  சரியாக சொல்ல வேண்டும் என்றால் எனக்கானவள் ஆக வேண்டுமென்றால் இப்படி தான் இருக்க வேண்டும் என்று என்னுடைய வர போகும் குடும்ப பணியை மேற்கொண்டேன்.  அதோடு இதை எதாவது பின்பற்ற சொல்லபட்டதாஏனென்றால் உங்களுடைய குடும்பம் என்பது வேறு இயக்க பணி என்பது வேறு.  அதோடு புதுபேட்டை படத்தில் கூட சின்ன வயது பையன் சோபிக்காமல் போனதாய் படம் எடுக்கவில்லை.  எப்போதும் அதிசயமாய் இருப்பவன் அதிசயத்து போகும் காரியங்களை தான் அதிசயமே இல்லாதது போல் இதுவரை செய்துள்ளார்கள்.

மொத்தத்தில் இயக்கத்தை கைபற்றவும்நிதியை மோசடி செய்யவும் etc மட்டுமே என்னுடைய அனுமதியில்லாமல் இயக்கத்தை ஆரம்பித்தன் காரணம் என்பது தெளிவாக புரிகிறது.

அவ்வாறு ஆரம்பித்தே தீர வேண்டுமென்று என் வீட்டில் தர்ணா செய்திருந்தாலோ அல் தொடர் உண்ணாவிரதம் மேற்கொண்டிருந்தாலும் நிச்சயம்  என்னிடம் இருந்து அனுமதி கிடைத்திருக்கும்.  ஏனென்றால் பார்க்க தான் வில்லன் போன்று தெரியும்.  ஆனால் இளகிய மனது உள்ளவன் நான். ஆனால் இவ்வாறு ஓர் கண்ணாமூச்சி அரசியலை தன் இயக்க தலைவரிடமே மேற்கொண்டு இழிவான செயல் செய்து ஏதோ மொத்த இயக்கமே Correpted என்பது போன்றும் இதனால் தான் அவர் வேண்டாம் என்று ஒதுங்கினாரோ என்பது போல் சித்தரிக்கபட்டுள்ளது.  இதனை களைந்து நாங்கள் அப்படி அல்ல என்று நிரூபிக்க வேண்டியது மக்களிடம் தான்.  என்னிடம் கூட இல்லை.  ஏனென்றால் நான் நடத்தி இருந்தால் இப்படி நடக்க வாய்ப்பே இல்லை.  ஏனென்றால் என் கண்ணை நானே குத்தி கொண்டேன் என்பது போன்ற விஷயத்தை எந்த அறிவு ஜீவுகளும் செய்ய வாய்ப்பில்லை.  இவ்வாறு நடத்தியவனின் எண்ணம் மொத்தத்தையும் தன்னுடையது என்று எதுவும் இல்லாமலேயே தள்ளி கொண்டு செல்ல வேண்டும் என்று நினைத்து செய்த காரியத்தால் தான்.  அவனுடையதாக இந்த இயக்கம் இருந்தால் என்னிடம் பிச்சை எடுப்பது போல் அனைத்தையும் பிச்சையாக கேட்டிருக்க மாட்டான். 

அவன் தான் மட்டுமே அறிவாளி என்று நினைத்து அடிமுட்டாள் ஆன கதை தான் இது.  அதோடு எதற்கும் பதில் கூறமுடியவில்லையென்றால் அவன் இயக்கம் நடத்த அருகதையற்றவன் என்று பொருள்.  அதோடு தன்னுடைய முட்டாள்தனத்தால் வெறும் கேவலம்அசிங்கம்மானக்கேடு போன்றவற்றை தொடர்ந்து சந்தித்துவிட்டு அதனை மறைத்து அதெல்லாம் ஒன்றுமில்லை என்று கூறுபவனும் இயக்கத்தை ஒழுங்காக வழி நடத்த முடியாதவன் என்பது திண்ணம்.  அப்படியென்றால் இயக்க பொறுப்பில் தேர்ந்தெடுக்கபட்டவர்கள் அனைவரும் தகுதியின் அடிப்படையில் சேர்க்கவில்லை மற்றும் அந்த இயக்கம் உருவாக்கபடவில்லை என்று அர்த்தம் ஆகிறது.  இதிலும் பணம் வாங்கி கொண்டு நடந்திருக்கலாம்.   

