விதவை பண்டிகையா? ஓணம் தினம் [FESTIVAL DAY]

 விதவை  பண்டிகையா?  சுமங்கலியான, மங்கலகரமான ஓணம் தினம் [FESTIVAL DAY]★புரட்சி கவிஞர் Valavanur V.ரா.SivaSaravanaLingam.




கேரளாவில் ஓணம் பண்டிகை வரும் 31ஆம் தேதி சிறப்பிக்கபடுகிறது. ஓணம் பண்டிகையில் மலர் அலங்கரிப்பது முக்கியத்துவமாக மங்கலகரமாக  கருதபடுகிறது.  அதாவது திருவிழா முதல் அனைத்திலுமே அழகிய சுமங்கலி போல் காட்சியளிக்க செய்வது இம்மலர்களாகும்.  அது தமிழ்நாட்டிலிருந்து கேராளா கொண்டு சென்று அலங்கரிப்பது மற்றும் புத்தாடை அணிவது என்பது ஓர் சம்பிரதாயம் போல நடந்து வருகிறது. அதோடு தமிழ்நாட்டு மலர்கள் கேரள திருவிழாக்களை அலங்கரிக்க செய்வது மற்றும் மக்களை மகிழ்ச்சியுற செய்வது என்பது தமிழ்நாட்டு மக்களை இன்புற செய்யும் நிகழ்வுகளே ஆகும். அதனால் நெசவாளர்கள் முதல் பூ கடை காரர்கள் வரை குறை ஏதும் இல்லாதவாறு பார்த்து கொள்ள கண்ணும் கருத்துமாக அத்தனையும் கவனமாக உற்பத்தி செய்து, மலர்களை பரித்து கட்டி அம்மாநிலத்திற்கு அனுப்புகின்றனர்.

ஆனால் இந்தாண்டு  கொரானா-வை காரணம் கூறி ஆடைகள் முதல் மலர்கள் வரை தடை செய்யபட்டுள்ளது.  இது கேரள மக்களை வருத்தமடைய செய்துள்ளது.  அதோடு அவர்கள் காட்டில் மற்றும் பல பகுதிகளை பூக்களை பறிக்க செய்து அம்மாநில அரசு அவர்களை அவதிக்குள்ளாக்கியுள்ளது என்பது குறிப்பிடதக்கது.  அதோடு புத்தாடைகளும் தமிழ் நாட்டு ஆடைகளை விரும்பி உடுத்தும் பழக்கம் உள்ளவர்கள்.  

இது ஏதும் இல்லாததால் ஏதோ கடமைக்கு பூக்கள், பூத்தாடைகள் என்பது போல் ஆனந்தமான சுமங்கலி தினத்தை இழந்து விதவை கோலம் பூண்டது போல் பண்டிகையானது கடமைக்கு கொண்டாடபடுவது போல் காட்சியளிக்கிறது. விதவைகளே விமர்சியாக கொண்டாடும் பண்டிகை இதுவாகும்.  இது அனைத்தும் ஏதோ அபச குணம் போன்ற சமிக்ஞைகள் போன்று எண்ண வாய்ப்புகள் உண்டு.  ஏனென்றால் பல வருடங்களாக கடைபிடிக்கும் சம்பிரதாயம் போல் மற்றும் அனுஷ்டானம் போல் இது நடந்து வந்துள்ளது. 

கேரளாவில் கொரானா தொற்று இல்லாத மாநிலம் என்று அறிவிக்கபட்டுவிட்டதா?  அப்படி இருக்க கொரானா என்று கூறியுள்ளார்களே?   அம்மாநில மக்களுக்கு பரவி விட்டால் என்ன செய்வது என்பதில் உங்களை விட அதற்கு அதிகம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய இடத்தில் தமிழ்நாடு உள்ளது.  ஏனென்றால் ஒரே விஷயம் தன்னுடைய மாநிலத்தில் நடந்தால் அது அம்மாநில, மாவட்ட, ஊர், தெரு பிரச்சனை. அதுவே அதே விஷயம் வேறு மாநிலத்தில் என்றால் அது மாநில பிரச்சனையாகிவிடும்.  அதனால் அவ்வாறு ஏதும் நடக்காமல் தான் அனைத்துமே ஒரு மாநிலத்திற்கும் இன்னொரு மாநிலத்திற்கும் உண்டான அத்தனை விஷயங்களும் நடக்கும்.  அதாவது வேறு மாநிலத்திற்கு சுற்றுலா சென்றாலே பார்த்துடா இது நம் மாநிலம் அல்ல.  வேறு மாநிலம் மானம் கப்பலேறிடும் என்று தான் நண்பர்களே பொதுவாக பேசுவார்கள் சின்ன விஷயமாக இருந்தாலும்.

சரி விஷயத்திற்கு வருவோம்.  கொரானா என்பது கேரள மாநிலத்தில் இல்லையா?  அதோடு அங்குள்ள இடங்களில் பூக்கள் முதல் புத்தாடைகள் வரை விற்பவர்களுக்கு அனைத்து சந்து பொந்து இடங்களிலும் கொரானா தொற்று இல்லை என்று உறுதி செய்யபட்டுவிட்டதா?  அதோடு அங்கு பூக்கள் முதல் ஆடைகள் வரை கொரானா தொற்று இல்லை என்று உறுதி செய்யபட்டுவிட்டதா? 

