வள்ளலார் சனாதனம் All Eternal law



வைராவீராராச என்று பல பெயர்களுடன்ஒரு பெயராய்ஓர் மனிதராய் என்னுள் கொண்டு உங்களில் ஒருவனாய் ஓர் Messenger ஆக கட்டுரை வாயிலாக All In One ஆக வரார் JMN -ன் ரிதம் F.M 605 108-ல் justicemayel.blogspot.com தளத்தின் வாயிலாக அஸ்திவாரங்களாகிய  வாசகர்களேஎன் கட்டுரை எதுவும் ending அல்ல அது மனதிற்கான Begining ஆகும்.



சுவாமியே சரணம் ஐயப்பா! ஓம் சரவண பவ!

சனாதனம் மனுநீதி உரசல்! உடன் இது ஓர் அசத்தலான அலசல்! மட்டுமே கீழ்கண்டவைகள்.

சனாதனம்:-

சமஸ்கிருத வார்த்தையான சனாதனதர்மம் என்பதற்கு 'நிலையான தர்மம்' (Eternal law) என்றே அர்த்தம். சனாதனம்என்ற வார்த்தை நிலையான என்ற பொருளைத் தருகிறது. மனு ஸ்மிருதி, பாகவத புராணம் போன்ற சமஸ்கிருத செவ்வியல் இலக்கியங்களில் இந்த வார்த்தை காணப்படுகிறது.

மனுதர்மம்:-

மனு தர்ம சாத்திரம் (சமசுகிருதம்:मनुस्मृति, மனுஸ்மிருதி) இந்துக்கள் பிறப்பு முதல் இறப்பு வரை வாழ்க்கையில் பின்பற்றவேண்டிய சடங்குகள், சம்பிரதாயங்கள், அற ஒழுக்க விதிமுறைகளை ஒழுங்குபடுத்திக் கூறும் நூல் ஆகும். இதனை சுவாயம்பு (மனு) எனும் பண்டைய வேத கால முனிவர் தொகுத்தார்.

 

இந்த நூலை பலர் பின்பற்றிருக்கலாம்.  இடை சொருகலும் நடந்திருக்கலாம்.  இன்னும் என்னவென்னாலும் நடந்திருக்கலாம் நடக்காமலும் இருக்கலாம் பிரச்சனை அதுவல்ல.

 

இவையெல்லாம் நாயன்மார்களும் ரிஷிகளும் முனிகளும் சித்தர்களும் வெளிப்படாதவரை மட்டுமே.  அதோடு ஜீவசமாதி அடைந்தவர்கள் இல்லாத வரை அது பின்பற்றபட்டிருக்கலாம்.

 

வள்ளலார் முதல் காசியில் உள்ள கால பைரவர்கள், அகோரிகள்  பலர் இப்புவியில் பலவற்றை கூறாதவரை இருந்திருக்கலாம்.

 

ஆழ்வார்கள்முதல் ராமானுஜர் வரை அவதரிக்காத வரை அவர்கள் ஆன்மீக சொற்பொழிவு சொல்லாத வரை இருந்திருக்கலாம்.

 

இவர்களுக்கு பிறகு சனாதனம் ஒவ்வொரு மேற்கண்ட பிரிவுகளை பின்பற்றுவதில் என்று தனித்தனியானது. 

 

சனாதனம் அர்த்தம் நிலையானது என்று பொருள்.  அது மேறகண்டவர்களை பின்பற்றும் போது அவர்களின் சனாதனமே நிலையானது என்று ஆனது.

 

திருவாவடுதுறை ஆதினம், மதுரை ஆதினம் முதல் பல ஆதினங்களுக்கு தனித்தனி சனாதர்மங்களும் மனுதர்மங்களும் பின்பற்றபடுகிறது.

 

மனுதர்மம் அர்த்தம் சடங்குகள் சம்பிரதாயங்கள்  என்பதை முறையாக வகுக்கபட்டதே மனுதர்மம் ஆகும்.

 

இந்த சடங்கு சம்பிரதாயங்களும்  மேற்கண்ட பிரிவுகளில் மாறுபடும்.

 

நம் பொதுவான இந்துமக்களுக்கு அவரவர் முன்னோர்கள் கூறியதே சனாதனம் மற்றும் மனுதர்மம் ஆகும்.

