உண்மையில் நீங்கள் பிராமணர்களா? [TRUTH OF BRAMMANA]

  




































ஐயா கன்னியமானவர்களே! சாந்தமானவர்களே!  மேன்மை பொருந்தியவர்களே! கிரக பிரவேசம் முதல் தாலி கட்டும் கல்யாண சுபகாரிய  நிகழ்ச்சிகள் வரை நல்ல மணி துளிகளை பார்த்து சுப முகூர்த்த தேதியை நல்லபடியாய் குறித்து கொடுப்பவர்களே! ஜாதகத்தை ஒன்பது கிரகம் கொண்டு, நட்சத்திரம், ராசி, லக்னம் கொண்டு சர்ப்ப தோஷம் முதல் ஏழரை சனி நிவர்த்தி, குரு பலன் வரை கணித்து கூறுபவர்களே!    மாண்பு மிக்க குமாரர்களே பருத்தியியில் இடது  பக்கம் மடிசார் புடவை கட்டும் குமரிகளே !  உண்மையில் நீங்கள் Original பிராமணர்களா? அய்யங்கார்களா? ["ARE YOU ORIGINAL  REAL BRAMMANA?" Some Proof Is Here] -புரட்சி கவிஞர் Valavanur வை.ரா.SivaSaravanaLingam Chettiyar B.A.,B.E.,D.M.E.,

ஐயா கன்னியமானவர்களே! சாந்தமானவர்களே!  மேன்மை பொருந்தியவர்களே! கிரக பிரவேசம் முதல் தாலி கட்டும் கல்யாண  சுபகாரிய  நிகழ்ச்சிகள் வரை நல்ல மணி துளிகளை பார்த்து  சுப முகூர்த்த தேதியை நல்லபடியாய் குறித்து கொடுப்பவர்களே! ஜாதகத்தை ஒன்பது கிரகம் கொண்டு, நட்சத்திரம், ராசி , லக்னம் கொண்டு சர்ப்ப தோஷம் முதல் ஏழரை சனி நிவர்த்தி, குரு பலன் வரை கணித்து கூறுபவர்களே!    மாண்பு மிக்க குமாரர்களே பருத்தியியில்  மடிசார் புடவை கட்டும் குமரிகளே ! இதில் கூறபோகும் எதுவும் எந்த ஒரு ஜாதியையும், அவர்கள் சமூகத்தையும் புண்படுத்துவதற்காக அல்ல.  இது கூறபடுவதே அவர்களுக்காக தான். இதை முதலில் தெரிந்து தெளிவடைய வேண்டியது அவர்கள் தான்.  இதில் கேள்விகளும், புராண ஆதாரங்கள் மட்டுமே கூறபடும். இதனை படித்து ஆராய்ந்து, தெளிந்து உண்மையினை முதலில் இவர்கள் தான் தெரிந்து கொள்ள வேண்டும். மற்றவர்கள் தெரிந்து கொள்வது என்பது இரண்டாம் பட்சமே.  இது அனைத்தும் உண்மையா, பொய்யா என தெரியவில்லை.

கேள்விகள்:-

1) இந்தியா தான் உங்கள் பூர்வீகம் என்கிறீர்கள்.  ஏதோ ஆனதால்  இந்தியாவின் பல பகுதிகளுக்கு புலம் பெயர்ந்தீர்கள்.  ஏன் ஒற்றுமையாக அனைவரும் ஒன்றாக செல்லாமல் தனி தனியாக ஏன் சென்றீர்கள்?

2) அந்த இடத்தில் வாழ்ந்த போது உங்கள் பிராமண சமுதாயத்தின் மக்கள் தொகை எவ்வளவு? உங்கள் இனம் மட்டும் தான் வாழ்ந்ததா? வேறு இனம் வாழ்ந்திருந்தால் அவர்கள் எங்கே?

 

3) நீங்கள் வாழ்ந்த இடத்தில் எந்த மன்னர் ஆண்டு வந்தார்?  அங்கு நீங்கள் என்னவாக இருந்தீர்கள்?

