வாழிய வாழிய முக்காலம் அறிந்த குல தெய்வமே[ Dynasty Family God]

 


 வாழையடி வாழையாய் சிரஞ்சீவியாய் ஆயுள் கொடுத்து நல்ல குணமுள்ளவனாய் சீமானாய் வாழ்க்கையில் இழிநிலை அமையாமல், படு குழியில் தள்ளாமல் வாழ்க்கை எனும் சக்கரத்தை பழுதடையாமல் காத்து ஆனந்தமாய் பல்லாண்டு காலம் என் குடும்பத்தை வாழ வைக்கும் சீமாட்டியே! இறைவியே நீ  "வாழிய வாழிய முக்காலம் அறிந்த என் குல தெய்வமே முத்து  மாரியம்மனே" [Dynasty Family God]★புரட்சி கவிஞர் ValavanurV.ரா.SivaSaravanaLingam Chettiyar  B.A.,B.E.,D.M.E.,


கோவிந்தா கோவிந்தா

வைராவீராராச என்று பல பெயர்களுடன்ஒரு பெயராய்ஓர் மனிதராய் என்னுள் கொண்டு உங்களில் ஒருவனாய் ஓர் Messenger ஆக கட்டுரை வாயிலாக All In One ஆக வரார் JMN -ன் ரிதம் F.M 605 108-ல் justicemayel.blogspot.com தளத்தின் வாயிலாக அஸ்திவாரங்களாகிய  வாசகர்களேஎன் கட்டுரை எதுவும் ending அல்ல அது மனதிற்கான Begining ஆகும்.


V.R.S.LINGAM ROCKING DEVOTIONAL POETRY

என் பிறந்த நாள் தேதியை வைத்து எம் குல தெய்வத்தை கவிதையில் அர்ஜிக்க பாக்கியம் அளித்த எம் குல தெய்வம் கிடங்கல் முத்து மாரியம்மனுக்கு மற்றும் அம்மச்சார் அம்மனுக்கு என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இது என் குல தெய்வத்திற்காக நான் எழுதியிருந்தாலும் இது அம்மன் கவிதைகளே.  அதனால் அனைவரும் அம்மனை இந்த கவிதைகளை கொண்டும் துதிக்கலாம். அவள் அருள் பெறலாம்.






மாரிஅம்மன்:-

மாரி- மழை

மழை +அம்மன் = மாரி அம்மன்.



6☆

மாரியாக எங்கள் குலத்தை ஆனந்தத்தில் வைத்திருப்பவளே! எம் குல தெய்வமே! முத்து மாரியம்மா! எங்கள் குலத்திற்கு துர்க்கமென்றால் துர்க்கையாக சூரியாக மாறி சுட்டெரிக்கும் நீளியே! எம் குல தெய்வமே! முத்து மாரியம்மா! மனதில் ஆனந்த மழையை தவிர்த்து வேறொன்றும் அறியாதவனம்மா உன் குல பிள்ளை! என்னிடம் துர்க்கம் வர நினைத்தவர்களுக்கு துர்க்கமே இனி உன் மார்க்கம் என்று அவர்களை வழியனுப்புவளே! எம் குல தெய்வமே! முத்து மாரியம்மா! என் குலத்தை என்றென்றும் காப்பவளே! எம் குல தெய்வமே! முத்து மாரியம்மா! என் குலம் தழைப்பதே உன்னால் தானம்மா! எம் குலதெய்வமே! முத்து மாரியம்மா!

9☆

உலகை வளமாக வைத்திருக்கும்  மாரியே! எம் குல தெய்வமே! முத்து மாரியம்மா! பச்சை பசுமை உன்னால் தானம்மா! எம் குல தெய்வமே! முத்து மாரியம்மா! விவசாயம் என்பதே நீ தானம்மா! எம் குல தெய்வமே! முத்து மாரியம்மா! இயற்கை என்பதே நீ தானம்மா! எம் குல தெய்வமே! முத்து மாரியம்மா!  உன் பல தானங்கள் தான் உலகமம்மாஎம் குல தெய்வமேமுத்து மாரியம்மா!  தானத்தின் சிறந்த தானங்கள் உன்னுடைய தானங்களே! எம் குல தெய்வமே! முத்து மாரியம்மா! தானத்தின் அரசியே! எம் குல தெய்வமே! முத்து மாரியம்மா! மழைக்காக வேண்டுவது உன்னிடத்தில் தானம்மா! எம் குல தெய்வமே முத்து மாரியம்மா! இயற்கை வளங்களே நீ தானம்மா! எம் குல தெய்வமே முத்து மாரியம்மா!

