ஜாக்கிரதை [ Onion Speech Paper Victory]

ஜாக்கிரதை[ வெங்காய சாடல் காகித  வெற்றி] [The Onion Speech Paper Victory.  Becarefull]★புரட்சி கவிஞர் Valavanur V.ரா.SivaSaravanaLingam.

நான் எழுதும் கட்டுரையானது கடமைக்கென்று எழுதுவதில்லை. இது ஒரு கவிஞன் கவிதை எழுதுவது போல் மற்றும் இசையமைப்பாளர் மெட்டு போடுவது போல் எழுதுவதாகும்.  மனதில் தோன்றியவுடன் நொடிகள் தவறாமல் உடனே எழுதுவதாகும்.  A.R.RAHMAN போல ராத்திரியில் தான் எனக்கு கட்டுரையானது COMPOSE ஆகும். அதை நான் ஆர்டிக்கலாக எழுதி உங்களுக்கு COMPOSE-ல் "கம்போஸ்" பண்ணி அனுப்புகிறேன். அதனால் தான் 125 கட்டுரைகளை தாண்டி என்னால் சிறுவயதிலேயே எழுத முடிந்தது. இது இதே வேகத்தில் தொடருமா என்றால் என்னிடம் பதில் கிடையாது. நபிகள் கூறுவது போல் உள்ளே தோன்றினால் தான் முடியும். அதே தலைப்பில் அதே கட்டுரையை மறுபடியும் எழுத சொன்னால் நான் எழுதிய கட்டுரையை நானே ஜெராக்ஸ் போட்டது போல அப்படியே எழுத முடியாது. இது கவிஞர்களுக்கும், இசையமைப்பாளர்களுக்கும், ரெகுலராக ஆர்டிக்கல் எழுதுபவர்களுக்கும் நன்கு தெரியும். பல பேர் என்ன எழுதுவது என்று யோசிப்பார்கள். சரி ஆர்டிக்கலுக்கு வருவோம் 127-வது கட்டுரையாக "வெங்காய சாடல் காகித வெற்றி" யானது JMN-ன் ரிதம் F.M 605 108-ல் COMPOSE ஆகி வெளிவருகிறது.

பொண்ணு சிரிச்சா போச்சு புகையிலை விரிச்சா போச்சு என்பார்கள். "பொண்ணு" பண்ணு மாதிரி இருந்து ஊரே "கண்ணு" வைக்கும் படி கூட இருக்கலாம். பண்ணு மாதிரி அனைவரும் பிச்சி திண்பது போல் இருக்க கூடாது. பத்தினி விரதம் இருந்த பொண்ணு விபச்சார விடுதியில் விரதத்தை முடித்துக் கொண்டாளாம். அதன்பின் பத்தினி பெண் என்றால் என்னை போல் இருக்க வேண்டும் என்றாளாம். சந்தனத்தில் உடம்பை நனைத்து விட்டு சாக்கடையின் அருகில்  இளைப்பாறினாம். குல கல்வி முதல் கல்லூரி வரை அனைத்தையும் கற்று "பாஸ்" ஆனவன் தன் குலத்தையே காக்க முடியாமல் வாழ்க்கையில் "FAIL" ஆகி குலத்தில் விழுந்து உயிரை போக்கி கொண்டானாம். கெட்டிகாரன் செய்த அனைத்து காரியமும் வெட்டிதனமாக இருந்ததாம். இந்நேரத்திற்கு நாலு குட்டியை வளர்த்து இருந்தால் அது கூட எதாவது புரியோஜனமாக இருந்து இருக்கும் என்றார்களாம் ஆனால் அவன் கெட்டிகாரனாம். ஆம்பளையாம் ஆனால் அவன் மனைவி பல பேரின் கைகளிளாம். இவன் தான் புருஷனாம்.

