ஞானம் இல்லாத வெத்து வேட்டு [ The Bramma Letter- My View]

ஞானம் இல்லாத வெத்து வேட்டுகளின் ஓட்டை பானைகள்[The Bramma Letter- My View]★புரட்சி கவிஞர் Valavanur V.ரா.SivaSaravanaLingam.    

திருசிற்றம்பலம்

வைராவீராராச என்று பல பெயர்களுடன் ஒரு பெயராய்ஓர் மனிதராய் என்னுள் கொண்டு உங்களில் ஒருவனாய் ஓர் Messenger ஆக கட்டுரை வாயிலாக All In One ஆக வரார் JMN -ன் ரிதம் F.M 605 108-லிருந்து  justicemayel.blogspot.com  தளத்தின் வாயிலாக அஸ்திவாரங்களாகிய வாசகர்களே.





பிரம்மனின் சிருஷ்டி என்பது படைக்கும் போது அனைவரும் கள்ளம் கபடமற்ற பால் வடியும் குழந்தைகளாக தான் பிறக்கிறோம். ஆனால் வளரும் நாம் மாறுபட்ட குணாதிசயங்களை பெறுகிறோம் ஏன்?.  அதோடு பலவற்றில் நமக்கும் மற்றவருக்கும் ஏகபட்ட குணாதிய வேறுபாடுகள் இருக்கிறது ஏன்?  இது ஒரே ஜாதியைமதத்தை சேர்ந்திருந்தாலும், கோடிஸ்வரர்கள் முதல் ஏழைகள் வீட்டில் பிறந்தாலும் ஏன் ஒவ்வொருவருக்கும் இத்தனை வித்தியாசம்?  அதோடு நமக்கு ஏழு ஜென்மங்களோ அல் பல ஜென்மங்களோ கடந்து தான் மானிடனாய் அவதரிக்கிறோம் என்கிறோம்.  இன்னும் சிலர் முன் ஜென்மத்தில் இப்படி இருந்தாய் என்று நாடி ஜோதிடம் மூலமாக கூறபட்டு  தெரிந்து கொள்கிறார்கள்.  ஆனால் அது எதுவும் ஏன் நமக்கு ஞாபகம் இருப்பதில்லை?  ஞானம் உள்ளவர்களின் மூலமாக நம் தாயின் வயிற்றில் குழந்தையாக பிறந்து தவழ்ந்து வளர்ந்தாலும் அவரை போல பலரால் ஏன் சோபிக்க முடியவில்லை.  அரசராக அலெக்ஸாண்டர், அசோகர், நெப்போலியன், ராஜராஜ சோழன் என்பவர்கள் உலகையே கைப்பற்ற நினைக்க முற்பட்டு பல யுத்தங்களில் ஈடுபட்டனர்.  அவ்வாறு அவர்களால் எழுப்பபட்ட சாம்ராஜ்யம் ஏன் அவருக்கு பிறகு பல வாரிசுகள் பிறந்தும் அந்த சாம்ராஜ்யம் நிலையாக இன்றளவும் நிலைக்காமல் போனது?  இன்று தொழில்நுட்பம் இவ்வளவு வளர்ந்தும்நல்லவைகள் தெருவோர பலகைகளில் திருக்குறளாக,  தத்துவங்களாகபழமொழிகளாக தொங்கவிடபட்டும்  நூல்கள் வரை வடித்து அது அவர்களுக்கு கூறபட்டும் ஏன் அனைவரின் மண்டையிலும் அனைத்தும் ஏற மறுக்கிறது? அனைத்தும் அவர்கள் மூளையில் ஏறி இருந்தால் இந்நேரத்திற்கு அனைவரும் நல்லவர்களாகவும், சுபிட்சமாகவும், கோடிஸ்வரர்களாகவும்ஆன்மீகவாதிகளாகவும் Etc இருந்திருக்க வேண்டும்.  ஆனால் பெரிதாக அவ்வாறு ஏன் நடக்கவில்லை?  வாத்தியார் பிள்ளை ஏன் மக்காக இருக்க வேண்டும்?  அறிவு எனும் ஊற்றை பக்கெட்டில் இருந்து சாம்பார் ஊற்றுவது போல ஊற்றினாலும் ஏன் ஊற்றெடுக்காத நிலம் போல், வேண்டாம் என்பது போல் பலவைகள் புறம்தள்ளபடுகிறது.  போலிஸ்காரன் மகன் திருடன் என்ற பழமொழி ஏன் எதற்காக இயற்றபட்டது?.  கலரான அத்தனை அழகிகளையும் வரிசை கட்டி நிறுத்தினாலும் ஒரு பெண் பிடிப்பது போல் ஏன் அத்தனை அழகிகளும் பிடிப்பதில்லை?  இவை அனைத்தும் My View-ல் உங்கள் பார்வைக்கு. 