1☆

என் குல நாயகியே! முத்து மாரியம்மாவாழையடி வாழையாய் சிரஞ்சீவியாய் ஆயுள் கொடுத்து நல்ல குணமுள்ளவனாய் வாழ்க்கையில் இழிநிலை அமையாமல், படு குழியில் தள்ளாமல் வாழ்க்கை எனும் சக்கரத்தை பழுதடையாமல் காத்து ஆனந்தமாய் பல்லாண்டு காலம் என் குடும்பத்தை வாழ வைக்கும் இறைவியே நீ  "வாழிய வாழிய முக்காலம் அறிந்த என் குல தெய்வமே  மாரியம்மனே"

9☆

 என் குலத்தை வாழிய வாழிய என சீமானாய் வாழ வைக்கும் அம்ச வாழியே! எம் அம்மச்சார் அம்மனே! குலம் செழிக்க அம்சங்களை அள்ளி தரும் சீமாட்டி அம்சவாழியே! எம் அம்மச்சார் அம்மனே! என் குலத்தின் அம்சம் நீங்களே! எம் அம்மச்சார் அம்மனே! முக்காலம் அறிந்தவளே! எம் அம்மச்சார் அம்மனே! எங்கள் மனதில் என்றென்றும் அம்சமாக வீற்றிருப்பவள் நீங்களே! எம் அம்மச்சார் அம்மனே! அம்சங்களின் தலைவியே! எம் அம்மச்சார் அம்மனே! உன் குல தெய்வம் ஒன்று நானும் உன் கூட இருப்பது நன்று என்று கிடங்கலில் எனக்காகவே என் குல தெய்வத்துடன் சேர்ந்து வீற்றிருப்பவளே! எம் அம்மச்சார் அம்மனே! உனக்கு ஈடு இணை யாருமில்லையம்மா! எம் அம்மச்சார் அம்மனே! அம்சாவே! நீயே என் வம்சாவின் அம்சா தாயே!  

8☆

கேணியிலும் ஏரியிலும் அணையிலும் நீயே! எம் குல மாரியம்மா! கோயில் குளங்களிலும் நீயே! எம் குல மாரியம்மா! நீ இல்லாத இடம் உலகில் இல்லை எம் குல மாரியம்மா! நீ இல்லாமல் வாழ்வேது எங்களுக்கு எம் குல மாரியம்மா! இன்பத்தை என் குலத்தில் கிடப்பில் இல்லாமல் செய்தவளே! எம் குல கிடங்கல் மாரியம்மா! துன்பத்தை என்றென்றும் கிடப்பிலேயே இருக்க செய்தவளே! எம் குல கிடங்கல் மாரியம்மா! என்னை நல்ல பாதையில் கிடத்துவது நீ தானம்மா! எம் கிடங்கல் மாரியே! பார் போற்றும்படி நான் ஆள் ஆவதும் உன்னால் தான்! எம் குல கிடங்கல் மாரியம்மா!  

4☆

உன்னை வணங்குவதில் பக்தி மழையில் நனைவதில் பரிசுத்தமாகிறோம்! எம் குல மாரியம்மா! உன்னை துதித்தால் பல வளங்களை பெறுகிறோம்! எம் குல மாரியம்மா! உன்னை வணங்குவது எங்களுக்கான பெருமை! எம் குலமாரியம்மா! உன் சன்னதியில் அடியெடுத்து வைப்பதே எங்கள் பாக்கியம்! எம் குல மாரியம்மா!

  

 உலகில் உள்ள அனைத்து இந்து மதத்தினருக்கும், விவசாயம் செய்யும் மக்களுக்கு தை பொங்கல் வாழ்த்துக்களை பொங்கலோ பொங்கல் என்று தெரிவித்து கொள்கிறேன்.

https://justicemayel.blogspot.com/2020/11/justicemayelblogspotcom.html