பெரியார் பற்றி மொட்டை கடிதாசி [ DETAILED EMPTY LETTER ]

 


 

இந்து கடவுள்களை தூஷனமாக, ஏளனமாக பேசியவர்கள்.  அதோடு கந்த சஷ்டி கவசத்தை தவறாக கூறியவர்கள் சம்மந்தமட்ட பதிவு தான் கீழ்கண்ட மொட்டை கடிதாசி பதிவு.

 

உங்களுக்கென்று தனியாக திராவிட கழகம் அதற்கு தேவையான பணம் கொட்டி கிடந்தும் ஏன் திமுகவோடு ஒட்டி கொண்டு பிழைக்க நினைக்கிறார்கள்?  இதில் ஏதோ சுய லாபம் இருக்குமோ?

 

தனியாகவே யாருடைய துணையில்லாமல் எவ்வளவு இயக்கங்கள் இருக்கிறது.  அது போல் நடத்தலாமே. உதாரணத்திற்கு may 17 இயக்கம், பூவுலகின் நண்பர்கள், சட்ட பாதுகாப்பு இயக்கம் etc. இது ஒவ்வொன்றும் வெவ்வேறு மக்கள் தளங்களில்  இயங்குவது.

பெரியார் போல் ஏன் இதுவரை திராவிடர் கழகம் தன்னிச்சையாக இயங்கவில்லை?  உங்களிடமிருந்து பிரிந்து வந்த திமுக அதிலிருந்து பிரிந்த அதிமுக மதிமுக இயங்குகிறது. ஏன் உங்களால் முடியவில்லை?

 

சரிங்க  மொட்டை கடிதாசிக்கு வருவோம்.

 

"மொட்டை கடிதாசி என்கிற கடிதம் மடல்"  இதில் எழுதியவர் பெயரோ ஊரோ எந்த தகவலும் இருக்காது.  ஏனென்றால் இது மொட்டை கதை.  பழம் தின்று கொட்டை போட்ட யாரோ யாருக்கோ பெரிய மொட்டை போட்டார்களா என்கிற கேள்விகள் .  இதோடு பல கேள்விகள் வதந்தி கேள்விகள் தான்.  மொத்தமாக படித்தால் உங்களுக்கே புரியும் இது மொட்டை கதை தான் என்று.  அதாவது இது மொட்டை கடிதாசி  கதை என்று.  அதோடு இது யாருடைய சமூக வலைதளங்களில் இருந்து வந்தாலும் யாரும் பொறுப்பல்ல.  மொட்டை தகவல்களுக்கெல்லாம் எப்படிங்க பொறுப்பேற்க முடியும்.  சும்மா சொல்றேன் அவ்வளவு தான்.   இது உண்மையென்றால் யாரை முதலில் களைய வேண்டுமோ அவர்களை களையுங்கள்.  இல்லையென்றால் அப்படியே விட்டுதள்ளுங்கள்.  அப்ப ஆரம்பிக்கலாக்கங்களா!  கோவிந்தா! கோவிந்தா!  பட்டை நாமம்!  இதையெல்லாம் சாத்திவிட்டு படித்தால் மனம் ஒரு நிலையுடன் படிக்கலாம்.  மற்றபடி வேற எதுக்கும் எந்தவித உள்நோக்கத்துடனும் கூறவில்லை. NO ANY DETAILS SUCH AS NAME, ADDRESS, PIN  CODE IN LETTER.  THIS IS DETAILED EMPTY LETTER.  BUT DETAILS OBTAINED.





வைராவீராராச என்று பல பெயர்களுடன்ஒரு பெயராய்ஓர் மனிதராய் என்னுள் கொண்டு உங்களில் ஒருவனாய் ஓர் Messenger ஆக கட்டுரை வாயிலாக All In One ஆக வரார் JMN -ன் ரிதம் F.M 605 108-ல் justicemayel.blogspot.com தளத்தின் வாயிலாக அஸ்திவாரங்களாகிய  வாசகர்களேஎன் கட்டுரை எதுவும் ending அல்ல அது மனதிற்கான Begining ஆகும்.

