நாத்திகம் ஏன் பேசபட்டது? [Natheism Part AAtheism]



நல்லதே நினைத்து உங்களால் வளரும் ஆன்மீகம் கூட கீழ்கண்ட இவர்களால் வளர்க்க முடியவில்லை. இதனால் தான் நாத்திகம் வந்தது தழைத்தது என்றே கூறலாம்.  நாத்திகம் ஏன் பேசபட்டதுஅதை பலரும் ஏன் காது கொடுத்து கேட்டார்கள்.  நாத்திகம் என்பது கடவுள் மறுப்பு மட்டும் தானா? அல் அதில் உள்ள ஆன்மீக உண்மையை தெளிய வைப்பதுமா?  புஷ்பம் அழகாக பூத்திருக்கிறது.  புய்ப்பம் அழகாக பூத்திருக்கிறது என்ற கவுண்டமணி காமெடி போல நாத்திகத்தில் ஆன்மீக விழிப்புணர்வு இல்லையா?அனைத்து ஆன்மீக, நாத்தீக அன்பர்களும் தெரிந்து கொள்ள வேண்டிய நற்பதிவு நாத்திகம் அழிய ! ஆன்மீகம் மேலும் செழிக்க ! நாங்க நாங்க தான்! நீங்க நீங்க தான்னு இருங்க! அதுவே போதுமானது. மெய்ஞானம் அடைவது வேறு! வேத மந்திரங்களை உச்சரிப்பது வேறு! Natheism is One Of The Part To AAthiesm. But God Is Never Exits.★Puratchi Kavighar Valavanur வை.ரா.SaravanaLingam Chetiyar B.A.,B.E.,D.M.E.,

 


வைராவீராராச என்று பல பெயர்களுடன்ஒரு பெயராய்ஓர் மனிதராய் என்னுள் கொண்டு உங்களில் ஒருவனாய் ஓர் Messenger ஆக கட்டுரை வாயிலாக All In One ஆக வரார் JMN -ன் ரிதம் F.M 605 108-ல் justicemayel.blogspot.com தளத்தின் வாயிலாக அஸ்திவாரங்களாகிய  வாசகர்களேஎன் கட்டுரை எதுவும் ending அல்ல அது மனதிற்கான Begining ஆகும்.


நாத்திகம் வளர காரணம் சாமியார்கள், பிராமணர்கள் தான் .  சாமியார்கள் அணியும் ருத்திராட்சம், திருநீறு அணிவது வேறு. நாம் அணிவது வேறு.  அதாவது அவர்கள் தீட்சை வாங்கி அணிவார்கள். தீட்சையிலேயே பல வகைகள் இருக்கிறது. அவர்களுக்கு ஆகமங்கள் போல சில Rules இருக்கிறது.

 

இதில் சிவலிங்க பூஜை செய்பவர்களும் இருக்கிறார்கள் அவர்கள் வேறு.

 

நாம் இந்து மதத்தில் இருக்கிறோம் என்று அணிகிறோம். நமக்கு Rules இல்லை.  ஏனென்றால் கழுதையும் குதிரையும் ஒன்றாகி விடுமா?  அது போலவே தியானமும். நாம் தியானம் செய்வது கட்டாயம் கிடையாது.  தீட்சை பெற்றுவிட்டால்,  கட்டாயம்.

 

 


இதையெல்லாம் புரியாமல் நீயும் நானும் ஒன்று என்றால் நாத்திகம் தான் வளரும்.

 

அதாவது அனைவரும் பெண் தான்.  ஆனால் அதில் அக்கா அம்மா தங்கைகளும் இருக்கிறாள்.  எல்லா ஒன்னு  நா எப்படி?

 

நாம் திருநீறு இடுவது பக்தி.  ஆனால் அவர்கள் இடுவது கட்டாயம்.  நாம் ருத்திராட்சம் அணிவது இந்து மதத்தில் இருப்பதால்.  அவர்கள் அணிவது நியமம்.

 

நியமமும் கட்டாயமும் உங்களுக்கு தான்.  தேவையில்லாமல் எங்களுக்குமென்றால் நாத்திகம் தான் தழைக்கும். 

 

இப்போதே பலர் விபூதி பூசுவதில்லை.  அதற்கும் ஏதாவது Rules இருக்கிறது என்று கூறியதாலா என்று தெரியவில்லை.  இப்படியே போனால் திருநீறு இடுவது, ருத்திராட்ச மாலை அணிவது யாராவது அணிந்த போட்டோக்களில் மட்டுமே தென்படும் நிலைக்கு ஆளாகிவிடும். 

 

செஸ் வீரன் திருநீறு இட்டது ஏன் பிரபலமானது.  ஏனென்றால் பலரும் இடாமல் இருப்பதால் தான்.

 

 

சைவம் சாப்பிடுவது சாமியார்கள், கோயில் பிராமணியர்களின் நியமம்.

 

சித்தர்கள் தன்னை சாமியார்கள் என கூறி கொள்வதில்லை ஏன்?  ஏனென்றால் அவர்கள் யாரிடமும் தீட்சை பெற்று சாமியார்கள், பிராமணிய நியமங்களை பின்பற்றவில்லை .

 

அதாவது காட்டிலோ, வீடு எனும் குடிலிலோ தியானம் செய்து அதில் மெய்ஞானத்தை உணர்ந்தவர்கள்.  ஏன் நானே தியானம் செய்து சில மெய் ஞானத்தை உணர்ந்தால் அது வேறு.  அதற்காக நான் சாமியாராகி விடுவேனா?  நீங்க நீங்க தான்!  நான் நான் தான்!  சித்தர்கள் சித்தர்கள் தான்! வள்ளலார் சாமியாரா!

 

நாத்திகம் அழிய பலவற்றை சாமியார்கள் , பிராமணர்கள் களைய வேண்டும்.

 

தற்போதைய கோயிலில் இல்லாத பிராமணர்கள் கடல் தாண்டி செல்கிறார்கள்.  அக்ரஹாரத்தை விட்டு வெளியேறி யாருக்கு வேண்டுமென்றாலும் வீட்டை விற்கின்றனர்.

 

கோயிலை தவிர இவர்கள் வேறு எங்கும் வேலை செய்ய கூடாது.  ஆனால் Call Centre முதல் அனைத்து துறைகளிலும் இருக்கிறார்கள். 

 

பல நியமங்களை கடைபிடிப்பது இல்லை.  ஏனென்று கேட்டால் நாங்கள் தான் கோயிலில் வேலை செய்யவில்லையே என்கிறார்கள்.

 

கோயிலில் தற்சமயம் வேலை செய்யாத அதோடு எந்தவித தீட்சையும் பெறாத, சிவலிங்க பூஜை செய்யாத பிராமணர்களுக்கு இந்த நியமங்கள் பொருந்துமா?

 

இது தவறென்றால் சொல்லுங்கள் தெரிந்து  கொள்கிறேன்.  இது நாத்திகம் அழிய பேசுவதே ஆகும்.  மற்றபடி இது உண்மையா, பொய்யா என தெரியவில்லை.

 

மேற்கண்ட தகவல் பொய் என்றால் பின்னர் எதனால் தான் நாத்திகம் வந்தது?  தழைத்தது.

 

நாத்திகம் ஏன் வந்தது?  என Youtube-ல் Search செய்யுங்கள்.  இதில் லிங்க் போட முடியவில்லை என்பதால் மெனக்கெட்டு அனுப்புகிறேன்.