அஸ்திவாரம் இல்லா கோட்டை மாளிகை" [PALACE]

ஆதார் "அஸ்திவாரம் இல்லா அரண்மனை கோட்டை மாளிகை" [PALACE]★புரட்சி கவிஞர் Valavanur V.ரா.SivaSaravanaLingam.

ரிதம் F.M 605 108-ல் 130-வது கட்டுரையாக இந்த ஆர்டிக்கல் வெளிவருகிறது.

அரண்மனையில் வாழ்ந்தாலும் ஏதும் அரண் இல்லாமல் மற்றும் மனையே புறம்போக்கு ஆனது போல் அதோடு கோட்டையே எஂக்கு  கோட்டையாக இல்லாமல் நொறுங்கி தூள் தூளான கதையெல்லாம் கேள்விபட்டிருக்கிறேன்.  அரண்மனை என்றால் நம் உறவுகள், வசதிகள் என அனைத்தையும் இதற்காகவே நஷ்டபட்டு இழப்பது.  இதுவெல்லாம் Success Formula என நினைத்து வாழ்க்கையே இழந்தவர்கள் பலர் உள்ளனர். நல்லது நடந்துள்ளதா என்பது அவர்களுக்கே வெளிச்சம்.  என்னை பொறுத்தவரை எது அடைந்தாலும் மனது திருப்திகரமாக இருக்க வேண்டும். மனது திருப்தி அடையாத மற்றும் வருந்தும் எந்த விஷயமும் அது தோல்வியே. சக்ஸஸ் Formula என்றால் "சக்கை" போடு போட வேண்டும். அதைவிட்டு நம்மை "சக்கை" போல் தூக்கி எறிய கூடாது.

சக்ஸஸ் பார்முலா என நினைத்து இதற்காக அவர்கள் வாழ்வில் பாதி நேரத்தை செலவிடுபவர்கள்  அதிகம்.  இது 100 Formula இருக்கிறது.  மொத்தமாக பார்த்தால் வாழ்க்கையே இதற்காகவே செலவிடுகிறார்களா என்று தோன்றும்.

ஷாக் உண்மைகள்:-

1) வெளியில் நடக்கும் சிறிய விஷயம் பெரிய சண்டையாகி அது வன்முறையாகி கைது ஆனவர்கள் உண்டு. இதற்காக பழி தீர்க்க நினைத்து அவர்கள் வாழ்க்கையையே பலி கொடுத்தவர்கள் ஏராளம்.  ஆனால் பல கோடி மக்கள் வாழும் இப்புவியில் இது குறைவு. அதனால் தான் இதனால் நடக்கும் குற்றங்கள் கம்மியாக இருக்கிறது. இருந்தாலும் ஓர் குடும்பம் பாதிக்கபட்டு இருந்தாலும் அது கொடுமையே, பரிதாபமே. அதோடு நம்மை ஏளனமாக தான் கூறுவார்கள்.

இது அனைத்தும் யாரோ கூறி அது அவர்கள் மனதில் மறக்காமல் பசுமரத்தாணி போல பதிந்ததால் நடப்பது தான் இது. ஏனென்றால் சொல்பவர்கள் கடைசி வரை எல்லா இடங்களிலும் வரபோவதில்லை. இவ்வாறு கூறுபவர்கள் ஓர் ஆமை புகுந்த வீடு போல மற்றும் மோகினி, காட்டேரி மற்றும் பேய், ஆவி வீட்டில் புகுந்து அனைத்தையும் மோசமடைய செய்த கதை தான். இவர்கள் ஓர் நாசக்காரர்கள். இவர்களால் மாட மாளிகை கூட கோபுரம் எல்லாம் சரிந்துள்ளது. நம்முடைய வாழ்க்கையில் நாசம் ஆரம்பித்ததுமே இவர்களை விட்டு விலகிவிட்டால் நமக்கு எதுவும் பெரிதாக நடக்காமல் தப்பித்து கொள்ளலாம். தப்பித்தோம் பிழைத்தோம் என்று நமக்கு எதுவும் தப்பு கொட்டாமல்   பலர் தப்பிக்க முனைந்து உள்ளனர் இவர்களிடம். இதனால் வேலை இழந்தவர்கள், வேலையில் பல பிரச்சனைகள் அடைந்தவர்கள் ஏராளம். இது அனைத்தும் யாரோ ஓர் பிடாரியால் நடந்ததே.  ஒண்ட வந்த பிடாரி ஊர் பிடாரியை கெடுத்தது போல் ஆகிவிடும். அவர்கள் எல்லாம் விஷமிகள். எ.கா:- நான் சிரித்தால் திரைபடம் வேலை இழக்கும் சீன்.