காரணம் இது தான் பிரம்மனின் எழுத்து என்றைக்கும்  மாறாது மற்றும் பிரம்மன் போட்ட புள்ளி எந்த கோட்டையில் பிறந்தாலும் தப்பாது.  அதோடு நமக்கு யார் உப்பள்ளி போட வேண்டுமோ அவர்கள் தான் உப்பு அள்ளி போடுவார்கள். சில சமயங்களில் மொத்தமாக மண் அள்ளி போட்ட கதையெல்லாம் இருக்கிறது அது வேறு விஷயம். 

பிரம்மனின் எழுத்து என்றதும் ஏற்கனவே எழுத்தை பற்றி கூறினேர்களே அதுவா என்றால் இல்லை.  அது வேறு அது திசையை கூட விட்டு வைக்காமல் அரங்கேறி கொண்டிருக்கிறது.  அதாவது தெற்கு அல் தென் திசை இந்த திசையானது பிறந்தது முதல் என்னை விட்டு வைக்கவில்லை. எப்படியென்றால் நான் பிறந்தது தெற்கு ஆசியா, தென் மாவட்டம், தென் சென்னைதெற்கு பார்த்தோ அல் இருந்தோ இருப்பது போல் இருக்கும் வீட்டில் குடியிருப்பது என்று இன்றளவும் தென் நாடுடைய சிவனே போற்றி என்பது போல் எல்லாம் சிவமயம் என்பது போல் குறிப்பிட்டு நான் வசிக்கும் இடத்தை மொத்தமாக இன்றளவும் ஆக்கிரமித்து உள்ளது.  இதற்கே ஜோதிடத்தில் எனக்கு ராசியான திசை மேற்கு திசையாம்.   அனைத்து திசைகளையும் சுற்றியாவது திரவியம் தேடி பிழைத்து கொள் என்பார்கள்.  இங்கு என்னவென்றால் திசை என்னை சுற்றுகிறது.  அதனால் ஒரு முடிவுக்கு வந்துள்ளேன் நான் வாங்கும் அனைத்தும் தென் திசை நோக்கியோ, இருந்தோ இருப்பது போல் வாங்கலாம் என்று தற்போதைக்கு எண்ணம் கொண்டு இருக்கிறேன்.  சரி விஷயத்திற்கு வருவோம்.  விஷயத்திற்கு வரும் முன் கீழ்கண்டவைகளை உங்களுக்கு எளிதாக புரியும் படி கூறுகிறேன்.  ஆனால் பலருக்கு புரியாது சிலர் குழப்பம் ஆகலாம்.  குழம்பிய குட்டையில் தான் மீன் பிடிக்கலாம் என்பார்கள்.  அது போல குழப்பமாகும் போது தான் தேடல் உருவாகும்.  நல்ல தேடல் உருவானால் தான் எந்தவொரு விஷயத்திலும் தெளிவு பிறக்கும்.