இந்த மொட்டை கடிதாசியால் அனைத்திற்கும் முற்று புள்ளி விழட்டும்.  மற்றபடி இது அனைத்தும் உண்மையா, பொய்யா என தெரியவில்லை.

 

திமுகவின் ஊழலில் Concentration செய்யும் நேர்மையானவர்களே!  பெரியார் பற்றிய கறுப்பு பக்கங்களை மட்டும் வெளியிடுவது மட்டும் போதாது. இதனை முதலில் ஆராய வேண்டும்.  பலவற்றிற்கு விடை அறிய வேண்டும்.  பல வதந்திகளுக்கு முற்று புள்ளி ஏற்பட வேண்டும்.  Raid விட வேண்டும்.

 

பெரியார் Trust எப்படி உருவானது?  ராமசாமி நாயக்கர் என்கிற பெரியார் மனைவியாக ஆக்கிய மணியம்மை சம்பந்தபட்டவர்கள் நிர்வகிக்கிறார்களா? அல்லது நாகம்மை உறவினர்கள் யாராவது பொறுப்பேற்றார்களா? அல் பெரியார் உறவினர்கள் அல் எந்த நாயக்கர்களாவது இருக்கிறார்களா? அல் அவர் ஊர் ஈரோடு காரர்கள் யாராவது இருக்கிறார்களா?  என்று ஆய்வு செய்ய வேண்டும்.

 

எதற்காக தான் மணியம்மையை பெரியார் திருமணம் செய்தார்?

 

ஒரு வேலை அவ்வாறு இல்லையெனில் எந்த ஊர்காரர், ஜாதி காரர் தான் இருக்கிறார்கள்.

 

ஏனெனில் ஒரு வதந்தி பரவியுள்ளது.  அதாவது பெரியார் சொத்தின் தற்போதைய மதிப்பு

பல ஆயிரம் கோடிகளாம்.

இதனை பெரியார் உறவினர்கள், அவர் இரண்டு மனைவி வழியாக உள்ள சொந்தங்கள் மற்றும் குறைந்தபட்சம்  நாயக்கர்களோ, ஈரோடுகாரர்களோ தகுதியின் அடிப்படையில் கூட தேர்ந்தெடுக்கவில்லையாம்.  காரணம் அபகரிப்பு சுருட்டுதலாம்.

 

அதாவது மேற்கண்ட அனைத்து பேர்களுக்கும் தகுதியில்லையாம்.  இவர்களுக்கே இல்லையென்றால் வேறு யாருக்கு தான் தகுதி உரிமை இருக்கிறது என கேட்டால் தாழ்த்தபட்ட சமூகத்திற்கு மட்டுமே இருக்கிறதாம்.

 

எப்படியென்றால் பெரியார் தாழ்த்தபட்டவர்களுக்காகபேசினார் அதனால் அவருடைய அனைத்துமே அவர்களுக்கானதாம்.  மொத்தமாக ஒரு குறிப்பிட்ட நபர்கள் கொள்ளையடிக்க இப்படி ஒரு கதை கூறி கொள்ளையடிக்கபட்டுள்ளது.

 

ஜெயலலிதா முதல் MGR முதல் கருணாநிதி வரை அவர்கள் மறைந்த பிறகு அவர்கள் மகன் மகள் சொந்தகாரர்களுக்கு தானே சென்றது சொத்துக்கள் முதல் தங்கம் வைர நகைகள் etc வரையென்றால்  அது தாங்க புரியலை என்கிறார்கள்.

 

மணியம்மையை திருமணம் செய்ததன் நோக்கம் என்ன?

 

தாழ்த்தபட்டவர்களுக்கு தான் அனைத்துமே என்பது புரியவில்லை.  யாராவது ஒரு community சார்ந்து பேசினால் அது அவர்களுக்கானதாகிவிடுமா?

 

இவ்வளவு கூறிவிட்டு வீரமணி எப்படி தலைவர் ஆனார்?  வீரமணி தாழ்த்தபட்ட சமூகமா?  ஒன்றுமே புரியவில்லை.  பல விஷயங்கள் தெரியவில்லை.