 

4) அங்கு உங்கள் தாய் மொழி என்ன?  உங்கள் குல தெய்வம் எது?  குல தெய்வம் வழிபடும் பழக்கம் உண்டா?  நீங்கள் வழிபடும் தெய்வம் எது?

 

6) நீங்கள் வரும் போது இங்கே யார் குருக்கள், பூசாரிகள், ஐயர்கள்?

 

5) அப்போது அங்கே எந்தவிதமான தர்மம் பின்பற்றபட்டது?. இங்கே எந்தவிதமான தர்மம் பின்பற்றபட்டது?  ஆகவித தர்மம், வருணாசிரம தர்மம் என்று பல இம்மண்ணில் இருந்துள்ளது. 

 

6) நீங்கள் ஏற்கனவே இந்தியாவில் கடவுள் சம்பந்தபட்ட தொழிலில் இருந்திருந்தால் ஏன் எந்த கடவுள் சம்பந்தபட்ட நூல்களும் நீங்கள் எழுதவில்லை?

 

7) நீங்கள் இந்த தொழிலிலே இல்லை என்றும் ஆடு மேய்த்து கொண்டிருந்த நீங்கள் இதில் அதிகமாக பணம் கொழிக்கிறது என்று தெரிந்து இதனை கற்று, கோயில்களை கைபற்றி பின் பல நூல்களில்  பிராமணர்கள் பற்றியும், பல சடங்கு, சம்பிரதாயங்களை இடை சொறுகல் செய்து உள்ளனர் என்று கூறுவது உண்மையா? 

 

8) ஏனென்றால் பிராமணர்கள் இல்லாத போது வைசீயர்கள், சத்ரியர்கள், சூத்திரர்கள் தான் இருந்துள்ளனர். தீண்டாமை முதல் அனைத்தும் இருந்துள்ளன.  ஆனால் வைசிய குலத்தை சார்ந்த வாணிய செட்டியார்கள் மற்றும் இதை சார்ந்தவர்கள் தான் அனைத்து இடத்திலும் இருந்துள்ளனர். சரியாக சொல்ல வேண்டுமென்றால் வாணிய செட்டியார்கள் தான் கோயில் முதல் அனைத்து இடங்களிலும் இருந்துள்ளனர்.   நீங்கள் எங்கிருந்தோ வந்துவிட்டு நான்கு பிரிவுகள் என்றும் தலையில் பிறந்தது நாங்கள் தான் என்றும் கூறுகிறீர்கள்.  எங்கள் நூல்களில் இது போல் எதுவும் இல்லை. மனு தர்மத்தில் எழுதபட்டதை நீங்கள் பின்பற்றிவிட்டுஅதில் பிராமணர்களை உயர்வாக கூற இடை சொறுகல்கள் பல செய்யபட்டிருக்கலாம் என்ற சந்தேகம் வருவது சரியா, தவறா?

 

9) இது போல் நீங்கள் உள்ள இடத்தில் நாங்கள் வந்து கூறினால் ஏற்று கொள்வீர்களா?

 

10) நீங்கள் அசைவம் சாப்பிடுவதில்லை என்று கூறுகிறீர்கள்.  ஆனால் மாட்டு கறி சாப்பிட்டுள்ளீர்கள்குடி பானம், உயிர் பலி என்று வரலாற்று ஆதாரங்கள் உள்ளது.  புத்த மதம் இங்கு பரலாக மாறி கொண்டிருந்ததால்நாம் ஏதாவது மாற்றி மக்களை பௌத்த மதம் மாறாமல் தடுக்க அசைவம் சாப்பிட கூடாது என்று கூறியுள்ளீர்கள்.