சில விஷயமும் சிறிய விஷயமும் இது தான்:-

1) ஓர் தவறு நம் மீது இருந்தால் ஏற்று கொள்ள மாட்டார்கள். வாக்குவாதம் செய்வார்கள். ஏனென்றால் அவ்வாறு செய்தால் தான் மரியாதை கிடைக்குமாம்.  ஆனால் மரியாதை இழந்தவர்கள் ஏராளம். எ.கா:- வண்டி விடுவதில் இருந்து லேசாக இடித்தது வரை நடக்கும் அத்தனை பிரச்சனைகளும் இதனால் தான். எ.கா:- கே.டி.எம் பைக் துளைந்த விவகாரம் மரணம் ஏற்பட்டு கொலை வழக்கில் கைது என்கிற செய்தி. காரணம் பந்தா போலிஸ் எங்களுக்கு தேவையில்லை என்பது போல் காட்டிக்கொண்டால் ஏரியாவில் பெரிய ஆள் போல பில்டப் ஆகிவிடலாம் என்கிற மனபோக்கு. யாராவது கேட்டால் நாங்களே தட்டி தூக்கிட்டோன்டா என்று பந்தாவா சொல்லி கொள்ளலாம். உங்களுக்கு தான் போலிஸ் எங்களுக்கு தேவையே இல்லை என்று கெத்தாக கூறி கொண்டு திரியலாம் என நினைத்து கைதாகி கைதியாக போலிஸ் ஸ்டேஷனில் உள்ளனர்.

2) எனக்கே நடந்துள்ளது.  நாங்கள் பல வருட நண்பர்கள்.  ஆனால் சில களிசடைகள் உறவு கார நண்பர்கள் என இரண்டு தரித்திரங்கள் வந்தது. என்னிடம் பணம் இல்லை அதனால் நான் கொடுத்த பத்து ரூபாயை கேட்டேன். இது போல் எங்களுக்குள் பல முறை நடந்துள்ளது. ஆனால் அதற்கு அந்த தரித்திரம் நாங்கள் எவ்வளவு செலவு செய்கிறோம்.  அவனிடம் பத்து ரூபாயை கொடுக்காதே என்றான். [உண்மையிலேயே செலவு செய்பவன் என்றால் 50 ரூபாயா எடுத்து கொடுத்திருக்க வேண்டும்.]  பேச்சு முத்தி சண்டையாகி நண்பர்களாக இருந்தவர்கள் வினாடியில் பகைவர்களாகி என்னை ஐந்து பேர் அடிக்க பிறகு நான் ஐந்து பேரையும் அடித்து விரட்ட என்று ஆனது.  அன்று நான் சற்று தெளிவாக இருந்ததால் பெரிய சண்டையானாலும் மெயின் ரோட்டில் படத்தில் காட்டுவது போல் ஓடி ஓடி அடிக்கவில்லை. அதோடு  கத்தி குத்தில் முடியவில்லை அந்த வயதில். இவ்வாறு தரமாட்டேன் என்று கூறுவது எதற்காக என்றால் இவன் கேட்டதும் கொடுத்துவிட்டால் கௌரவம் போய்விடுமாம்.  ஆனால் இதனால் நட்பு பிரிந்தது.  அவர்களுக்கு அவர்கள் கடையிலும்,  அவர்கள் வீட்டிலும் நடுத்தெருவில் மொத்த மானமும், கௌரவமும் போய் இருக்கும். ஆனால் சுமாராகத்தான் அவர்களுக்கு போனது. இது போல் மனதில் ஒன்று வைத்து வெளியில் வேறு மாதிரி பேசி வாழ்க்கை முழுக்க பிரசசனைகள் மற்றும் பழிதீர்க்க துடிக்கும் பலர் என்று ஓர் பாதுகாப்பில்லாமல் வாழ்கின்றனர்.