 

ஆனால் இதில் ஏதோ மர்மம் இருக்கிறது என்பது  போல் மட்டும் மேற்கண்ட தகவல்களால் தோன்றுகிறது.

 

ஒரு பெரிய சொத்து உள்ளவர்களை பற்றி நாம் பெரிதாக கவலை கொள்ளாததால் அவர்கள் மட்டும் யார் ஆட்சிக்கு வந்தாளும் சரி வரவில்லையென்றாலுமசௌகர்யமாக சுகமாக வாழ்கிறார்கள்.  திமுக பல ஊழல்களில் கஷ்டபட்டும் அவர்கள் குடும்பமே கண்ணீர் கமளியுமாக இருந்தனர்.  ஆனால் இவர்கள் சுகவாசிகளாகவே வாழ்கின்றனர் எப்படி?

 

பெரியார் சித்தாந்தத்தில் திமுகவில் உள்ளவர்களை கரைத்து மூளை சலவை போல் மூளைக்குள் பெரியார் கருத்துக்களை ஏற்றுவது  இவர்களை எந்த வரி ஏய்பில்லோ அல்  பெரியார் Trust-ஐ யாரும் நோண்டாமல் இருக்கவா?  ஒன்றும் புரியவில்லை.

 

அவ்வளவு கஷ்டமும் திமுகவாகிய உனக்கு! சுகவாசி வாழ்க்கை எனக்கு! என்று வாழ  திக திமுகவும் ஒன்று என்று  வெளியில் கூறி அது பரவியுள்ளதோ! இல்லை அப்பழுக்கற்றவர்கள் தானா!

 

கருணாநிதி பெரியாரை இழிவுபடுத்தி கூறியதை பற்றி ஏன் சிறு கண்டனம் கூட பெரியார் Trust-ல் உள்ளவர்கள் தெரிவிக்கவில்லை?  ஏன் திமுகவை கண்டு பயப்படுகிறார்கள்?  ஒரு வேலை  Income Tax Raid  தமிழ்நாடு எதாவது அனுப்பிவிட  போகிறது என்ற பயமா?

 

ஏனென்றால் திராவிட கழகம் பெரியார் உடையது.  அதற்கான செலவும் பெரியார் சம்பாதித்த காசில் தான் நடக்கிறது.  அதாவது பாமக விசிக அதிமுக போல தனியாக அவர்களால் இயங்க முடியும் ஆனாலும் இயங்கவில்லை ஏன்?  எங்கு சென்றாலும் திமுக அரவணைப்பிலேயே செல்ல என்ன பெரிய காரணம்?

 

அதாவது திராவிட முன்னேற்ற கழகம் உருவானதால் தான் திராவிட கழகம்  உடைந்தது.  அதோடு அனைவருமே விலகினார்கள் என்றே கூறலாம்.  பெரியாரின் கறுப்பு பக்கங்களை வெளியிட்டு கிட்டதட்ட அழித்ததே திமுக தான்.  அதனால் தான் அதிலிருந்து பலர் வெளியேறினர்.

 

இதற்கெல்லாம் அஞ்சாமல் பெரியார் திமுகவோடு சேராமலேயே தொடர்ந்தார்.

 

பெரியாரை பின்பற்றும் இவர்கள் ஏன் இந்த இயக்கத்தை  திமுகவின் நிழலிலேயே எடுத்து செல்கின்றனர்?

 

யோசித்து பார்த்தால் அவசியமில்லை தன்னிச்சையாக இயங்க முடியும் என்றாலும் இயக்கத்தை இயக்காமல் இருப்பது ஏதோ நமக்கு உறுத்தவில்லையா?

 

இவர்களுக்கு இருக்கும் கல்லூரிகள் அனைத்தும் பெரியார்  வழி செல்லும் இவர்களால் இலவசமாக நடத்தபடுகிறதா?