இது போல் வெங்காய வெற்றியாக நம்முடைய வெற்றி இருக்க கூடாது. அப்படி இருந்தால் அது ஓர் காகித வெற்றியாக தான் இருக்கும். உரிக்க உரிக்க ஒன்றுமில்லை என்பது போல் நம்முடைய அனைத்து செயல்களும் இருந்து காகித வெற்றி பெற்றால் நம்மை யாரும் மதிக்க மாட்டார்கள். கௌரவம் போன பின் பண காகிதத்தால் காரை வாங்கி போனால் இவன் பலவற்றை விற்று விட்டு தான் இதை வாங்கியுள்ளான் என்பார்கள். மானம், சூடு, சொரணையை தாரைவார்த்து கொடுத்துவிட்டு மற்றும் கேவலமான காரியங்களை செய்து , ஏமாற்றி பண மோசடி செய்து பாண்டு காகிதத்தில் வீட்டை ரிஜஸ்டர் செய்து விட்டு  கிரக பிரவேசம் செய்தால் வேஷம் போட்டு ஏமாற்றி இப்படி ஒரு வீடு அவசியம் தானா?  இதற்கு குடிசையில் குடித்தனம் பண்ணி வாழலாம் என்பார்கள். ஆனால் காகித வெற்றி போல உங்களை அவர்களிடம் சண்டை இல்லாமல் பார்த்தால் நீங்கள் போனவுடன் உடனே கசக்கி போட கூடிய வெங்காய காகித மரியாதை கண்டிப்பாக கிடைக்கும். மற்றபடி வெங்காயம் போல் அவர்கள் மனதில் ஒன்றுமில்லாமல்  கூறுவார்கள். கொஞ்சம் கூட மனதில் இல்லாமல் நாம் வாழும் வாழ்க்கை மரியாதையான கௌரவமான வாழ்க்கை தானா?

ஊரையே ஆண்ட அரசன் ஊரை விட்டு ஒதுங்கி அதோடு மக்களே ஒதுக்கி ஒதுக்கு புறத்தில் வாழ்ந்தானாம். ஆனால் வா அரசா? என்று அவருக்கு ஏகபட்ட கவனிப்புகளாம். அதோடு அவர் தான் அந்த நாட்டின் மன்னாதி மன்னனாம் என்று அவனே கூறி கொண்டானாம். இது போல வாழ்க்கை நாம் முன் ஜென்மத்தில் சாபம் எதாவது அடைந்திருந்தால் தான் இப்படி நிர்கதி அடைந்து மனிதன் என்று சொல்லக்கூடிய அனைத்தும் நிர்மூலம் ஆகி வாழ முடியும். 

வரலாற்றில் வரலாறு படைக்கும் காகித வெற்றியே ஓர் மாபெரும் வெற்றியாகும். அந்த காகிதத்தை யாரும் பிய்த்து எரிய முடியாது.  ஏனென்றால் மக்கள் மனதில் பொறிக்கபட்டு எழுதியது அது. அவர்கள் தான் வரலாற்று புரட்சி தலைவர்கள். மிரட்சி இல்லாமல் செயலை செய்தவர்கள் இவர்களே. அவர்கள் போனாலும் அவர்கள் பேச்சு யாராலும் கடத்த முடியாமல் காலம் கடந்து பேசபடும்.

உலகில் யாரையோ தோற்கடித்ததாக நினைத்து நாம் அத்தனையிலும் தோற்று நிற்க கூடாது. ஒருவன் பெறுகின்ற வெற்றி அதில் அவன் தோல்வியடையாமல் பெற வேண்டும். அப்படியே தோல்வியடைந்தாலும் இடத்திற்கு தகுந்தாற் போல் அதில் எத்தனை சதவீதம் எதில் இழந்திருக்கிறோம் என்பதை வைத்து தான் நம்முடைய உண்மையான வெற்றி அடங்கியிருக்கிறது. மற்றபடி வெங்காய வெற்றி என்றால் சிரிப்பு இருக்கும் சந்தோஷம் இருக்காது இதில் ஆனந்தம் தான் உயிர். உடல் இருக்கும் உயிர் இருக்காது பிணம் போல். அதிகாரம் இருக்கும் வேலையில் உள்ள வரை என்றால் பிறகு நாம் சொல்வதை கேட்க மாட்டார்கள் என்று அர்த்தம்.  அப்படியென்றால் இதுவரை கேட்டது நம்மிடம் இருக்கும் அதிகாரத்தால் மனதால் அவர்கள் எதையும் ஏற்று கொள்ளவில்லை என்று அர்த்தம்.   பணத்தால் நம்மில் எத்தனை விஷயங்களில் எத்தனை உயிர் போய் பிணமாக வாழ்கிறோம் என்பது அவர்களுக்கு மட்டும் தெரிந்த சிதம்பர ரகசியம். ரகசியம் ரகசியமாய் இருப்பதால் தான் எல்லாம் இழந்து ரகசியமாக வெங்காய காகித வெற்றி பெற்று வீணாய் தண்டமாய் வாழ்கிறோம். இல்லையென்றால் திருந்தியிருப்பார்கள். அவர்கள் வாழ்க்கை இறைவனால் திருத்தி எழுதபட்டிருக்கும் நல்லபடியாய்.