பிரம்மனின் எழுத்து என்பது அது நம்முடைய விருப்பம் என்பதே ஆகும். அதனால் தான் நமக்கும் முன் ஜென்மத்தில் எப்படி வாழ்ந்திருந்தாலும் ஞாபகம் இல்லாமல் பிரம்மன் படைத்துள்ளார். அதோடு நம் வாழ்வில் நடக்கும் அத்தனை இன்ப துன்பங்களுக்கும் காரணம் நாமே தான்.  ஒரு மனிதன் வாழ்வில் பிரச்சனைகள் என்று ஏன் வருகிறது?  எப்படி வருகிறது?  வேறொருவனின் விஷயத்தில் தலையிடுவதால் தான்.  எப்படி புரிய வைப்பது என்றே தெரியவில்லை.  எனக்கு புரிந்ததை உங்கள் பார்வைக்கு கொண்டு வந்து புரிய வைக்கவே நான் அவ்வளவு மெனக்கெட வேண்டி உள்ளது.  அவ்வாறு மெனக்கெட்டும் எத்தனை பேருக்கு புரியும் என்று தெரியவில்லை.  சரி அதை "என் டைரி" என்கிற கற்பனை பக்கங்கள் மூலமாக திறந்து கூறுகிறேன். அடுத்தவரின் விஷயத்தில் தலையிட்டு தேவையே இல்லாமல் பல பிரச்சனைகளையும், அசிங்கங்களையும் சந்தித்த யுத்த கதை இது.  இது ஓர் மகாபாரதம், இராமாயணம் போன்று இதுவும் ஓர் நீதியை விளக்கி உள்ளது.

தனி மனித விருப்பங்கள் என்பது தாய், தந்தைசகோதரன், சகோதரிசொந்தகாரர்கள், நண்பர்கள் என்று நம்முடன் பலர் இருந்தாலும் வேறுபட கூடிய ஒன்று.  பலவைகள் ஒரே மாதிரியாக அனைவரின் கருத்தும், விருப்பமும் இருக்கலாம்.  ஆனால் மொத்தமாக இருக்க வாய்ப்பே இல்லை.  ஏனென்றால் அனைத்தும் ஒரே மாதிரியாக இருக்குமானால் நம்மை ஏன் பிரம்மன் படைக்க வேண்டும்?  அதனால் தான் தனி குடித்தனம்முதியோர் இல்லங்கள் என்பது அதிகமாக உள்ளது.  விட்டு கொடுத்து வாழ்வது என்பது இதிலும் உள்ளது.

அதனால் தான் நமக்கு பிடித்த நடிகர்கள், படங்கள் என்று அனைவருக்குமாக எடுக்கும்" U" certificate படங்களே அனைவருக்கும் பிடிப்பதில்லை.  அப்படி 50% மக்களுக்கு பிடித்திருந்தால் அது Block Buster Hit ஆகும்.  அதனால் தான் ஒரே இயக்குனர், நடிகர் தொடர்ந்து Block Buster படம் மக்களுக்கு கொடுக்க முடியவில்லை.   அதோடு அதனால் தான் பல கண்டுபிடிப்பாளர்கள், நல்ல அரசியல் தலைவர்கள், புரட்சியாளர்கள்ஆன்மீகவாதிகள் (ராமர், கிருஷ்ணர்,ஆஞ்சநேயர்,  புத்தர், மஹாவீரர், நபிகள்நாயகம், Jesusமற்றும் பல துறைகளில் etc என்பது போல் இருக்கும் அத்தனை பேரையும் அத்தனை பேருக்கும் சரியோ, தவறோ பிடிக்காது.  அப்படி பிடித்திருந்தால் ஏன் இத்தனை பிளவுகள், பிரிவுகள், உட்கட்சி பூசல்கள். அப்படி ஒட்டுமொத்தமாக அனைவருக்கும் பிடித்திருந்தால் உலகமெங்கும் எந்த உட்பிரிவுகளும்உட்பூசலும் இல்லாத ஒரே மதம், மொழி, கடவுள் என்று இருந்திருக்கும். 

