. "சுந்தர வடிவான சிந்தனை மாலை" [ Excellent Victory Formula]

"ஜொலிக்கும் ஜாம்பாவான்களின் பொங்கி எழும் வம்பு இல்லா பூரணத்துவமுடைய சுந்தர வடிவான சிந்தனை  மாலை" என்கிற "கம்பு" ஆனது அரும்பாடுபட்ட சொக்க தங்கம்.  பேர் அண்டத்தில் ஓர் நிஜமான புதையல் ஆகும்.  இதுவே ஆக்குவதும், அழிப்பதும், தடுப்புகளை கொண்டு கட்டுபடுத்தி பாதுகாப்பதும், அதை தாண்டி ஜெயிப்பது ஆகும். எதையும் சிந்தாமல் சிதறாமல் பெற செய்வது, சூழ்நிலையை அறிந்து கொண்டு செயல்படுவது, காரண காரியங்களை ஆராய்ந்து சோதனைகளை சாதனைகளாக்கி  மலைக்க வைக்க மற்றும் எதிரிகள் மீது சாதுர்யமாக படையெடுப்பு முதல் தாக்குதல் வரை நடத்துவது நம் மனதை கஷ்டத்தில் ஆற்றாமல் சாந்தியுடன் இருக்க செய்வது,  படிப்பினை இல்லாமல் ஆக்குவது, சபை ஏறும் வார்த்தைகளை பேசுவது, எதிலும் மனதானது துவளாமல், உளுத்து போனது போல் ஆக்காமல் ஆறுதலுடன் இருக்க செய்வது  இந்த அங்கீகரிக்கபட்ட "சுந்தர வடிவான சிந்தனை மாலை"தான் இதனை போகிற போக்கில் கூட எடுத்து தொடுக்கலாம் தொடுப்போமா [The Excellent Man Success, Victory Formula]★புரட்சி கவிஞர் Valavanur V.ரா.SivaSaravanaLingam.




வைரா, வீரா, ராச என்று பல பெயர்களுடன் ஒரு பெயராய், ஓர் மனிதராய் என்னுள் கொண்டு உங்களில் ஒருவனாய் ஓர் Messenger ஆக கட்டுரை வாயிலாக All In One ஆக வரார் JMN -ன் ரிதம் F.M 605 108-ல் justicemayel.blogspot.com தளத்தின் வாயிலாக அஸ்திவாரங்களாகிய வாசகர்களே.

சுந்தர வடிவான சிந்தனை மாலை என்பது கீழ்கண்டவைகளை கருத்தில் கொண்டு தொடுத்து வாழ்க்கையில் செயல்பட்டால் அது வெற்றி மாலையாகும்.  இதுவே Success Victory Formula ஆகும். இது தான் நம்மிடையே ஆக்குவது மற்றும் அழிப்பது என்பதை நடத்துவதாகும். இது நம்மை எதிலும் துவளாமல், உளுத்து போனது போல் ஆக்காமல் ஆறுதலுடன் இருக்க செயவது ஆகும்.

கீழ்கண்டவைகள்:-

சூழ்நிலையை அறிந்து கொண்டு செயல்படுவது, காரண காரியங்களை ஆராய்ந்து சோதனைகளை சாதனைகளாக்கி  மலைக்க வைக்க செய்வது மற்றும் சாதுர்யமாக எதிரிகள் மீது படையெடுப்பு முதல் தாக்குதல் வரை நடத்துவது மற்றும் நம் மனதை கஷ்டத்தில் ஆற்றாமல் சாந்தியுடன் இருக்க செய்வது, படிப்பினை இல்லாமல் ஆக்குவது மற்றும் அனைத்திலும் முறையாக கையாண்டு ஜெயிப்பது இந்த "சுந்தர வடிவான சிந்தனை மாலை"ஆகும். தொடுப்போமா.