நான் ஏற்கனவே கூறியது போல் ஜால்ராக்களை வைத்து கொண்டு ஜால்ரா அடித்து கொண்டே எதையும் நடத்த முடியாது.  பஜனை கூட பண்ண முடியாது.

ஒரு வேலை வேறு யாராவது பணம் கொடுத்து இதனை முற்றிலுமாக அழித்து விடு என்று கூறியிருக்கலாம். ஏனென்றால் இந்த இயக்க அமைப்பு என்பது World Wide ஆகும்.  அதனால் தான் பல வருடங்களாக ஓர் சரவெடி போல் தொடர்ந்துள்ளது. அவ்வாறு கூறி இருந்தாலும் நடக்காது.  அதாவது என்னுடையதை அழிக்கவும் முடியாது காப்பாற்றவும் முடியாது.  ஏனென்றால் இயக்கம் ஒன்று நான் அதிகார பூர்வமாக மேற்கண்ட கோட்பாடுகளுடன்கொள்கைகளுடன் ஆரம்பித்தால் தான் அது என்னுடைய இயக்கம்.  மற்றபடி இது என்னுடையது அல்ல.  World Wide எல்லாம் நடத்த பெரிய தகுதி வேண்டும் அது என்ன மாதிரியான பெரியவர்களால் மட்டுமே முடிய கூடியது.  பெரியவர்கள் என்று கூறி கொண்டு அழிப்பதாய் நினைத்து சின்ன பையன்கள் சிறு பிள்ளை தனம் செய்தது போல் World Wide-ல் நடந்தால் சும்மாவிடுவார்களா?  அதனால் தான் அம்மா அம்மா என்று கதறும் படியான அடி விழுந்தது.  இப்போது யார் அழிந்ததுஎன்னை அழிக்க முடிந்திருந்தால் அல் என் மானசீக இயக்க தோழர்களை  ஏமாற்ற முடியும் என்றால் அல் மக்களை என் மீது தவறாக சித்தரித்து நம்ப வைக்க முடியும் என்றால் அப்போதே நடந்திருக்க வேண்டும் அல் 3,5,7 வருடத்திலாவது குறைந்தபட்சம் நடந்திருக்க வேண்டும்.  அப்போதே புரிந்திருக்க வேண்டாம்.  புரிய வாய்ப்பில்லை ஏனென்றால் இலவசமாக பணம்அதிகாரம் கிடைக்கிறது என்ற தவறான நினைப்பே இந்த சூடு சொரணை இல்லாத தனத்திற்கு காரணமாகும்.  உன்னுடைய அத்தியாயம் ஆரம்பத்திலேயே முடிந்துவிட்டது.  இவனை பற்றி கூறினால் எனக்கு தான் அசிங்கம்.  ரொம்ப Deep-ஆக சென்றுவிட்டேன் என்று நினைக்கிறேன்.   

இதிலிருந்து நாம் புரிந்து கொள்ள வேண்டியது ஒன்றை மட்டுமே.  எதுவும் சாதாரண விஷயமல்லஅதோடு  எதிலும் எவரும் எந்தவொரு துரோகத்தையும் செய்ய துணிவார்கள் என்பதை தான்.  பணம்அதிகாரம் என்பதை நாம் அடுத்தவருக்கு நம் அனுமதியோடு கொடுத்தால் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்பதே இதன் சாரம்.  ஏனென்றால் எதுவும் முடியாத இந்த விஷயத்திலேயே ஏகபட்ட சரவெடி தில்லுமுல்லுகள் புஸ்வானமாய் வெடித்திருக்கிறது என்றால் நம்முடைய பணம்அதிகாரம் புழங்கும் இடத்தில் எவ்வளவு நடக்க வாய்ப்பிருக்கிறது.  அதுவும் நேரடியாக நடக்க வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது.  நமக்கே தெரியாமல் நமக்கு அனைத்து பங்கமும் ஏற்பட கூடிய அளவிற்கு ஓர் உள்ளடி வேலையில் இறங்கி கண்ணாமூச்சி அரசியல் செய்து பிழைப்பு நடத்தினால் தான் முடியும்.  ஒரு இடத்தில் கையாடல் நடக்கிறது என்றாலே மேல்மட்டத்தின் மீது பயமில்லை என்பதையே அது காட்டுகிறது.  பயமே இல்லாமல் எப்படி இருக்க முடியும்?.  அப்படியென்றால் அவருக்கு இது தெரிய போவதில்லை என்ற எண்ணமாக இருக்கலாம் அல் நம் மீது தவறான எண்ணத்தை விதைத்திருக்கலாம்.  அப்படி விதைத்தால் யாரும் சொல்ல போவதில்லை மறைத்துவிடலாம் என்று எண்ணியிருக்கலாம்.