 

11) வேசிகளிடமும், பல பெண்களுடனும் உறவு கொள்வதில்லை என்று கூறுகிறீர்கள்.  ஆனால் இராமாயணத்தில் நீங்கள் வேசிகளுடன் இருந்ததும், அவர்களின் உடையை நீங்களும், உங்களின் வேட்டியை அவர்கள் அணிந்து கொண்டும் இருந்து உள்ளீர்கள்.  இது அனைத்தும் எத்தனை பேருக்கு தெரியும்?

 

12) ஆவணி அவிட்டத்தில் பூனூல் போடும் திருவிழா என்று இன்றும் வைசிய குல வாணிய செட்டியார் மண்டபத்தில் நடை பெறுகிறது. அதில் பூனூல் போடும் போது காயத்ரி மந்திரம் சொல்லபடும்.  எந்த காயத்ரி மந்திரம் கூறபடுகிறது என்று தெரியுமா?  அவர்களின் காயத்ரி மந்திரம் சொல்லபடுகிறது.  வைசிய குலத்திற்கு என்று தனியாக காயத்ரி மந்திரம் உள்ளது.  இது எத்தனை பேருக்கு தெரியும்?   இந்த மந்திரம் வைசிய குலத்தை சார்ந்த அனைவருக்கும் தான்.  வைசிய குலத்தில் இப்போது வாணிய செட்டியார் மட்டும் இருப்பதால் வைசிய குலம் என்று அவர்கள் மட்டும் போட்டு கொள்கிறார்கள். ஏனென்றால் மற்றவர்கள் வைசிய குலத்தில் இருந்தும், வாணிய செட்டியாரில் இருந்தும் பிரிந்துள்ளனர்.  அதனால் இந்த காயத்ரி மந்திரம் வாணிய செட்டியார்களுக்கு மட்டும் என்பது போல் ஆகிவிட்டது.  இது வைசிய குலத்திற்கானது.  இவ்வாறு பல வரலாற்று பதிவுகள் பிராமணர்களால் மறைக்கபட்டு, திரிக்கபட்டு , அது அனைத்தும் அழிக்கபட்டுவிட்டது.  அதனை மன்னர்கள் கொண்டும் செய்து உள்ளனர்.

காயத்ரி மந்திரம்:-

மாத்யான சந்தியா சூ

திருமூர்த்தி யாம் நாய

மாதுகே சதுர்விம் சதுவர்ண ரூபி

காயத்ரி பாஸ்வதே நமஹ.

இந்த மந்திரத்தை உங்களிடம் கூறி உள்ளனரா?  ஏன் தெரியுமா எல்லாம் அழிக்கபட்டு, அவர்கள் இடை சொறுகல் பல இருக்கும் சாத்திர, சம்பிரதாயங்களை பின்பற்றினால் தான் அவர்கள் சம்பாதிக்க முடியும் அதனால் தான்.  இது உண்மையா என தெரியவில்லை. 

 

13) நம்மில் ஓதுவார் என்றும், வட மாநிலங்களில் காசி போன்ற இடத்தில் அகோரிகள், நிர்வாண சாமியார்கள் மற்றும் பைரவர்கள் என்று பல பிரிவுகளில் கடவுளை வழிபடுகின்றனர். "நான் கடவுள்படத்தில் கடவுளின் அருகில் தீபம் புனிதமானது கஞ்சா பற்ற வைக்க கூடாது என்று  கூறுவார்கள். இவ்வாறு பல பிரிவுகளில் கடவுளை வழிபடுகின்றனர்.  இவர்கள் வந்து அனைத்துவிதமான மேற்கண்ட பிரிவுகளில் கடவுளை அடையும் முறையை பல்வேறு ரூபங்களில் அழித்து, சிதைத்து அங்கும் இங்குமாக கொஞ்சம் கொஞ்சம் என்று பல மாநிலங்களில் இருக்க காரணம் என்னை போன்ற மற்றும் பிற நல்லவர்களால் தான்.  இவர்கள்  இல்லையெனில்  நம்முடைய அடையாளம் முற்றிலுமாக அழிக்கபட்டுவிடும்.  அகதிகளாக வந்து சம்பாதிப்பதற்காக பலவற்றை உருவாக்கிய முறைகள் அனைத்திலும் சுழன்று கொண்டுபூர்வ குடி மக்கள் அகதிகள் போல காட்சியளிக்க வேண்டியது தான்.