இந்த தலைமுறையில் இது போல் கூட பெரிதாக யாரும் இல்லை. அப்படியே இத்தலைமுறையில் இருந்தாலும் அதிகமாக இல்லாமல் இருக்க காரணம் இதுவே ஆகும்.  உடனே நாம் கூறலாம் எனக்கு விருப்பம் இருக்கிறது என்று.   விருப்பம் என்பதை அவர்களவு மற்றும் அதைவிட அதிகமாக வாயால் பேசும் அளவில் இருக்க கூடாது.  மனதளவில் உறுதியாக இருக்க வேண்டும்.  எ.கா:- மாநிலத்தில் முதல் மாணவனாக வர வேண்டும் என்று நமக்கு ஆசை தான் ஆனால் நம்மால் படிக்க முடியவில்லையென்றால் அது வெறும் உதட்டளவில் உள்ள பேச்சு மற்றும் விருப்பமே ஆகும்.  அதனால் தான் வாய் சொல்லில் வீரர்கள் போர் வீரர்கள் ஆக முடியாது என்பது.

சரி தேவையே இல்லாத பிரச்சனையைஅசிங்கத்தை தானே திருநீறு போல பூசி கொண்டு பட்டை நாமம் ஆன "என் டைரி" கதைக்கு வருவோம் சுருக்கமாக. பெரிய காட்டு தீயே சின்ன தீ பொறியில் தான் ஆரம்பிக்கும். என் டைரியில் அவன் எழுத்துக்களை பொறிக்க நினைத்து இதனால் எனக்குள் சின்ன பொறி கிளம்பி அது தீ பிழம்பாகி அவர்களை வறுத்து, பொறித்துதாளித்து கடைசியில் பொசுக்கி அவர்கள் டைரியில் என் எழுத்துக்களை பொறித்த கதை தான் முழுக்க கற்பனையாக ஆனால் உண்மையாக நடந்தது போல்.

எனக்கு காதலிக்கும் பெண் மற்றவருடன் பேசினாலோ, வேலைக்கு சென்றாலோ அதோடு என்னுடைய கருத்துக்களுக்கு முரனாக இருந்தாலோ எனக்கு பிடிக்காதுஅதோடு நான் சொல்வதை தான் கேட்க வேண்டும் என்கிற சர்வாதிகார போக்கு எனக்கு உண்டு.  அவ்வாறு இல்லையென்றால் சகட்டு மேனிக்கு அவர்களுக்கு திட்டுக்கள் அர்ச்சனைகளாக விழும்.  இதே போல் பலர் உள்ளார்களா, இல்லையா என்பது வேறு விஷயம்.

இதில் நண்பர்கள் முதல் யாரும் பெரிதாக தலையிடமாட்டார்கள்.  அப்படி தலையிட்டால் "ஏழரை" அண்டும் என்பதை கூறவே இது. அவர்களுக்கு என்று பல பிரச்சனைகள் இருக்கும்.  இதில் தேவையில்லாமல் தலையிட்டு அதனை விமர்சித்தததால் அவர்கள் பட்ட பாட்டை கற்பனையாக ஆனால் கற்பனை போல் இல்லாமல் தத்ரூபமாக பார்ப்போம்.  இதில் கருத்தை கூறியவர்கள், விமர்சனம் செய்தவர்கள்  அனைவரும் பிரம்மனின் எழுத்து தெரியாமல்அதில் எந்த ஞானம் இல்லாமல் வெத்து வேட்டுக்கள் பானை செய்த கதையாக ஆகி நம்முடைய பாட்டையில் நாம் செல்லாமல் அடுத்தவனுடைய விஷயத்தில் தன்னுடையதை புகுத்தி ஆட்டையை போட நினைத்து நம்முடைய அனைத்தும் முட்டை போல் விழுந்து அது கவுச்சி வாடை அடிப்பது போல் இதில் ஈடுபட்டவர்கள் பல அடி வாங்கி நாற்றம் ஆனது போல் கற்பனையாக சித்தரிக்கபட்டு கூறுவதே மற்றபடி இது யாரையும் கூற அல்ல.  இவ்வாறு தினம் தினம் ஊர் கதை பேசி, அடுத்தவனை புறம் பேசி தன்னை மிடுக்காக காட்டி கொள்ள நினைத்து தடுக்கி விழுந்தவர்கள் ஏராளம்.  இதனால் பலவற்றை வாங்கி, விற்று சுழலில் சிக்கிய படகு போல நம் வாழ்க்கையின் சூழலாகி மீள வழி தெரியாமல்  இருள் சூழ்ந்த நிலையில் மூழ்கிய கதை இது கிடையாது.  இது நாம் போகும் லட்சிய திசையில் நேரத்தை செலவிடுவதை விட்டுவிட்டு எப்படி திசை மாறி அதனால் காட்சிகள் மாறி நம் லட்சிய திசையே மறந்து போனது என்பதை பற்றியது.

