குமுறும் நெஞ்சமே [Best Social Activityies]

 

குமுறும் நெஞ்சமே இது போதும்[Best Social Activityies]★புரட்சி கவிஞர் Valavanur V.ரா.SivaSaravanaLingam Chettiyar B.A.,B.E.,D.M.E.,

கோவிந்தா கோவிந்தா



வைராவீராராச என்று பல பெயர்களுடன்ஒரு பெயராய்ஓர் மனிதராய் என்னுள் கொண்டு உங்களில் ஒருவனாய் ஓர் Messenger ஆக கட்டுரை வாயிலாக All In One ஆக வரார் JMN -ன் ரிதம் F.M 605 108-ல் justicemayel.blogspot.com தளத்தின் வாயிலாக அஸ்திவாரங்களாகிய  வாசகர்களேஎன் கட்டுரை எதுவும் ending அல்ல அது மனதிற்கான Begining ஆகும்.

இந்தியாவில் மட்டும் 130 கோடி பேர் மக்கள் தொகை இருக்கிறது இது போதும். அதில் 23 வயது கடந்தவர்கள் சுமார் 60 கோடி பேராவது இருப்பார்கள் இது போதும். இதில் சமூக நல அமைப்பு வைத்து நடத்துபவர்கள் சில நூறாவது இருக்கும் இது போதும். அரசியல் கட்சிகள் ஏராளமாக இருக்கிறது இது போதும். நல்ல அரசியல்வாதிகள் பல பேர் இருக்கின்றனர் இது போதும். தொண்டு செய்யும் அமைப்புகள் பல இருக்கிறது இது போதும்.

மனித நேயம் மிக்க நல்ல உள்ளம் கொண்டவர்கள் ஏகத்துக்கும் இருக்கிறார்கள் இது போதும். நல்ல பத்திரிக்கையாளர்கள், சிந்தனையாளர்கள், நேர்மையாளர்கள் இருக்கிறார்கள் இது போதும். ஜல்லி கட்டு போராட்டத்தில் கூடிய கூட்டம் சென்னை மக்கள் தொகையோடு மட்டும் ஒப்பிட்டால் மிக சொற்பமே ஆனால் இதுவே போதும். நாம் எதற்கும் களத்தில் நின்று போராட தேவையில்லை.

அவர்களுக்கு இவ்வாறு சமூகத்தில் அவலங்கள் அரங்கேறுகிறது என்று தெரிவித்தாலே போதும்.  ஏனென்றால் இறைவன் படைக்கும் போதே இவர்களுக்கு இவ்வளவு பாக்கியம் தான் என்று எழுதி வைத்து தான் இறைவன் அனுப்புகிறான்.  அதனால் தான் அனைத்தும் அனைவராலும் முடிவதில்லை.  அதாவது என்ன தான் எண்ணெய்யை தடவிகிட்டு மண்ணில் புரண்டாலும் ஒட்டுற மண் தான் ஒட்டும் என்பது போல.

அதற்காக நமக்கு எந்த பஞ்சமும் நேர பகவான் விடவில்லை.  மேற்கண்டவர்களை எல்லாம் நாம் உருவாக்கியவர்களா? அங்கு அவர்களுக்கு தூண்டபட்ட தீ பொறியாலே தீபிழம்பு ஆனவர்கள் தான் மேற்கண்டவர்கள் அனைவரும். நமக்கும் அதே தூண்டல் நடை பெற்றாலும்  ஏன் நமக்கு அந்த தூண்டல் எடுபட மறுக்கிறது? பீச்சில் விற்கும் மாங்காய் சுண்டல் போல நம்முள் அது சென்றாலும் சில நாட்களில் அணைந்து விடுகிறது.  ஆனால் மேற்கண்டவர்களுக்கு எவ்வளவு தான் வேணாம்டா? நமக்கு எதுக்குடா இதுவெல்லாம் என்று கூறினாலும் கேட்கிறார்களா?  கேட்க மாட்டார்கள்.  ஏனென்றால் அவர்கள் இறைவனின் பொன்னான படைப்பு. இதுவெல்லாம் ஓர் புத்தி சொல்வதா? என்றால் அது வேறு விஷயம்.