 

இத்தனை வருடத்தில் இங்கு படித்தவர்களுக்கு பெரியார் பற்றிய மூளைச்சலவை கருத்து மட்டும் தான் மண்டையில் ஏற்றபட்டதா?  பெரியார் புத்தகங்கள் இத்தனை வருடங்களில் எத்தனை பேருக்கு இலவசமாக வழங்கபட்டுள்ளது?

 

தாழ்த்தபட்ட வகுப்பினருக்கு எத்தனை பேருக்கு இலவசமாக சீட்  கொடுத்து அத்தனை செலவுகளையும் ஏற்றுள்ளீர்கள்?

 

அனைத்துமே பணம் என்றால் எதற்கு இப்படி ஒரு பித்தலாட்ட மோசடிகள்.  பெரியார் வழி நாயக்கர் உறவினர்களோ மனைவி வழி சொந்த காரர்களோ ஈரோடு காரர்களோ நடத்தியிருந்தால் கூட புண்ணியம் தேடி இரூப்பார்கள்.

 

பழி ஒரு இடம்! பாவம் ஒரு இடம்! என்பது போல  Full Take Divertion-னா அதாவது திமுக மட்டுமே கஷ்டத்திலும் வருத்தத்திலும் உழல வேண்டுமா?

 

யாரை நாம் முதலில் களைய வேண்டும்?

 

எப்படி மொட்டை கடிதாசி.  எல்லாமே உறுதிபடுத்தாத தகவல்கள் மற்றும் வதந்திகள் அதோடு சில கேள்விகள்.  இதற்காக பதிலை தேடுங்கள்.  அதில் எவ்வளவு சரி இவ்வளவு பொய் அவ்வளவும் உண்மை என்று ஏதாவது கூறுங்கள்.  நானும் தெரிந்து கொள்வேன்.  இந்த மொட்டை கடிதாசியால் அனைத்திற்கும் முற்று புள்ளி விழட்டும்.  மற்றபடி இந்த மொட்டை கடிதாசி உண்மையா, பொய்யா என தெரியவில்லை.

 

இந்த மொட்டை கடிதாசி  கீழ்கண்ட லிங்க்கள் தான் காரணம்:-

 

பல வருடங்கள் ஆனாலும் செய்தி செய்தியே.

 

1)

 

இவ்வாறெல்லாம் ஏன் கூற வேண்டும்?

 

ஆயிரம் கோடி திராவிடர் கழகம் சொத்துக்கள் பறி முதல் H.Raja பேச்சு:-

 

https://tamil.asianetnews.com/politics/rs-1-000-crores-assets-seized-this-is-the-first-signature-when-the-bjp-comes-to-power-q4m12w

 

2)

 

பெரியார் மணியம்மை பல்கலை கழகம் என்ற பெயரில் இவ்வளவா:-

 

https://newindian.activeboard.com/t66310233/topic-66310233/

 

 

3)

 

பெரியார் சொத்துக்களை அரசுடையாக்க வேண்டும். பெரியார் திராவிட கழக வழக்கறிஞர் துரைசாமி:-

 

https://tamil.oneindia.com/news/2010/06/14/periyar-assets-pdk-nationalisation.html



2)


ஜின்னா முதல் அம்பேத்கர் வரை பெரியார் முகத்தில் கரியை பூசி அனுப்பியுள்ளனர் போலும்.


ஜின்னாகிட்ட போய் திராவிட நாடு என்கிற நாத்திக நாட்டிற்கு பெரியார் ஆதரவு கேட்டாராம். எந்த மசூதியும் தர்க்காவும் இல்லாத மாநிலத்திற்கு ஆதரவு தர அவர் என்ன நாத்திகவாதியா? அவர் உட்பட உலகத்தில் எந்த மதத்திலும் தரமாட்டார்கள் என வேறு விதமாக சூசகமாக புரிய வைத்து அனுப்பி  உள்ளனர்.  அதாவது வேற பொழப்பு இருந்தா போய் பாருங்க என்பது போல.  

