போலி சாமியார்கள் Clear Fraud Preachers

 

விண்ணை கடந்து இப்பூவுலகில் யுகம் யுகமாய்  காலங்கள் உருண்டோடி பல நூற்றாண்டுகளையும், ஆண்டாண்டுகளையும் தாண்டி வழிவழியாய் தெய்வத்திடம் தன்னை கிடத்தி ஐக்கியமடைய சைவ, வைணவ   நெறிமுறைகளை வைராக்யமாய் சமரசமின்றி பின்பற்றியும், கடைபிடித்தும்மது குடிக்காமலும், விலை மாதுவிடம் கூடாமலும், மாமிசம் என்கிற புலால்  உண்ணாமலும், திருக்கோயிலில் வழிபட்டும், அர்ச்சனை செய்தும், யாகம், ஹோமம் செய்தும், வீட்டில் பூஜை செய்தும், முக்கிய தினங்களான பிரதோஷ, ஏகாதேசி, சிவராத்திரி அன்று விரதம் இருந்தும், ருத்திராட்சம், லிங்கம் அணிகலனை நெஞ்சு குழியிலும், மார்பிலும் ஆபரணமாக பணிவன்புடன் லிங்காயத்துகளாக, சிவனடியார்களாக  அணிந்து, காது என்பதில் கடுக்கண் அணிந்து, கோமணம் ஆடையால் உடலின் முக்கிய பாகமான மூலாதாரத்தை மறைத்து, நெற்றியில் விபூதி திருநீர் பூசி, நாமம் தரித்து, செந்தூர குங்கும பொட்டுயிட்டு , கமண்டலமுடனும், தண்டமுடனும் பல விதங்களில் முனிவர்களாக, ரிஷிகளாக, பண்டாரங்களாக, அகோரிகளாக, சித்தர்களாக, பரதேசிகளாக,  நாயன்மார்களாக, ஆழ்வார்களாக, சாதுக்களாக, தவசிகளாக, சன்னியாசிகளாக, பிரம்மச்சரியம் பூண்டவர்களாக, பஜனை பாடுபவர்களாக, தீவிர பக்தகோடிகளாக, ஓதுபவர்களாக இறைவனை யாக்கையுடன் ஓதி செவ்வனே ஆழ்ந்து பக்தி பெரு வெள்ளத்தில் நீந்தி  இதயத்தில் பெருத்த நிம்மதியுடன், ஆனந்தத்துடன் மனதில் சாந்தியுடன் நவரச சித்த உணர்வு கலந்து பல்லக்கில் தூக்கி சுமந்து அதில் ஊடல் மூலமாக வரும் சரசம் இன்பத்தை விட உச்சபட்சமாய் மகிழ்ந்து மற்றும் சுடர் விட்டு பிரகாசமாய்  ஜொலித்து மின்னிக் கொண்டிருக்கும் மேன்மை மிக்க மேதகு ஆன்மீகத்தை தூக்கு மேடை ஏற்றிய சில மொட்டை அடிக்கும்  போலி சாமியார்கள் இருக்கும் வரை நல்லதொரு பொன்னான ஓர் ஆன்மீகம் தழைக்காது.   "கொடுக்கும் கை வாங்கும் கை இருக்கும் வரை போலி சாமியார்கள்" [Crystal Clear Mic Speech Of "Super Delux  Fraud Preachers"]★Puratchi Kavighar Valavanur V.ரா.SaravanaLingam Chettiyar B.A.,B.E.,D.M.E.,


ஓம் லிங்கோத்பவாய நமஹ

வைரா, வீரா, ராச என்று பல பெயர்களுடன்ஒரு பெயராய்,ஓர் மனிதராய் என்னுள் கொண்டு உங்களில் ஒருவனாய் ஓர் Messenger ஆக கட்டுரைவாயிலாக Justicemayel.blogspot.com  தளத்தின் வாயிலாக அஸ்திவாரங்களாகிய  வாசகர்களே. என் கட்டுரை எதுவும் ending அல்ல அது மனதிற்கான Begining ஆகும்.

