ஓம் நமோ நாராயணாய [Power Full Manthra]




2-ஸ்த்திர தன்மை கொண்ட  வைஷ்ணவர்களின் மனதை பக்தியால் பெருக்கி  சலவை செய்து மேலும் மெருகூட்ட வகுத்து உள்ள வைகுண்ட வெங்கடாசலபதி கவிதைகள் மனதில் உள்ள சஞ்சலங்கள் அனைத்தையும் கொஞ்ச நேரத்திற்கு கழித்து கட்டி  "ஓரம்போ" என ஓரங்கட்டி "டெம்போ"-வை ஏற்றும் கவிதைகள்     ஓம் நமோ நாராயணாய நமஹ [Power Full Manthra]★புரட்சி கவிஞர் Valavanur V.ரா.SivaSaravanaLingam Chettiyar B.A.,B.E.,D.M.E.,





வைராவீராராச என்று பல பெயர்களுடன் ஒரு பெயராய்ஓர் மனிதராய் என்னுள் கொண்டு உங்களில் ஒருவனாய் ஓர் Messenger ஆக கட்டுரை வாயிலாக All In One ஆக வரார் JMN -ன் ரிதம் F.M 605 108-ல் justicemayel.blogspot.com தளத்தின் வாயிலாக அஸ்திவாரங்களாகிய வாசகர்களே.

நான் சிவன், வினாயகர் என்று  எழுதியது மற்றும் இப்போது விஷ்ணு பெருமானை பற்றி எழுதியதை பெரும் பாக்கியமாக கருதுகிறேன்.  நான் எவ்வளவு பிறவிகள் எடுத்து இருந்தாலும் இப்பிறப்பே எனக்கான சிறந்த பிறப்பாக கருதுகிறேன். சிவன், வினாயகர், விஷ்ணு பெருமான் என்று எழுதும் வாய்ப்பு அனைவருக்கும் கிட்டாது.  ஏனென்றால் அனைத்தும் மனதில் உதித்து ஏட்டில் எழுதுவது ஆகும். நான் முதன் முதலில் விளையாட்டாக அதில் பல நக்கல், நையாண்டிகளை சேர்த்து எழுதியது ஓர் காதல் கவிதை ஆகும்.  அதுவும் கல்லூரி நடத்தும் மாத தேர்வு எழுதுவதற்கு தேர்வு அறையில் உட்கார்ந்திருந்த போது திடிரென்று உதித்தது அச்சிந்தனை.  அதாவது நாம் கவிதை எழுதினால் என்ன என்று.  உடனே ஒரு பெண்ணை நினைத்து தேர்வு வினா தாளில் சில கவிதைகளை கிறுக்கினேன்.  அப்போது தான் தெரியும் எனக்கு கவிதை எழுத வரும் என்று.  ஆனால் நாட்டமிருந்தும் அதை நான் ஏனோ தொடரவில்லை. ஒரு வேலை தொடர்ந்திருந்தால் அதில் மேலும் பயிற்சி பெற்றிருந்தால் உங்களுக்கு ஓர் நல்ல கவிதை எழுதும் கவிஞர் கிடைத்திருப்பார்.  அதன் மூலமாக நீங்கள் பலவற்றை ரசித்தீருப்பீர்கள் அதோடு அதன் மீது ஈடுபாடு கூட வந்திருக்கலாம். A Small Mistake Is Create a World Big Loss. சரி விஷயத்தை தொடர்வோம்.  பல வருடங்களுக்கு பிறகு அது போன்று திடிரென்று உதித்ததே இச்சிந்தனை.  அதில் உதித்த வரிகள் தான் இப்போது நீங்கள் படிக்க போவது மற்றும் ஏற்கனவே படித்தது. " படி படி" அதுவே வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கான முதல் "படி" ஆகும்.  எதை படித்தாலும் அதில் இருந்து ஓர் உணர்வு தோன்றும். படிப்பினையை எந்த துன்பமும் அடையாமல் பெற்று வாழ்க்கையில் இலவசமாக தெளிய வேண்டுமென்றால் அது நூல்கள், என்னுடைய கட்டுரைகள் போன்றவற்றை படிப்பதன் மூலமே சாத்தியமாகும்.  இதற்கான விலை என்பது பலர் படிப்பினை என்கிற நஷ்டத்தை அடைந்ததை விட விலை குறைவே ஆகும்.  இந்த விலையற்ற நூல்களை, கட்டுரைகளை காப்போம், சேகரிப்போம் அடுத்த தலை முறைக்கும் இதனை பரிசாக கொடுப்போம்.