1) பேசினால் என்ன தவறு அவன் ஒரு சந்தேக பிராணி அதோடு உண்மையான ஆம்பளை தனக்கான பெண்ணை ஊர் மேல விடுவான் என்று கூறினார்கள். வேலைக்கு நாம் போனால் என்ன தவறு அவர் சரி இல்லை என்று கருத்து கூறி அதோடு பல விமர்சனங்களும் செய்து உள்ளனர். உடனே நான் எக்கசக்கமாக இதனை புறக்கணித்து பல கருத்துக்களை நான் கூற அதில் ஒரு கருத்து விஸ்வரூபம் எடுக்க என் கருத்தையே என் நண்பர்களும் கூறி அவர்களை கிண்டல் கேளி பண்ண அவர்கள் இதனால் தன் குடும்பத்தில் உள்ள பெண்களை வேலைக்கு போக வேண்டாம் என்று கூறி பண கஷ்டத்தில் உள்ளனர்.  இவ்வாறாக தொடர்ந்து கூறாமல் இருந்திருந்தால் அவர்கள் வசதி வாய்ப்பை அடைந்திருப்பார்கள்.  அப்படி என்ன கூறினாய் என்பது தானே.  தனக்கு என்று சகோதரிகள், மனைவி என்று இருந்தால் நாம் தான் சம்பாதித்து காப்பாற்ற வேண்டும்.  அவன் தான் ஆம்பளை சங்க காலத்தில் பெண்ணை வெளியே அனுப்பி கூட எதையும் வாங்கி வர சொல்ல மாட்டார்கள்.  அப்படி வாங்கினாலும் அவர் இல்லையா என்று கேட்பார்கள்.  அதோடு அவர்களையே வேலைக்கு அனுப்பி அவர்களின் படிப்பை, திறமையை விற்று பணம் பெற்று அதை செலவு செய்து அவர்களுக்கே கல்யாணம் செய்துவிட்டு அதோடு வீட்டு மனை வாங்கி விட்டு நீ ஏதோ முழுமையாக உழைத்து சம்பாதித்தது போல் பேசுகிறாய் இதற்கு பெயர் ஆம்பளை தனமா என்று கேட்டேன்.  இதில் வேடிக்கை என்னவென்றால் நான் கூறிய கருத்து நான் வேலைக்கு அனுப்பாததால் கூறிய கருத்து.  அவன் கூறியதற்கு காரணம் அவன் வேலைக்கு அனுப்பியதால் கூறியது.  இது இவ்வளவு விபரீதம் ஆனதற்கு காரணம் யார் நம்மிடம் எதை கூறினாலும் உடனே அதை நம்முடன் பொருத்தி பார்த்த விபரீதத்தால் நடந்த விபரீதங்களே.  அதை அப்படியே விட்டுவிட்டு சென்றிருக்க வேண்டும்.  ஏனென்றால் இது அவனுடைய கருத்து அவ்வளவே.  வேண்டுமென்றால் இதை என்னால் ஏற்க முடியாது என்று கூறிவிட்டு சென்றிருக்கலாம்.  அதைவிட்டுவிட்டு இதை பற்றி பேசியது தர்க்கமாகி, அது சண்டையாகிகேலி கிண்டல் ஆகி தேவையா இது?  இந்த கருத்துக்களால் யாருக்கு என்ன லாபம்?  தேவையில்லாத மனகசப்பு மட்டுமே மிச்சம்.  இது தேவையா? 