 

குல தெய்வ வழிபாடு முதல் பல கோயில்களுக்கான ஆகம விதிகளே மாறுபடுகிறதே ஏன்? லட்சுமி நரசிம்மர் கோவிலுக்கு சட்டையை கழற்றியே சென்று ஆலய மூலவரை தரிசிக்க முடியும். 

 

இம்மாதிரி தற்பொழுது பல வகைகளில் சனாதனம் மனுதர்மம் வேறுபடுவதால் தற்போதைக்கு இதை தான் மனுதர்மம் சனாதனம் என்று அருதியிட்டு உறுதியாக கூற முடியாது.

 

அவரவர்களுக்கு தகுந்தார் போல் சொல்லி கொண்டு வாழ வேண்டியது தான்.

 

தொழில் முதல் கல்யாணம், ஈம சடங்கு வரை ஒவ்வொருவருக்கு தனித்தனியாக உள்ளது.

 

ஒரு மனித பிணத்திற்கே புதைப்பது எரிப்பது என்று தனித்தனி சடங்குகள் உள்ளது. கல்யாணம் ஆன சம்சாரி, திருமணம் ஆகாத பிரம்மச்சாரி என்று உள்ளது. பிரம்மச்சாரிக்கு கருமாதி கிடையாது.  வீட்டிலேயே பூஜை புணஸ்காரத்தோடு முடிந்துவிடுகிறது.

 

அதனால் இப்பொழுது நான் தான் இந்து மதத்தின் தலைவன் நான் கூறுவதை அனைத்து இந்து மக்களும் பின்பற்றியே ஆக வேண்டும் என்றெல்லாம் கூற முடியாது.  அதோடு எந்த இந்திய சட்டமும் கிடையாது.

 

எங்கையாவது எதையாவது சொல்லி அடக்குமுறை ஏவபடலாம் அவ்வளவே. அந்த அடக்கு முறை என்பது எப்பொழுதும் இது இல்லையென்றால் வேறு ஏதாவது சொல்லி அரங்கேறி கொண்டே இருக்கும்.  அது அடங்காது.

 

நம்முடையதை சரியோ தவறோ குற்றம் சொன்ன வெள்ளையர்கள் வேறு பெயரில் அடிமை படுத்த முயற்ச்சிக்கவில்லையா? 

 

மொத்தத்தில் அழிக்க முடியாதது மற்றும் அடங்க மறுப்பது இந்த அடக்கு முறை மட்டுமே.  அடிமைத்தனமும் அடிமை பட்டு மூலையில் முடங்க மறுக்கிறது. 

 

இவைகள் எப்பொழுதும் எங்காவது எந்த பெயரிலாவது இருந்து கொண்டே இருக்கும். எதுவும் இல்லையென்றால் ஏற்ற தாழ்வுகளில் அரங்கேறுகிறது. இது விதிவிலக்கில்லா விதி போல என்றும் கூறலாம்.

 

இதில் கூறபட்டுள்ள கருத்துக்கள் அனைத்தும் உண்மையா பொய்யா என தெரியவில்லை.  இது ஓரளவிற்கு இதை பற்றி தெளிவாக்க எழுதிய  கையேடு போன்ற பதிவே இது.ராஜ தர்மமே சேதுபதிகளுக்கும் சேர சோழ பாண்டிய பல்லவர்களுக்குள்ளேயேமாறுபடுகிறது வேறுபடுகிறது.ராஜ தர்மம் ஒவ்வொரு மன்னனுக்கும் அரசர்களின் வாரிசுகளுக்கும் ஒரு சிலவைகள் ஒற்றுமையாக இருக்கிறது.  பல வகைகளில் மாறுபடுவது குறிப்பிடதக்கது. ராமர் கிருஷ்ண அவதாரங்களிலேயே ராஜ தர்மங்கள் மாறுபடுகிறது என்பது குறிப்பிடதக்கது. 

