சூழ்ச்சி மிகுந்த உலகமடா [MANEUVER WORLD]

சூழ்ச்சி மிகுந்த உலகமடா [MANEUVER WORLD]★புரட்சி கவிஞர் Valavanur வை.ரா.SivaSaravanaLingam.

ஒருவர் இளம் வயதிலேயே சுயமாக சம்பாதிக்கிறான் என்றால் அவர் எவ்வளவு திறமை, கடவுளின் ஆசிர்வாதம் இருந்தால் சம்பாதிக்க முடியும்.   அப்படிபட்டவரிடம்  சூழ்ச்சி, சதி, துரோகம் என்று எந்த பெயரில் சொல்லியோ அதை தனதாக்கி கொள்ள நினைத்தால் அது அவ்வாறு சம்பாதித்தவர்களுக்கு காமெடி தான்.  இதில் பல உறவுகளின் பெயர்கள் குறிப்பிடுவதால் அனைவரும் கெட்டவர்கள் என்பதில்லை.  நல்லவர்கள் உலகம் அழியும் வரை இருக்கவே செய்வார்கள்.

அப்பா, அம்மா என்றால் தன் மகன் சம்பாதித்து மற்றும் மக்கள் அபிமானங்களை பெற்றால் சந்தோஷம் அடைவார்கள்.  அவர் மேற்கண்டவர்களை கஷ்டத்தில் விட்டாலும் மகன் சந்தோஷமாக இருந்தால் மகிழ்ச்சி என்றே எண்ணுவார்கள்.  ஏனென்றால் ஆயுளே அவர்களுக்காக அர்பணித்து வாழ்ந்து வளர்ந்த பிள்ளை தான் அவர்.  ஒரு வேலை தன் மகனுக்கு ஏதாவது நடந்தால் அது மிக பெரிய வீழ்ச்சி அவருக்கல்ல.  அவருடைய தாய் தந்தையருக்கே. அதனால் தான் என்ன நடந்தாலும் மகனை விட்டு தரமாட்டார்கள்.  அஸ்திவாரமே இல்லை என்றால் எழுப்பியது யாராக இருந்தாலும் அது Waste ஆகவே போய் விடும். இது தெரியாமல் நடந்த காமெடியே இது.

ஒரே இடத்தில் நான்கு பேர்களும் பேசுகின்றனர்.  ஆனால் தன் மகனுக்கு மட்டும் மக்கள் செல்வாக்கு, பெருமை, புகழ், பணம் கிடைத்ததும் பொறுக்க முடியாமல் தன் மகனையே வேண்டுமென்றே கேவலமாக பேசி வருகிறார்கள். Donation ஆக வந்த பணத்தை வைத்து கொண்டு வாழும் இடத்தில் அவரில்லை.  திறமை இருந்ததால் பல Busness Advice பண்ணி சம்பாதித்த பணமே போதும் போதும் என்ற அளவிற்கு உள்ளது. அதுவும் பொறுக்க முடியாமல் இவரை ஏன் கேட்கிறீர்கள் எங்களிடம் கேளுங்கள் பணத்தை என்னிடம் தாருங்கள் என்னும் அளவிற்கு பொறாமையின் உச்சம் வெளிபட்டது.

நம் மகனுக்கு இவ்வளவு திறமை இருப்பதை நினைத்து துளியும் சந்தோஷம் அடையவில்லை.  அப்பா, அம்மா எந்த அடியும் பாய முடியவில்லை என்றாலும் தன் மகன் அளவில்லாமல் பாய்வதை கண்டு உலகமே சந்தோஷம், பெருமை பெற்றாலும் அதை இவர்கள் அடையாமல் துன்பத்தில் இருப்பதை போலவே இருந்துள்ளனர்.

வெளியில் இருப்பவர்கள் நினைப்பது உலக இயல்பு.  அதில் யாரும் விதிவிலக்கல்ல. குடும்பத்தில் இருப்பவர்களே நினைப்பது தான் கொடுமை. மொத்தத்தில் எதுவும் நமக்கில்லை என்று நினைத்ததால் அது அவருக்கு கிடைக்காமல் இருக்க பல்வேறு சூழ்ச்சிகளை செய்து கொண்டிருக்கின்றனர்.  அதாவது அவர் சம்பாதித்தது சுய சம்பாத்தியம் என்பதால் எதையாவது சொல்லி அவரை இல்லாமல் செய்து விட்டால் அனைத்து பணம், சொத்தையும் கைபற்றிவிடலாம் என்று எண்ணி உள்ளனர்.  அதற்காக அவருக்கு கல்யாணம் ஆகாமல் இருக்கவும், பெண்களுடன் தொடர்பு என்று எதுவும் நடைபெறாமல் இருக்கவும் பல்வேறு முயற்சிகள் செய்து கொண்டிருக்கின்றனர்.  ஏனென்றால் கல்யாணம் ஆகி விட்டால் சொத்து அனைத்தும் அவருக்கு பின்னால் மனைவிக்கு சென்றுவிடும்.

