உள்ளே வெளியே [Life is In & Out]

                           SARAVANA  ROCKING  POETRY

கோவிந்தா கோவிந்தா

வைராவீராராச என்று பல பெயர்களுடன்ஒரு பெயராய்ஓர் மனிதராய் என்னுள் கொண்டு உங்களில் ஒருவனாய் ஓர் Messenger ஆக கட்டுரை வாயிலாக All In One ஆக வரார் JMN -ன் ரிதம் F.M 605 108-ல் justicemayel.blogspot.com தளத்தின் வாயிலாக அஸ்திவாரங்களாகிய  வாசகர்களேஎன் கட்டுரை எதுவும் ending அல்ல அது மனதிற்கான Begining ஆகும்.


7-"உள்ளே வெளியே" [Life is In & Out] என திருக்குறள் போல நல் அர்த்தங்கள் பொதிந்த இரண்டு வரி கவிதைகள்★ புரட்சி கவிஞர் Valavanur V.ரா.SivaSaravanaLingam Chettiyar B.A.,B.E.,D.M.E.,





அதீத ஜாதி வெறி உள்ளே!

திறமையான மனிதன் வெளியே!

மனிதன் எங்கே?

சமயம் (அல்) மத வெறி உள்ளே!

கடவுள் வெளியே!

மனித இறையாண்மை எங்கே?

☆☆

சிபாரிசு உள்ளே!

தகுதியானவர்கள் வெளியே!

முன்னேற்றம் எங்கே?

☆☆☆

கோபம் உள்ளே!

பாசம் வெளியே!

உறவுகள் எங்கே?

☆☆☆☆

வன்முறை உள்ளே!

இரக்கம் வெளியே!

மனித நேயம் எங்கே?

☆☆☆☆☆

சந்தேகம் உள்ளே!

சந்தோஷம் வெளியே!

காதல் எங்கே?

☆☆☆☆☆☆

வல்லமை பொருந்தியவர்கள் உள்ளே!

கெட்ட காரியங்கள் செய்பவர்கள் வெளியே!

தீது எங்கே?

☆☆☆☆☆☆☆

பாசம் உள்ளவர்கள் உள்ளே!

துன்பம் வெளியே!

துரோகம் எங்கே?

☆☆☆☆☆☆☆☆

சொர்க்க வாசிகள்  உள்ளே!

நரக வாசிகள் வெளியே!

அரக்க நரக லோகம் எங்கே ?

☆☆☆☆☆☆☆☆☆

கடவுள் உள்ளே!

சாத்தான், பூதம், கொல்லி வாய் பிசாசு வெளியே!

பில்லி சூன்யம் எங்கே?

☆☆☆☆☆☆☆☆☆☆

ஆத்திகம் உள்ளே!

நாத்திகம் வெளியே!

1☆

ஜாதக வெறி உள்ளே!

நல்வரன்கள் வெளியே!

1☆☆

தயிரியம் உள்ளே!

வீர தழும்புகள் வெளியே!

1☆☆☆

சுத்தமானவைகள் உள்ளே!

பிணியானவைகள் வெளியே!

1☆☆☆☆

கௌரவ வெறி உள்ளே!

இழப்புகள் வெளியே!

1☆☆☆☆☆

சர்வாதிகார ஆட்சி உள்ளே!

மக்கள் ஆட்சி வெளியே!

1☆☆☆☆☆☆

கையூட்டு விதிமீறல் உள்ளே!

பின்பற்றபடும் சட்டம் வெளியே!

1☆☆☆☆☆☆☆

ஊழல் ஆட்சி உள்ளே!

நாட்டின் முன்னேற்றம் வெளியே!

1☆☆☆☆☆☆☆☆

தர்மம் உள்ளே!

அதர்மம் வெளியே!

1☆☆☆☆☆☆☆☆☆

நல்ல நண்பர்கள் உள்ளே!

சதிகாரர்கள் வெளியே!

20

 சங்கடங்கள் உள்ளே!

தூக்கம் வெளியே!

2☆

சமூக வலைதளங்களுக்காக நேரம் செலவிடுவது உள்ளே!

பிறருக்காக, குடும்பத்திற்காக நேரம் செலவிடுவது வெளியே!

2☆☆

காட்டு பூனை உள்ளே!

நாட்டு எலி வெளியே!

2☆☆☆

சைக்கிள், நடை பயணம் உள்ளே!

பல நோய்கள் வெளியே!

2☆☆☆☆

உடற்பயிற்சி உள்ளே!

தேக மஸ்தான கட்டான ஆரோக்ய உடம்பு வெளியே!

2☆☆☆☆☆

 மரங்கள், விவசாயம் உள்ளே!

பச்சை பசுமையான செழிப்பு, தூய காற்று வெளியே!

2☆☆☆☆☆☆

சேமிப்பு உள்ளே!

அவசியமான சமயத்தில் பண தேவைக்காக உதவுவது வெளியே!

2☆☆☆☆☆☆☆

அளவுக்கு மீறிய ஆசை வெறி உள்ளே!

கானல் நீர் வெளியே!

2☆☆☆☆☆☆☆☆

காம கொடூரன் உள்ளே!

பரம்பரைக்கே தலை குனிவை ஏற்படுத்தும் அசிங்கமான தரங்கெட்ட கெட்ட பெயர் வெளியே!

2☆☆☆☆☆☆☆☆☆

Good Thinks Is In!

Bad Thinks Are All Out!

30

என்னுடைய நல்ல கவிதைகள், கட்டுரைகள் உள்ளே!

அனைத்துவிதமான துன்பங்களும், கவலைகளும் வெளியே!

3☆

கடவுள் உள்ளே!

வேத மார்க்கம் வெளியே !

3☆

இந்த கவிதைகள் கவிதைகளை தொடர்ந்து வாசிக்கும் பழக்கமுள்ள வாசகர்களுக்கே புரியும். இந்த கவிதைகள் ஒன்று உள்ளே இருந்தால் இன்னொன்று நல்லதோ, கெட்டதோ நம்மிடமிருந்து வெளியே சென்றுவிடும். சிலது நம்மை வந்தடையும்.  அதோடு பலவற்றை எங்கே? என்று சில சமயங்களில் தேட வேண்டி இருக்கும் அதோடு நல்லவைகள் இருந்தால் கெட்டவைகள் அண்டாது அதோடு நல்லது இருந்தால் நல்லவைகள் மட்டுமே அண்டும் என்பதை உணர்த்த மட்டுமே  இக்கவிதைகள். மற்றபடி இது யாரையும் கூற அல்ல. எந்த துறையையும் குறிப்பிட அல்ல. அதோடு எந்த ஒரு தனி நபரையும் குறிப்பிட அல்ல. கவிதைக்கு இலக்கணம் கிடையாது. நல்ல அர்த்தமான "கரு" அதில் பொதிந்து இருப்பது மட்டுமே கவிதைக்கான முக்கியமான இலக்கணமாகும். உப்பு இல்லா பண்டம் குப்பையிலே என்பார்கள்.  அது போன்று தான் கவிதைகளுக்கும்.  மற்றபடி எந்தவொரு இலக்கணத்தையும் பின்பற்ற வேண்டிய அவசியமில்லை.

 https://justicemayel.blogspot.com/2020/11/justicemayelblogspotcom.html 


காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன் .