தந்தை தாயார் என்று கூறி கொண்டு மகன் இருந்தும் அநாதையாக வாழ்ந்து கொண்டு அவன் பிரான்ஸிலும், அமெரிக்கா மற்றும் இங்கிலாந்திலும் வாழ்கின்றான்.  பேரன் பேத்தி எல்லாம் இருக்கிறது.  ஆனால் அவர்கள் நேரில் பார்த்தால் யார் நீங்க?  எங்கோ பார்த்தது போல் இருக்கிறது என்று கூறிவார்களாம். ஆனால் இவர்களிடம் எல்லா உறவுகளும் இருக்கிறது.

லவ் பண்ணி திருமணம் செய்ய போகிறேன். ஆனால் லவ் பண்ணுகிறவன் என்னை ஒன்றும் பண்ணியதில்லை.  ஊரில் இருப்பவர்கள் அனைவரும் என்னை பண்ணோ பண்ணு என்று பண்ணியுள்ளார்கள். நான் தான் உலகத்திலேயே சிறந்த பொம்மள மற்றும் சிறந்த காதலி என்றாளாம். பண்பாட்டை காக்கும் தலைமகள் இவள் தான் என்றால் அப்படியென்றால் கண்ணகியை, பார்வதி, ஜூலியட்டை என்னவென்று சொல்வது? விபச்சாரி என்றால் யார்? இது போல பல வெற்று காகித பேச்சுக்களை தானே பேசி கொண்டு தானே வீணாகியுள்ளனர். வீணா போனவன் வீணான காரியத்தை செய்யும் கூட்டத்தில் தான் இருப்பான் என்பது போல.

ஒருவனிமிருந்து சரியோ தவறோ எதையும் பெரிதாக இழக்காமல் எதையும் பெற வேண்டும். அப்படி பலவற்றை இழந்தோம் என்றால் வெற்றியாகாது. அனைத்து கெட்டதையும் செய்துவிட்டு நான் நல்லவன் என்று தானே கூறி கொள்ளலாம். பலரும் கூற வாய்ப்பே இல்லை. அப்படியே கூறினாலும் வெங்காய பேச்சாகத்தான் இருக்கும்.

யாரையோ காப்பாற்றுகிறேன் என்று கூறி குடும்பத்தை வழி போக்கனிடம் விட்ட கதை போல் ஆகிவிடும். ஆனால் இவன் காப்பாளனாம்.

டிஸ்கோவில் ஆடுவதற்கும், கேபிரே டான்ஸர் ஆடுவதற்கும், பரத நாட்டியம் ஆடுவதற்கும், கர்நாடக இசையில் நாடகமே இல்லாமல் உண்மையாக ஆடுவதற்கும் வித்தியாசம் இருக்கிறது. எல்லாமே ஆட்டம் தான். அது போல தான் பலரின் சாடல்களும். அது உண்மையான சாடல் ஆக இருந்து உண்மையான வெற்றியை காகிதத்தில் கின்னஸ் ரெக்காடு போல பதிய வைக்க வேண்டும்.  அதை விட்டு ரெக்கார்டு டான்ஸ் ஆடிவிட்டு கின்னஸ் சாதனை பெற்றுவிட்டேன் என்பது போல் கூறினால் அந்த பேச்சு ஓர் வெங்காய சாடலாகவும் அதோடு காகித வெற்றியாகவும் தான் இருக்கும். வெங்காயத்தை அறுத்தால் வரும் கண்ணீர் போல மனதில் அழுது கொண்டு வெளியில் சாடி சிரித்து யாருக்கு பிரயோஜனம். வாழ்க்கை முதல் அதில் சம்பந்தபட்ட அனைத்தும் உங்களுடையது.

காகித வெற்றியை யார் வேண்டுமென்றாலும் பெறலாம். அதற்கு ஜாதி மத பேதமில்லை. அதோடு நல்லவன் கெட்டவன் குற்றவாளி என்றெல்லாம் எதுவும் கிடையாது. அது போலவே மனதால் பெற கூடிய உண்மையான வெற்றியும்.  இதில் அழுதால் ஆனந்த கண்ணீர்.