3)காதலிப்பவர்கள் Brakeup ஆவதும் ஓர் சிறிய விஷயம் தான். அந்த பெண்ணை வேறு ஆணுடன்  பேசாதே மற்றும் Face Book Chating and Whatsup Message என்று இருக்காதே என்பான். அவள் கேட்கமாட்டாள் சந்தேகபடுகிறாயா என்னை நம்பவில்லையா என்று கேட்பாள். இதனால் வாக்குவாதம் அதிகமாகி "வாக்கு" போல் பலமாக இருந்த "காதல்" மோதலாகி இதில் கனபொழுதில் இறந்துவிடுகிறது. உண்மை என்னவென்றால் வேறு ஆணிடம் பேசுகிறோம் என்றால் நம்மை தவறானவள் என்று நினைத்துவிடுவான்.  நமக்கு ஏதோ பல ஆண்கள் மீது ஈர்ப்பில் அரிப்பில் அலைகிறோம் என்று ஆகிவிடும்.  அதனால் அவன் சந்தேகபடுகிறான் என கூறினால் நம் மானம் போகாது என நினைத்து மொத்த மானமும் போன கதையெல்லாம் உள்ளது.V1 Web Series.

4) டிக்டாக் வீடியோஸ், Face Book, Whats Up-ல் பல Group-களில் தெரிந்தவர்கள் தெரியாதவர்கள் என்று பலருடன் இருப்பார்கள்.  ஏனென்றால் நான் மிக பெரிய ஆள் என்பது போல் காண்பித்து கொள்ள. இதில் ஆண் பெண் என்ற பேதமில்லை. இதற்காக படிப்பில் கவனம் இல்லாமல், குடும்பத்தில் நேரம் செலவழிக்காமல் பலர் இதில் செலவிடுகின்றனர்.  அதோடு பல பிரச்சனைகளையும், பணத்தையும் இழந்தவர்கள் எல்லாம் உள்ளனர்.

நம் வாழ்க்கையில் எதையும் தகர்க்க முடியாமல் நரியிடம் மாட்டிய இரைபோல் ஆகி, எதுவும்  தக தகவென ஜொலிக்காமல் மனது நொந்து ஓர் "தகர டப்பா" ஆனது தான் மிச்சமாகும்.  இதற்கு காரணம் நம்மிடம் "டப்பு" இருந்தும் சரியாக "டப்பிங்" ஆர்டிஸ்ட் வைக்காததே. எதுவும் தெரியாதவன் எகிறி குதித்தான் கிணற்றில் என்பது போல நம் உணர்ச்சிகரமான வாழ்க்கையே காமெடி "டப் மேஷ்" ஆகி உணர்ச்சியற்று கேவலமானது தான் மிச்சம். சரியாக படம் ஓடவில்லையென்றால் தலையில் துண்டு போட்டு தயாரிப்பாளர் தான் ஓடுவார்.  தயார் பண்ணிய படம் தரமாக இருந்தால் டிக்கெட் வாங்க ரசிகர்கள் "திரைபட கொட்டகைக்கு" "கொட்டடித்து" கொண்டு ஓடி வருவார்கள். இது நம் மனதில் தேள் "கொட்டியது"  பதிந்தால் நம் வாழ்க்கை எதுவும் யாரும் அசிங்கமாக கழுவி "கொட்டுவது" போல் இருக்காது.

அதற்காக அனைத்தையும் வேறு ஒருவர் கூறினாரா அல் உங்கள் புத்தியில் தோன்றி செயல்படுகிறீர்களா என்பது விஷயமல்ல. எதுவாக இருந்தாலும் சரியோ தவறோ நமக்கு எதுவும் பிரச்சனை இருக்க கூடாது. அப்படி இருந்தால் கூடா நட்பு கேடாய் முடிந்தது என்று தான் ஆகும்.

இது அனைத்தும் மிகச்சிறிய விஷயங்கள் தான். ஆனால் சம்பந்தபட்டவர்களின் குடும்பத்தையே பிரட்டி போட்டு பூ மாதிரி இருந்த குடும்பத்தில் பூகம்பம் வந்தது போல் ஆகியுள்ளது. குடும்பமே சின்னா பின்னமாகியுள்ளது.

இதற்கு காரணம் "சுயமாக சிந்திக்க முடியாத பலவீனம்" தான். சுயமாக சிந்திக்க முடியாமல் வேறு ஒருவரிடம் தஞ்சம் அடைந்து பிச்சை எடுப்பதுபோல் பிச்சை எடுத்து செயல்படுத்தி அதில் ஏதாவது நடந்தாலும் என்ன செய்ய வேண்டும் என்று தெரியாமல் மறுபடியும் அவனிடம் பிச்சை எடுப்பதே தொடர் பிரச்சனைகளுக்கு காரணம்.