 

சனாதனம் மனுதர்மம் என்பது மனிதனுக்கான நிவாரணம் அல்ல.  அது வழிகாட்டு நெறிமுறைகளே.இது தற்போதைய தலைமுறையில் எக்கசக்கமாக வழிகாட்டு நெறிமுறைகள் குவிந்துவிட்டது.  இதை ஒழுங்காக ஒழுங்கீனம் இல்லாமல் ஒழுக கடைபிடித்து கரை சேர்வதே இப்போது பெரும்பாடாகி உள்ளது.  அந்த காலத்தில் திருநீறு பட்டையிட்டு ருத்திராட்சம் அணிந்தால் அது அவன் வணங்கும் கடவுள் மீது மிச்சமில்லாமல் வைத்திருக்கும் பாசம் விஸ்வாசம் விகரனையோடு என்று அர்த்தம்.  ஆனால் தற்பொழுது இதை அணிந்தால் சாமியார் ஆக போகிறாயா என்று கேட்கிறார்கள்.  உடனே சாமியாருக்கான நிஷ்டைகளை உபநிதங்களை நம் மீது திணிக்க முற்படுகிறார்கள்.  இதுவே தம்மதத்திற்குள் உள்ள பெரிய சாபக்கேடு தற்போது.  திருநாமம், விபூதி பட்டை, ருத்திராட்சம், தாமரைமாலை, கருங்காலிமாலை, ஷாலிகிராம மாலை ஸ்படிக மாலை என்பதெல்லாம் சிவ விஷ்ணுவின் சின்னங்கள்.  அதாவது இந்துமதத்தின் அடையாளங்கள்.  ஆனால் இதை பின்பற்றும் ஒருவர் இந்த சமுதாயத்தின் கேள்விகளுக்கு அஞ்சியே  ஒதுங்குகின்றனர்.  போதாகுறைக்கு கல்யாணம் ஆகாதவன் அணிந்து பெண் பார்க்க சென்றால் பெண் கொடுப்பார்களா என மகனை பெற்ற குடும்பத்தார்கள் அஞ்சுகின்றனர்.  இதனை முதலில் ஒழிக்க வேண்டும்? 

களைய வேண்டும்?

 

சனாதன ஒழிப்பு அழிப்பு என்பது நடவாத காரியம்.  மனுதர்மத்தை அழிக்க புகார் மனு அளித்தாலும் செல்லாது.  ஏனென்றால் அது ஓர் சுதேசி போன்று குடியரசு பெற்று சுதந்திரமாக வலது கரமாக மக்களிடம் அழியாமல் ஒழியாமல் இருப்பது.  வரலாற்று சின்னங்களை பாதுகாப்பதும் நம் பண்டைய இன்றைய கலாச்சாரம் பண்பாட்டை காப்பாற்றி மீள செய்வது இறைவன் மீதான பக்தியை மேலோங்க செய்வது ஒவ்வொரு இந்து மதத்தவனின் கடமையாகும். மொழியை காப்பது முதல் தமிழனின் பெருமைகளை காப்பது வரை இது அனைத்தும் அனைவரின் பொறுப்பாகும். தேசபற்று முதல் குடும்ப பாரம்பர்யம் வரை பரம்பரையாக தலைமுறையாக பேணி பாதுகாப்பது அத்தியாவசியமாகும்.  துளசி மாடம் முதல் வேப்பிலை வில்வ மரம் வரை தேக்கு போன்ற மன உறுதியுடன் வளர்த்து கொடுக்க வேண்டியது அனைவரின் முறையான கடமையாகும். இதுவும் ஒரு வகையில் சனாதனமே மனுதர்மமே.  சனாதனம் என்றால் நிலையானது. மேற்கண்டவற்றை நிலைக்க செய்தால் அதுவும் சனாதனமே.  மனுதர்மம் என்றால் வாழ்வியல் வழிகாட்டு நெறி முறைகள்.  இதுவும் வாழ்வியல் வழிகாட்டு நெறி முறைகள் தானே மாற்று கருத்தில்லாமல். இந்த கட்டுரை ஒரு புரிய வைக்கும் முயற்ச்சியே இது.  மற்றபடி இது யாரையும் குறிப்பிடுவன அல்ல.  குறிப்பிடவும் அல்ல.  இனி அனைவரும் அனைத்துக்குமான சனாதனம், மனு தர்மத்தை பின்பற்றுவோமா? இவ்வளவு தாங்க?  இதுக்கு போய். "ஏய்னு" சொன்ன பட கதையாகி அது பலரை கிளர்ச்சி எழ செய்து எதுக்கு தேவையில்லாதது.  ஆனால் இதுக்கு தான் இந்த விளக்கவுரை என்று முன்னுரை எழுதாதீர்கள்.இதை தர்க்கம் செய்யாமல் இதை பல நல்ல மனிதர்களிடம் விளக்கம் கேட்டு புரிந்து தெளிந்து பயனியுங்கள்.  ஜெயம் அபாயம் இல்லாமல் உபாயம் தேடுவதிலும் ஜெபமாக உள்ளது பெரும் பயனாக. 