போலி சாமியார்கள் HD Images என  Google Search கொடுத்து Images-ஐ Click செய்யுங்கள்.  என்னடா இது என்பது போன்ற Images Waiting.

விண்ணை கடந்து இப்பூவுலகில் யுகம் யுகமாய் காலங்கள் கடந்து நூற்றாண்டுகளையும், ஆண்டாண்டுகளையும் தாண்டி வழிவழியாக தெய்வத்திடம் தன்னை கிடத்தி ஐக்கியமடைய சைவ, வைணவ   நெறிமுறைகளை வைராக்யமாய் சமரசமின்றி பின்பற்றியும்மது குடிக்காமலும், விலை மாதுவிடம் கூடாமலும் மாமிசம் என்கிற புலால் உண்ணாமலும், திருக்கோயிலில் வழிபட்டும், அர்ச்சனை செய்தும், பிரதோஷ, ஏகாதேசி, சிவராத்திரி போன்ற முக்கிய தினங்களில் விரதம் இருந்தும், யாகம், ஹோமம் செய்தும், வீட்டில் பூஜை செய்தும், ருத்திராட்சம், லிங்கம் அணிகலனை நெஞ்சு குழியிலும், மார்பிலும்  ஆபரணமாக பணிவன்புடன் லிங்காயத்துகளாக,  சிவனடியார்களாக அணிந்து, காது என்பதில் கடுக்கண் அணிந்து,  கோமணம் ஆடையால் உடலின் முக்கிய பாகமான மூலாதாரத்தை மறைத்து, நெற்றியில் விபூதி திருநீர் பூசி, செந்தூர குங்கும பொட்டுயிட்டு, நாமம் தரித்து, கமண்டலமுடனும், தண்டமுடனும் பல விதங்களில் முனிவர்களாக, ரிஷிகளாக, பண்டாரங்களாக,அகோரிகளாக,சித்தர்களாகபரதேசிகளாக, நாயன்மார்களாக, தவசிகளாக, சாதுக்களாக, சன்னியாசிகளாக, பிரம்மச்சர்யம் பூண்டவர்களாக, ஜீவசமாதி அடைந்தவர்களாக, ஆழ்வார்களாக, பஜனை பாடுபவர்களாக, தீவிர பக்தகோடிகளாக, ஓதுபவர்களாக இறைவனை யாக்கையுடன் ஓதி செவ்வனே ஆழ்ந்து பக்தி பெரு வெள்ளத்தில் நீந்தி  இதயத்தில் பெருத்த நிம்மதியுடன், ஆனந்தத்துடன் மனதில் சாந்தியுடன், நவரச சித்த உணர்வு கலந்து பல்லக்கில் தூக்கி சுமந்து அதில் ஊடல் மூலமாக வரும் சரசம் இன்பத்தை விட உச்சபட்சமாய் மகிழ்ந்து மற்றும் சுடர் விட்டு பிரகாசமாய்  ஜொலித்து மின்னிக் கொண்டிருக்கும் மேன்மை மிக்க மேதகு ஆன்மீகத்தை மேலும் மேலோங்க செய்யும் நல்ல சாமியார்கள் இருக்கவே செய்கின்றனர்.  இது அவர்களை பற்றியது அல்ல.  அதோடு அவர்களை குற்றம் சாட்டுவதும் அல்ல.  அதோடு இது எந்த தனி நபரையும் குறிப்பிடுவன அல்ல.

