"வா தோழா" [Come Friend Common]

 

                     SARAVANA ROCKING POETRY


6-"வா தோழா" [Common Come Friend] ★ புரட்சி கவிஞர் Valavanur V.ரா.SivaSaravanaLingam Chettiyar  B.A.,B.E.,D.M.E.,

வைராவீராராச என்று பல பெயர்களுடன்ஒரு பெயராய்ஓர் மனிதராய் என்னுள் கொண்டு உங்களில் ஒருவனாய் ஓர் Messenger ஆக கட்டுரை வாயிலாக All In One ஆக வரார் JMN -ன் ரிதம் F.M 605 108-ல் justicemayel.blogspot.com தளத்தின் வாயிலாக அஸ்திவாரங்களாகிய  வாசகர்களேஎன் கட்டுரை எதுவும் ending அல்ல அது மனதிற்கான Begining ஆகும்.

இக்கட்டுரையானது மக்களுக்காக எங்கெங்கோ பாடுபடும் தோழர்களை ஒன்றிணைக்கும் விதமாக எழுதபட்ட கவிதைகள் ஆகும்.  அதோடு இது நல்ல அரசியல் கட்சியில், இயக்கத்தில், அநீதி நடக்கும் இடத்தில், மக்கள் போராட்டத்தில் etc  என்று நல்லவிதமாக மக்கள் சேவை செய்வதற்கு உலகில் உள்ள தோழர்களை "வா தோழா" என்று அழைப்பது போன்ற கவிதைகளாகும்.




 

வைரமான ஐந்து வரி கவிதைகள்:-

உரிமை காக்க வா தோழா! நம் நாட்டை காக்க வா தோழா! நம் மொழியை காக்க வா தோழா! மக்கள் அவலங்களை போக்க வா தோழா! ஊழலை ஒழிக்க வா தோழா!

நாம் மேம்பட வா தோழா! நமக்கான எதிரியை வீழ்த்த வா தோழா! ஏழைகளை உயர்த்த வா தோழா! மக்களின் இன்னல்களை போக்க வா தோழா! நல்லவர்களை காக்க வா தோழா!

☆☆

லஞ்சத்தை, ஊழலை ஒழிக்க வா தோழா! நேர்மையாளர்களை காப்பாற்ற வா தோழா!  நமக்கான நீதியை பெற வா தோழா! நல்ல நூல்களை காக்க வா தோழா! குளறுபடிகளை படிப்படியாக அகற்ற வா தோழா!

☆☆☆

தர்மத்தை காக்க வா தோழா! இன ஒற்றுமையை காக்க வா தோழா! மக்களுக்கான இறையாண்மையை காக்க ஆண்மையுடன் வா தோழா! குற்றங்களை குறைக்க வா தோழா! குற்றம் செய்பவர்களுக்கு படிப்பினை கொடுக்க வா தோழா!

☆☆☆☆

உன் உடல் புதைக்கபடாமல் விதைக்க பட வா தோழா! உன் பெயர் நிலைத்திருக்க வா தோழா! வரலாற்றில் இடம் பெற வா தோழா! குத்து கல் போல் கெட்டதை பார்த்து கொண்டு இல்லாமல் கல்வெட்டில் உன் பெயர் செதுக்கபட வா தோழா! நாட்டில் தீயதை களைக்கும் வேள்வி நடத்த வா தோழா!

☆☆☆☆☆

அடுத்த தலைமுறை செம்மையாக இருக்க வா தோழா! ஆக்கிரமிப்பாளர்களை ஆக்கிரமிப்பு செய்ய வா தோழா!  நல்ல சமூகம் நிலை பெற வா தோழா! நல்ல சுகாதாரம், உணவு அனைவருக்கும் கிடைக்க வா தோழா! நல்ல கல்வி ஏழைகளுக்கு எட்டா கனியாக ஆகாமல் இருக்க வா தோழா!

☆☆☆☆☆☆

தவறுகளை தட்டி கேட்க வா தோழா! நமக்கான நியாயத்தை தட்டி கேட்க வா தோழா! விவசாய நிலங்களை அநியாயமாக எந்த பெயரிலும் பிடுங்குபவர்களை தட்டி கேட்க வா தோழா! நம் பண்பாட்டை, கலாச்சாரத்தை, மொழியை சீர்குலைப்பவர்களை தட்டி கேட்க வா தோழா! நீதி கேட்க வா தோழா!

☆☆☆☆☆☆☆


தங்கமான மூன்று வரி கவிதைகள்:-  

நம் சமூகத்திற்கான குரல் நீ! ஒட்டு மொத்த மக்களின் குரல் நீ! நம் தலைமுறையின் அடையாளம் நீ!

அநியாயத்திற்கான எமன் நீ! குற்றம் செய்பவர்கள் நமக்கான எதிரிகள்! அவ்வெதிரிகள் நம் எதிரில் இல்லாமல் ஆக்குபவன் நீ! மொழி, இனம், கலாச்சாரத்தின் காப்பாளன் நீ!

☆☆

கெட்டதிற்கான சிம்மசொப்பனம் நீ! பதவி என்பது களவு செய்ய அல்ல என்று நிரூபிப்பவன் நீ! ஆற்றல் மிக்கவன் நீ!

☆☆☆

சமூதாயத்திற்காக குரல் கொடுக்க ஏங்குபவன் நீ! அநீதியை கண்டு துடிப்பவன் நீ! அனைவரையும் நேசிப்பவன் நீ!

☆☆☆☆

மக்களுக்குகாக போராடும் குணம் உள்ளவன் நீ! நம் நாட்டின் மூதாதையர்களின் வீரம் நீ! நம் நாட்டின் மூதாதையர்களின் தியாகம் நீ!