நாம் லட்சியத்துடன் எதை நோக்கியும் கொக்கி போட்டு பணி செய்யலாம்! ஆனால் அது தீராத பிணியாகவோ   கொசு கடித்து பாதித்த டெங்கு மலேரியாவாக தான் ஆக கூடாது. ஏனென்றால் எதுவும் இக்கட்டான நிலமைக்கு அழைத்து செல்ல கூடாது.  அப்படி அழைத்தால் ஏதோ தவறு தம்மிடம் இருக்கலாம் வாய்ப்பு இருக்கிறதல்லவா?  திகவினர் கரைத்து குடிக்காத இந்து மத நூல்களே இல்லை எனலாம்.  பிராமணர்களைவிட ஆன்மீகவாதிகளை விட ஒரு படி மேலே தார்பரியத்துடன் கூறும் ஆற்றல் இவர்களிடமே உள்ளது.  நியாயமாக பார்த்தால் அவர்களே இதற்கு தகுந்த இது போன்ற உண்மையை பதிலை கூறியிருக்க வேண்டும்.  ஆனால் அவர்களுக்கே தெரியவில்லை என்பதே ஆச்சர்யம் தான். எதுவாயினும் அதை திமுகவில் இருந்து வந்த நானே கூறுகிறேன். உதய சூரியன் எங்கிருந்து உதித்தாலும் உதயம் தானே! பிரிந்தாலும்! சேர்ந்தாலும் அண்ணன் தம்பி நீயும் நானும் தான் என்பது போல. உன் மீது பாசம் வைக்க! நேசம் வைக்க! நானிருக்கிறேன்! நான் உன்னில் உதித்த ஆலமர விழுதடா! இம்மாதிரி சொன்னாலே எனக்கு பல மாதிரி குடைச்சல் குடைந்தெடுத்து கடைந்தெடுத்து வருது.  அதனால தான் நெஞ்சை கசக்கி பிழியுற நக்கி ஈரம் வர கூடிய வசனங்களை வசந்தம் போல கூறுவதேயில்லை.திமுகனு சொன்னாலே எனக்கு எதுவும் நல்லது நடக்க மாட்டேங்குது.

 

ஒரு சில இடங்களில் ஆன்மீக தளங்களில் மடங்களில் சென்று தங்கி அதன் பிறகு விரதம், தரையில் துண்டு விரித்து படுப்பது இரண்டு வேலை குளிப்பது நியம சடங்கு! இதில் மடங்கு! என்றால் தான் சிலவைகள் கிட்டும்.  So All Devotional Items Eternal Law.  You Understand! But I Understand! ★Puratchi Kavighar Engineer Valavanur ராசாலி V.ரா.SaravanaLingam Chetiyar B.A.,B.E.,D.M.E.,

குறிப்பு:-

எல்லாரும் சமமென்றால் ஆட்சி கட்டிலில் அதிகார நாற்காலியில் யார் தான் அமர்வது?  அனைவரும் தலைவர்களென்றால் தொண்டர்கள் யாராக இருப்பார்கள்?  நீயும் நானும் ஒன்னு! அப்படியென்றால் நானே தலைவன் என்பார்கள்.

 

அனைவரும்   சாமியென்றால் இறைவனுக்கு யார் பூஜை செய்வது?

 

எல்லாருமே ராஜாவென்றால் யார் தான் சாமரம் வீசுவது?

 

அனைவரும் முதலாளியென்றால் யார் தான் தொழிலாளியாக உழைப்பது?  வேலை செய்வது?