அதாவது நீங்க நாத்திகம் பேசினால் அந்த மதம் போய் எங்க முஸ்லீம் மதத்திற்கு மாற்ற தான் பேசாம இருந்தோம்.  அதற்காக நாங்கள் ஏற்று கொண்டதாக அர்த்தம் கிடையாது என்பதையும் தெளிவாக வேறு விதத்தில் புரிய வைத்து அனுப்பியுள்ளனர் போலும்.


இதே போல் அம்பேத்கரும் அவர் பாணியில் கூறி வழியனுப்பியுள்ளார்.  நீங்க நாத்திகம், ஜாதி மறுப்பு பேசுவதினால் புத்த மதம் மாற்ற பயன்படுத்துவோமே தவிர நாத்திக நாடு வாய்பில்லை என்பது போல கூறி வழியனுப்பி இருப்பார் போலும்.

மொத்தத்தில் பெரியாரை பலர் தனக்காக அதாவது தன் மதத்திற்கோ, தன் விருப்பபட்ட மதத்திற்கோ பயன்படுத்த வெளியில் சொல்லாமல் மறைமுகமாக  முயற்ச்சித்துள்ளனரே தவிர வேறு எதற்காகவும் யாரும் ஆதரவு தர வில்லை.  அதாவது அவருடைய Agenda " நாத்திக நாடு" என்கிற திராவிட நாடு என்பதை முற்றிலுமாக நிராகரித்துள்ளனர்.  தப்பி தவறி இஸ்லாத் பற்றி ஜின்னாவிடம் தவறாக பேசியிருந்தால் வீடு கூட திரும்பியிருக்க மாட்டார்கள் போலும்.

உலகம் முழுக்க இருக்கும் நிலமையை பெரியார் நன்கு புரிந்து கொண்டார்.

பெரியாரின் முகத்தில் கரிபூசிய ஜின்னா!


பெரியாரின் முகத்தில் கரிபூசிய ஜின்னா!

1940ஆம் ஆண்டு பெரியார் மும்பைக்குச் சென்று ஜின்னா, அம்பேத்கர் ஆகிய இரண்டு தலைவர்களையும் சந்தித்துப் பேசிய நிகழ்வை வரலாற்றின் முக்கிய நிகழ்வாக திராவிட இயக்கத்தவர் குறிப்பிடுவர். அந்தச் சந்திப்பில் பெரியார் திராவிடநாடு விடுதலைக்கு ஆதரவளிக்க வேண்டுமாறு ஜின்னாவை வற்புறுத்தினார் என்று ஒற்றை வரியில் சொல்லி மழுப்பி விடுவார்கள்.

உண்மையில் ஜின்னா திராவிடநாடு விடுதலைக்கு ஆதரவு தந்தாரா? இல்லையா? எனும் கேள்விக்கு விடை சொல்வார் எவருமில்லை.

பெரியாரும், அண்ணாவும் கூட இந்தச் சந்திப்பு குறித்து திறந்த மனதோடு கூறிட முன்வரவில்லை. அதற்குக்காரணம் திராவிடநாடு விடுதலை என்பது மக்களின் விருப்பமானதும் அல்ல. சாத்தியமானதும் அல்ல என்பதை ஜின்னா தெளிவுபடுத்தி விட்ட காரணத்தால் இதனை தமது இயக்கத்தவர்களிடம் கூற வேண்டியிருக்கும். இதன் காரணமாக இயக்கத்தவர் நம்பிக்கை இழந்து விடுவர் என்பது தான்.



இதைப் பற்றி விரிவாகக் காண்போம்.

8.1.1940 மாலை 5.30 முதல் இரவு 8.30 வரை ஜின்னா, அம்பேத்கர், பெரியார் சந்திப்பு கலந்துரையாடல் நடந்துள்ளது. இந்தச் சந்திப்பில் அண்ணா பங்கேற்காமல் தாராவி சென்று விடுகிறார். இந்தச் சந்திப்பு குறித்து அண்ணா கூறுவதை பார்ப்போம்.