இம்மாதிரியான ஆன்மீக கவிதை சார்ந்த கட்டுரைகளும் எந்த சார்பும் இல்லாமல் ஓர் நல் உணர்வை நிச்சயமாக தோற்றுவிக்கும். நல் உணர்வை பெருவீராக...  மனது லேசாகட்டும்... மனது பஞ்சு போன்று மென்மையாகட்டும்...  ஆன்மீகம் செழிக்கட்டும்.  

     SARAVANA ROCKING SPIRITUAL POETRY


2-
ஸ்த்திர தன்மை கொண்ட  வைஷ்ணவர்களின் மனதை பக்தியால் பெருக்கி  சலவை செய்து மேலும் மெருகூட்ட வகுத்து உள்ள வைகுண்ட வெங்கடாசலபதி கவிதைகள் மனதில் உள்ள சஞ்சலங்கள் அனைத்தையும் கொஞ்ச நேரத்திற்கு கழித்து கட்டி  "ஓரம்போ" என ஓரங்கட்டி "டெம்போ"-வை ஏற்றும் கவிதைகள்:-

கோவிந்தா கோவிந்தா

கலியுக வரதனே!                எங்கள் கலி வரதா! என் ஹரியே! சீனிவாசனே! ரங்க நாதனே! வெங்கடாஜலபதியே! உங்களுக்கு என் வணக்கம். வரமான வாழ்க்கையை வேண்டி வருபவர்களுக்கு அருள்பவனே! மாசில்லாதவனே! ஆழ்வாரின் தலைவனே!

பார் போற்றும் பாற்கடல் நாயகனே!                                 பல "திரு"க்களை உடைய எங்கள் திருமாலே!        உங்களை அனுஷ்டித்தால் அனுதினமும் துன்பம் அண்டாமல் ஆக்குபவரே!

☆☆

உங்களின் "சுப்ரவாத" பாடல் எங்களுக்கான தேன் அமுது பாடல் கடவுளே! விஷ்ணு ஸ்ர்சநாமம் எங்களுக்கான மனது இனிக்கும் பாடல் கடவுளே!

☆☆☆                 

வைகுண்ட ஏகாதேசி தினத்தில் உன் சன்னதியில் உங்களை தரிசித்தால் ஏக போகமாக வாழ வைப்பவரே எம் இறைவா!                   விஷ்ணு தீபத்திருநாள் எங்கள் வாழ்க்கையில் ஒளியேற்றும் தீப திருநாளே எம் கடவுளே!  மாதம் தோறும் வரும் வைகுண்ட ஏகாதேசி திருநாள் ஏக மனதாய் என் குடும்ப உறுப்பினர்கள் "குஷி" ஆகும் நன்நாள் கடவுளே!

☆☆☆☆  

உங்களின திருமஞ்சன ஊஞ்சல் ஆடும் விழா என்பது எங்கள் மனதில் விழாமல் ஆடும் நன்நிகழ்வாகும் கடவுளே! வாழிய வாழிய என்று எங்களை வாழ வைக்கும் கடவுளே!

