டும் டும் இன் ஒன்[DUM DUM IN ONE]

"டும் டும்" என மிருதங்க  மேளம் கொட்டி நாதஸ்வரம் வாத்தியங்களை இசைத்து , ஊதி "டூ in ஒன்"[DUM DUM 2 IN ONE 1]★புரட்சி கவிஞர் Valavanur வை.ரா.SivaSaravanaLingam. 

இந்த வார்த்தையில் இது வரை ஒரே சமயத்தில் JMN இரு கட்டுரைகளை தனி தனி யாக 2 IN 1-ஆக வெளியிட்டிருக்கிறது. இப்போது முதன் முறையாக ஒரே  தலைப்பில் இரு தலைப்புகளோடு  அதாவது மூன்று தலைப்புகளில் இரண்டு கட்டுரைகள் ஒன்றாக வெளியிடுகிறது என்பதை JMN தெரிவிக்கிறது.

"டும் டும்":-

"டும் டும்" என்று மிருதங்க  மேளம் கொட்டி நாதஸ்வரம் வாத்தியங்களை இசைத்து ,ஊதியது போல் தான் நம் வாழ்க்கையில் அனைத்தும் ஆரம்பிக்கிறது மற்றும் முடிகிறது. அனைத்து Function-களுக்கும் "டும் டும்" இல்லாமல் இல்லை என்றே சொல்லலாம். கல்யாணமும் டும் டும்-மில் தான் ஆரம்பிக்கிறது. கடைசியாக செத்த பிறகு கடைசியாக நடக்கும் கருமாதியும் டும் டும்-முடன் கலசத்தில் முடிகிறது.

டும் டும் என்று மேளம் கொட்டி நாதஸ்வரம் ஊதி மங்கலகரமாக இனியாவது இனிதாக நம் வாழ்க்கையை கருமமே கண்ணாய் ஆரம்பிக்கவும், வேதனையை டும்டும் கொட்டி வெளியில் அனுப்புவதற்காகவே இக்கட்டுரை.

92→கருமமே கண்ணாய் இருR.S.LINGAM

கருமமே கண்ணாயிறு என்று கூறுவார்கள்.  இதற்கு என்ன அர்த்தம் என்று தெரியுமா என்றால் தெரியும் என்று கூறுவார்கள்.  தெரியும் மற்றும் இதன் அர்த்தம் புரிகிறது என்று கூறுவார்கள்.  ஆனால் பலரும் புரிந்திருப்பதை நான் கூறபோவதில்லை.  இதனை என் பார்வையில் கூறபோகிறேன்.

கருமமே  கண்ணாயிறு என் பார்வையில்

1)கல்லூரி (COLLEGE):-

கல்லூரிக்கு படிக்க எதற்கு செல்கிறீர்கள் என்று கேட்டால் டிகிரி வாங்குவதற்கு, நல்ல வேலைக்கு செல்வதற்கு , அப்பா, அம்மா வாங்கிய கடனை அடைப்பதற்கு  என்று ஏராளமாக காரணங்களை கூறுவார்கள்.  ஆனால் யாரும் நான் படிப்பது ஒரு துறையை  கற்று கொள்வதற்கு என்று கூறமாட்டார்கள்.  ஆனால் கருமமே கண்ணாயிறு என்ற பழமொழி இந்த இடத்தில் இதற்கும் மற்றும் டிகிரி வாங்குவதற்கும் தான்.  ஆனால் நாம் காதல், விளையாட்டு, நண்பர்களுடன் ஊர் சுற்றுதல், பல கெட்ட பழக்கவழக்கங்களை ஏற்படுத்தி கொள்ளுதல் என்று இது போன்று பல விஷயங்களில் கவனம் சிதறி கருமமே கண்ணாயிறு என்பதில் எதற்காக இருக்க வேண்டுமோ அதனை விட்டு வேறு விஷயங்களில் நம்மை ஆட்படுத்தி கொண்டு கருமமே கண்ணாய் இருக்கிறோம். அதனால் தான் கல்லூரிகளில் முதல் இடத்தை எல்லோராலும் பிடிக்க முடியவில்லை.  அதற்காக மேற்கண்டதை சரியோ, தவறோ வேண்டாம் என்று கூறவில்லை. நம்மால் ஒரு இடத்தில் பல விஷயங்களில் கருமமே கண்ணாயிறு என்று இருக்க முடிந்தால் பரவாயில்லை.  ஆனால் ஏனோ அது போல் உலகத்தில் அதிகமாக யாரும் இல்லை. E.g:- ஹீரோ திரைபடம்.