 

14) சித்தர்களிலும் அய்யங்கார்கள்  இல்லை. ஜீவசமாதி அடைந்தவர்களிலும் பிராமணர்கள் இல்லை. நாயன்மார்களிலும் பிராமணன் இல்லை. மொத்தத்தில் எதிலும் இவர்கள் இல்லை. தெய்வங்களும் உங்கள் பிராமணர்களில் இல்லை. எல்லாவற்றிலும் பொய் கூறுகிறார்கள் மற்றும்  எல்லா தவறையும் செய்துவிட்டு மறைக்கிறார்கள்.

வைசீய குலத்தை சார்ந்தவர்கள் முதல் அனைத்து கடவுளை அடையும் பிரிவுகளில் இவ்வளவு பொய்களும், ஏமாற்று வேலைகளும் இருக்குமா என்றால் இருக்காது என்றே தோன்றுகிறது.  ஏனென்றால் பல நூல்கள், சித்தாந்தங்கள், புராணங்களில் ஆசிரியரோ, பாடல்களோ கிடைக்கவில்லை என்றால் அப்படியே கூறி உள்ளனர்.  அவர்கள் நினைத்திருந்தால் அவர்களுடைய புலமைக்கு பல பொய்களையும், சம்பிரதாயங்களையும் இடையில் சொருகி இருக்கலாம்.  காலபோக்கில் மறைத்திருக்கலாம்.  ஆனால் அப்படி செய்யவில்லை.  வளையாபதி முதல் பல நூல்களின்  ஆசிரியர்கள் , பாடல்கள் தெரியவில்லை என்று தான் கூறி இருக்கிறார்கள். பெரிய புராணத்திலும் அவர்களுடைய ஜாதி எது என்று குறிப்பிடவில்லை. அந்த காலத்தில் அனைவரும் வைசிய குலத்தில், வாணிய செட்டியாரில் தான் இருந்து உள்ளனர். அதனால் கூட போடாமல் இருக்கலாம். எப்படி இருந்தாலும்  அவர் குறிப்பிடவில்லை என்பதால் அப்படியே எழுதினார்களே தவிர எந்த ஜாதியையும் குறிப்பிட்டு எழுதவில்லை.  இது அனைத்தும் வரலாற்று உண்மைகள்.

 

15) மனுதர்மத்தை எழுதிய மனு எந்த தெய்வத்தை வழிபட்டார்? 

 

16) மீன் சாப்பிடும் பிராமணர்களும் உங்களில் இருக்கின்றனரே எப்படி?

 

17) நாமம் போடுவதில் வடகளை, தென்களை என்று எப்போது உருவானது?  ஆதியிலிருந்தே இருந்ததா? 

 

18) உங்கள் இனத்திலியே பெரிய தீண்டாமை உள்ளது.  பிராமணத்தில் பல பிரிவுகள் உள்ளது.  அந்த பிரிவு உள்ளவர்கள் பிராமண சமூகத்திலேயே வேறு பிரிவுகளில் திருமணம் செய்ய கூடாது . எப்படி அவர்கள் தீண்ட தகாதவர்களாக ஆனார்கள்?  அதிலும் உயர் பிரிவு, தாழ் பிரிவு என்று கூறபடுவது உண்மையா?

 

19) நீங்கள் இந்தியாவில் அனைத்து இடங்களிலும் கோயில்களை கைபற்றியதும் மற்ற நூல்களை அடுத்த தலைமுறைக்கு அப்போது இருந்த நூல்கள் தெரியாமல் இருக்க அந்த நூல்களை மன்னர்கள் மூலமாகவும், நீங்களும் அழித்துள்ளீர்கள் என்று கூறுவது உண்மையா?