மனைவிக்கு திறமை இல்லை என்றால் அவர்களின் உறவுகள் அந்த பணத்தை பாத்தி கட்டி அனுபவிப்பார்கள்.  இதனால் இவர்களின் உறவுகளும் நாம் அனுபவிக்க முடியாது என்பதால் அவரை பற்றி குறை கூறி கல்யாணம் முதல் எதுவும் நடைபெறாமல் பார்த்து கொள்கின்றனர். 

அவர்களின் நினைப்பு முழுவதும் அனைத்தும் தெரியும் என்பது அவர்களுக்கு தெரியாது.

 அது மட்டுமல்ல என் பேச்சை கேள் என்று சொன்னதும் இதற்காக தான்.  கேட்டால் தானே பொம்மை போல் அவரை வைத்து கொண்டு நோகாமல் நோன்பு கும்பிடமுடியும் உழைக்காமல்.  அது எப்போதும் நடக்காது.  வாரிசாக இருந்தால் பரவாயில்லை. அவரே சுயமாக சம்பாதித்திருக்கிறார் என்றால் எவ்வளவு திறமை இருந்தால் சம்பாதிக்க முடியும்.  அதனால் அது நடக்க வாய்ப்பில்லை. அதனால் தான் இது நடக்காது என்பது தெரிந்ததும் அவர் கல்யாணம் செய்து கொள்ள போகும் பெண்களுக்கு சோப்பு போட்டு குளிப்பாட்டி, சொம்படித்து அடிமை போல் நடந்து கொண்டிருக்கின்றனர்.  ஒரு வேலை இவள் எதாவது சொல்லி வெளியில் அனுப்பிவிட்டால் நம் நிலமை அரோகதி தான் என்று நினைத்து கொண்டு உள்ளனர். இல்லை என்றால் இவர்கள் அந்த பெண்களுக்கு சொம்படிக்க எந்த முகாந்திரமும் இல்லை.

ஜோசியத்திற்கு வந்தவரே வள்ளுவரை போல் Short -ஆக சொல்லிவிட்டு சென்றுவிட்டார்.  

வெளியில் இருந்து எதுவும் இல்லை.  ஏனென்றால் அதனால் அவர்களுக்கு எதுவும் கிடைக்க போவதில்லை.  எந்த பலனையும் அடைய போவதில்லை. அதனால் எதுவும் சொல்லவில்லை.  சொன்னாலும் ஏற்க போவதில்லை.

குடும்பத்தில் இருப்பவர்களே தான் காரணம்.  அதில் உங்கள் பணத்தையும், சொத்தையும் அடைந்துவிடலாம் என்று எண்ணுகிறார்கள் என்றார்.  என் கூட தானே அவர்கள் இருக்க போகிறார்கள் அவர்கள் ஏன் இவ்வாறு செய்ய வேண்டும் என்றதும் அவர்கள் அப்படி நினைக்கவில்லை.  நீங்கள் அவர்களுக்கு பணமே கொடுத்தாலும் ஏற்று கொள்ள நினைக்கவில்லை.  மொத்தமாக பணத்தை கைபற்றுவது தான் அவர்களின் நோக்கம் என்றார்.  இதனால் தான் உங்களுடன் யாராவது தொடர்பில் பெண்கள் இருக்க நினைத்தால் நீங்கள் சொல்வதை தான் கேட்க வேண்டும் என்று சொல்லவில்லை.  அவர்களுக்கு சாதகமாகவே சொம்படித்து  இருந்தால்  அவர்களின் Support நமக்கு இருக்கும்.  அப்படி இருந்தால் தான் அங்கேயே இருந்து பணத்தை கைபற்றமுடியும் என்பதே அவர்களின் நினைப்பு என்றார். இவ்வாறாக குடும்பத்தில் இருப்பவர்களே இருக்கிறார்கள் என்பது தெரியும்.  அவர்களின் உறவுகளும் இவர்களை வளைத்து போட்டு நாம் சொல்வதை போல் கேட்டு நடப்பது போல் செய்துவிட்டால் அத்தனை பணத்தையும் கொஞ்சம் கொஞ்சமாக நம்முடைய கட்டுபாட்டில் கொண்டுவந்துவிடலாம் என்று நினைக்கின்றனர். அதனால் தான் உன் மகனை நீ சொல்வது போல் செய்ய வை என்றார்கள்.  ஏனென்றால் இந்த உறவுகள் சொல்வதை போல் தான் அவரின் தந்தை, தாய் நடப்பார்கள்.  அவர்களுக்கு எதுவும் தெரியாது.  அப்படி என்றால் மொத்தத்தில் எல்லாமே இந்த உறவுகளின் கட்டுபாட்டில் வந்துவிடும் என்பதே இவர்களின் நினைப்பு.