இது போல் பல இருக்கிறது சுருக்கமாக:- கருமமே கண்ணாயிறு

2)கல்யாணம்-சந்தோஷமாக வாழ.

ஆனால் பலர் மாமனார், மாமியார், நாத்தநார் கொடுமை மற்றும் வரதட்சனை கொடுமை etc.  என்று இருக்கிறது. இதனால் கல்யாணம் ஆன பல பேர் சந்தோஷத்தை இழந்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.  குழந்தை பெறுவது மட்டுமே சந்தோஷமாக வாழ்ந்தற்கு அடையாளமில்லை. அது தன் பரம்பரையை தழைத்தோங்க செய்யவும், பல பேர் நம்மால் முடிந்தது தன்னுடைய அடையாளமாக இதை மட்டுமே  விட்டு செல்லவும் தான்.  உறவு கொள்வது என்பதில் சந்தோஷம் உள்ளது.  ஆனால் இது மட்டுமே சந்தோஷம் என்றால் கல்யாணம் என்ற பண்பாடு என்பது உலக அளவில் இருக்காது.  RED LIGHT தான் உலக அளவில் டாஸ் மார்க் போன்று அனைத்து இடங்களிலும் இருக்கும். கல்யாணம் என்பது அனைத்திற்குமான ஒரு சொர்க்கம் என்பதனால் தான் அதற்கு அவ்வளவு செலவு செய்கிறார்கள் மற்றும் குடும்ப உறவுகள் சம்பந்தபட்ட அதிக FORMULATIES  மற்றும் ETC. கல்யாணம் ஆன அனைவருக்கும் அனைத்து விஷயங்களிலும் சொர்க்கம் கிடைத்ததா (அல்) நரகம் கிடைத்ததா என்பதை உங்களிடமே விட்டுவிடுகிறேன். அதோடு இதை பற்றி ஏற்கனவே கட்டுரையாக செதுக்கியாகிவிட்டது. கருமமே கண்ணாயிறு என்பது இதில் ஏழையோ, கோடிஸ்வரனோ இருவரும் அனைத்து விஷயங்களிலும் சந்தோஷம்,மகிழ்ச்சி, இன்பம் என்ற பல வார்த்தைகளில் ஒழிந்துள்ள சொர்க்கத்தை பெறுவதற்கு தான். ஆனால் இன்று கல்யாணம் என்பது ஜாதி, மதம், பணம், வசதி, கௌரவம் என்றாகிவிட்டது. ஒரு ஆணுக்கு பெண்ணை கொடுப்பது என்பதன் பெரிய தகுதியே வேலைக்கு  சென்று நல்ல சம்பாத்தியம் மட்டுமே பிராதானமாகிவிட்டது இந்த தலைமுறையில்.  அதனால் தான் பணக்காரர் முதல் கோடிஸ்வரன் வரை எல்லாம் இருந்தும் சொர்க்கத்தை தேடி கொண்டிருக்கின்றனர். தூக்கம் என்கிற சொர்க்கமே பலருக்கு Sleeping Tablet தான் என்றாகிவிட்டது. All Time சொர்க்கத்தையோ, Alternate  சொர்க்கத்தையோ பெறுவதும் நம் கையில் தான் உள்ளது. அதனை நம்பிக்கையுடன் தேடினால் கண்டிப்பாக சொர்க்கம் கிடைக்கும். டும் டும் என்பது சொர்கத்திற்காக அடித்தாலும் அது நரகத்திற்கு அடித்தது போல் பலருக்கு இருப்பதற்கு காரணம் யாருமில்லை நாம் தான்.

குறிப்பு:-

உறவு கொள்வதில் சந்தோஷம் இருக்கிறது.  இருவருடைய உறவில் சந்தோஷம் இருந்தால் தான் அந்த உறவில் சந்தோஷம் கிடைக்கும் மற்றும் இருக்கும். உறவில் சந்தோஷம் இல்லாமல் கடமைக்கு உறவு என்றால் சந்தோஷமும் கடமைக்கு தான் கிடைக்கும்.  சமையலிலேயே சந்தோஷத்துடன் சமைத்தால் தான் ஆரோக்கியம் என்று கூறுகிறார்கள்.  

இது போல் பல விஷயங்களில் "கருமமே கண்ணாய் இரு" என்பது உண்மையில் இருக்க வேண்டியது என்பதில் இருந்து வேறுபட்டு மற்ற விஷயங்களில் கருமமே கண்ணாய் இரு என்று இருப்பதால் தான் நாம் கஷ்டம் மற்றும் வேதனைபடுகிறோம்.

