சாவி- அந்த அரைமணி நேரம்[ KEY]

PART-1 தரமான நைய புடைத்த சாவிஅந்த அரைமணி நேரம்[GOOD QUALITY OF HUMAN LOCKER KEY]★புரட்சி கவிஞர் Valavanur வை.ரா.SivaSaravanaLingam CHETTIYAR B.A.,B.E.,D.M.E.,

நம்முடைய அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வே தெரியாமல் பல விஷயங்களில் இருக்கிறோம்.  ஆனால் 80% தீர்வு நம்மிடம் தான் உள்ளது.  அது ஏனோ நமக்கு தெரியவில்லை.  நமக்கு தெரியாமல் அதற்கான Qualityயான சாவியை எங்கெங்கோ தேடி கொண்டிருக்கிறோம். ஆனால் சாவி நம்மிடம் தான் உள்ளது.  அது தெரியாமல் அல்லல்பட்டு கொண்டிருக்கிறோம். இது சிறிய விஷயம், பெரிய விஷயம் என்று அனைத்திற்குமான சாவி நம்மிடமே உள்ளது. அதற்கு பலவற்றை நாம் நம்மிடமே விட்டு கொடுத்தால் 80% எல்லாமே முடிந்துவிடும். அதற்காக விட்டு கொடுத்த அதை நாம் இழக்கவில்லை.  அது வேறு இடத்தில் மீட்டெடுத்து கொள்ளலாம்.

சிறிய விஷயம்:- இந்த சிறிய விஷயத்தில் எவ்வளவு இருக்கிறது தெரியுமா?

1)வேலைக்கு செல்தல்:-  பல பேர் அவசரம் அவசரமாக TENSION-ஆக தான் வேலைக்கு செல்கிறார்கள். இதற்கு காரணம் அரைமணி நேர தூக்கம்அந்த அரைமணி நேர தூக்கம் என்பது நாம் எழும் நேரத்தில் இருந்து முன்பே எழுந்தால் போதும். வேலைக்கோ, காலெஜிற்கோ நிம்மதியாக செல்லலாம். நம்முடைய வாழ்க்கையில் பல விஷயங்களில் 12போல இல்லாமல் இருக்கும்.

i) Accident:-  

 Accident என்பது வேகமாக செல்லுதல். வேகமாக செல்பவர்கள் சில பேர் ஒரு Thrilling-க்காக செல்வார்கள். ஆனால் பல பேர் சீக்கிரம் செல்வதற்காகவோ (அல்) லாரியை விட்டு கொஞ்ச நேரம் Rest எடுக்கலாம் என்றோ  (எந்த விஷயமோஎந்த வாகனமோ பஸ், லாரி, ஆட்டோ etc) செல்கிறார்கள். இதற்கு காரணம் போகும் தூரம் எவ்வளவாக இருந்தாலும் ஒரு அழுத்து அழுத்தினால் போதும் என்ற நினைப்பே. இந்த அழுத்து தான் பல பேர் வாழ்க்கையையே ஒரேயடியாக  அழுத்திவிடுகிறது. இந்த நினைப்பிற்கான காரணம் அந்த அரை மணி நேரம்.

ii) தேர்வு:-

தேர்விற்கு செல்லும் இடத்திற்கு கொஞ்ச நேரத்திற்கு முன்னாடி செல்லாமல் டென்ஷனுடன் வேகமாக தேர்வு நடக்கும் இடத்திற்கு சென்றுவிட்டு டென்ஷனால் எல்லாமே மறந்த கதையெல்லாம் உள்ளது. பல பேர் நல்ல மார்க் எடுக்காமல் ஆன கதையெல்லாம் உண்டு.  பல பேர் Hall Ticket, Calculator -ஐ விட்டு மறந்து வைத்த கதையெல்லாம் உள்ளது. இவ்வாறான விஷயங்களினால் பல கவனகுறைவுகள் நமக்கு ஏற்படுகிறது.