 

யோசியுங்கள்!  நீ தான் யோசிக்கனும் என்கிறீர்களா?  நல்லா புரிஞ்சுது! புரியரமாதிரி இருந்தது! இந்த குறிப்பால குட்டையை குழப்புவது போல் என் மூளை சற்று குழம்புது என்கிறீர்களா?  சரி ok குறிப்பை நீக்கிவிடுங்கள்.  இதென்ன சனாதனமா? மனுதர்மமா?  அதெல்லாம் கிடையாது என்பதற்கு.  ஏற்று கொண்டே ஆக வேண்டும் என்பதற்கு.  ஏதோ தோணூச்சு கேள்விகளாய் எழுதிட்டேன்.  இதென்ன வேள்வியா?  இது சுல்லி போன்றது மட்டுமே.  மனதில் உள்ள பில்லி சூன்யங்களை சூரசம்ஹாரம் செய்து அமைதியுடன் வாழவே அனைத்தும்.

 

மறுபடியும் குழப்பறாங்க என்கிறீர்களா! Ok நன்றி வணக்கம்.  இதுக்கே இப்படி இப்படி.  This is Practical Issues.

சனாதனம் மனுநீதி உரசல்! உடன் இது ஓர் அசத்தலான அலசல்! மட்டுமே மேற்கண்டவைகள்.

மேற்கண்டது முதல் குறிப்பு வரை உண்மையா பொய்யா என தெரியவில்லை.


 2

 

"ஓம் நம சிவாய"

வள்ளலார் திரைபடத்தில் இருந்து நான் புரிந்து கொண்டது.

"வள்ளலார் ஒரு சிறந்த பண்பட்ட ஆன்மீகவாதி". அருட் பெருஞ் ஜோதி! தனி பெருங் கருணை! ஊதர சங்கை ஊதிட்டோம் பிறகு உங்கள் விருப்பம்.  ஊழ் வினை, விதி யாரை விட்டது அவர்களுக்கா புரிந்து மனம் ஓத்து நாட்டம் அதிகமாகட்டும்

என விட்டுவிடுவார்கள் -Puratchi Kavighar Engineer Rajali Valavanur ரா.C.SaravanaLingam Chettiyar B.A.,B.E.,D.M.E.,

 

செட்டியார் சிவ பக்தி மிக்க ஒரு நபர் ஆவார்.  அவர் கதாகாலட்சேபத்திற்கு பணம் செலவழித்து மக்கள் மத்தியில் பக்தியை நிலை பெற செய்யும் நபர் ஆவார்.  பணம் செலவழித்து என்றால் கதாகாலேட்சபம் பண்ணுபவருக்கும் பணம் கொடுப்பார்.  அதில் அவர்கள் குடும்பம் வாழும்.  ராமலிங்கம் என்கிற வள்ளலார் அண்ணன் தான் அந்த ஊரில் கதாகாலேட்சபம் செய்வார்.

 

இவர் அண்ணன் உடல்நிலை சரியில்லாமல் கதாகாலேட்சம் செய்ய முடியாததால் இவருடைய தம்பியான ராமலிங்கத்தை அழைத்து நடத்துகிறார்.  அதன் பிறகு அது அவருக்கு மிகவும் பிடித்து போய் விடுகிறது.  உடனே ராமலிங்கம் அண்ணனிடம் நீ வேண்டாம்.  அவரையே தொடர்ந்து அனுப்பு.  நான் உங்களுக்கும் சேர்த்தே பணம் தருகிறேன் என்று கூறி அவரையே ஆன்மீக சொற்பொழிவு நடத்த முனைகிறார்.  பக்தியே முக்கியம் பணம் ஒரு பொருட்டல்ல என தொடர்கிறார்.

 

செட்டியார் தான் வள்ளலாரை சிறு வயதில் இருந்தே இவரை கதா காலேட்சபம் நடத்த முழு பண உதவி வழங்கி அவருக்கு ஆதரவு அளித்து  ராமலிங்கத்தில் இருந்து வள்ளலார் ஆக மேம்பட  செய்தார்.

 

இவர் எப்படி மேம்பட செய்தார் என்றால் வள்ளலார் ஆரம்பத்திலேயே தியானத்தில் மூழ்கவில்லை.  "அருட் பெருஞ் சோதி தனி பெருங் கருணை" என்று கூறவில்லை.

 

அவர் முதலில் சிவனை பற்றி கதாகாலட்சேபம் சிறுவயதிலேயே நடத்தி அதன் பிறகு பல தெய்வங்களின் கோயில்களுக்கு சென்று அதிலிருந்து கொஞ்சம் வேகமாக மேம்பட்டு ராமலிங்கம் என்பவர் வள்ளலார் ஆனார்.