☆☆☆☆☆

மார்கழி மாதம் விஷ்ணு பெருமாளாகிய உன்னை போற்றும் ஓர் உன்னத மாதம் கடவுளே!                            உங்கள் பக்தனாக இல்லாதவரையும் என்னுடைய சிவ பக்தியை கண்டு மெய் மறந்து உங்கள் அன்பால், பண்பால் உங்களின் மெய்யான திவ்ய தரிசனத்தை காண வைத்து ஈர்த்து தீவிர பக்தன் ஆக்கிய திவ்ய வல்லமை பொருந்திய மேன்மை மிக்க எம் கடவுளே! காந்தம் போன்று ஈர்ப்பவரே! உங்களுக்கு என் நன்றி.

☆☆☆☆☆☆

நான் உன்னை தீவிரமாக பக்தி செய்வதால் நான் உனக்கான ஓர் தீவிரவாதி எம் கடவுளே!

☆☆☆☆☆☆☆

பகவத் கீதையில் பலவற்றை மிதமாக அதை இதமாக உபதேசித்த நீங்கள் ஒரு மிதவாதி எம் கடவுளே!   தீவிரமாக உங்கள் மீது பற்றுள்ள பக்தர்களின் துயர் துடைப்பதில் நீங்கள் ஓர் தீவிரவாதி எம் கடவுளே! 

☆☆☆☆☆☆☆☆

எவ்வளவு தான் உங்களை நிந்தித்தாலும் பொறுமை காத்து அவர்களுக்கும் மானிட பிறப்பின் மகத்துவத்தையும் அதில் உள்ள பொறுப்பையும் உங்கள் பக்தர்கள் வாயிலாக கூறி இவ்வுலகிற்கு பறை சாற்றிய அகிம்சாவாதியே எம் இறைவா!

☆☆☆☆☆☆☆☆☆

பகை மூட்டத்துடன் பகைவனாக உங்களுக்கு இருந்தாலும் அவர் என்னையே நினைத்து கொண்டிருக்கிறார் என்று "பகலவன்" போல நினைத்தாய் வந்தேன் என்று வந்தாயே எம் இறைவா!

☆☆☆☆☆☆☆☆☆☆ 

உங்களுக்கு நிகர் நீங்களே எம் இறைவா!  இம்மாதிரியான தேவ குணம் எந்த மாதிரியும் எந்த கடவுளுக்கும் இல்லை எங்கள் இறைவா! தன் நிகர் அற்ற தலைவா!

1☆

நிகரில்லா கடவுளே!  வரங்களை வாரி கொடுக்கும் வள்ளலே!                       எங்களை இறை பணியில் வைரங்களாக பட்டை தீட்டும் வைரமே!           மனக்குப்பையை அகற்றும் மாணிக்கமே!                         மகா பிரபுவே!

1☆☆                 

திருப்பதி ஏழுமலையில் வசிக்கும் ஏழுமலையானே! ஏழுமலையை நடை பயனமாக கடந்து உங்களை வந்தடைந்து காணும் போது ஏழு பிறப்பில் கிடைக்காத ஓர் மகிழ்ச்சி கிடைக்கிறது எம் கடவுளே! அம்மகிழ்ச்சி பரவசம் நிகரில்லா பக்தி பரவசமாகும் எம் கடவுளே!

1☆☆☆                          

பற்பல பரவசங்களை அளிக்கும் எங்கள் பரந்தாமா! உங்களுக்கு என் நன்றி.

1☆☆☆☆

உங்களை வழிபடுவதில் பெருமையும், ஆனந்தமும் தாண்டவம் ஆடுகிறது இறைவா! ஆணவம் ஆணவமில்லாமல் போய் பக்தியில் ஓர் "ஆண"வனாக ஆக்குகிறது இறைவா! என்னிடமிருந்த செருக்கு செருப்பை போல் என்னை விட்டு வெளியே நிற்கிறது இறைவா!