“தோழர் ஜின்னாவை நமது தலைவர் சந்திக்க விரும்பிய போது நான் உடன்வர மறுத்தேன் என்றும் நான் அப்போது துரோகம் செய்தேன் என்றும் சமீபத்தில் பத்திரிக்கையில் குறிப்பிட்டிருந்தார். நான் உடன்போக மறுத்தது உண்மை தான். தோழர் ஜின்னாவை ஒரு திட்டமான முடிவை வைத்துக் கொண்டு பாருங்கள். வெறும் உபச்சாரத்திற்காகப் பார்ப்பதில் பலனேதும் இல்லை என்று சொன்னேன். தலைவருடைய சந்திப்பு உபச்சார சந்திப்பு என்று நான் அறிந்து கொண்ட காரணத்தினால் தான், நான் உடன் போக மறுத்தேன்.

தலைவரோடு சண்டே அப்சர்வர் ஆசிரியர் தோழர் பி.பாலசுப்பிரமணியம், சைவச்சீலராக விளங்கும் தோழர் கே.எம்.பாலசுப்பிரமணியம் ஆகியவர்கள் உடன் சென்றார்கள். மூவரும் திரும்பி வரும்போது ‘மனக்கசப்போடு’ தான் வந்தார்கள். சந்தர்ப்பம் அப்போதெல்லாம் தவற விடப்பட்டது. தோழர் அம்பேத்கரைச் சந்தித்த வாய்ப்பும் பயனற்றே போயிற்று. இப்படியாக தவறவிடப்பட்ட சந்தர்ப்பங்கள் ஏராளம்” (சி.என்.ஏ.பரிமளம்- அறிஞர் அண்ணாவின் தன் வரலாறு)


அண்ணா மூவரும் மனக்கசப்போடு தான் வந்தார்கள் என்று கூறுவதன் மூலம் ஜின்னா திராவிடநாடு விடுதலைக்கு ஒப்புதல் அளிக்க வில்லையென்பதை சுட்டிக் காட்டுகிறார்.

அடுத்து, ஜின்னா சந்திப்பு குறித்து பெரியாரிடம் ஆனந்த விகடன் இதழுக்காக (11.4.1965) சாவி, மணியன் ஆகிய இருவரும் பேட்டி கண்டனர். அதில் பெரியார் வெள்ளைக்காரன் அதிகார ஒப்படைப்பை தன்னிடம் அளிக்க மறுத்து விட்டதை தெரிவித்து விட்டு ஜின்னா சந்திப்பை கூறுகிறார்:

“இத்தோட விட்டு விடக் கூடாதுன்னு ஜின்னாவைப் பார்த்துப் பேசறதுக்காக பம்பாய் போயிருந்தேன். அவரைக்கண்டு எல்லா சங்கதியையும் பேசினேன். நான் சொல்லறதையெல்லாம் கவனமாகக் கேட்டுக்கிட்டு, சரி நான் மெட்ராசுக்கு வரப்போ முஸ்லிமும் ஜஸ்டிஸ் பார்ட்டியும் சேர்ந்து சப்ஜெக்ட்டை ஒண்ணா டேபிள் பண்ணுவோம்னு சொன்னாரு….

கேள்வி: ரெண்டு பேரும் சேர்ந்து டேபிள் பண்ணலாம்னு சொன்ன விஷயம் என்ன ஆச்சு?

பெரியார் பதில்: உன் கொச்சனைத் (பிரச்சனை) தனியாகவே எடுத்து சொல்லிக் கோன்னுட்டுப் போயிட்டாரு. அப்பதான் ஜின்னா ராமசாமி மூஞ்சியிலே கரியைப் பூசிட்டாருன்னு பத்திரிகையிலே எழுதினாங்க”.

பெரியார் பேட்டியில் ஜின்னா சொல்ல வந்ததை மறைத்து விட்டு உன்பிரச்னை என்று கூறியதாக தெரிவிக்கிறார். திராவிடநாடு என்பது பெரியாரின் அகநிலைக் கருத்து என்பதே ஜின்னாவின் திட்டவட்ட முடிவாகும்.