 

20) இங்கு மீந்து இருக்கும் பல  புத்தகங்கள் நல்லவர்களால் காப்பாற்றபட்டதால் தான் இருக்கிறது.

 

21) வால்மீகி முதல் வியாசர் வரை எவரும் பிராமணர் இல்லை.  வால்மீகி சமஸ்கிருதத்தில் தான் எழுதி உள்ளார்.  ஏனென்றால் அவர் தாய் மொழி அது தான்.  உங்கள் தாய் மொழியில் உங்களால் எத்தனை நூல்கள் எழுத பெற்றுள்ளது? 

 

 

22) நீங்கள் பின்பற்றும் மனு தர்மமும் பிராமணன் எழுதியது அல்ல.  ஏன் இப்படி இருக்கிறது?

 

23) இது போல பாரம்பர்யம்  வைசிய குலத்தில் இல்லை. ஆன்மீகம் என எடுத்து கொண்டால் பெரிய புராணம், சைவ சித்தாந்தம், வைசிய புராணம், நாடி ஜோதிடம் என்று அதிகமாகவே இருந்துள்ளது.  தொல்காப்பியம் முதல் நாயன்மார்கள் வரை அனைத்தும் என்றே கூறலாம் அந்த அளவிற்கு வைசிய குலத்தை சார்ந்த வாணிய செட்டியார்களும்பிறகு அதில் இருந்து பிரிந்து வேறு தொழில் செய்யும் நபர்களே புலமையில் பெயர் பெற்று விளங்கி உள்ளனர்.

 

24)வைசிய குல வாணிய செட்டியார்களின் பெண்கள் தெய்வங்களாகவும், நாயன்மார்களாகவும் உள்ளனர்.  அங்காளம்மன், திரௌபதி அம்மன் கோவில்களில் இன்றும் பூசாரிகள் என்று கூறபடுபவர்கள் எங்கள் குலத்தில் இருந்தும், வாணிய செட்டியார் பிரிவில் இருந்தும் வெளியேறிய கவுண்டர் இன பூசாரிகள் தான் உள்ளனர்.

 

25) வைசிய புராணம் இங்கு எத்தனை பேருக்கு தெரியும்?

 

26) இது வைசிய குலத்தை சார்ந்தவர்களுக்கானது.  அதாவது பிராமணர்கள் வருவதற்கு முன்னர் பின்பற்றிய புராணம் வைசிய புராணம்.

 27) இந்தியாவில் பல பகுதிகளுக்கு அகதிகளாக வரும் போது விதவையான பெண்கள் முதல் குழந்தைகள்பெரியவர்கள்தங்கைகள், சொந்த காரர்கள் வரை  வந்திருப்பார்கள்.  அப்படி இந்தியாவின் பல பகுதிகளுக்கு செல்லும் போது அதில் எத்தனை ஆண்கள், பெண்கள் இருந்தார்கள்?

 

28) இப்போது இந்தியாவில் ஒவ்வொரு இடத்திலும் எத்தனை சதவீதம் பிராமணர்கள் உள்ளனர். 

 

29) இவ்வளவு சதவீதம் எப்படி வந்தது? குறைவான சதவீதம் தான் என்று கூறினாலும் அதுவே அதிகம் தான்அதுவே எப்படி வந்தது?

 

30) இங்கு இருக்கும் பூர்வ குடி மக்கள் அந்த காலத்தில்  வைசிய குலத்தில் வாணிய செட்டியார்களாக இருந்தவர்களுக்கே அந்த ஜாதியில் பெண் கிடைக்காமல் வாணிய செட்டியாரில்  இருந்து பிரிந்து சென்ற பிரிவில் கல்யாணம் செய்துள்ளார்கள். ஏன் பெண் கிடைக்கவில்லை என்று தெரியவில்லை. அதனால் அவர்களை வைசிய குலத்தில் இருந்து நீக்கிவிட்டனர்.  அவர்களுக்கு வேறு ஒரு பெயரில் தான் உள்ளனர். 