☆☆☆☆☆

நம் வீர சமூகத்தின் "வித்து" நீ! பண்பாட்டை காக்கும் பண்பு உள்ளவன் நீ! மாறா நல்ல குணங்களை உடைய மாறன் நீ!

☆☆☆☆☆☆

கெட்ட சூழ்நிலையை நல்ல சூழலாக மாற்றும் திறன் படைத்தவன் நீ! நேர் கொண்ட பார்வையில் நேர்மையாளனாக இருப்பவன் நீ! மக்களுக்காக எதற்கும் கலங்காத கலங்கரை விளக்கு நீ!

☆☆☆☆☆☆☆


ஜீவராசிகளை மையமாக கொண்டு முத்தான மூன்று வரி கவிதைகள்:-

 நண்டு பிடி போட்டு உடும்பை போல் எதிரிகளை பற்றி பந்தாடுபவன் நீ! திமிங்கலம் போல் மக்களுக்கான எதிரிகளை விழுங்குபவன் நீ! சுறா போன்று அநீதி செய்பவர்களை குத்தி கிழிப்பவன் நீ!

மக்களுக்காக சிங்கம் போல் கர்ஜிப்பவன் நீ! நாய் போல் கடித்து குதறி, சிறுத்தை போல் சீறி பாய்ந்து அவர்கள் கெட்ட மனதை கீறி வேட்டையாடுபவன் நீ! யானை போன்று மனதில் வலிமை உள்ளவன் நீ!

☆☆

மக்களிடம் பட்டாம் பூச்சி போல் மென்மையாக, மேன்மையாக நடப்பவன் நீ! தீயவர்களுக்கு கறு வண்டு போல் குடைச்சல் தருபவன் நீ! பூரான் போல் கடித்து, தேள் போல் கொட்டி கெட்டவர்களுக்கு வீக்கத்தை ஏற்படுத்துபவன் நீ!

☆☆☆

 நாம் இன்று, நேற்று, நாளை என்று என்றென்றும் மக்களை காப்பாற்றும் நிரந்தர காப்பீடு தோழா! நாம் தில்லு முல்லு செய்பவர்களை தில்லாக எதிர்ப்பவர்கள் தோழா! கிடப்பில் போடபட்டது எதுவாயினும் தூசு தட்டி அதில் மோசடி நடை பெற்றிருந்தால் மோசடிகாரர்களை தூர் வாருவது நாம் தான் தோழா!

களத்தில் களப்பணி ஆற்றுவது நாம் தான் தோழா! களவாணிகளை ஒழிப்பது நாம் தான் தோழா! வளமான எதிர்காலத்தை மக்களுக்கு கொடுக்க பாடுபடுவது நாம் தான் தோழா!

☆☆

தீதை கொய்து அழிக்கும் வல்லமை உள்ளவர்கள் நாம்!  பாட்டில் சில் சில்லாய் உடைவது போல் மக்களுக்கான இன்னலை அடித்து, உடைத்து நொறுக்கி மக்கள் நெஞ்சில் உள்ள காயத்தை ஆற்றும் ஆற்றல் மிக்கவர்கள் நாம் தான்! எதிரிகளிடம் சுழற் காற்று போல வன்மையாகவும், மக்களிடம் ஜன்னல் காற்று போல இன்மையாகவும் நடந்து கொள்ள தெரிந்தவர்கள் நாம் தான்!

☆☆☆

மக்களை அன்பால் வசீகரிக்கும் சக்தி உள்ளவர்கள் நாம் தான்!  வக்கிரமானவர்களிடம் உக்கிரமாக இருந்து மக்களுக்கான அதிஷ்டமாக அல் லக்கியாக இருப்பது நாம் தான்! சீக்கிரமாக மக்களுக்கு நன்மை விளைய எந்நேரமும் ஓயாது உழைத்து எதிரிகளை அழிப்பது நாம் தான்!

☆☆☆☆ 

மக்கள் வாழும் நிலபரப்பில் அவர்களுக்காக குரல் கொடுப்பதில் நிரந்தர பட்டா உள்ளவர்கள் நாம்! மக்களுக்கு தீங்கு செய்பவர்களை உரல் போல இடித்து பிளாக் செய்து தடுத்து நிறுத்தும் கலை தெரிந்த வித்தைகாரர்கள் நாம்! எதிரிகளுக்கு அழியாத கேடு விளைவிக்காத நல்ல கிளாஸ் ஆன பிளாஸ்டிக் போன்றவர்கள் நாம்!

☆☆☆☆☆   

மீட்டர் கணக்கில் புறம் கூறி பொய் கூறுபவர்களை அம்பலபடுத்த பல கோப்புகளுடன் ஆலோசனை கூட்டம் அல் மீட்டிங் நடத்தி தூக்குவது நாம் தான் தோழா! மக்களுக்கான வேலி நாம் தான் தோழா! மக்கள் மேம்படுவதே உயிர் மூச்சு என்று வாழ்பவர்கள் நாம் தான் தோழா!

☆☆☆☆☆☆ 

மக்களின் பங்காளிகள் நாம் தான்! பிரிந்து இருக்கும் நாம் ஒன்றுபட்டால் உண்டு அனைவருக்குமான நல்ல வாழ்வு தோழா! அதனால் வா தோழா! தனித்தனியாய் இருக்கும் நாம் இணைந்த கைகளாய் இணைவோம் வா தோழா! ஒன்றுபடுவோம் வா தோழா! ஆதரவு கொடு தோழா!

☆☆☆☆☆☆


https://justicemayel.blogspot.com/2020/11/justicemayelblogspotcom.html