இவ்வாறாகவே ஆம்பளை என்றால் யார் என்று கருத்து கூற அவன் பல்லிருக்கிறவன் பகோடா சாப்பிடுகிறான் என்று கூற உடனே இவன் ஒரு மாதத்திற்கு எத்தனை பகோடா சாப்பிடுகிறாய் அதோடு அது எவ்வளவு நேரம் என்று கேட்க இது குடும்பத்திற்கு தெரியவர இந்த லட்சணத்தில் உனக்கு பகோடாவா என்று கிழிக்க இதனால் தன்னுடைய மனைவியை எதாவது கூறினாலே நீ எதற்கும் துப்பு இல்லாதவன் எதாவது ரொம்ப பேசினாய் உன் அப்பா, அம்மாவிடம் மற்றும் என் குடும்பத்திடமும் சொல்லிவிடுவேன் என்று கூற அசிங்கத்தில் கூனி குருகி ராஜா கூஜா ஆன கதையானது.  இதுவும் மேற்கண்டதை போலவே தேவையில்லாமல் தலையிட்டு குடும்பமே உடைந்து அதோடு இவன் கூஜா தூக்கியதற்கு காரணம் கருத்து பரிமாற்றம் தர்க்க பரிமாற்றம் ஆனதால் தான் இது தேவையா?

2) இதே போல் தான் படிப்பு, வேலை Etc என்று பலவற்றில் பல பேர் தலையிட்டு இதனால் அவன் பொங்கி கம்பெனி வண்டவாளங்கள் அனைத்தும் தண்டவாளம் ஏற்றி விட்டார்.  அதோடு பல ஆசிரியர்கள் தோல்வியை கண்டனர்.

விற்பனை செய்யும் விற்பன்னன் போல் ஒருவனுடைய மொத்தத்திலும் கட்டுபடுத்தும் சக்தியாக சிலர் மாற நினைத்து இதனால் அவன் கோபமடைந்து கடைசியில் அந்த சிலரின் மானம் மரியாதை போவதை யாராலும் தடுக்க முடியாது என்பது போல் ஆகி அதை எதையும் கட்டுபடுத்த முடியாமல் போய் அவனிடம் கட்டுபட்டு இதை வெளியே சொல்லி விடாதே என்று இருக்க வேண்டிய துர்பாக்கிய நிலைமையை அடைந்தால் யார் மீது தவறு?  இது தேவையா?  மக்களே தங்களுக்கு விருப்பம் இல்லாததை மற்றும் எங்கள் வீட்டு பணத்தில் நீங்கள் குளிர் காய்கிறீர்களா என்று கொதித்து ஆளுங் கட்சியாகவே இருந்தவர்களையே இனி என்றும் ஆளும் கட்சியாகவே வர முடியாது என்பது போல் பல மாநிலங்களில் தொடர்ந்து ஒரே கட்சி, ஆட்சி நிலவுகிறது. மக்கள் காசு வாங்கி கொண்டு ஓட்டு போட்டால் காசிற்கு ஓட்டை விற்று விட்டு பிறகு உங்களுக்கு என்ன கேள்வி, மரியாதை என்பது போல பலர் காசிற்கு ஓட்டை விற்காதீர்கள் என்று கூறுகிறார்கள்.  அவர்களிடம் நீங்கள் எல்லாம் இப்படி எல்லாவற்றையும் விற்கிறீர்களே என்று கேட்டால் தம்பி அது சும்மா சொன்னதுபா நாங்க செய்த முறை கேட்டை எல்லாம் கூறும் போது சும்மா சொல்ற ஜால் ஜாய்ப்புகள் என்கிறார்கள்.  எதற்கு வேட்டிக்குள் ஓனானை விட வேண்டும் பிறகு குத்துதே குடையுதே என்று புலம்ப வேண்டும்.