 

கடைசி வரை இவருக்கு ஆதரவாக இருந்தவர் இந்த செட்டியார் தான்.  அவ்வளவு ஏன் வடலூர் வள்ளலார் ஆன்மீக மடத்தையே அவர் தான் நிறுவினார்.  இருந்த பொழுதும் அவருக்கு இவர் கூறுவதில் பெரிதாக நாட்டமில்லாமல் இருந்தார்.  ஒரு கட்டத்தில் இவருக்கு அவருக்கும் இவர் கூறிய ஆன்மீக கருத்துகளில் கருத்து வேறுபாடு வருகிறது.

 

அப்போது அவர் கூறியது தான் பண்பட்ட ஓர் ஆன்மீக வாதி என அவரை நிரூபித்து காட்டியது.

 

யாரையும் வள்ளலார் பின்பற்ற சொல்லி கட்டாயபடுத்தவில்லை வற்புறுத்தவில்லை. 

 

ஒரே வார்த்தை தான் நான் கூறுவது இப்போது புரியாது.  புரியும் போது நீங்கள் வருத்தபடுவீர்கள் வள்ளலார் கூறியதை கேட்கவில்லையே என்று கூறினார்.

 

பண்பட்ட ஆன்மீகவாதியின் நடத்தை என்பது யாரையும் வற்புறுத்தாது கட்டாயபடுத்தாது.  உன் ஊழ் வினை  அல்லது விதி யாரை விட்டது  என்று அவர்களாக புரிந்து அவர்கள் மனம் ஒத்து நாட்டம் அதிகமாகட்டும் என விட்டுவிடுவார்கள்.

 

ஊதர சங்க ஊதிட்டோம் பிறகு உங்கள் விருப்பம் என்பது போல.

 

இது அனைத்தும் உண்மையா, பொய்யா என தெரியவில்லை.



3)

இங்கு ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு விளைவை ஏற்படுத்தியுள்ளார் இறைவன்.

இறைவனாகிய ஈசனின் திருவிளையாடல் ஒரு மனிதர் ஒரு ஆதாரம் என்ற விகிதாசாரமோ கூட்டி கழித்து பார்த்தால் நீ நினைத்தால் மட்டுமே எல்லாம் சாத்தியம்!  எல்லாம் பாத்தியம்! என தெளிவாக நெற்றி பொட்டில் அடித்தது போல் கூறுகிறாய்.  அனைத்தும் நீயே புரிகிறது இறைவா!  உனக்காக கட்டுரையெல்லாம் எழுதுகிறேன் என்னையும் கண்டு கொள்ளப்பா!

கலிவரதா போற்றி போற்றி! அரோகரா!  கோவிந்தா! கோவிந்தா!

என்னே உன் திருவிளையாடல்! மெய் சிலிர்க்கிறது! அனைத்தும் நீயே என்பார்கள் அது போல அனைத்தும் உண்மையே என புரிய வைத்த ஒரே மதம் இந்து மதம்! ஒரே கடவுள் ஈசன்! கலி வரத விஷ்ணு! இந்த ஆன்மீக போதையேற்றும் பக்தி பழ ரசத்தை  Geniune Liquid-ஆக, Original-ஆக உங்களுக்கு அர்பணிக்கிறேன்.  கலிவரத பெருமானுக்கு சமர்பணம் விஷ்ணுவின் தகவல்கள்.  தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான் நரசிம்மா!

by Valavanur V.ரா.SaravanaLingam Chettiyar B.A.,B.E.,D.M.E.,D.C.A.,

 

ஒரு சில பக்தியாளன் கோயிலுக்கு சென்றால் அவன் கேட்டது சொத்தோ சுகமோ, அமைதியோ, வீடோ, பொருளோ கிடைக்கிறது.

 

ஒரு சில பக்தியாளன் கோயில் குளத்திற்கு சென்றால் முக்தி கிடைக்கிறது.

 

ஒரு சில பக்தியாளன் கோயிலில் வழிபட்டால் சித்தி கிடைக்கிறது.

 

ஒரு சில பக்தியாளனுக்கு வள்ளலாரை போன்றவர்களுக்கு இது போல் உண்மை புரிகிறது .

 

 

திருப்பதி போனா லட்டு!

பழனி போனா பஞ்சாமிர்தம்!

பெருமாள் கோயில் போனா துளசி!