 

31)  பூர்வ குடிமக்களுக்கே நிலமை இப்படி இருக்கிறது.  அப்படி என்றால் பிராமணர்களுக்கு குறைந்த சதவீதம் என்று கூறினாலும்.  உண்மை அது அதிக சதவீதமே.  ஆர்யவைசீயர்கள் யார்?  வைசீயர்கள் இருந்து பிரிந்தவர்களை வைசீயர்கள் என்று குறிப்பிடுவதில்லை.  அவர்கள் வேறு பெயர்களில் இருப்பார்கள்.  எ.கா:- நகரத்தார் என்கிற நாட்டு கொட்டை செட்டியார்.  வாணிய செட்டியார்கள் மட்டுமே வைசீய குல வாணிய செட்டியார் என்று கூறபடுகிறார்கள் அது உண்மையா?

 

32) ஆரியர்களாக இங்கு வந்த போது இருந்த பிராமண பிரிவு என்ன?

 

33) எத்தனை பிரிவுகளுடன் பிராமணர்களாகிய நீங்கள் வந்தீர்கள்?

 

34) அந்த பிரிவுகள் இன்று இருக்கிறதா?  பெயர் என்ன?

 

35) இன்று இருக்கும் பிராமண பிரிவுகள் அன்றும் இருந்ததா?

 

36) ஒவ்வொரு பிராமண பிரிவுகளின் வயது என்ன?

 

37) வைசீய குலத்தில் வாணிய செட்டியாரில் தெளிவாக உள்ளது.  எந்த பொய்யும் குறிப்பிட்டது போல் தெரியவில்லை.  இங்கு உள்ள ஜாதி பிரிவுகள் எதற்காக உருவாக்கபட்டது?  ஏன் பிரிந்தார்கள் என்று தெளிவாக இருக்கிறது?

 

38)  ஏனென்றால் எங்களிடம் வைசீய குல வாணிய செட்டியார் என்கிற பூர்வ குடி மக்கள் இருக்கிறார்கள்அவர்கள் பிரிந்த வருடங்கள் எல்லாம் நூறு, 200 வருடங்களுக்கு முன்பே.

இது போல் உங்களிடம் இல்லை உங்கள் பிராமண பெண்கள் சூத்திர ஆண்களுடன் உறவு கொண்டுள்ளனர். அவர்களை நீங்கள் ஒதுக்கி வைத்துள்ளனர்.  அவர்களை நீங்கள் "சண்டாளர்கள்" என்று கூறி உள்ளீர்கள்.  அவர்களை ஒதுக்கிவிட்டதால் கால போக்கில் அவர்கள் சூத்திர பெண்களாகவே மாறிவிட்டனர்.  இப்படி எல்லாம் நடந்திருப்பதால் அகதிகளாகிய உங்களிடம் பெண்கள் அதிகமாக இருக்க வாய்ப்பே இல்லை. ஏற்கனவே உங்களில் ஆண், பெண் விகிதம் சரியாக இருக்க வாய்ப்பில்லை.  ஏனென்றால் நீங்கள் தஞ்சம் தேடி வந்தவர்கள்.  அதில் பல அண்ணன், தங்கை உறவாக இருக்க வாய்ப்பிருக்கிறது.  பலர் கணவனை இழந்தும், மனைவியை இழந்தும், குழந்தையை இழந்தும் இருப்பார்கள்.

