ஓட்டு போடுங்கையா [ Essential Vote]


                  SARAVANA  ROCKING  POETRY


5- பொது மக்களின் வாக்கு வங்கி! நாட்டு வளர்ச்சியின் வல்லரசுக்கான அங்கி! இதனை கருத்தில் கொண்டு சரியானவர்களுக்கு நண்டு பிடி போட்டது போல் "ஓட்டு போடுங்கையா"  என்று தேர்தல் நேரத்தில் சுவரொட்டியில், சமூக வலைதளங்களில் பதிவிட கூடிய அளவிற்கு ஜனநாயகத்தை பறை சாற்றும் அதோடு சாமான்ய பாமரன் வரை கொண்டு செல்லும் முக்கியமான கவிதைகள்.  எதோ தேசத்திற்கு என்னால் முடிந்த வெகு சிறப்பான பங்களிப்பு.[Vote is Essential]★ புரட்சி கவிஞர் Valavanur V.ரா.SivaSaravanaLingam Chettiyar B.A.,B.E.,D.M.E.,

வைராவீராராச என்று பல பெயர்களுடன்ஒரு பெயராய்ஓர் மனிதராய் என்னுள் கொண்டு உங்களில் ஒருவனாய் ஓர் Messenger ஆக கட்டுரை வாயிலாக All In One ஆக வரார் JMN -ன் ரிதம் F.M 605 108-ல் justicemayel.blogspot.com தளத்தின் வாயிலாக அஸ்திவாரங்களாகிய  வாசகர்களேஎன் கட்டுரை எதுவும் ending அல்ல அது மனதிற்கான Begining ஆகும்.

ஓட்டு போடுங்கையா என்று தேர்தல் நேரத்தில் சுவரொட்டியில், சமூக வலைதளங்களில் பதிவிட கூடிய அளவிற்கு ஜனநாயகத்தை பறை சாற்றும் அதோடு சாமான்ய பாமரன் வரை கொண்டு செல்லும் முக்கியமான கவிதைகள்! எதோ தேசத்திற்கு என்னால் முடிந்த வெகு சிறப்பான பங்களிப்பு.

இதில் ஊழல், நிர்வாகம் சரியில்லை, தரமற்று இருப்பது என்று எழுதும் வாசகங்கள் எந்த ஒரு அரசையோ அல் அப்பதவியில் இருப்பவர்களை குறிப்பிடவோ எழுதியது அல்ல.  ஓட்டின் முக்கியத்துவத்தை உணர்த்த எழுதியது மட்டுமே.  மற்றபடி யாரையும், எந்தவொரு கட்சியையும் குறிப்பிட அல்ல.  அப்ப தெறிக்கவிடும் சாக்லேட் கவிதைகளை ஆரம்பிப்போமா.





தேர்தல் வருது ஓட்டு போடுங்கையா! வாக்குச்சாவடி எது என்று கேட்டுக்கோங்கையா! வாக்குச்சீட்டை பத்திரமா எடுத்து போங்கையா! உங்கள் ஆதார் I.D.CARD-ஐயும் சேர்த்து எடுத்து கொண்டு போங்கையா!

எந்த சின்னத்தில் ஓட்டு போட போறீங்களோ அதை மறக்காதீங்கையா! அந்த வேட்பாளரை ஞாபகத்தில் நிறுத்திகோக்கங்கையா! வேலை இருக்குன்னு ஓட்டு போடாம இருந்திடாதீங்கையா! எந்த சாக்கு போக்கும் சொல்லாதீங்கையா!

☆☆

தேர்தல் நடக்கும் தினம் விடுமுறை தினம் அல்ல! அது நம் விருப்பம் உள்ளவரை ஆட்சியில் அமர்த்த போகும் தினமைய்யா! தூரமா இருக்குன்னு ஓட்டு போடாம இருக்காதீங்கையா! பிறகு நமக்கான நீதி வெகு தூரம் போக வாய்ப்பு இருக்கையா! ஒவ்வொரு ஓட்டும் முக்கியம்மையா!

☆☆☆

கூட்டத்தில் வரிசையில் நிற்க வேண்டும் என்று சோம்பேறிதனம் படாதீங்கையா! வந்து போக செலவாகுது என்று இதில் கணக்கு பார்க்காதீங்கையா! குடும்பத்துடன் வந்து ஓட்டு போடுங்கையா!

☆☆☆☆

ஓட்டு போடாமல் உறவினர் வீட்டிற்கு, கோவிலுக்கு செல்லும் நேரம் இதுவல்லையா! ஒவ்வொரு குடிமகனின் ஜனநாயக உரிமைய்யா!

☆☆☆☆☆ 


ஒவ்வொரு குடிமகன்களின் பொறுப்பையா அதை நிறைவேற்றும் திருநாளைய்யா! உங்கள் விருப்பமானவர்கள் உங்கள் மாவட்டத்தை, மாநிலத்தை, ஊரை ஆளும் நேரமைய்யா! ஆதார் அட்டையை அவசியம் எடுத்து செல்லுங்கள் ஐயா! எதையும் மறக்காதீங்கையா!