இதனால் காதலனை இழந்த சோக கதையெல்லாம் உள்ளது. நான் எல்லாவற்றிலும் கூலானவன்.  அன்று சனி (அல்) ராகு கொஞ்ச நேரம் உன்னிடம் இருக்கிறேன் என்று இருந்துவிட்டாரா என்று தெரியவில்லை. அது எனக்கா அல் சம்பந்தபட்டவருக்கா என்று தெரியவில்லை. அன்று காலேஜில் Model Exam. Calculator-ஐ மறந்து விட்டார்.  கஜினிக்கு சொந்தகாரர். Exam அன்று யாராக இருந்தாலும் படிக்காதவன் கையில் கூட அன்று புத்தகத்தை பார்க்கலாம். எல்லாவற்றிலும் இயற்கையாகவே வித்தியாசமாகவும், புதுவிதமாகவும் செய்ய கூடியவன். இயற்கையாகவே தெரியாதனமாக உலக காதலர்கள் வரலாற்றில்  முதன் முறையாக காதலை அன்று அவளிடம் சொல்லியுள்ளார்.  சொல்லியதும் அதுவும் OK -தான் சொல்லும் என்று நினைத்தார்.  இப்போது தான் சனி உள்ளே இறங்கினார்.  அதில் ஒரு சின்ன TWIST. நீ  இந்த OK -சொல்வதற்கு எவ்வளவு கஷ்டபட்டேன் தெரியுமா என்று Lecture எடுக்க ஆரம்பித்துவிட்டது. எந்த கஷ்டமும் அடைய தேவையில்லை.  பார்க்க அப்போது நன்றாகதான் இருக்கும். SIMPLE-ஆக முடிக்க வேண்டியதை அது COMPLECATE செய்துவிட்டது. LECTURE-ஐ EXAM-ஐ முடித்துவிட்டு கேட்டு கொள்ளலாம் என்று எண்ணி அவர் CALCULATOR FRIEND-யிடம் வாங்க சென்றுவிட்டார்.  அதோடு பல காரணங்களினால் அந்த பெண்ணின் காதலும் சென்றுவிட்டது. அந்த படிகட்டு நான் ஏறி இருந்தால் என் மண்டையில் காதல் ஏறி இருக்கும். Calculator வாங்க வேண்டும் என்ற பதற்றம் என்கிற  சனி ஏறியதால் கொஞ்சம் இருந்த காதலும் தலையில் இருந்து மொத்தமாக இறங்கிவிட்டது.  இந்த கட்டுரை எழுதும் போது தான் தோன்றியது அந்த Calculator-ஐ அந்த பெண்ணிடம் கேட்டிருந்தாலே கொடுத்திருக்கும் என்பது.  Casio Calculator Casulal -ஆக ஜோலியை முடித்துவிட்டது.  

ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் ஒவ்வொரு விஷயத்திலும் ஹாட் என்பது இருக்க வேண்டும். நீங்கள் இதனை பெரும்பாலானவர்கள் Samsung எனும் Cell Phone மூலமாக இதனை பெற்று சிந்தித்து நம்மிடம் உள்ள கெட்டதற்கெல்லாம் சங்கு (SUNGஊதுகிறீர்கள்.

 சிறிய விஷயம் தான் நம் வாழ்க்கையை பெரிய அளவில் நிர்ணயிக்கிறது என்பதை உணர்த்தவே இக்கட்டுரை.  FINAL DECISION படம் போல தான் நம் வாழ்க்கையும்நம் வாழ்க்கையில்  சிறிய விஷயங்களில் நம்மிடம் நாமே விட்டு கொடுத்தால் போதும்.  நாமும் FINAL DECISION-ஆக இந்த சிறிய விஷயங்களில் நமக்கு நாமே விட்டு கொடுப்போமாக.  சிறிய விஷயம் தான் தூக்கம் ETC என்கிற அந்த அரைமணி நேரம்.  அதனால் நம் வாழ்க்கையில் எவ்வளவு நிம்மதியின்மை.  பெரிய விஷயங்கள் பற்றி இதனுடைய PART-2 வில் பார்ப்போம்.  THIS IS GOOD QUALITY OF HUMAN LOCKER KEY. 

குறிப்பு :-

நம்முடைய வாழ்க்கையில் எல்லாமே சிறிய விஷயத்தில் தான் நம்முடைய சந்தோஷத்தை அடைய கூடிய தரமான நைய புடைத்த சாவி இருக்கிறது. அந்த சாவியை நீங்கள் தெரிந்து கொள்ள நான் ஒரு சாவியாக உங்களுக்கு கூறுகிறேன்நம்முடைய வாழ்க்கையில் ஒவ்வொரு அந்த அரைமணி நேரம் என்கிற "சாவியை" சரியாக நாம் நமக்காக கொடுத்தால் நம்முடைய வாழ்க்கை எனும் வண்டி எந்த பிரச்சனையும் இன்றி SMOOTH-ஆக START ஆகும்.

இது அனைத்தும் உண்மையாபொய்யா என தெரியவில்லை.

https://justicemayel.blogspot.com/2020/11/justicemayelblogspotcom.html