26.1.1941இல் நீதிக்கட்சி பிரமுகர் வி.வி.இராமசாமி நாடார் மற்றும் ‘நாடார்குல மித்திரன்’ இதழாசிரியர் எம்.ஏ.முத்து நாடார் இருவரும் மும்பை சென்று ஜின்னாவை சந்தித்து திராவிட நாடு குறித்துப் பேசினர்.

வி.வி.இராமசாமி: எங்களுடைய திராவிடநாடு கோரிக்கை கதி என்ன?

ஜின்னா: ‘உங்களுடைய திராவிட நாட்டினுடைய ஜனங்களின் விருப்பம் இன்னாதெனத் தெரிய வேண்டும்’ என்றார். மிகச்சரியாக ஓராண்டு முடியும் நிலையில் ஜின்னா நினைவாற்றலுடன் தான் இதைக் கேட்டுள்ளார். (செ.அருள் செல்வன்-அண்ணாவின் அரசியல்குரு ‘சண்டே அப்சர்வர்’ பி.பாலசுப்ரமணியம்)

அன்று பெரியார்- ஜின்னா பேச்சை மொழிபெயர்த்தவர் பி.பாலசுப்பிரமணியம். அப்போது ஜின்னா கேட்ட கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் பெரியார் திணறியுள்ளார்.

இந்த தகவலை தனது தந்தையார் பாலசுப்பிரமணியம் தன்னிடம் தெரிவித்ததாக அவரின் மகள் ஜெயா தெரிவித்ததையும் மேற்படி நூலில் அருள்செல்வன் குறிப்பிடுகிறார்.


9.8.1944இல் பெரியார் ஜின்னாவிற்குப் பாகிஸ்தான் கோரிக்கையையும் ஒன்றாக இணைத்துக் காந்தியோடு பேச்சுவார்த்தை நடத்துமாறு ஒரு கடிதம் எழுதினார்.

அப்போது ஜின்னா அதற்கு கோபம் கொப்பளிக்க பதில் தந்தார்.

அது வருமாறு: “எனக்கு எப்போதும் மதராஸ் மக்களிடம் பரிவு உண்டு. அவர்களில் தொண்ணூறு விழுக்காட்டினர் பிராமணர் அல்லாதவர். திராவிட நாட்டை அமைக்க நினைத்தால் அதைப்பற்றி அவர்களே முடிவு செய்ய வேண்டும். இதற்கு மேல் என்னால் ஏதும் சொல்ல முடியாது.

உங்களுக்காக நான் பேச முடியாது. உங்களுடையை நடவடிக்கைகளை கவனித்து வருகிறேன். உங்களது செயல்பாடுகளில் உறுதியில்லை” . (Dr.E,Sa.Viswanathan- The Political Career of E.V.Ramasami Naicker)

பெரியார் இந்தக்கடிதத்தில் தனக்குச் சாதகமாக உள்ள பகுதிகளை மட்டும் வெளியிட்டதாகவும் அதைக் கேள்விபட்ட ஜின்னா தனக்கும் பெரியாருக்குமிடையே நடந்த கடிதப் பரிமாற்றத்தை செய்தி ஏடுகளுக்கு கொடுத்ததாகவும் மேற்படி நூலாசிரியர் விசுவநாதன் கூறுகிறார்.


திராவிட நாட்டு விடுதலையை தமிழரல்லாத தெலுங்கர் கன்னடர், மலையாளி ஆகிய மூன்று இனத்தவரின் பெரும்பான்மையோர் விரும்பவில்லை என்பதை வடநாட்டில் பிறந்த ஜின்னாவால் கூற முடிகிற போது, தமிழ்நாட்டில் பிறந்த பெரியாரால் இதை ஏன் கூற முடியவில்லை என்பது தான் தமிழர்கள் மனதில் எழும்புகின்ற கேள்வியாகும்!

கீழ்கண்ட லிங்க்-ல் கொடுக்கபட்டுள்ள தகவல் இது தான்.



https://tamilthesiyan.wordpress.com/2017/04/16/பெரியாரின்-முகத்தில்-கரி/