☆☆☆☆☆☆

உங்கள் தெருவில் குண்டு குழி சாலை நன்றாக ஆக சரியானவர்களுக்கு ஓட்டு போடுங்கையா! உங்கள் ஊர் செழிப்பாக நன்றாக இருக்க ஓட்டு போடுங்கையா! அனைத்து இடங்களிலும் மின் விளக்கு நன்றாக எரிய ஓட்டு போடுங்கையா!

☆☆☆☆☆☆☆

மாநிலத்தில் மாற்றம் வர ஓட்டு போடுங்கையா! லஞ்ச லாவண்யம் குறைய, அகல ஓட்டு போடுங்கையா! உங்கள் ஊரில் உள்ள குறைகள் தீர ஓட்டு போடுங்கையா!

☆☆☆☆☆☆☆☆

பள்ளி கூடங்கள் முதல் அனைத்து இடமும் மேம்பட மற்றும் சுத்தமாக இருக்க ஓட்டு போடுங்கையா! அரசு மருத்துவ மனை ஒழுங்காக செயல்பட ஓட்டு போடுங்கையா! தடையில்லா மின்சாரம் கிடைக்க ஓட்டு போடுங்கையா!

☆☆☆☆☆☆☆☆☆

ஊழலை ஒழிக்க ஓட்டு போடுங்கையா! தவறு செய்தவர்களை பதவியில் இருந்து அகற்ற ஓட்டு போடுங்கையா! நம் இயற்கை வளங்கள் மண் முதல் அனைத்தும் கொள்ளை போகாமல் இருக்க ஓட்டு போடுங்கையா! 

☆☆☆☆☆☆☆☆☆☆


பணத்தையோ, பொருளையோ வாங்கி கொண்டு தவறானவர்களுக்கு ஓட்டு போடாதீங்கையா! சரியானவர்களுக்கு ஓட்டு போடாம இருந்தடாதீங்கையா! நண்பர்கள், உறவினர்கள் கூறினார்கள் என்று தவறானவர்களுக்கு ஓட்டு போடாதீங்கையா!

1☆

சரியானவர்களை தவற விட்டுடாதீங்கையா! கண்டிப்பா ஓட்டு போடுங்கையா! மேற்கண்ட அனைத்துமே ஒவ்வொரு ஊரிலும், தெருவிலும், மாநிலத்திலும் நன்றாக இருக்கிறது என்றால் நீங்க சரியானவருக்கு ஓட்டு போட்டிருக்கீங்கையா! அது தொடர வேண்டுமென்றால் மறுபடியும் சரியானவர்களை தேர்ந்தெடுங்கையா!

1☆☆

பார்க்காத மற்றும் பழகிய நண்பர்களை வாக்குச்சாவடியில் காணலாம் ஐயா! அதனால் வாக்கு சாவடிக்கு வாங்கைய்யா!  அரசு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று கோபமா ஐயா! உறுதியாய் வாங்கைய்யா! ஓட்டு போடுங்கையா!

1☆☆☆

பாட்டாளிகளே வாருமைய்யா! சாமான்யன்களே வாருமைய்யா! நாளைய எதிர்காலமாகிய இளைஞர்களே வாருமைய்யா!  வாக்கு சாவடியில் உங்கள் ஓட்டை சரியா போடுமைய்யா!

1☆☆☆☆

சட்டை பட்டனை போடுவது எவ்வளவு உடலிற்கு முக்கியமோ! அது போல் ஜனநாயகம் நிலை பெற வாக்கு சாவடியில் நாம் சரியானவர்களுக்கு ஓட்டு பட்டனை அழுத்துவதும் முக்கியமைய்யா!! அப்போது தான் அனைத்தும் காக்கபட்டு பாதுகாப்பான நாடாக, நாடானது மேன் மேலும் வளருமைய்யா! சுத்தமான குடிநீர் முதல் அனைத்தும் நமக்கு தங்கு தடையின்றி தரமோடு கிடைக்குமைய்யா! பொது மக்களின் வாக்கு வங்கி! நாட்டு வளர்ச்சியின் வல்லரசுக்கான அங்கி! இதனை கருத்தில் கொண்டு சரியானவர்களுக்கு நண்டு பிடி போட்டது போல் "ஓட்டு போடுங்கையா"! Vote is Essentialய்யா!

1☆☆☆☆☆

மறக்காம சிற்றுண்டியோ, மதிய உணவோ உண்டு விட்டு தெம்பாக வாங்கைய்யா! மாத்திரை எதாவது அருந்த வேண்டும் என்றால் அருந்தி விட்டு வாங்கையா! வாகனத்தில் மெதுவாக வாங்கையா! சரியானவர்களுக்கு வேகமாக ஓட்டை போடைய்யா! போடைய்யா! வாழ்க ஜனநாயகம்! வளர்க அனைவரும்! ஜெய்ஹிந்த்!

1☆☆☆☆☆☆

இந்தியாவில்  உள்ள சிவ பக்தர்களுக்கு மஹா சிவராத்திரி நல் வாழ்த்துகளையும், அங்காளம்மன் தெய்வத்தை வழிபடுபர்களுக்கு "மயான கொள்ளை"  திருவிழா  நல் வாழ்த்துகளையும்  தெரிவித்து கொள்கிறேன்.