இது அனைத்தும் கேரள மாநிலத்தில் அசாத்தியம் மற்றும் கஷ்டம் என்றால் தமிழ்நாட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் சாத்தியம்.   ஏனென்றால் வேறொரு இடத்திலிருந்து ஏற்றுமதி என்றால் ஆயிரம் கேள்விகள் கேட்டு தகவல்களை வாங்கலாம் அதோடு சோதனையும் செய்யலாம்.  அதோடு இது ஒரே மாவட்டத்துடன் முடிந்துவிடும். கன்னியாகுமரியில் என்றால் அம்மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரானா? அதோடு அம்மாநிலத்திற்கு பூக்கள் கொடுப்பவர்கள் மற்றும் புத்தாடை நெசவு செய்து கொடுப்பவர்களுக்கு கொரானா எத்தனை பேருக்கு வந்துள்ளது? பூக்கள் பறித்தவர்களுக்கு எத்தனை பேருக்கு கொரானா வந்துள்ளது? என்பது வரை தகவல்களை அறிய முடியும்.  அதோடு அங்கு விசாரிக்க வேண்டுமென்றால் விசாரிக்க முடியும்.  அதோடு புத்தாடை முதல் மலர்கள் வரை சோதித்தே வாங்கி கொள்ள முடியும்.  ஒரே இடத்தில் அனைத்து Purchase-ஐயும் முடிப்பது போல்.

இவ்வாறு எளிதான சாத்திய கூறுகள் அதிகம் இருக்கும் போது ஏன் அரசு இவ்வாறு கூற வேண்டும்?  அம்மாநிலத்திலும் தமிழ்மக்கள் உள்ளனர் அவர்கள் ஓட்டு போட்டுள்ளனர் என்பதை மறந்துவிட்டதா அம்மாநில அரசு?  அதோடு கேரள மக்களின் குறைந்தபட்ச சம்பிரதாயம் போன்ற விருப்பத்தை கூட நிறைவேற்ற அம்மாநில அரசுக்கு விருப்பமில்லையா?  கொரானா தொற்று என்ற காரணம் உண்மையிலேயே தான் கூறுகிறார்களா?  ஏனென்றால் கொரானா தொற்றை எளிதில் கண்டறிய கூட அத்தனை சாத்திய கூறுகளும் இதில் தான் அதிகம் உள்ளது.  அப்படி இருக்க இதில் இப்படி கூறுகிறார்கள் என்றால் மொத்த மக்களையும் பண்டிகை காலங்களில் வருந்த செய்து இப் பண்டிகையை அம்மாநில மக்கள் கொண்டாட வேண்டும் என்றால் பண்டிகை வரமா சாபமா என்பது போன்ற கேள்வி எழாதா?  இவர்கள் கம்யூனிஸ்ட் கட்சி என்பதால் மக்களின் பண்டிகை விருப்பம் இவர்களுக்கு புரிய மறுக்கிறதோ?  கேரள மக்கள் இப்பண்டிகையை கொண்டாடுவதே இவர்களுக்கு பிடிக்கிறதா?  பிடிக்கவில்லையா என்ற சந்தேகம் எழுகிறது.  

மக்கள் விருப்பம் முதல் கொரானா பாதுகாப்பு வரை இருக்கும் அத்தனையும் கருத்தில் கொண்டு இதனை ஆலோசனை செய்து முடிவு எடுத்து மக்கள் அனைவரையும் உற்சாகத்துடன் பண்டிகையை கொண்டாட செய்ய வேண்டியது அம்மாநில அரசின் கடமையாகும். கேரள மக்களின் உணர்வுகளை மதித்து தமிழ்நாடு அரசும் கன்னியாகுமரி மாவட்ட M.L.A-விடமோ அல் M.P-யிடமோ அல் Collector இடம் இதை கூறி இதில் கேரள அரசுக்கு தமிழ்நாட்டில் இருந்து ஏற்றுமதி ஆவதில் ஒத்துழைப்பு கொடுத்து நல்லபடியாக அவர்கள் பண்டிகையை ஆனந்தமாக கொண்டாட வழிவகை செய்ய வேண்டும்.  ஏனென்றால் தமிழ்நாடு வந்தாரை மட்டும் வாழ வைக்கும் மாநிலம் அல்ல. அனைத்து மாநில மக்களும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் மாநிலமும் கூட.  கேராளாவில் பூக்கள் பரிக்கும் மக்கள் மாஸ்க் கூட போடல என்று நினைக்கிறேன்.        

கேரள மக்கள் அனைவருக்கும் அனைத்து விருப்பமும் நிறைவாகிய ஓணம் பண்டிகையாக கொரானா விதிகளை கடைபிடித்து கொண்டாடி தீர்க்க நல்வாழ்த்துக்களை இத்தருணத்தில் தெரிவித்து கொள்கிறேன். 

தமிழ்நாட்டு ஜல்லி கட்டு போராட்டம் இந்தியா முழுவதிலும் உள்ள அம்மாநிலம் சார்ந்தவற்றை திறந்து வைத்தது.  இப்போது தமிழ்நாட்டு வினாயகர் சதுர்த்தியானது இந்தியா முழுக்க வினாயகர் சதுர்த்தியை கொண்டாட செய்து அதோடு அனைத்து மாநில பெரிய பண்டிகைகளுக்கும் நல்ல படியாக பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பித்து திறந்து வைத்ததில் நான் சந்தோஷமடைகிறேன்.  அதோடு என்னுடைய பங்கு இதில் மகத்தான பங்காக இருந்ததில் பெருமை அடைகிறேன்.  ஜெய்ஹிந்த். 

இது அனைத்தும் ரைட்டா, ராங்கா என தெரியவில்லை.   

https://justicemayel.blogspot.com/2020/11/justicemayelblogspotcom.html