 நிச்சயமாக வைசிய குலத்தில் வாணிய செட்டியாரின் பெண்களை மணந்திருக்க வாய்ப்பு இருக்கிறது. வாணிய சமுதாயத்தில் பெண்களுக்கு பஞ்சம் ஏற்பட்டிருக்கிறது.  இதற்கு வரலாற்று ஆதாரங்கள் இல்லை என்றாலும் பிராமண வரலாற்றையும், வைசிய குல வாணிய செட்டியாரின் வரலாற்றை படிக்கும் போது புரிந்து கொள்ள முடிகிறது.   இது எல்லாம் பல நூறு ஆண்டுகளுக்கு முன்னால் மிக அதிகமாக நடந்துள்ளது. வாணிய குலத்திலியே பஞ்சம் ஏற்பட்டிருக்கிறது என்றால் பார்த்து கொள்ளுங்கள்.  அதனால் நிச்சயமாக உங்கள் பிராமண இனம் பிராமண பெண்களையே மணந்துஅதில் குழந்தைகள் பெற்று வளர்ந்த சமூகமாக இருக்க வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது. நீங்கள்  உண்மையிலேயே  பிராமணர்களுக்கு மட்டும் பிறந்து வளர்ந்த சமூகம் இல்லை என்றே தோன்றுகிறது. வாணிய செட்டியாருக்கும் பிராமணணுக்கும் பிறந்த பிள்ளைகளே இன்று பிராமண சமூகமாக உள்ளது.  இதனை ஆராய்வதும் கடினம்.  ஏனென்றால் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு செல்ல வேண்டும்.  இது எல்லாம் உண்மையா என்று தெரியவில்லை. உங்களை பற்றி மற்ற இனத்தவரை விட நீங்கள் தான் தெரிந்து வைத்திருக்க வேண்டும். உங்கள் வரலாற்றையும், வைசிய குல வாணிய செட்டியார் வரலாற்றையும் படித்தாலே புரிந்து கொள்ள முடியும்.  இதில் எந்த தர்க்கமும் செய்ய போவதில்லைவாதிட போவதும் இல்லை. 

இந்த கட்டுரையின் நோக்கம் பிராமண சமுதாய மக்கள் உண்மையை தெரிந்து கொள்ளவும்,  நம்முடைய மூதாதையர்களின் நூல்களும், புராணங்களும்நாடி ஜோதிடங்களையும், சைவ சித்தாந்தங்களையும், வைசிய புராணத்தையும்அகோரிகளையும் மற்றும் காசியில் உள்ள அந்த பூர்வ குடி மக்களின் கடவுளை அடையும் வழிகளை  காப்பதற்கே. 

 

நூலகங்களை காப்போம்.

நம்முடைய அத்தனையையும் அடுத்த தலைமுறைக்கு நூல்கள் மூலமாக கொடுப்போம்.

நூல்கள் நம்முடைய அடையாளங்கள்.

மக்கள் தலை நிமிர்வோம்.

 

இப்படியே இருந்தால் பூர்வ குடிமக்கள் அகதிகள் போல நம்முடைய அடையாளத்தை இழந்துவிடுவோம்.

 

கடவுள் அடையும் வழியில் நம்முடைய அடையாளங்கள்;-

1) ஜீவசமாதி அடையும் வழி.

2) வைசீய புராணம்.

3) சைவ சித்தாந்தம்.

4)அஷ்ட யோகா.

5) சித்தர்களாக ஆவதற்கான வழிகள்.

6) ஓதுவார்கள்.

7) அருட் பெரும் ஜோதி வள்ளலார்.

ஜோசியம்:-

நாடி ஜோதிடம்:-  இன்று உண்மையாக நாடி ஜோதிடம் பார்ப்பவர்கள் குறைவு என்று கூறபடுகிறது.  இதற்கு யார் காரணம்?

குறிப்பு:-

எப்போதுமே பல ஆண்டுகளாக எது இருந்தாலும் புளித்துவிடும்.  அதுபோலவே இந்தியாவில் அந்த மாநிலங்களில் இருந்த புராணங்களும், சடங்கு முறைகளும்சித்தாந்தங்களும் புளித்துவிட்டது.  அப்போது பிராமணர்கள் கூறிய அனைத்து முறைகளும் அப்போது புதிதாக இருந்ததால் அப்போது ஏற்று கொள்ளபட்டது.  பின்பு பலவருடங்கள் கழித்து பிராமண முறை புளித்து விட்டது.  அதனால் புத்த மதம் அதிக இடத்தில் பரவியது.  அந்த மதம் பரவாமல் தடுக்க பிராமணர்கள் கறி சாப்பிடாமல் சைவமாக மாறி சைவ உணவே சிறந்தது என்று கூறியும், குடிக்க கூடாது என்று கூறி பல வழிகளில் அந்த மதம் பரவாமல் தடுத்தும் உள்ளனர்.  