இவ்வாறாக நினைக்கும் அத்தனை பேரும் முட்டாள் என்பது அவர்களுக்கு தெரியாது. 

இவ்வாறான சூழ்ச்சி செய்பவர்கள் உடம்பில் மானம், சூடு, சொரனை என்று மனிதனுக்கும், விலங்குக்கும் வித்தியாசம் உள்ள எதுவும் இல்லாமல் இருக்க வேண்டும். 

ஏனென்றால் இப்படி நடந்ததும் முதலில் இது எல்லாம் பறி போய்விடும்.

அவர்கள் நினைத்தது நடந்தாலும் ஊரே கேவலமாகமும், அசிங்கமாகவும் தான் சொல்லும்.  தலைமுறையே கேவலபடும்.  உள்ளத்தை அள்ளித்தா படத்தில் வரும்  Family மோதிரம் என்றதும் உன் குடும்பத்தின் யோக்கியதை எனக்கு தெரியாதா என்பது போல் தான் அசிங்கபட நேரிடும்.

அதோடு இல்லாமல் சம்பந்தபட்டவர் ஏதாவது கெட்டது நினைத்தவர்களின் மீது தாக்குதல் நடத்தினால் சமாளிக்க முடியுமா?  ஏனென்றால் கெட்ட விஷயத்தில் (சதி, சூழ்ச்சி, துரோகம், ஐந்தாம் படை வேலைகள்) தலையிட்டால் கெட்டதே அதிகமாக நடக்கும் நல்லதைவிட. 

இவ்வாறு சுயமாக சம்பாதித்து உள்ளார் என்றால் அவருக்கு எவ்வளவு Power, செல்வாக்கு இருக்கும். 

நாமோ Dummy Piece அதனால் தான் நம்மால் சம்பாதிக்க முடியவில்லை.  அப்படி இருக்க அவருக்கு திறமை இருப்பதால் தான் அவரால் முடிந்துள்ளது.  அப்படி இருக்க இந்த சூழ்ச்சி காமெடியை கண்டுபிடிக்க ரொம்ப நேரம் ஆகாது.  இது கூட தெரியாமல் இந்த காமெடியை அரங்கேற்றி உள்ளனர்.  உங்களுக்கு எதாவது நடந்தால்  என்ன செய்ய முடியும்?.

இதில் எதுவும் விளக்கமோ, அறிவுரைகளோ கூறபடபோவதில்லை.  அதை உங்களிடமே விட்டுவிடுகிறேன்.

காப்பாற்றுகிறேன், தடுக்கிறேன் என்று கூறியவர்களின் கவனத்திற்கு நீங்கள் கூறியது சரி என்றால் இது அவர்களுக்கு சரி.  இப்படி ஏற்கனவே பல அமைப்புகள் கிளம்பி உள்ளது.

அ) பசுவை யார் கொன்றாலும் தவறு என்று சொல்லும் பசுவை காப்பாற்ற கூடிய அமைப்பு.

ஆ) விலங்குகளை கொடுமை செய்கிறார்கள் அதனை காப்பாற்றுகிறோம் என்று கூறும் பீட்டா அமைப்பு.  இது தான் ஜல்லிகட்டு முதல் பலவற்றிற்கு இந்தியா முழுவதும் தடை வாங்கியது.

இ) சில வட மாநிலங்களில் அசல் படத்தில் வருவதை போல ஆண், பெண் ஜோடியாக சென்றால் தாளி கட்டுவது, செந்தூரம் வைக்க வேண்டும் என்று கூற கூடிய அமைப்பு.  இது பெண்களை காப்பாற்றுவதற்காம்.

இது அனைத்துமே தனி மனித உரிமையில் தலையிடுவது.  அதோடு அடுத்தவனுடைய பொருளில் நாம் தலையிடுவது. 

இது அனைத்தும் காப்பாற்றுகிறோம் அதனால் தடுக்கிறோம் என்றே கூறி அரங்கேற்றி உள்ளனர்.