1☆☆☆☆☆ 

பல மாயங்களை எனக்கு எந்த காயம் இல்லாமல் அனுபவமாக புகட்டும் கிருஷ்ணா! நான் உள் உருகி வேண்டுவது இப்படியே என்னை உருக்கி உங்கள் தரிசனம் பெற்று கொண்டே உங்கள் காலடியின் கீழ் நான் இருப்பது மட்டுமே.  உங்களை சரணாகதி அடைந்தால் மரணமில்லா பெருவாழ்வு நிச்சயம்.  சொர்க்க மார்க்கம் என்பது உங்களை தஞ்சமென புகுவதும், உங்களை தரிசப்பதும், வழிபடுவதும், உங்கள் நாமத்தை உச்சரிப்பதும், புகழ் பாடுவதும் அந்த இடத்தில் இருப்பதும் தான்.

1☆☆☆☆☆☆

உங்களின் துளசி இலை பிரசாதம் எங்களின் பக்தி பசியை துளக்கும் ஓர் உன்னத பிரசாதம் ஆகும் இறைவா!  துளசி செடி எங்கள் தோட்டத்தில் இருப்பது நீங்களே இருப்பது போன்ற உணர்வை கொடுக்கிறது இறைவா!

1☆☆☆☆☆☆☆                      

அதாவது பார்வதி தேவியின் வேப்ப மரம் மற்றும் வேப்பிலை போன்று இறைவா! எனக்கு பசி வந்து உங்கள் விருப்பமான துளசியை புசித்தால் பசி பறந்தோடுகிறது இறைவா!  உங்கள் பக்தர்கள் வீட்டிற்கு வந்தால் அவர்களுக்கு துளசி இலை கொடுப்பது சிறந்த விருந்தோம்பல் என கருதுகிறேன் இறைவா! அதோடு அது எங்களுடைய பாக்கியமே இறைவா!

1☆☆☆☆☆☆☆☆

உங்களுடைய  துளசி தீர்த்தம் கங்கா lதீர்த்தத்தை போன்று புனிதமானது இறைவா! தொண்டை குழி வழியாக அமிர்தமாக என்னுள் இத்தீர்த்தம் செல்லும் போது நான் புனிதமடைகிறேன் இறைவா!                    வேப்பிலை தோரணம் மாரியம்மனுக்கு அழகு அது போல் துளசி மாலை  உங்களுக்கு அழகு இறைவா!

1☆☆☆☆☆☆☆☆☆

துன்பங்களை துயர் துடைக்க ஆன்மீகத்தில் பிரயோகிக்கும் பிரம்மாஸ்திர அஸ்திரம் மற்றும் சக்தி வாய்ந்த மந்திரம் (Power Full Mandthra)"ஓம் நமோ நாராயணயாய" என்பதே ஆகும் எம்கடவுளே!

20

உங்கள் "சுதர்சன சக்கரம்" சன நேரத்தில்  எங்களின் இருமாப்பை தூள் தூளாக்கி இருட்டில் தள்ளும் தெய்வீக சக்கரம் இறைவா! ஆக்ரோஷத்துடன் பக்தகோடிகளின் வாழ்க்கை சக்கரத்தை சீராக்குபவரே! ஆதிசேஷன் நாக பாம்பில் துயில் கொள்ளும் தூயவனே! 

2☆

எங்கள் ஆதி சேஷ பெருமாளே! எங்கள் மூலவரே! உற்சவ மூர்த்தியே! எங்களின் அனைத்து மூலமும் நீயே இறைவா! எங்களின் மூல மந்திரமும் நீயே இறைவா!  கந்தனுக்கு "வேல்" அழகு! இது உனக்கு அழகைய்யா!

2☆☆

என் முகத்திற்கான அழகு உன் "திருநாமத்தை" இடுவதில் தான் உள்ளது எங்கள் கடவுளே! ஓம் நமோ நாராயணாய நமஹ எனும் மந்திர ஒலி! என் ஜீவ ஒலி எங்கள் கடவுளே! 

2★★★

குலத்தை காக்கும் எம் குலபெருமானே!

2☆☆☆☆

இல்லறத்தை பேணி காக்கும் எம் மூதாதையனே!