ஏன் என்னையே எடுத்து கொள்ளுங்கள் பொறியியல் படித்த நான் கட்டுரையாளனாக, கவிஞர் ஆக ஆவேன் என்று கனவிலும் எதிர்பார்க்கவில்லை.  ஆனால் பத்திரிக்கையாளனாக ஆக வேண்டும் என்று எண்ணம் இருந்தது. ஆனால் அது பல வருடங்கள் கழித்து எனக்கு நிறைவேறியுள்ளது எழுதி கொண்டிருக்கிறேன்.  நீங்கள் வாசகர்களாக படித்து கொண்டிருக்கிறீர்கள். நான் எழுதும் அத்தனை கட்டுரைகளும் எனக்கு நடந்ததினாலோ, வேறு எவருக்கோ நடந்ததாலோ அதில் நான் குமுறி தான் எழுதுகிறேன். இதே போல் பலருக்கும் நடந்திருக்கலாம் ஆனால் அவர்கள் பல பத்திரிக்கையாளர்கள் போல், கட்டுரையாளர்கள் போல், புரட்சி கவிதை எழுதுபவர்கள் போல் ஏன் ஆக முடியவில்லை? என்னை போல ஒரு சிலரால் மட்டுமே அது ஏன் முடிகிறது என்றால் அது தான் இறைவனின் படைப்பு.  அது மட்டுமல்ல கால நேரம், மாதம், ஆண்டு என்று அவர் தான் அனைத்துமே முடிவு செய்கிறார்.  அதனால் தான் பலர் இது எனக்கு முன்பே தோணலை என்பார்கள்.  அதோடு இந்த தூண்டல் ஏன் நமக்கு முன்பாகவே நிகழ்த்தபடவில்லை?  ஏனென்றால் அனைத்துமே இறைவன் சித்தம். இது அனைத்தும் உண்மையா, பொய்யா என்ற ஆராய்ச்சி தேவையற்றது. 

இப்போது நாம் செய்ய வேண்டியது ஒன்று மட்டும் தான்.  நமக்கு தெரியும் அல் கிடைக்கும் நாலு நல்ல விஷயங்களை அனைவருக்கும் பகிர்ந்தாலே போதுமானது. அதற்கான சமூக வளைதளங்கள் இன்று எண்ணற்ற கணக்கில் உள்ளது. அதோடு உங்கள் அருகில் இருக்கும் நண்பர்களோடும், குடும்பத்தினரோடும், உறவினரோடும் பகிர்ந்து கொள்ளுங்கள்.  இதுவே இப்போதைக்கு போதுமான ஒன்றாகும். யாரையும் எதிலும் வலுகட்டாயபடுத்தி, வற்புறுத்தி அழைத்து வர அல் கலந்து கொள்ள செய்ய வேண்டிய அவசியமில்லை.  அதாவது உங்கள் அனைத்து வேலைகளையும் செய்து கொண்டே நல்லவற்றிற்கு எந்த அளவு ஆதரவு கொடுக்க முடியுமோ அந்த அளவு ஆதரவு கொடுத்தாலே போதுமானது.