இது அனைத்தும் தேவையே இல்லாமல் தேவையானது போல் தர்க்கமாக பேசி இதில் ஏதோ நம்முடைய கௌரவம், மானம், மரியாதை காக்கபட்டது போல் நினைத்து அனைத்தும் அப்பளம் போல் நொறுங்கிய கதைகளை முழுக்க கற்பனையாய் அறிந்திருப்போம்.  இவ்வாறாக தான் பல குடும்பங்களில்நட்பு வட்டாரங்களில் எதையோ பேச ஆரம்பித்து அதை அனைத்தையும் தவறாக நினைத்து அதோடு நம்மை ஏதோ குத்தி காண்பிப்பது போல் குத்தலாக பேசுகிறார்களோ என்று தவறாக நினைத்து பலருக்கு பல பிரச்சனைகள், கருத்து வேறுபாடுகள், விரிசல்கள் Etc.  அதாவது அதை பற்றி தொடர்ந்து பேசினால் நீங்கள் எடுத்த முடிவு சரி.  ஆனால் அது அப்படி தான் கூறபட்டதா?   அதோடு யாருக்காகவும் யாரும் எந்த பானையும் செய்து தர வேண்டாம்.  அவரவர் தன் வீட்டு பானை ஓட்டையாகி ஒழுகாமல் பார்த்து கொண்டால் போதுமானது.  இதை புரிந்தவர்கள் சென்னை வாசிகள் முழுமையாகவே என்று கூறலாம்.  யாரும் யார் விஷயத்திலும் பெரிதாக தலையிடமாட்டார்கள்.  பலருக்கு நம் அப்பார்ட்மென்ட்டில் புதிதாக யார் வந்துள்ளனர் என்றே தெரியாது என்று கூறும் அளவிற்கு அதில் பெரிதாக கவனம் கொள்ளாமல், அதற்காக நேரத்தை செலவழிக்காமல் வாழ்க்கையை வாழ்கிறார்கள்.  இதற்கும் சரி, தவறு என்ற கருத்து இருக்கும்.  நான் கூறுவது ஒன்றை மட்டும் தான் எந்த கருத்தானாலும், விமர்சனம் ஆனாலும் அடுத்தவர்களிடம் திணிக்க முயலாதீர்கள்.  அது தான் அனைத்து பிரச்சனைகளுக்கும் காரணம்.  வீட்டில் இருக்கும் பிள்ளைகளையே அவரவர் திறமை சார்ந்த படிப்பில் அவர்களின் விருப்பத்துடன் சேருங்கள் அப்போது தான் அவன் அனைத்திலும் உற்சாகமாய் இருப்பான் என்று கூறபடுகிறது.   எ.கா:- நண்பன், ஈரம் Etc.

என்னதான் எண்ணெய்யை தடவி மண்ணில் புரண்டாலும் ஒட்டுகிற மண் தான் ஒட்டும்.  ஏனென்றால் என்ன புத்தகங்கள்நூல்கள், Coaching Centre-கள் இல்லை.  அத்தனை இருந்தும் அத்தனை பேராலும் ஏன் சோபிக்க முடியவில்லை?  சட்டியில் இருந்தால் தான் அகப்பையில் வரும்.  அது மனதளவில் உறுதியாக இருந்தால் அதோடு அதற்கான பயிற்சிகளுக்கு சென்றால் தான் எதுவுமே சாத்தியமாகும். அதிலேயே பலரால் முடியவில்லை.  நானே English வராமல் ஏதோ B.E. சேர வேண்டும் என்று சேர்ந்தேன்.  ஆனால் English என்னை பாடாய் படுத்தியது. Pass ஆகும் நம்பிக்கை சுத்தமாக போய்விட்டது.  என்னுடைய மன உறுதியால், இறைவன் அருளால் ஆங்கிலம் 11/2 வருடங்களுக்கு பின் என்னுடன் சேர்ந்தது.  அதன் பிறகு எல்லாம் ரோபோ படத்தில் படிப்பது போல தான்.