இதனை நம் வாழ்க்கையில் போகிற போக்கில் கூட தொடுக்கலாம். இது எதையும் சிந்தாமல் சிதறாமல் நம்மை பெற செய்யும்.  இந்த சிந்தனைகளின் மொத்த வடிவம் தான் மிக பெரிய ஜாம்பாவான்கள் என்று கூறபடுபவர்கள். வான் தொடும் புகழை தொடுவதற்கு இந்த சுந்தரமான சிந்தனை மாலையே காரணமாகும்.  அதை அவர்கள் நேர்த்தியாக, சரியாக தொடுத்து கையாள்வதால் தான் அவர்கள் ஜாம்பாவான்களாக இருக்கிறார்கள்.

இதனுடைய தாண்டவம் எதனையும் முறையாக தாண்டும்.  இதனை நாம் சரியாக முறைபடுத்தி நடந்தால் அனைத்திலும் ஜெயம் தான்.

சிந்தனை என்பது நாம் சிந்திக்கும் அனைத்தும் அல்ல. நாம் வாயில் இருந்து பேச்சு மூலமாகவோ அல் நம் செயல் மூலமாக அதிகாரபூர்வமாக வெளியே வருவது மட்டுமே நம்முடைய வடிகட்டிய அங்கீகரிக்கபட்ட சிந்தனை ஆகும்.  இதிலேயே பலர் அந்த நேரத்தில் என்னையே அறியாமல் கோபத்தில் பேசிவிட்டேன் அல் ஞாபகம் இல்லாமல் மறந்து கூறிவிட்டேன் என்பார்கள்.

சிந்தனைகள் என்பது நமக்கு உள்ளே தோன்றுவது எண்ணிக்கையில் மிக அதிகமாக இருக்கும் அல் இருக்கலாம் இது வேறு. வெளியே வெளிபடுத்துவது என்பது வேறு.  உள்ளே தோன்றும் அனைத்தையும் செய்தால் எதுவும் சுந்தர வடிவமாக இருக்காது.  கருமாந்திர வடிவமாக தான் இருக்கும்.  அதனால் தான் நாம் அதனை வடிகட்டுகிறோம்.  வடிகட்டுவதும் நம் சிந்தனை தான்.  வடிகட்டி செயல்பாட்டில் இறங்குகிறோம்.  இதிலேயே பலருக்கு வெற்றி கிடைக்க மறுக்கிறது.

சிந்தனைகள் என்பதற்குள்ளேயே உள்ளுக்குள்ளேயே பல போட்டிகள் நடக்கும்.  அதில் வெற்றி பெற்று வருவதே நம் பேச்சு, செயல் என்பது ஆகும்.  இதை தான் வேட்டையாடு விளையாடு என்கிற  கமல்ஹாசன் படத்தில் கிளைமேக்ஸ் காட்சியில் வில்லன் கூறுவான். 

நம்முடைய குணாதிசியங்கள் என்பது வேறு சிந்தனைகள் என்பது வேறு.  இதனுடனும் உள்ளுக்குள்ளே யுத்தம் நடக்கும்.  இதனையெல்லாம் ஏதோ ஒரு சிந்தனை வென்று தான் பேச்சு, செயலாக வெளி வருகிறது. நம் கூட இருப்பவர்கள் ஒரு சில விஷயங்களில் வேண்டாம் விட்டு விடு என்று கூறுவார்கள்.  ஆனால் நாம் விட மாட்டோம் என்ன ஆனாலும் சரி என்போம்.  இது குணாதியத்திற்கும், சிந்தனைக்கும் நடந்த போட்டியாகும்.

இந்த சிந்தனை என்பது ஓர் சொக்க தங்கம் ஆகும். இதனை அழகிய வடிவமைப்பில் ஜொலிக்கும் அணிகலன் ஆக்குவது என்பது சிந்தனையை தொடுப்பதில் இருக்கிறது.

நம்மிடையே சில நேரங்களில் அருந்ததி படத்தில் வாள் எடுத்து கொண்டு அனுஷ்கா வருவது போல் சிந்தனைகள் முதல் குணாதிசயங்கள் வரை பொங்கி எழும்.  பொங்கி எழுகிறது என்று விட்டால் அது நம்மை பூமிக்குள்ளே கூட புதைக்கும் படி ஆக்கி விடும்.  இந்த பொங்குதல் என்பது புதையல் ஆகவும் ஆகலாம்.  எல்லாம் தொடுப்பதில் இருக்கிறது.