ஆண் குணம், பெண் குணம் என்று எதுவும் பெரிதாக கிடையாது ஒரு சில வித்தியாசங்கள் இருந்தாலும் அது நம் உறுப்புகளை போல ஒரு சில வித்தியாசங்கள் தான். நாம் நடக்கும் விதத்தில் தான் நமக்கு எல்லாமே உள்ளது. ஏனென்றால் எல்லாவற்றையும் வரையறுத்தது நம்மை போன்றவர்கள் தான். ஜான்சிராணி, சாவித்ரி, கண்ணகி, பூலாந்தேவி, காரைக்கால் அம்மையார், ஔவையார், அன்னை தெரசா போன்றவர்களை யாரோ காகிதத்தில் எழுதியதை வைத்து பல விமர்சனங்கள் இவர்கள் மீது பாய்ந்தது.  ஆனால் இவர்கள் உண்மையான காகித வெற்றியை பெற்றார்கள்.  அதனால் தான் என் காகிதத்தில் இவர்களுக்கு இடம் கிடைத்தது.  ஏனென்றால் இவர்கள் அந்த காலத்து தலைமுறையினர்கள். அந்த தலைமுறையில் கட்டுபாடு மிக அதிகம்.

இந்த தலைமுறையினர் அப்படி எதுவும் இது போன்று பெரிதாக பெற்றதாகவோ சாதித்ததாகவோ தெரியவில்லை. இருந்தால் சொல்லுங்கள். இன்று கட்டுபாடுகள் பல தளர்த்தபட்டுள்ளன. வேலைக்கு போவது பலருடன் பேசுவது தான் சாதனையென்றால் அச்சாதனையை வீட்டிலும் பேசுவதை வீட்டை சுற்றி இருப்பவர்களிடம் இருக்கலாமே.

நாம் பெண் உரிமை, விடுதலை, சுதந்திரம் என்று எதை கூறுகிறோமோ அவர்கள்  அதை எதையும் கூறாமல் அதோடு அதை வெங்காயம் போல் விவாதிக்காமல் எது என்று அவர்களே தங்களுக்குள் வரையறுத்து கொண்டு தங்களுக்குள்ளே விவாதம் செய்து பிறகு செயல் செய்து நிரூபித்து காட்டியவர்கள் இவர்கள். விளையாட்டிலோ அல்லது வேறு எதிலோ வெற்றி பெறுவது என்பது அத்துறையில் அது சகஜமான ஒன்று. பெண் இல்லாமல் ஆண் இருந்தாலும் சரி இரண்டும் பேரும் இல்லாமல் திருநங்கை இருந்தாலும் சரி அது நிச்சயம் அந்த துறையில் நடக்கும். ஏனென்றால் யாராவது வெற்றி பெற்றே தீர வேண்டும் மற்றும் வேலையை செய்தே ஆக வேண்டும். பெண் இயக்கங்கள் எதாவது இருந்தால் அவர்கள் மேற்கண்டவர்களை போல் சாதித்திருந்தால் கூறுங்கள் நான் தெரிந்து கொள்கிறேன். மனைவி கணவனிடம் பல பேச்சுக்கள் பேசி டைவர்ஸ் வாங்குவது அவர்கள் குடும்ப பிரச்சனை.  அப்படியென்றால் கோர்ட்டில் பல பேர் இருக்கிறார்கள்.  இது வேறு?  உண்மையான காகித வெற்றியை உண்மை நலனுக்காக உண்மை தன்மையுடன் பெறுவோம்.  வெங்காய சாடலால் அழுது தீர்த்தது போதும். யாருக்காக இந்த வெங்காய சாடல் சாடுகிறோம்? வெங்காய காகித வெற்றி எதற்கு? மனதை மீறிய உண்மையான வெற்றி உலகில் இல்லை. அதனால் தான் அலெக்ஸாண்டர், ராஜ ராஜ சோழனால் முடிந்தது. பிறகு எந்த மன்னராலும் முடியவில்லை. நான் உலகத்தை கைபற்ற போகிறேன் என அலெக்ஸாண்டர் கூறும் போது அவையில் அனைவரும் சிரித்தனராம்.