சாமியார்கள் என்று இந்தியா முழுக்க உள்ளனர்.  இதில் எவர் ஒருவராவது எந்த வித COMPLIANT இல்லாமல் உள்ளனரா?  அதோடு இதில் எத்தனை பேர் கோடிகணக்கான பணமும், சொத்தும் இல்லாதவர்கள் என்று பார்த்தால் வெகு சிலரே இருப்பார்கள். இதற்கு காரணம் மக்களும், அரசாங்கமும்தான். கொடுப்பவர்கள் இருக்கும் வரை வாங்குபவர்கள் இருந்து கொண்டே தான் இருப்பார்கள். இதனை கட்டுபடுத்தும் கடமை C.M, P.M-யிடம் உள்ளது. இவ்வாறு சாமியார்கள் தனியான ஒரு மேதகு ஆன்மீக அமைப்பு உருவாக்க கடுமையான PROCEDURE-கள் உள்ளதா?  எளிமையான முறையில் இருப்பதால் தான் ஆன்மீக TRUST எளிதாக OPEN செய்து கோடிகணக்கில் பணம் பெற முடிகிறது. அது போல் எந்த ஒரு பெண்ணையும் தன் ஆசிரமத்திற்கு கொண்டு செல்வது, மொட்டை அடிப்பது முதல் பல விஷயங்கள் எவ்வாறு அரங்கேறுகிறது.  கடுமையான சட்டங்கள் இல்லாததால் தான் இவ்வாறு நடைபெறுகிறது. தனி ஒரு நபர் PERSONAL-ஆக எதாவது இருந்தாலே ஜாதி, மதம் என்றெல்லாம் கூறுகிறோம்.  இதில் ஏன் யாரையும் காப்பாற்ற போராடவில்லை?  இந்த இடங்களில் அவர்கள் இஷ்டத்திற்கு பெண்களை நடத்துகின்றனர்.  இதுவெல்லாம் அடிமை தனத்தில் வராதா?  இந்த அடிமை விலங்கை உடைக்க யாரும் முயற்சி செய்யாதது ஏன்?  இவர்கள் இந்தியா முழுக்க தன்னுடைய ஆன்மீக மடம் என்ற பெயரில் பெண்களை அடிமைபடுத்தி இருக்கிறார்களே இதை கேட்க ஏன் ஆள் இல்லை?  சரச சாமியார்கள் List அதிகமாக உள்ளதே இதை தடுக்கவும், அந்த பெண்களை இவர்கள் ஏன் காப்பாற்றவில்லை?  அந்த மடத்தில், இயக்கத்தில் உள்ளவர்களும் ஏன் காப்பாற்றவில்லை?  இதில் ஆண்கள், பெண்கள் என்று பலர் இருக்கிறார்கள் உங்கள் ஆன்மீக தலைவர் இப்படி இருப்பதை ஏன் தட்டி கேட்கவில்லை?  தடுக்கவில்லை? அவரை ஏன் திருத்தவில்லை?. 

இப்படி நாடும், அரசாங்கமும் இருப்பதால் தான் அவர்கள் இஷ்டத்திற்கு பெண்களை இட்டு செல்கின்றனர், கோடிகளை குவிக்கின்றனர். கேட்டால் 18 வயது ஆகிறது அவர்களுக்கு உரிமை இருக்கிறதாம்.  18 வயது என்ற தகுதி மட்டும் போதுமா? இவ்வாறு தவறை நம் மீது வைத்து கொண்டு அவர்களை குறை கூறி பயனில்லை.  

கீழ்கண்ட சட்டங்களை இயற்றினால் AUTOMATIC-ஆக FUSE பிடுங்கபடும். 

1) ஒருவர் மடமோ, அமைப்போ உருவாக்க வயது வரம்பை உருவாக்க வேண்டும்.

2) அதோடு அவர் இதற்காக எங்கு பயிற்சி பெற்றார், எத்தனை வருடங்கள் இருந்தார் அது GOVT APPROVED மடங்களாக, இயக்கங்களாக இருக்க வேண்டும். 

3) தீட்சை பெற்றதற்கான சான்றிதழ் இருக்க வேண்டும். தீட்சை கொடுத்தவரின் தகுதி குறிப்பிடபட்டிருக்க வேண்டும்.

4) மடத்தின் விதிமுறைகள், நடை முறைகள் அரசின் சட்டத்திற்கு உட்பட்டதாக இருக்க வேண்டும். முடிந்தால் 25% விதிமுறைகள் அரசே இயற்ற வேண்டும்.