எப்போதுமே அனைத்து விஷயங்களிலும்  கருமமே  கண்ணாய் இருப்போமாக.  இவ்வாறு இல்லாமல் இருந்தால் அனைத்துமே என்ன "கருமம்" டா என்பது போல் தான் இருக்கும்.  

"கரு" என்ற வார்த்தை நம் வாழ்க்கையில் பல இடங்களில் நல்லது, கெட்டது என்று முக்கிய அங்கமாக உள்ளது. மனிதனுடைய பிறப்பே " கரு"-வில் ஆரம்பித்து "கரு"(மாதியில்)-வில் தான் முடிகிறது.

கரு, கருமமே கண்ணாயிரு, கருமாதி, கரும்பு (சர்க்கரை தயாரிப்பதற்கு), கருப்பு நிறம் (திராவிடம் என்று கூறுவார்கள் மற்றும் எதிர்ப்பை காட்டுவதற்கு) , கருணை, கருமம், கருணை கிழங்கு etc. இது அனைத்தும் உண்மையா, பொய்யா என்று தெரியவில்லை.

 

 

 

 

93 →வேதனைகவிஞர் Valavanur வை.ரா.SivaSaravanaLingam.

நம் வாழ்க்கையில் வேதனை என்பது இருக்கிறது.  இதனுடைய வேர் எங்கிருக்கிறது என்று என்றாவது சிந்தித்திருப்போமா?  இதனுடைய வேதம் எங்கிருக்கிறது தெரியுமா?  நம்மிடமே தான் உள்ளது.  அது தான் அதீத ஆசை, கோபம், பொறாமை போன்ற ETC கெட்ட வேர்கள்.  இந்த வேர்களின் கிளை வேர்கள் தான் நம் செயல்.  அதில் வளர்ந்த மரம் தான் நமக்கு கிடைக்கும் வேதனை.

மரத்தை வெட்டி எந்த பிரயோஜனமும் இல்லை.  ஏனென்றால் சில வாரங்களிலோ (அல்) மாதங்களிலோ மீண்டும் வளர்ந்துவிடும்.  அதனுடைய வேரை பிடுங்கினால் தான் வேதனையை போக்க கூடிய வேலை முடியும். வேரை பிடுங்கி எரியாமல் இருப்பதால் தான் நம் வாழ்க்கையில் இன்பத்திற்காக ஈடுபட்ட பல துன்பத்தில் முடிந்துள்ளது.  உடனே அப்படியெல்லாம் ஒன்றுமில்லை.  அவன் தான் கூறினான்.  இவர்கள் தான் கூறினார்கள் என்போம்.  அவ்வாறு எதை கூறினாலும் நாம் செய்துவிடுகிறோமா என்றால் இல்லை என்பதே உண்மை.

உதாரணத்திற்கு:-

இந்தியன் பட திருந்தனுமில்லப்பா காமெடி. 

அதாவது நம் மனதில் இவ்வாறான கெட்ட எண்ணங்கள் இருக்கிறது.  அதனை பிறர் கூறும் போதோ (அல்) தானாகவோ வெளிபடுகிறது.  அதாவது நீங்கள் கூறும் அவர்கள் கூறியதும் உங்களிடம் உள்ள கெட்ட எண்ணம் வெளிபடுகிறது அவ்வளவே.  50/50 என்பது போல நீங்கள் அடையும் வேதனைக்கு காரணம் பாதி-க்கு சொந்தகாரர்கள் நீங்கள் தான்.  அதனால் தான் அதே விஷயத்தை வேறு ஒருவரிடம் அதே நபர் கூறினாலும் எடுபடுவதில்லை. 

உதாரணத்திற்கு:-

உங்களுக்கு இருக்கும் கெட்ட பழக்கமோ (அல்) Costly வண்டியோ, Cell Phone, FLAT, CAR etc.  உங்கள் நண்பர்களிடமோ, சகோதரர்களிடமோ இருக்காது.  காரணம் இது தான் ஒரே விஷயத்தை அனைவரிடமும் கூறினாலும் நம் மனதில் அம்மாதிரியான எண்ணங்கள் இருந்தால் தான்  ஏற்று கொள்ளும்.

அதனால் தான் வற்புறுத்தி சம்மதிக்க வைத்தேன் என்பார்கள்.  ஏனென்றால் அவர் கூறிய விஷயத்தை அந்த மனது ஏற்று கொள்ளவில்லை.  இதில் நல்லது, கெட்டது என்ற பாகுபாடில்லை.   இம்மாதிரியாக தான் பலர் நம்மிடம் கூறும் போது அது வெளிபடுகிறது.  அதில் தான் நாம்  கஷ்டம், வேதனையடைகிறோம். இதில் சந்தோஷம் அடைந்தவர்களும் இருக்கவே செய்கிறார்கள்.