அப்படி என்றால் மேலும் பல அமைப்புகள் கீழ்கண்டவாறு கிளம்பி காப்பாற்றுகிறோம் என்று கூறினால் ஏற்று கொள்ள தயாரா? மேற்கண்டவற்றையும் ஏற்க தயாரா?  அனைத்து மாநிலங்களிலும் இதன் அமைப்புகளை நிறுவ தயாரா?

A) வடமாநிலத்தில் உள்ளதை போலவே ஈகாட்டு தாங்கலிலும், மகாபலிபுரம், கடற்கரை, Beech, Park -களிலும் எந்த ஆண், பெண்ணாவது ஒன்றாக இருந்தால் குங்குமமோ, தாளி கட்ட சொல்லிவிடலாமா? கேட்டால் பண்பாட்டை காப்பாற்றுகிறோம்.

 

B)தடுக்கிறேன் என்று கூறியவர்களை தடுக்கும் அமைப்பு. தனி மனித உரிமையை காப்பாற்றுவதற்கு தான்.

 

C)Puf-கள் கலாச்சார சீரழிவு என்று கூறி அதனை தடுக்கும் மற்றும் மூடும் அமைப்பு.

 

D)ஆண்கள் கைலியே கட்ட கூடாது.  அனைவரும் வேட்டி தான் கட்ட வேண்டும் என்ற அமைப்பு. கைலி கட்டினால் உருவி வேட்டி கட்ட சொல்வது.  கலாச்சாரத்தை பாது காப்பதற்கு.

 

E) எங்கும் கோவில் திருவிழாக்கள் நடக்க கூடாது.  அது வெறும் கல் என்று கூறும் நாத்தீக அமைப்பு.  கேட்டால் பக்தி என்ற பெயரில் ஏமாறுபவர்களை காப்பாற்றுவதற்கு.

 

F) T- Shirt, Jeans , Love Marriage செய்ய கூடாது என்கிற ஜாதிய அமைப்பு.  கேட்டால் எங்கள் ஜாதி ஆண், பெண்களை காப்பாற்றுகிறோம்.

 

G)யாரும் குடிக்க கூடாது.  டாஸ்மார்கில் பார்த்தாலே அடி, உதை தான்.  கேட்டால் ஆண்களை கெட்ட பழக்கவழக்கத்தில் இருந்து காப்பாற்றுகிறோம்.

 உன்னைபோல் ஒருவன் படத்தில் வருவதை போல் சொல்வதற்கு காரணமா இல்லை.

இப்படியான பட்டியல் நீண்டால் மக்கள் எப்படி வாழ்வது?  தனி மனித உரிமைக்கு தான் சுதந்திரமே வாங்கியது. இது சரியா தவறா என்பதை யார் முடிவு செய்ய வேண்டும்?  யார் வேண்டுமானாலும் முடிவு செய்யலாமா?

 அரசு எதற்கு இருக்கிறது?  சட்டம் எதற்காக இருக்கிறது என்றே தெரியவில்லை.

அரசே ஆதார் என்ற பெயரில் தனி மனித உரிமையில் தலையிட்டது.  கேட்டால் பாதுகாப்புக்காக என்று கூறியது. அதற்கே அரசிற்கே நீதிமன்றம் கொட்டு வைத்தது.

 

அவரவர் சுயநலத்திற்கும், பெரிய ஆள் ஆவதற்கும் எதை வேண்டுமானாலும் செய்ய, சொல்ல கூடிய "சூழ்ச்சி மிகுந்த உலகமடா" பார்த்து கவனமாக இல்லை என்றால் இந்த மாதிரியான வலையில் சிக்கினால் நாம் கஷ்டபட்டு உழைத்து சம்பாதித்தது எதுவாக இருந்தாலும் நாம் இழக்க நேரிடும் என்பதை விளக்கவே இக்கட்டுரை. இவர்களே இப்படி என்றால் மற்றவர்களை என்ன சொல்வது? 

 குறிப்பு:-

1) 2, 3  வேறு ஒருவருடன் தொடர்பு, திருமணம் என்று இருந்தாலே நம்மை தவறான கண்ணோட்டத்தில் தான் சம்பந்தபட்டவர் முதல் சிலர் பார்ப்பார்கள்.  ஒரு வேலை பல பேருடன் தரங்கெட்டு திரிந்தால் அவர்கள் நம்மை தவறாக நினைத்தது தவறில்லை என்பது போல் ஆகி விடும்.  நாம் அவ்வாறு இல்லாமல் ஒழுக்கத்துடன் கண்ணகி போல் வாழ்ந்து அவ்வாறு நினைப்பவர்களுக்கு வாழும் வாழ்க்கையே பதிலாக கொடுத்தால் தான் தவறாக நினைப்பவர்கள் குறைவார்கள். எல்லாரையும் இவ்வாறாக நினைத்தது தவறு என்று திருந்துவார்கள்.