5) அவர் சக்தியை வெளிபடுத்துகிறார், வாயில் இருந்து லிங்கம் எடுக்கிறார் என்றால் அது உண்மை தானா என்று அரசாங்கம் சோதிக்க வேண்டும். உண்மை இல்லையென்றால் அதனுடைய REG-ஐ CANCEL செய்ய வேண்டும்.

6) ஒரு பெண் ஆசிரமத்திற்கு போவதற்கு அவர் அப்பா, அம்மா அனுமதி பெற வேண்டும்.  அவர்கள் பார்க்கவோ, பேசவோ அனுமதிக்க வேண்டும்.

7) பெற்றோருக்கு ஆசிரமம் மீது சந்தேகம் இருந்தாலோ, குற்றங்கள் நடப்பது போல் எண்ணினாலோ அவர் பெண்ணை இட்டு செல்ல அனுமதிக்க வேண்டும். ஆசிரமம் மறுத்தால் இதற்கான அரசு அலுவலகத்தில் COMPLIANT செய்யும் முறையை உருவாக்க வேண்டும். அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

8) ஒருவர் ஆன்மீக அமைப்பிற்கு குறிப்பிட்ட லட்சத்தை தாண்டி DONATION கொடுத்தால் அதை DONATION கொடுத்தவர் அரசுக்கு தெரிவிக்க வேண்டும். அதோடு இவ்வாறு வரும் அத்தனை DONATION-ஐயும், DONATION கொடுப்பவரின் பெயரையும் ஆறுமாதத்திற்கு ஒரு முறை அரசிற்கு ஆன்மீக அமைப்பு தெரிவிக்க வேண்டும்.

9) ஆன்மீக மடம் இவ்வளவு கோடிகள் வரை தான் வைத்து நடத்த வேண்டும் என்ற வரையறை வகுக்க வேண்டும்.  அதை தாண்ட அனுமதிக்க கூடாது.  மீறினால் அத்தனையும் அரசுடைமையாக்க வேண்டும்.

இவ்வாறும் இன்னும் பல கடுமையான சட்டங்கள் இயற்றபட்டால் தான் நல்ல ஆன்மீகம் மக்களை சென்றடையும். அரசியல்வாதிகளையும் அடையும். இல்லையென்றால் கண்ணீரும், தெய்வத்தின் மீதான கெட்ட பெயரே மக்களிடம் இருக்கும். 

இவ்வாறான கடுமையான சட்டங்கள் மூலமாக தான் போலி சாமியார்களை களையெடுக்கமுடியும். இல்லையென்றால் இது தொடரும்.  இன்னும் இது போல போலிகள் வந்து கொண்டே தான் இருப்பார்கள். 

இவ்வாறு தவறுகள் நம்மிடம் இருந்தால் நல்ல ஆன்மீகம் யாருக்கும் கிடைக்காது.  இது நல்ல ஆன்மீகத்தை எடுத்து செல்ல ஒரு முயற்சியே இந்த சட்டங்கள். அதனை விளக்கவே இக்கட்டுரை.  இதில் கூறபட்டுள்ளது எந்த ஒரு நபரையோ குறிப்பிட அல்ல. நல்ல சாமியார்களும் இருக்கவே செய்கிறார்கள்.  போலி சாமியார்களின் ஆதாரங்கள் பொது வெளியில் உள்ளது. ஆனால் போதிய கடுமையான சட்டங்கள் இல்லாததால் பெரிய அளவில் இதனை கட்டுபடுத்த முடியவில்லை.  இதற்கு காரணம் அரசியல்வாதிகள் மெத்தனமும், கவனகுறைவும் தான்.  அதனால் தான்அவர்களைவிட பல படிகள் மேலாகவும், அதிகாரம் மிக்கவர்களாகவும்,  நோகாமல் நோன்பு கும்பிடுகின்றனர். இவ்வாறு எந்த ஒரு அரசியல்வாதியாவது இருக்க முடியுமா? 