இதுவெல்லாம் பெரியவரின் சவுக்கடியாக உங்கள் பார்வைக்கு வைக்க காரணம்.  நம் இடத்தில் நாம் பாஸ் ஆக இருந்து கொண்டிருக்க ஒரு தவறு நடக்கிறது என்றால் அது எப்படி சாத்தியம்?  சிந்திப்பீர் விழிப்பீர்.  மேற்கண்ட உண்மை போன்ற கற்பனை கதையில் நான் சவுக்கடி கொடுத்துவிட்டேன்.  ஆனால் பலருக்கு இன்னும் சவுக்கடி கொடுக்கபடவில்லை.  அதாவது நாம் முதலாளியாக இருந்தும் நாம் எப்படி சவுக்கடி வாங்கியது போல் எதுவும் செய்ய முடியாமல் சுருண்டு கிடக்கிறோம்.

அட பாவிகளா என்னடா இது என்பது போன்று முறைகேடுகள்அக்கிரமங்கள் எப்படி நடக்கிறது?  இவ்வாறு இருந்து விட்டு கம்பி நீட்டிவிடலாம் என்ற எண்ணம் எப்படி தோன்றுகிறது?  அப்படியென்றால் நம்மை சுற்றி என்ன நடக்கிறது?  நம்மை சுற்றி விஸ்வாசமானவர்கள் தான் இருக்கிறார்களாநீதிமன்றத்தில் எவ்வளவு மோசடி வழக்குகள் இருக்கிறது?  இதனை எப்படி அவர்களால் செய்ய முடிந்தது?  மோசடி செய்த அனைவருமே கம்பி நீட்டி தப்பித்துவிடலாம் என்ற எண்ணம் எப்படி எழுகிறது?  ஒரு சிலரால் தன் மகளுக்கு தனக்கு பிடித்த மாப்பிள்ளையை கூட திருமணம் செய்து வைக்க முடியவில்லை இன்னும் பலர் வியாபாரத்தில் என்ன செய்தாலும் பெரிதாக சோபிக்க முடியவில்லை.  ஒரு சிலர் நஷ்டமடைந்து இருக்கிறார்கள்.  எல்லாமே சரியாக நடந்தால் எப்படி இந்த நஷ்டம் வரும்?  அப்படியென்றால் எங்கோ தவறு நடக்கிறது என்று தானே அர்த்தமாகிறது. அப்படியென்றால் அவர்களை சுற்றி ஒரு கண்ணாமூச்சி விளையாட்டு அரங்கேறி கொண்டிருக்கிறது என்று தானே அர்த்தமாகிறது.  அவர்களை கடைசிவரை அடையாளம் காணாமல் அவர்களுடனே வாழ்ந்தால் அது எவ்வளவு பெரிய ஆபத்து.  கண்மணி தொடர் போல்.

இது  அனைத்தும் ரைட்டாராங்கா என தெரியவில்லை.  

 குறிப்பு:-

மேலே  உள்ள இரண்டு கட்சி தலைவர்களின் புகை படங்கள் எதற்காக என்றால் நன்றி மறப்பது நன்றன்று அதனால்.  மற்றபடி அவர்கள் பாதை வேறு என் பாதை வேறு. இது இயக்கம் ஆரம்பித்தால் இந்த புகைபடங்கள் கண்டிப்பாக எல்லா அலுவலகங்களிலும் இருக்கும்.  மற்றபடி அவர்களுக்கும் இதற்கும் எந்தவித தொடர்புமில்லை. மறுபடியும் DEEP  ஆக சென்றுவிட்டேன்.  இதற்கு தான் கதை என்னும் கடலிற்கு செல்வதில்லை.  சென்றாலே கதைக்குள் என்னை அறியாமலேயே மூழ்கிவிடுகிறேன்.  

 

https://justicemayel.blogspot.com/2020/11/justicemayelblogspotcom.html