ஏனென்றால் தவறு நடந்துவிட்டது என்று பலவீனமான உங்களிடம் சொல்ல மாட்டான்.  சொன்னால் அவனும் நம்மை போல் தான் என்று நினைப்பார்கள் அதோடு அவர்களுக்கு நடந்ததற்கு நம்மை பொறுப்பேற்க சொல்லுவார்கள் என்பதனால் மறைப்பார்கள்.  ஆனால் வெளியில் தெரிந்து எவனும் இவனிடம் ஐடியா கேட்காதீர்கள் கேட்டால் தெருவில் தான் நிற்க வேண்டும் அதோடு பொறாமை பிடிச்சவன் என்று தான் கூறுவார்கள் அவன் என்ன சொன்னாலும்.

அதோடு நாம் எடுக்கும் முடிவுகள் அனைத்தும் தவறானால் அதுவும் நம் பலவீனம் தான்.

வேறொருவரிடம் செல்ல முடியாமல் அடி வாங்கி கொடுத்தவனிடமே மறுபடியும் ஐடியா கேட்டு மொத்த ஜோலியையும் முடித்து கொள்பவர்களையும் வேறு என்ன சொல்வார்கள்? 

இவ்வளவு பலவீனங்கள் நம்மில் வைத்து கொண்டு ஒருவனிடமே தொடர்ந்து பிச்சை எடுத்தால் அவனும் தட்சனை எவ்வளவு தான் போடுவான்.  அதோடு இவனுக்கு பிச்சை போடவா என்னை பெற்று போட்டார்கள் மற்றும் வக்கு இல்லாதவனுக்கு எவ்வளவு தவறான ஐடியா கொடுத்தாலும் நாதியில்லாமல் நம் காலை தான் பிடிப்பான் என்ற நினைப்பு தான் காரணம். பல படிப்புகள் படித்தும், பணம் படைத்தவனாய் இருந்தும் நம்முடைய இந்த பலவீனத்தை என்னவென்று சொல்வது? எல்லாம் உறுப்புகளும் இருந்து செயல் அற்றவனாய் மற்றும் ஒன்றுமே முடியாதவனுக்கு எந்த உறுப்பு எப்படி இருந்தா என்ன என்பது போல் தான் நம்முடைய உறுப்படாத வாழ்க்கை உரு குலைந்து உள்ளது.

எல்லாம் இருந்து கேட்டாலும் மற்றும் எதுவும் கொடுக்காமல் இருந்தாலும் பிச்சை எடுக்கும் பிச்சைகாரன் என்று தான் கூறுவார்கள்.

பலமுள்ளவன் பலவீனமானவனை பலமானவனாக ஆக்க மாட்டான். ஆக்கினால் நீ பெரிய ஆள் ஆகி அவனை மதிக்கமாட்டாய்  என்பதால் வாய்ப்பே இல்லை. நாடகம் போல் எடுத்து சென்றால் தான் அவர்களுக்கு இதில் "Entertainment". "Enterprises" ஆரம்பிக்க வேண்டும் என்றால் நம்முடைய பலத்தில் எதையும் "Enter" செய்ய வேண்டும்.  குறைந்தபட்சம் 75% ஆவது நம்மிடம் சரக்கு இருக்க வேண்டும்.  இல்லையென்றால் அனைத்தையும் கோட்டைவிட்டு குறட்டை விட்டு தூங்கியது போல் நம்முடைய பணத்தில் அவன் ராஜா போல் தான் வாழ்வான் மற்றும் நம்முடைய விஷயத்தில் அவன் Entertainment அடைவான். நீங்கள் கைத்தடி போல் அவனுக்கு "ஜால்ரா" போட்டு கொண்டு "கூஜா" தூக்கி கொண்டு திரிய வேண்டியது தான்.

ஒரு விஷயத்தில் நமக்கு ஏகத்துக்கும் ஏகபட்ட பிரச்சனையென்றால் நமக்கு கூறியது யாராக இருந்தாலும் அவர்கள் சொல்வதை கேட்காமல் முடிந்தால் அவனிடம் சற்று விலகி இருப்பதே உத்தமம். அது யாராக இருந்தாலும் அவர்களை விட்டு நகராமல் மீறி இருந்தால் ஏகலைவன் "விரல்" போனது மாதிரி நம் வாழ்க்கையில் "குரல்" எல்லாம் ஒடுங்கி "உரல்" போன்ற வலிமைமிக்க அனைத்தும்  நகம் போல் கீழே விழும். நாம் நகரத்தில் வாழ்ந்தாலும் நரகம் போல் வாழ்க்கை தான். நரை திரை இளமையிலேயே வந்தது போல் தளர்வாக காணபடுவோம்.