இவ்வாறான போலி சாமியார்களால் யாருக்கு பெருமை? அரசியல்வாதிகளுக்கா? மக்களுக்கா? நாட்டிற்கா? இவர்களுக்கு Donation கொடுத்தவர்களுக்கா?  இது ஒட்டு மொத்த மக்கள் சம்பந்தபட்டது, இது எதுவும் இவர்களின் Personal அல்ல.  இது மக்களுக்கான ஆன்மீக அமைப்பு.  25% ஆன்மீகம் 75% கோடிகணக்கான பணம் என்று நடத்துவது ஏற்புடையதா?  25% ஆன்மீகம் இருக்கிறதா என்று கூட தெரியவில்லை.  ஆன்மீக கருத்துக்களை யார் வேண்டுமென்றாலும் கூறலாம்.  ஆனால் அமைப்பு, மடம் என்று அமைக்க இவ்வாறான சட்டங்கள் தேவை.  ஏனென்றால் இது மக்களுக்கான ஆன்மீக அமைப்பு. கருத்து என்பது தனிபட்ட அவர்களின் கருத்து. அதை யாரிடமும் திணிக்க முடியாது. மடம், இயக்கம் என்பது அப்படி அல்ல. அதில் பல கட்டுபாடுகள் இருந்தால் தான் ஓரளவாவது நல்ல ஆன்மீகத்தை நிலை நாட்ட முடியும். இவ்வாறு இல்லையென்றால் அவர்களே நல்ல ஆன்மீகத்தை அவர்களால் எடுத்து செல்ல முடியாது.  பணமே பிரதானமான ஆன்மீகம் என்பது போல் சிந்தனை அவர்களுக்கே வந்துவிடும்.

நல்ல மடங்களும், ஆன்மீக இயக்கங்களும் இருக்கவே செய்கிறது என்பதை மறுப்பதற்கில்லை.

மேன்மை மிக்க மேதகு ஆன்மீகத்தை தூக்கு மேடைக்கு ஏற்றும் போலி சாமியார்களை அகற்றி அடுத்த தலைமுறைக்கு அன்பு பரிசாக பண்புடன் கொடுப்போம். சூப்பர் டீலக்ஸ்களாக நல்லதொரு ஆன்மீகமும் அதனை கூறும் சாமியார்கள் மட்டும் இருக்கட்டும். Fraud Preachers நமக்கான ஆன்மீகத்திற்கான Teachers-ஆக இருந்தால் என்றும் ஆன்மீகமும் தழைக்காது.  நாமும் பெரிதாக தழைக்கமாட்டோம்.  தமிழ் இனி மெல்ல சாகும் என்பது போல் நல்லதொரு ஆன்மீகமும் மெல்ல சாகும் என்பது குறிப்பிடதக்கது. கொடுக்கும் கை நல்லதொரு பொன்னான ஆன்மீகத்தை கொடுக்கும் கையாக இருக்கட்டும்.  அதை நாம் ஆனந்தத்துடன் வாங்கும் கையாக இருப்போம்.

இதில் கூறபட்டுள்ள சட்டங்கள் ஒரு ஆலோசனையே.  இதைவிட கடுமையான சட்டங்கள் இயற்றபட்டாலும் வரவேற்கதக்கதே.  சட்டங்கள் இல்லாமல் எதனையும் கட்டுபடுத்தவோ, முறைபடுத்தவோ முடியாது. இனியாவது அரசியல்வாதிகளும், அரசும் விழிக்கட்டும். நல்ல ஆன்மீகம் மலரட்டும்.  இதுவே என்னுடைய Crystal Clear Mic Speech ஆகும்.

இறைமயம் எங்கும் சிவமயம்!  சிவமயம் எங்கும் பக்தி மயம்!  பக்தி மயம் எங்கும் நம் மயம்!

ஓம் சிவாய நம.

 

இது அனைத்தும் உண்மையா, பொய்யா என தெரியவில்லை.

https://justicemayel.blogspot.com/2020/11/justicemayelblogspotcom.html