2)இரவில் தூக்கம் எனும் போதையில் திளைத்துவிட்டு காலையில் அந்த மயக்கத்தோடு இயற்க்கையில்  திளைத்து கொண்டு இருந்த போது கேள்விபட்டது:-

தகரடப்பா டுபாகூர் அப்பா  கூறியிருக்கிறார்.  மகன் என்று பொய்யாக சொல்லி கொண்டு அவரிடம் பழகும் அனைவருக்கும் சொம்படித்து, குளிப்பாட்டி உள்ளார்.  ஏனென்றால் அப்போது தானே அவர்கள் இந்த டுபாகரை பற்றி எதுவும் குறையோ அல்லது வேறு ஏதாவது தாய்மாமன் படத்தில் சாப்பிடும் போது கூறும் மணிவண்ணன் சத்யராஜிடம் கூறும் கவுண்டமணி காமெடி போல எதுவும் சொல்லமாட்டார்கள்.  ஒரு வேலை யாராவது ஏதாவது சொல்லி நம்மை வெளியேற்றிவிட்டால் நாம் வேறு எங்கு அண்டிபிழைப்பது என்று எண்ணி இவ்வாறு நடந்து உள்ளான்.  அடிமையாக ஏதாவது ஒரு சூழ்நிலையில் நாம் இருக்க வேண்டிய சூழ்நிலை இருக்கலாம்.  அது விதி (விசேஷ நாட்களிலும் வேலைக்கு செல்வது , நம் உயர் அதிகாரிகள் சொல்வதை சரியோ, தவறோ கேட்பது ). ஆனால் இவனோ எல்லா இடத்திலும் அடிமை போல இருந்து உள்ளான். இவனெல்லாம்  அடிமை தனத்தை பற்றி பேசுவான். மொத்தமான அடிமையே இவன் தான்.   அனைவருக்கும் புகழ்  அர்ச்சனை செய்து கும்பாபிஷேகமே செய்து உள்ளான். கேவலம் பிச்சை காரனை கூட விட்டுவைக்கலையா என்பது போல் கீரை காரி முதல் வேலை காரி வரை பெருமையாக சொல்லி கொண்டு திரிகிறான் அவர்கள் அப்படி இவர்கள் இப்படி என்று .  ஏனென்றால் அவரிடம் ஏதாவது நம்மை பற்றி கூறி பிரித்துவிட்டால் நம் நிலமை கவலைக்கிடமாகிவிடும் என்பதால். ஏதாவது அவர் டுபாகரை தப்பாக கூறினாலும் சொம்படித்து வைத்திருந்தால் அவர்கள் எதுவும் நம்மை தவறாக கூறமாட்டார்கள்  என்பது அவனுடைய நினைப்பு . கௌரவத்தை பற்றி அதிகமாக பேசுவான் ஆனால் கௌரவம் என்றால் என்ன? என்பது போன்ற அத்தனை  கேவலங்களையும் அண்டி பிழைப்பதற்காக மற்றவர்களுக்கு செய்துள்ளான். ஆனால் கவரிமான் பரம்பரை போல பேசுவான். இவன் கவரிமான் அல்ல கவரிங் மான். தெரு தெருவாக பிச்சை எடுப்பது போல எந்த ஊருக்கு போனாலும், எங்கு சென்றாலும் சம்பந்தபட்டவர்களுக்கு அர்ச்சனை செய்து உள்ளான்.  அவரை அனைவருக்கும் தெரியும் என்பதால் யாராவது எதையாவது சொல்லிவிட்டால் நாம் என்ன செய்வது என்பதால் phone-ல் இருந்து அத்தனையும் நோட்டம்விட்டு கொண்டிருக்கிறான்.  யாராவது எதாவது சொல்லிவிட போகிறார்கள் என்று.  கும்பாபிஷேகத்தின் உச்சம் தான் Vibration.

இது அனைத்தும் யாரையும் குறிப்பிட அல்ல.  உண்மையா, பொய்யா என தெரியவில்லை.  உஷாரையா உஷாரு.

வினாயகர் சதுர்த்தியன்று சமுதாயத்தின் மீதானா போதையேறி போச்சு. கட்டுரை எழுதியாச்சு. கஷ்டபட்டு சம்பாதித்த பணத்தை தக்க முறையில் காப்பாற்றி கொண்டு விழிப்படையவே இக்கட்டுர.

https://justicemayel.blogspot.com/2020/11/justicemayelblogspotcom.html