பலவீனமானவன் யாரும் எந்த இடத்தில் இருந்தாலும் பலமுள்ளவன் கிடையாது.  அவன் உயிர் கிளியிடம் இருக்கிறது என்பார்களே அது போல் தான்.  அதனால் தான் அந்த கிளி உங்கள் வாழ்க்கையில் சகட்டுமேனிக்கு ஓர் பகட்டாக விளையாடுகிறது.  அந்த விளையாட்டு நம் வாழ்க்கையில் எதையும் விளைய செய்யாது. அதனால் எதையும் பெரிதாக அறுவடை செய்ய முடியாமல் பட்டினியாக இருப்பது போல் தான் இருப்போம்.  ஏனென்றால்  ஜாலியாக ஆட்டு கழுத்தை அறுத்து அதனுடைய கிட்னியை சட்னியை போல் சாப்பிடுவது போல் நம் வாழ்க்கையை அவர்கள் Entertainment ஆக்கி பணத்தையும் காலி செய்தாலும் ஆச்சர்யபடுவதற்கில்லை. எ.கா:- ஏய் படம் வடிவேலு காமெடி மற்றும் மொட்டை பாஸ்கர் ஐடியா கொடுக்கிறேன் என்று Time pass பண்ணி டீ கடையில் பஞ்சி வாங்கி சாப்பிடுவார்.

Final Decision படம் போல் தான் நம் வாழ்க்கையில் எதுவும் சிறிய விஷயம் இல்லை பெரிய நாசம் ஏற்படும் போது. வழக்கமாக "கோட்" மாட்டிய அனைவரும்  கோர்ட்க்கு செல்ல முடியாது அதோடு வழக்கறிஞரும் கிடையாது. நமக்கு எதையும் வழங்காத எதுவும் வழக்கமானவர்களும் அல்ல பழக்கத்தில் இருந்தாலும் பழக்கமானவர்களும் அல்ல. இதில் தர்க்கம் பண்ணி எந்த பிரயோஜனம் இல்லை.

நம்மை "பராக்" சொல்லி வரவேற்காவிட்டாலும் பரவாயில்லை. குறைந்தபட்சம் "பான்பராக்" போட்டு காரி துப்பியது போல் ஆகாமல் இருந்தால் கூட போதுமானதே. 

வாழ்க்கை என்பது ஓர் மசாலா போல. நாம் இறப்பதற்குள் அனைத்தும் சேர்ந்துவிடும். நமக்கு இப்போது அனுபவத்தில் பல சேர்ந்து உள்ளது.  இதை வைத்து சுயமாக ஓர் சக்தி வாய்ந்த வாழ்க்கை வாழ்ந்திருக்கவேண்டும். அதாவது மசாலாவில் ஓர் சக்தி மசாலா வாழ்க்கை சக்தியோடு வாழ வேண்டும். மரியாதையில் ஓர் ஆச்சி மசாலா போல் எதிலும் பூச்சி பிடிக்காமல் நமக்கு பெயர் இருக்க வேண்டும். ஆனால் வாழ்க்கையில் சக்தியற்று அடுத்தவரிடம் எல்லாவற்றிற்கும் எல்லாம் இருந்தும் கையேந்தி நிற்கிறோம். இதில் நாம் கனவில்  கோட்டை கட்டிய கதை தான் எதுவும். அப்படியே கோட்டை எழும்பினாலும் நம்முடைய சாட்டையை சுழற்றி சரியாக வேலை வாங்காததால் அஸ்திவாரம் ஒழுங்காக இல்லா கோட்டையாக தான் அது இருக்கும்.

மனது மற்றும் மூளை இரும்பு கோட்டை போல் நமக்கு இருந்தால் தான் உடம்பு முதல் நம்முடைய செயல்கள் வரை எதிரிகளிடம் குஸ்தி போட்டு ஒஸ்தியாக வெற்றி களிப்பில், வீரத்தழும்பில் மாளிகை போல் ஜொலிக்கும்.