இது அனைத்தும் பிரம்மன் எழுத்து என்று புரிந்து கொள்ளுங்கள்.  அது உங்களுடைய உண்மையான விருப்பம் என்பதே ஆகும்.  அது சரியோ, தவறோ அதில் நீங்கள் செல்லுங்கள் அதில் முன்னேறலாம், சீரழியலாம், கம்பி எண்ணலாம் அனைத்தும் உங்கள் விருப்பமே என்று பிரம்மன் நம் விருப்பத்திற்கே விட்டுவிட்டார்.  அதனால் தான் அனைவரையும் படைக்கும் போதே சகல சக்திகளுடன் படைக்கவில்லை.  உனக்கு விருப்பம் என்றால் நீ  அதில் ஈடுபடு பெற்று கொள் என்பது போன்றதே.  தவறு செய்தால் திருந்து இல்லை திருந்தாமல் அப்படியே இருந்து இறந்து போ அதுவும் உன் விருப்பமே என்கிறார்.  ஏனென்றால் ஒவ்வொரு மனிதனுக்கும் நல்லது, கெட்டது என்று அனைத்தும் சொல்லபடுகிறது.  பிறகு ஏன் அனைத்தும் உள்ளது?.  இறைவன் ஏன் இதை அனுமதிக்க வேண்டும்? ஏன் படைக்க வேண்டும்? வதைக்க வேண்டும்?  நம்மை இறக்க செய்ய வேண்டும்?  இது தான் Eco System.  இதில் தான் அனைத்தும் உருவாக்கபட்டுள்ளது. சட்டங்கள் உட்பட.  அதாவது பாதக செயல் செய்வது உன் விருப்பம் என்றால் அதை துவம்சம் செய்வது என் விருப்பம் என்பது போன்ற கட்டமைப்பு.  அதில் தான் பல அலுவலகங்கள் அமைக்கபட்டு ஆவனங்கள் முழுமையாக ஆராயபட்டு ஒப்புதல் வழங்கபடுகிறது.  அதனால் தான் அரளி விதை போன்ற கெட்டவர்களும் இருக்கிறார்கள், துளசி போன்ற நல்லவர்களும் இருக்கிறார்கள். This Is My View Of Bramma Letter ஆகும்.  மேற்கண்ட கடவுளின் சித்தத்தை புரிந்து கொள்ளாமல் ஞானமே இல்லாத வெத்து வேட்டு கெத்து காட்டுவதாக நினைத்து பலரிடம் குட்டு பெற்றது போன்றதே அல்  நடுகடலில் கப்பலில் ஓட்டை போட்டு மூழ்கிய கதை தான்.   

முகமதியர்களின் சுல்தான் ஆட்சியில் "பராக்என்றால் "வரார்என்று அர்த்தம்பேட்ட பராக் போல வீரா வரார்வைரா வரார்ராச வரார் என்பது.  இது அனைத்தும் ஒன்றாக அதோடு பெயரில் பல PUNCH வசனங்களுடன் இருக்கும் நான் என்றென்றும் உங்களுக்காக நான் எழுத்துக்கள் அடங்கிய ஆர்டிகல்லாக உங்கள் மனதில் வரைய "வரார்என்று வந்து கொண்டே இருப்பேன்.   அதோடு என் கட்டுரை எதுவும் ending அல்ல அது மனதிற்கான Begining ஆகும்

ALL SEAL IT.   YOU ARE A OPENER DEPENDING UPON YOUR INTEREST.

இது அனைத்தும் ரைட்டா, ராங்கா என தெரியவில்லை.

https://justicemayel.blogspot.com/2020/11/justicemayelblogspotcom.html