இந்த பொங்கி எழுதல் என்பது ராணுவத்தில் அதிகமாக இருக்கும்.  அதில் தான் போர் நடக்கிறது. அதில் சரியான வழிகாட்டுதலுடன் படைகளுடன் சென்றால் தான் வெற்றி கிடைக்கும். இதிலேயே பல நேரங்களில் உயிரழப்பு ஏற்பட்டுள்ளது.  படையெடுப்பு அல் படைகளுடன் செல்வது என்பதில் எந்தவித உயிரழப்பு இல்லாமல் நாடு திரும்பியது மிக சொற்பமே.  இதில் உயிரழப்பு அதிகமா, குறைவா என்பது மட்டுமே விஷயம் ஆகும்.  இதில் போருக்கு சென்றவர்கள் படும் பாடு பெரிய பாடாகும்.  போர் களத்தில் மேலதிகாரி சொல்வதை தான் கேட்க வேண்டும்.  அந்த இடத்தில் Soldiers என்கிற சிப்பாய்களுக்கு அது சரியாகவோ, தவறாகவோ படலாம்.  இதனால் அங்கு ஓர் சிந்தனை போர் அவர்களுக்குள் உடனடியாக நிகழும்.  நிகழ்ந்தாலும் மேலதிகாரி சொல்லும்படியே நடக்க வேண்டிய கட்டாயம் அதனால் மனதையும், உடலையும் தேற்றி அரும்பாடுபட்டு தான் பல நேரங்களில் பெரிய போர் என்பதே நிகழும்.  இதனை பற்றி பல ஆங்கில படங்கள் கடலிலும், தரையிலும் நடந்தது போல் வந்துள்ளது.  எதிரி நாட்டுடன் போர் என்பதே ஓர் படாத பாடு மற்றும் அரும்பாடு தான்.  அதனால் தான் பல நாடுகள் போரை விரும்புவதில்லை.

சரியாக எதையும் தொடுத்தால் நமக்கான வம்பு எதுவும் இல்லாமல் சொம்பு என்பதில் சோமபானம் அருந்தி கொண்டு அனைத்தையும் தூசி, துரும்பு போல் எளிதில் ஊதிவிட்டு வாழ்க்கையை கடக்கலாம்.

சிந்தனை மாலை எல்லாம் ஒரு புறம் இருக்கட்டும். எதிலும் எந்த வடிவமும் இல்லாமல் குத்து மதிப்பாக கூறி அனைத்து இடங்களிலும் அனைவரும் குத்து வாங்கிய கதையை கொஞ்ச நேரம் பார்ப்போம்.

ஒரு சிலர் ஒரு சிலதை அவர்கள் கூறியதாய் கூறாமல் நாம் ஏதோ கூறியதாக திரித்து கூறுகிறார்களே அவர்களுக்கு சில கேள்விகள்:-

யார் என்ன சிந்தித்தால் உனக்கென்ன வந்தது? உன்னிடம் வந்து யாராவது அழுதார்களா?

அப்படி சிந்தித்தால் ஏன் தன்னுடைய வாயால் கூறவில்லை?

இடது பக்கமோ, வலது பக்கமோ எந்த பக்கம் சிந்திக்க வேண்டும் என்று கூற உனக்கென்ன உரிமை இருக்கிறது?  சட்டம் எதாவது உள்ளதா? 

அங்கீகாரம் இதற்கு எதாவது அரசு கொடுத்திருக்கிறதா? நீங்கள் சொல்வது சரி என்று?.

உன் கற்பனைக்கு பலர் கேவலங்கள், அசிங்கங்கள் etc என்று பலி ஆகலாமா?

பிறகு ஏன் சிந்திக்கிறார் என்கிற கேள்வி உனக்கு அவசியமா?  யார் என்ன சிந்தித்தால் உனக்கென்ன?

கெட்ட சிந்தனை வருவதால் கெட்டவன் ஆக முடியாது.  இம்மாதிரியாக கூறி மோசடி செய்து வாழும் ஈத்தரை மனிதர்கள் தான் மோசமான கெட்டவர்கள்.