சிநேகிதனுடன் நம் காசில் ஆவி பறக்க டீ குடித்துவிட்டு அவன் ஆலோசனையின் பேரில் எடுத்த நடவடிக்கையால் பலரின் சிநேகிதம் இழந்து நம் ஆவி போகும் அளவிற்கு கஷ்டங்கள் நம்மை துரத்தி அனைவரும் தூர சிநேகிதம் ஆனால் உண்மையான சிநேகிதன் யார்?  துன்பத்தால் சீல் வைத்த மனதின் சீல் உடைக்க இங்கு யாருமில்லை.  அதோடு சீல் வைக்க காரணமானவனிடமே மறுபடியும் மறுபடியும் கேட்பதால் நமக்கு மறுப்பே இல்லாமல் அனைத்தும் சீல் வைத்தது போல் ஆகி எதுவும் மறுத்து பேச முடியாத ஓர் வழி தெரியாத வழி போக்கனாக பல வழிகள் இருந்தும் ஆகிவிடுகிறோம்.

வசியம் செய்ய தெரிந்த மனிதன் அடுத்தவனை வசியம் செய்து, அடுத்தகட்டத்திற்கு முன்னேற்ற பாதையில் செல்ல தான் முயற்சிப்பான். மற்றபடி வசியம் செய்ய கற்று கொடுக்க மாட்டான். ஏனென்றால் அப்படி செய்தால் அவன் பொழப்பு சிரிப்பாய் சிரித்துவிடும்.

கெஞ்சி திராணியில்லாமல் ஆலோசனை கேட்பவர்களிடம் பிராணியிடம் கொஞ்சி பேசுவது  போல் பேசி பிறகு கோழி குஞ்சை குருவி கொத்தி எடுத்து சென்றுவிட்டது என்று ஓர் ஐந்தறிவு ஜீவனிடம் சாக்கு போக்கு சொல்வது போல்  சொல்லி உங்களை சமாதானம் செய்கிறார்கள் உங்கள் சமஸ்தானத்தில் நீங்களும் நம்புகிறீர்கள். அதனால் தான் எந்த பறவையும்  குஞ்சியாகாமல் பருந்து போல பறக்கிறது என்று கழுகை பார்த்தும் கூறுகிறார்கள்.   அடுத்தகட்டமாக அடுக்கடுக்காக அடுக்குமாடி குடியிருப்பு போல் பல பொய்களை மற்றும் தில்லாங்கடி வேலைகளால் பலவற்றை தில்லாக கூறி  தில்லையில் ஆடும் கூத்தன் போல் அவர்கள் உங்கள் தில்லையில் எல்லையில்லாமல் ஆடுகிறார்கள். எதிலும் கொடிநாட்ட கொடி கம்பம் ஓர் கம்பி போல் வளையாமல் இருக்க வேண்டும். ஆனால் காற்றில் கொடியானது வளைந்து கொடுத்து பறக்கலாம். சாட்சி காரன் காலில் சரணாகதி அடைவதைவிட சண்டைகாரன் காலில் நிராயுதபாணியாக விழலாம். "கம்பு" வீச தெரிந்தவன் தான் ஓர் சிறந்த கம்பு வீசுபவன். அவன் நாமாக இருக்க வேண்டும்.  நம்மிடம் "செம்பு சொம்பில்" தண்ணி எடுத்து காலை துடைத்து நம்மிடம் "வம்பு" இல்லாமல் பலர் வாழ வேண்டும்.  அதைவிட்டு பலருக்கு நாம் சொம்பு தூக்கினால் அதில் மாளிகையை கோட்டை போல் கட்டினால் அஸ்திவாரம் இல்லா கோட்டை சூரியன் மேற்கில் அஸ்தமனம் ஆவது போல் எப்போது வேண்டுமானாலும் சரிந்து தான் விழும்.  நாம் "அஸ்தி" ஆகாமல் வாழ "குஸ்தி" நமக்கு தெரிய வேண்டும்.

வேறு ஒருவரை "ஆதாரமாக" கொண்டு செயல்பட்டு அதனால் நாம் எதுவும் பெரிய "ஆதாயம்" அடையாமல் துர்க்கமாக இருக்கிறோம். மேற்கொண்டு இருந்தால் நம்முடைய வசதிக்கு ஆதாரமான பணம் நகை சொத்துக்களும் மனிதன் என்பதற்கு "ஆதாரமான" அத்தனையும் இழந்து "மாக்கள்" போல திரிய வேண்டி இருக்கும். 

மேற்கண்டவர்களின் நிர்மூலமே நமக்கான ஓர் "ஆதார்" ஆகும்.

இது அனைத்தும் ரைட்டா ராங்கா என தெரியவில்லை.

https://justicemayel.blogspot.com/2020/11/justicemayelblogspotcom.html