E.g:-1)அப்பர் என்பவர் என்று நினைக்கிறேன். அவர் புத்த மதத்தில் இருந்து சைவ மதத்திற்கு வந்து சிவனை வழிபட்டு நாயன்மார்களில் ஒருவரானார்.

2) தசாவதரம் படத்தில் சைவம், வைணவத்திற்கான காட்சிகள் இருக்கும்.  அந்த படமே வரவில்லை என்றால் அதுவே நமக்கு தெரிந்திருக்காது.  இது போல் பலவற்றை மறைத்துள்ளனர்திரித்துள்ளனர்அழித்துள்ளனர்.  அனைத்தையும் மீட்டெடுப்போம். 

 

பிராமண சமுதாயம் போல் வைசிய குலம் பிராமண சமுதாயத்தை தடுக்கவில்லை.  அதனால் பிராமண சமுதாயம் உருவாக்கிய சம்பிரதாயங்கள், சடங்கு முறைகள், இடை சொறுகல்கள் மக்களிடையே பரவியது.  இப்போது பல சாமியார்களிடம்  மக்கள் கூட்டம் இருப்பதற்கு காரணமும் பிராமண முறைகள் புளித்துவிட்டது என்பதால் தான். இப்போது நமக்கு வெளிநாட்டு வாழ்க்கை முறை, உணவு முறை பிடிப்பதும் இதனால் தான்.  வெளிநாட்டு காரர்களுக்கு நம் நாட்டை பிடிப்பதற்கு காரணமும் இதுவே.

 

 

இன்று இருக்கும் அனைத்து பூஜை முறைகளும், சம்பிரதாயங்களும் 50% வரை அகதிகளாக வந்த பிராமணர்களின் சூழ்நிலைக்கு தகுந்தவாறு மாற்றிய முறையே.  இதுவும் உண்மையா, பொய்யா என தெரியவில்லை. இவ்வாறு கூறுவதன் நோக்கம் இதனை எதிர்ப்பதற்கு அல்ல.  உண்மை மக்களுக்கு தெரிய வேண்டும் என்பதற்காக தான்.

தாலி கட்டும் கல்யாணம் என்றால் தமிழ் முறைபடியும், ஓதுவார்கள் மற்றும் சைவ சிந்தாந்த முறையில்வள்ளலார் முறைபடி திருமணம் நடைபெற்றது என்பது குறிப்பிடதக்கது.  இப்போதும் சில இடங்களில் நடக்கிறது.  

 

பூர்வ குடிமக்களின் அனைத்தையும் காப்போம், பாதுகாப்போம். 

 

இவ்வாறாக அனைத்தையும் அடுத்த தலைமுறைக்கு நூல்கள்  மூலமாக அடுத்த தலைமுறைக்கு கொடுப்போம். இல்லை என்றால் பூர்வ குடிமக்களின் அடையாளம் இருக்காது.  ஜல்லிகட்டு போல தான் இதுவும்.  அதற்கு மெரினாவிற்கும், எங்கள் பண்பாட்டு விளையாட்டை தடை சொல்ல நீங்க யாருடா என்று நடத்தியும் முடித்த நாம்.  இதற்கு எங்கும் செல்ல வேண்டாம்.  நம் மனதிற்குள் இதை விதைத்தாலே போதும்.  தானாக அத்தனையும் பாதுகாக்கபட்டு அறுவடை செய்துவிடலாம்.

 

 

இது அனைத்தும் உண்மையாபொய்யா என தெரியவில்லை.