கெட்ட சிந்தனைகள் வந்து அதை வெளிபடுத்திய மனிதர்கள் யாரும் கௌரவமாக, மானம், மரியாதையுடன் வாழவில்லை. ஆனால் அவர்கள் இயக்கம் நடத்துவது போல் நல்லபடியாக வாழ்வதாக தான் கூறுவார்கள்.  அதோடு பலர் குற்றவாளிகளாக சிறை சாலையில் மற்றும் வழக்குகளை எதிர் கொண்டு இருக்கிறார்கள்.  பலர் நொடி பொழுதில் கோபப்பட்டு குற்றம் செய்து தண்டனை பெற்றிருக்கிறார்கள்.

அதோடு இம்மாதிரியாக கூறி யாரையும் ஏமாற்றிவிடலாம் என்று எந்த பொரம்போக்கு சொன்னது?

பொரம்போக்குகள் எல்லாம் போக்குகள் காட்டி ஏமாற்ற மக்கள் என்ன முட்டாள்களா?  பல அறிஞர்கள், விஞ்ஞானிகள், தலைவர்கள் வாழும் புவி இது.  ஜாம்பாவானிடமே  இம்மாதிரியாக கூறி ஏமாற்றிவிடலாம் என்று நினைத்ததால் தான் உன்னை ஜாம் போல் என்னுடைய வளர்ச்சிக்கு தடவி மலைபாம்பு விழுங்குவது போல் அப்படியே திண்றுவிட்டேன்.  எதிரிகளின் செயல்களால் அசுரவளர்ச்சி கண்டவர்களே இப்புவியில் அதிகம்.  மறுபடியும் Deep ஆக சென்றுவிட்டேன்.  உதா:- பூவெல்லாம் உன் வாசம் இன்னும் பல படங்கள் திரித்து கூறுவதில் வந்துள்ளது.

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் எதற்கு? என்கிற பாடலின் அர்த்தம் என் பார்வையில் இது தான்.  அதாவது ஒருவருக்கு நல்ல நினைப்பு முதல் கெட்ட நினைப்பு வரை வரும் தான். கெட்ட நினைப்பு  அனைத்தும் ஒரு வேலை நடந்தால் அதர்மமே மேலோங்கும்.  அப்படி அதர்மம் அதிகமானால் தெய்வம் எதற்கு அதோடு தெய்வமே கிடையாது? என்ற அர்த்தத்தில் தான் கவிஞர் எழுதியிருப்பார்.  இம்மாதிரியான ஆட்களை கொரானா வாரி கொண்டு சென்றுவிட்டதா?  இல்லையென்றால் தெய்வம் ஏதுமில்லை தான். மறுபடியும் கதைக்குள் Deep ஆக சென்றுவிட்டேன்.  இது கதையல்ல நிஜம் என்று நிஜமாக கூட பலருக்கு நடந்து வாழ்க்கையை தொலைத்திருக்கலாம் யாருக்கு தெரியும்?  உலகம் மிகபெரியதல்லவா?

இந்த சுந்தர வடிவான சிந்தனை மாலை என்பது நம்மை வம்பு என்பதில் இருந்து காக்கும் ஓர் "கம்பு" போன்றதும் கூட.

முகமதியர்களின் சுல்தான் ஆட்சியில் "பராக்" என்றால் "வரார்" என்று அர்த்தம். பேட்ட பராக் போல வீரா வரார், வைரா வரார், ராச வரார் என்பது.  இது அனைத்தும் ஒன்றாக அதோடு பெயரில் பல PUNCH வசனங்களுடன் இருக்கும் நான் என்றென்றும் உங்களுக்காக நான் எழுத்துக்கள் அடங்கிய ஆர்டிகல்லாக உங்கள் மனதில் வரைய "வரார்" என்று வந்து கொண்டே இருப்பேன்.  அதோடு என் கட்டுரை எதுவும் ending அல்ல அது மனதிற்கான Begining ஆகும்.

இது அனைத்தும் உண்மையா, பொய்யா என தெரியவில்லை.

https://justicemayel.blogspot.com/2020/11/justicemayelblogspotcom.html