இவ்வாறாக தான் கடனாளி ஆவது, பேங்கில் EMI கட்டி கொண்டிருப்பது.  வீடு கட்ட 20 இலட்சம் ஒதுக்கி கட்டி கொண்டிருப்போம்.  யாராவது கிராணைட், COSTLY டெய்ல்ஸ், HOME THEATRE ROOM என்று எதாவது உங்களிடம் கூறுவார்கள்.  உடனே உள்ளே இருக்கும் ஆசையானது வெளிபட்டு கடன் வாங்கி வேதனை அடைவார்கள்.

2)COSTLY CELL PHONE Friend சொல்லி வாங்கி Emi கட்ட முடியாமல் மூன்றே மாதத்தில் BAR-ல் விற்ற கதையெல்லாம் உள்ளது. இதே போன்றே வண்டியை விற்ற வேதனை கதையெல்லாம் உள்ளது.

பல வாழ்க்கையையே  வேதனை ஆக்கி உள்ளது.  எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன் என்ற காமெடி போல வேதனையில் துடித்து கொண்டிருப்பவர்கள் பலர். 

உதாரணத்திற்கு:-

மகாநதி திரைபடம்.

இதற்கு நல்ல எண்ணம், கெட்ட எண்ணம் என்றெல்லாம் இல்லை.  நமக்கு வேதனை பல தேவையே இல்லாமல்  வேதனையுற்றால் அந்த இடத்தில் அது மறு பரிசீலனை செய்ய கூடியதே. 

இது போல் COSTLY COLLEAGES, LOVE, PUB, COSTLY FLAT, கெட்ட பழக்க வழக்கங்கள்  என்று நம் வாழ்க்கையில் எதுவாக இருந்தாலும் அதற்கு காரணம் யாருமில்லை.  முதலில் நாம் தான்.  பிறகு தான் மற்றவர்கள்.  நம்மை யாரும் ஏமாற்றவில்லை.  அவ்வாறாக நாமே சொல்லி கொண்டு நம்மை நாமே ஏமாற்றி கொள்கிறோம்.  அதாவது  நமக்கு வேதனை ஏற்பட்டால் உடனே அவர் சொல்லி தான் செய்தேன் என்று கூறினால் அவனை தான் தவறாக கூறுவார்கள்.  நம்மை யாரும் குற்றம் சொல்ல மாட்டார்கள் என்ற கெட்ட எண்ணம். அதாவது அவன் குற்றவாளி நீங்கள் நிரபராதி. 

இம்மாதிரியான கெட்ட எண்ணங்களும், இது போல 100 கெட்ட குணங்கள் உள்ளது.  மகாபாரதத்தில் உள்ள 100 கௌரவர்கள் போல.  இதில் எத்தனை நம்மிடம் உள்ளதோ அது தான் நம்மிடம் இருந்து வெளிபடுகிறது.  அதை யார் கூறி செய்தாலும் சரி. அதை நாமே செய்தாலும் சரி.  மொத்தத்தில் இன்பத்திற்கும், வேதனைக்கும் காரணம் நாம் தான்.  நம்மிடம் உள்ள பல வேர்களாக பரவி உள்ளது.  அதனை வேரறுத்தால்  நிச்சயம் நமக்கு அது வேதனைக்கான தீர்வாகவோ (அல்) முடிவாக இருக்கும்.  நல்லது போன்று தெரியும்.  ஆனால் அதில் பல கெட்ட குணங்களே.

உதாரணத்திற்கு:-

அதீத ஆசை, கனவு காணலாம் தவறில்லை.  நம்மால் முடியாத நனவாகாத கனவை கண்டு அதை நிறைவேற்ற முயற்சிப்பது.

மனதில் நல்ல எண்ணங்களை டும் டும் கொட்டி இந்த தீய வேதனையை தரும் கெட்ட குணங்களை நம்மிடமிருந்து வெளியேற்றுவோமாக.

இம்மாதிரியாக நமக்கு வேதனை தருவதை வெளியேற்றுவதே கருமமே கண்ணாய் கொண்டிருந்தால் வேதனைக்கு நிச்சயம் டும் டும்.  நம் வாழ்க்கை ஜம் ஜம் தான்.

இது அனைத்தும் உண்மையா, பொய்யா என தெரியவில்லை.

https://justicemayel.blogspot.com/2020/11/justicemayelblogspotcom.html