2☆☆☆☆☆

என்னை பக்தியால் மனதை தைக்கும் தையல் பெருமானே!

2☆☆☆☆☆☆

காலையும் உம்நினைவே ஐயா!

2☆☆☆☆☆☆☆

மதியமும் உம் நினைவே ஐயா!

2☆☆☆☆☆☆☆☆

பொழுது சாய்ந்த மாலை நேரத்திலும் உம் நினைவே எம்ஐயா!

2☆☆☆☆☆☆☆☆☆

என்னை நல்வழிபடுத்தும் நல்வரவே!  என் வாழ்க்கையில் செழிப்பை ஏற்படுத்திய செழிப்பா!  உனக்கு ஈடு இணை எந்த லோகத்திலும் இல்லையப்பா!  உன் மனம் என்றும் பசும் பால் போன்று தூய வெள்ளையப்பா!                 உமக்கு எம் வணக்கம் ஐயா!  அதோடு என் கோடான கோடி நன்றி ஐயா!

30

பல அவதாரம் எடுத்து பக்தர்களின் அவலங்களை போக்கிய எம் ஐயா! செல்வத்துள் சிறந்த செல்வம் பக்தி செல்வம் என்று உணர்த்தி என் மானிட பிறப்பை மகத்துவம் வாய்ந்த பிறப்பாக்கிய எம் ஐயா! எம் கடவுளே! 

3☆

லட்சுமி கடாச்சயம் முதல் சகல கடாச்சயங்களையும் எமக்கு வழங்கி மகிழ்பவரே! எம் சுவாமியே!  ஜடாயுத பெருமானே!  படாரென்று உங்கள் மகிமையால் எங்கள் இன்னல்களை சடாரென்று போக்கும் எம் சுவாமியே! 

3☆☆

எம் ஐயாவே!  எங்களுக்கு பலவற்றை போதிக்கும் போதி மரமே! எம் சுவாமியேl! கண்ணனே!  அகந்தை கொள்ளாமல் பகைவரையும் மதிக்க வேண்டும் என்று கூறிய எங்கள் ராமா! சுவாமியே!

3☆☆☆

என்னுடைய பண்பே! எனக்கான அன்பே! என்னுடைய தெளிவே!  என்னுடைய வாழ்வே! எனக்கான இன்பமே!  என்னுடைய பிறப்பே! என்னுடைய இறப்பே! அனைத்தும் உனக்காக தான். இந்த பேர் அண்டத்தில்   எல்லாம் நீ தான்! என்று ஜெபிப்போமாக!

3☆☆☆☆

 

https://justicemayel.blogspot.com/2020/11/justicemayelblogspotcom.html 

 

இந்த நிவர் புயலில் பாதிக்கபட்ட அனைவரும் ஏற்றம் பெற வரும் கார்த்திகை  தீபமன்று இறைவனை பிராத்திப்போமாக.  மக்கள் மனதிற்கான நிவாரணத்தை, ஆறுதலை இறைவன் அளிக்கட்டுமாக.    கோர தாண்டவ நிவர் புயலின் பலி பீடத்தில் உயிர் பலி அதிகமாக இல்லாமல் செய்தமைக்கு இறைவன் முதல் முன்னேற்பாடுகளை முன்னோக்கி ஓடி செய்த அரசு மற்றும் இந்த துறை ரீதியான அரசு அதிகாரிகள் வரை நன்றி தெரிவிப்போமாக.  Prevention Is Better than Cure என்ற பழமொழிக்கு தகுந்தாற்போல் தகுந்த நேரத்தில் கொடுத்த வானிலை எச்சரிக்கையால் முன்னேற்பாடுகள் "சபாஷ்" என்று முன்னோக்கி அணி வகுத்து நின்றதும் கோர தாண்டவ புயல் நிலை குலைந்து பின் வாங்கி  எதையும் பெரியளவில் பல இடங்களில் கோரமாக நடத்தாமல் கரையை கடந்துள்ளது.