பொம்மை போன்ற வாழ்க்கையிலும் ஓர் நல்ல தன்மை இருக்க வேண்டும். களிமண் பொம்மை போன்ற பேச்சு, செயல் மற்றும் வாழ்க்கை என்பது பகலவனின் ஒளி தாங்க முடியாமல் சீக்கிரமாகவே சீக்கு வந்தது போல் விரிசல் விழும் வாழ்க்கையாகும். அதோடு என்னதான் பெயிண்ட் அடித்து தத்ரூபமாக வடிவமைத்தாலும்  தண்ணீரில் பட்டால் சீக்கிரம் கரைவது போல் நம் வாழ்க்கையை காசியில் நம்முடைய அஸ்தியை கங்கையில் நாமே கரைத்தது போல் ஆகி விடும் இந்த ஆனியன் வாழ்க்கை.

"பிளாட்டினம்" போல வாழ சரியோ தவறோ "பிளான்" பண்ணலாம். ஆனால் நம் மனதை "ஆனியன் பிளாக்" செய்ய கூடாது. "பிளாக் லிஸ்ட்டில்"" பிளாக் ஆனவன்" பிளாட் விற்பது போல் அதோடு ஏதோ புறம் போக்கு இடத்தை வளைத்து போட்டு பிளாட் ஆக்கியது போல் நம்முடைய எந்த பேச்சையும் செயலையும் பாராட்டாமல், சீராட்டாமல் ஓர் பொருட்டாக கூட கருதாமல், ஏற்காமல், வாங்காமல் இருப்பர்.

இது யாரையும் தனிபட்ட முறையில் தனியாக அவர்களை கூற கூறியது கிடையாது. பல பேர் போலியாக போலி தன்மையுடன் வெங்காய சாடல் செய்து காகித வெற்றியை கிழி கிழி என்று வாய் கிழிய  மனதில் அழுது கொண்டு பேசி  கொண்டிருக்கிறார்கள் மற்றும் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் வாழ்க்கை என்றோ நார் நார் ஆக கிழிந்துவிட்டது. ஆனால் பொய்யாக அவர்கள் தோரணம் கட்டி விழா எடுத்து கொண்டிருக்கிறார்கள்.  அவர்கள் விழிப்படையவே இக்கட்டுரை.

எந்த விக்டரியிலும் விக்கல் இருக்க கூடாது. அப்படி இருந்தால் அது விக்டரி அல்ல.  அதோடு அதில் வெற்றி தாகமும் தணியவில்லை என்று அர்த்தம். ஆனியன் வாழ்க்கையில் பேச்சில், செயலில் எந்த ஆனியை பிடுங்கியும் பிடுங்கியதாக கணக்கில் வராது. ஏனென்றால் இதில் பிடுங்கியது என்பது நம்மிடமிருந்து பலவற்றை எவ்வளவு இழந்துள்ளோம் என்பதை வைத்து தான். ஆனியனில் மனது அழுது கொண்டு பேசி கொண்டு இருப்பது கடலில் அலை வருவது போல நம்முடைய எதையும் யாரும் கண்டு கொள்ள மாட்டார்கள்.  வெற்று அறிக்கை போல நம்முடைய வாழ்க்கை வெற்று வாழ்க்கையானது தான் மிச்சமாக இருக்கும்.  

"மாஸ்க்" எதில் வேண்டுமானாலும் அணியலாம். ஆனால் மனதில் அதிகமாக மாஸ்க் அணிந்து செயல்பட்டால் வெற்றி "மாஸ்" ஆனதாக இருக்காது. வெங்காய மாஸ் ஆக அதில் ஒன்றுமில்லாமல் தான் இருக்கும்.  "மாஸ்டர்" ஆக மாஸ் ஆன காரியங்களை செய்ய வேண்டியதில்லை. நம் வேலையை திறம்பட செய்தாலே போதுமானது. மனது ஆனந்தத்தில் தான் உடலின் சந்தோஷம் உள்ளது. உடலில் தான் மனிதனின் ஆரோக்யம் உள்ளது. ஆரோக்யமான காரியங்களை நாம் ஆரோக்யத்துடன் செய்ய வேண்டும்.