சிவன் கோயில் போனா திருநீறு! என்பார்களே அது போல மனிதர்கள் பக்தியில் பலவிதம்! அதில் ஒரு சிலரை தேர்ந்தெடுத்து உண்மையை உரக்க சொல்வது ஒரு விதம்!

 

என்னே உன் திருவிளையாடல்! மெய் சிலிர்க்கிறது! அனைத்தும் நீயே என்பார்கள் அது போல அனைத்தும் உண்மையே என புரிய வைத்த ஒரே மதம் இந்து மதம்! ஒரே கடவுள் ஈசன்!

 

இறைவனாகிய ஈசனின் திருவிளையாடல் ஒரு மனிதர் ஒரு ஆதாரம் என்ற விகிதாசாரமோ:

 

மரணம் எல்லோருக்கும் உண்டு என்றால் கிடையாது சீரஞ்சிவியாக வாழ முடியும் என்ற நிரூபணத்திற்கு அனுமான். மனிதனால் பறக்க முடியும் பல சாலியாக இருக்க முடியும் என்பதற்கும் அனுமான்.

 

நியாயமா பெருமாள் பக்தர்கள் கீழ்கண்டதை எழுதனும். 

 

நான் சிவன Cover பண்ணா, யாராவது பெருமாள Cover பண்ணலாமே உண்மையான ஆதாரத்துடன்.  சிவ பக்தியோடு விஷ்ணு பக்தியும் உண்மையான ஆதாரமுடன் பரவட்டுமே.

 

தரிசனம் தந்தாய்! சமீபகாலத்தில் மூடிய கண் திறந்தாய் கலிவரத பெருமானே! 

 

கலிவரதபெருமானுக்காகநான் எழுதுகிறேன். 

 

"ஆழ்வார்கள் போற்றி! போற்றி! பாண்டுரங்கா போற்றி! போற்றி!

கலிவரத பெருமானே போற்றி! போற்றி!"

 

தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான் கடவுள் என்பதை எடுத்து கூறி இது உண்மை என்று நரசிம்ம அவதாரம் எடுத்து புரிய வைக்க நரசிம்மா உன்னை தொழுகிறேன்.

 

ராமாயணத்தில் எவ்வளவு பலம் பொருந்தியவர்கள் எல்லாம் இறைவன் படைத்துள்ளார்.நான் மனது வைத்தால் எதுவும் சாத்தியமே என ஒரு வாலி, ஒரு ராவணன், ஒரு கும்பகர்ணன் என பராக்கிரமசாலிகளை படைத்து ஆதாரமுடன் நிரூபித்தார்.

 

மகாபாரதத்தில் குழந்தை பருவத்தில் பல அரக்கர்களையும், பால்ய பருவத்தில் வெண்ணை, கோபியர்கள் என கூதூகலமாகவும் அதோடு கம்சனை வதம் செய்தும், பிறகு மகாபாரதம் என்று குருஷேத்திர போரில் தனி ஒரு மனிதனின் ஆலோசனையால் அழிக்க முடியாத பீஷ்மர் முதல் கர்ணன் வரை இறக்க செய்து பொளந்து கட்டி நிரூபித்தவர் ஒரு கிருஷ்ணன்.

 

இப்படியாக ஒரு ஆதாரத்திற்கு ஒருவன் என்ற விகிதாசாரமே  அனைத்திலும் இருக்கிறது. 

 

கூட்டி கழித்து பார்த்தால் நீ நினைத்தால் மட்டுமே எல்லாம் சாத்தியம்!  எல்லாம் பாத்தியம்! என தெளிவாக நெற்றி பொட்டில் அடித்தது போல் கூறுகிறாய்.  அனைத்தும் நீயே புரிகிறது இறைவா!  உனக்காக கட்டுரையெல்லாம் எழுதுகிறேன் என்னையும் கண்டு கொள்ளப்பா!

 அரோகரா!  கோவிந்தா! கோவிந்தா!

 

இந்த ஆன்மீக போதையேற்றும் பக்தி பழ ரசத்தை  Geniune Liquid-ஆக, Original-ஆக உங்களுக்கு அர்பணிக்கிறேன்.  கலிவரத பெருமானுக்கு சமர்பணம் விஷ்ணுவின் தகவல்கள்.

 

இது அனைத்தும் உண்மையா, பொய்யா என தெரியவில்லை.