வெங்காயத்தின் தோல் உரிவது போல் நம் மரியாதை, கௌரவம் மற்றும் வெற்றி உரிந்து மானம் கப்பல் ஏறியது என்பது போல் நம்முடைய அனைத்தும் காற்றில் பறக்க கூடாது. தீப்பெட்டியில் வத்தி குச்சி உரசினால் தான் தீபிழம்பை ஏற்படுத்த முடியும். அது போல் மற்றவர்கள் நம்மை தொழில் முதல் எதில் உரசினாலும் தீபற்றுவது போல் மனதில் தீபற்றி அவர்கள் சாம்பல் ஆக வேண்டும். நம்முடைய தோல் எதையும் தாங்கும் தோலாக ஓர் தோழனாக இருக்க வேண்டும்.

இதை நான் தோலுரித்து உப்பு கண்டம் போட்டு அதை தோரணம் கட்டியது போல் விளக்கமாக மற்றும் அலங்காரமாக கூறிவிட்டேன். அலறும் படியான காரியங்களை அலராமல் செய்ய வேண்டும்.  அது தோல்வியாதி போல் மனதிற்கு சங்கடம் தர கூடாது. Operation Success Patient Dead என்பது போல் நம் வெற்றி கசக்கி போடும் காகித வெற்றியாக மற்றும் நம்முடைய சாடல் வெங்காய சாடலாக இருக்க கூடாது.

ஜாக்கிரதையாக இருப்பது ஓர் எச்சரிக்கை உணர்வாகும். ஜாக்கிரதையில்லாத வெற்றி நம்முடைய உயிரை பறிக்கும் மரண வெற்றி போன்றது. மேற்கண்ட பலவற்றை உச்சரித்தும் உச்சத்திற்கு செல்லும் வழி இது தான் என்று நினைத்தால் நம்முடைய பலவற்றை உச்சபட்சமாக இழந்து உச்சபட்ச தண்டனையை அடைவது உறுதி.

விரலுக்கு இரைத்த நீர் போல் ஆவதும். நிலத்திற்கு பாய்ந்த நீர் ஆவதும் நம் கையில்.  அத்தனையும் இழந்து எதை பெற்றாலும் அது ஒன்றும் புனிதமானதோ (அல்) நிரந்தரமானதோ அல்ல எல்லாம் கைவிட்டு செல்லக்கூடியதே. விட்டதை பிடிக்கலாம் தவறில்லை. இருப்பதை விட்டு பிடித்து லாபம் என்ன என்று பார்த்தால் மனிதனாக வாழ தகுதியில்லை என்ற பெரு நஷ்டம் நம்மை சூழ்கிறது. இந்த நஷ்டமானது குடும்ப உறவுகளில் இருந்து அனைத்து சுற்றத்தாரும் சுத்து போட்டு கேலி கிண்டல் செய்து இகழ கூடிய ஒன்றாகும். பெருமுதலாளியே முதலை போன்ற விஷயத்தில் முதன் முதலாக ஈடுபட்டால் முதலுக்கே மோசம் வர அதிக வாய்ப்பு இருக்கிறது.

இது அனைத்தும் ரைட்டா, ராங்கா என தெரியவில்லை.

பின்குறிப்பு:-

தன்னுடைய சுய விளம்பரத்திற்காக விபரீதமாகவோ மற்றும் எக்கு தப்பாகவோ காரியங்கள் செய்து விளம்பரம் தேட நினைக்கும் பலர் அதன் ஆபத்தை உணராமல் ஈடுபடுகின்றனர்.  இது "Side Mirror" பார்க்காமல் மற்றும் "Side Stand" எடுக்காமல் வண்டி ஓட்டுவதற்கு சமம். என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். பிறகு "Slide விளம்பரம்" போல் நம்முடைய நியூஸ் ஓளிபரப்பாகும்.

 "ஜாக்கிரதையாக" செல்லும் போதே அஜாக்கிரதையான விஷயங்கள் நமக்கு அரங்கேறுகிறது. உங்களை வழிநடத்த ஓர் "ஜாக்கி" இல்லாததால் இது "ஜாக்பாட்" என்று நினைத்து கடைசியில் அது நம்முடைய "வீக் பாயிண்ட்" ஆகி  "வீக்" முழுவதும் "மன வீக்கத்துடன்" நேரத்தை செலவிட்டு கொண்டிருக்கிறோம். அதாவது BECAREFULL. .கா:- டிக் டாக் வீடியோஸ், Face Book etc.

https://justicemayel.blogspot.com/2020/11/justicemayelblogspotcom.html