ஏனென்றால் எதற்கும் பஞ்சம் ஏற்பட்டிருந்தால் தான் வீட்டிற்கு ஒரு ஆள் நாட்டை காக்க வர வேண்டும் என்று கூறுவார்கள். இப்போது எதிலும் பெரிதாக பஞ்சமில்லை.  நமக்கான பஞ்சம் பல தகவல்கள் நமக்கும், அவர்களுக்கும் தெரியாததே ஆகும்.  அதை நாம் தெரிந்து கொள்வோம் மற்றவரோடு பகிர்வோம். மனது மட்டும் அநியாயத்தை கண்டு குமுறினால் போதும்.  மற்றபடி அவர்களை குமுறி கும்மி அடிக்க பல ஆட்கள் இருக்கிறார்கள்.  ஒரு விபத்து நடந்துள்ளது என்றால் அதில் நாம் உதவி செய்ய முடியாத நிலையில் நாம் இருந்தால் 100, 101 என்ற இலவச தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தாலே போதுமானது.  அதுவே மிக பெரிய உதவியாகும். இம்மாதியாக இருந்தாலே தற்சமயத்திற்கு போதும்.  இன்னும் பல உதவிகள் செய்ய முடிந்தால் அது மகத்தான உதவியாகும் அச்சமயத்திற்கு. நல்ல தொலைகாட்சி நிகழ்ச்சிகள், நல்ல திரைபடங்கள், நல்ல விவாதங்கள், பட்டிமன்றம், நல்ல You Tube Channel etc என்று ஏராளமாக பலர் பல நல்ல விஷயங்களை அவர்கள் தொழில், வேலை மூலமாகவே மக்களுக்கு சேவை செய்கின்றனர்.  அதனை அனைவருக்கும் பகிர்ந்தாலே போதுமானது.  அது உங்களுக்கு பிடிக்காது என்றாலும் அந்த லிங்க்-ஐ வேறு ஒருவருக்கு பகிருங்கள்.  அவருக்கு அது உபயோகமாக அமைய வாய்ப்பிருக்கிறது.  Forward Message பலரை Forward பண்ண வாய்ப்பிருக்கிறது.  இதுவும் ஒரு வகையில் நாட்டிற்காக நாம் செய்யும் சேவையே ஆகும்.

சமூக வலைதளங்கள் மனித சமூகம் மேம்பட உருவாக்கபட்டவையே ஆகும்.  அதில் பொருளும் ஈட்டலாம், பாராட்டும் பெறலாம்.  நன்மதிப்பையும் சம்பாதிக்கலாம்.  இவ்வளவும் கிடைப்பது எதனால் என்றால் நம்முள் இருக்கும் மனித நேயத்தால் தான்.  மனித நேயத்தை பேணி காப்போம்.  இதில் ஈடுபடுவர்களை தயவு செய்து யாரும் Discourage செய்யாதீர்கள். எதில் Discourage அதிகமாக நடந்தாலும் அந்த இடத்தில் பஞ்சம் ஏற்படும்.  பஞ்சம் ஏற்பட்டால் நாம் அந்த களத்திற்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படும்.  அதோடு Check and Balance இல்லாமல் போய்விடும். இது கிராமம் முதல் அனைத்து துறைகளுக்கும் பொருந்தும்.  நல்லது செய்பவர்களை Discourage செய்தால் நம்மிடம் இருக்கும் நல்லது காணாமல் போய்விடும் வாய்ப்பு இருக்கிறது.  இதையும் கவனத்தில் கொண்டு கெட்டது நம்மை அண்டாமல் இருக்க உறுதி கொள்வோம் கொள்வோம். 

எதுவும் எதையும் அனைவராலும் செய்ய முடியாது.  ஆதலால் செய்ய முடிந்தவரிடம் அவருக்கான காரிய வேலை தானாகவே செல்கிறது. இதுவே மனித படைப்பின் சிறப்பாகும்.  நண்பர்களோடு நல்ல விஷயங்களை உரையாடுங்கள், பகிருங்கள். ஜெய்ஹிந்த்.

இது அனைத்தும் உண்மையா, பொய்யா என தெரியவில்லை.

"கொடி நாள்" வாழ்த்துக்களை அனைத்து வாசகர்களுக்கும் தெரிவித்து கொள்கிறேன்.

SARAVANA ROCKING POETRY 

8- "குமுறு  நெஞ்சமே" [ஒரு வரி கவிதைகள் ]:-

அநியாயத்தை கண்டால் குமுறு நெஞ்சமே!  அது போதும்!

☆☆

சதிகாரர்களை கண்டால் குமுறு நெஞ்சமே!  அது போதும்!

☆☆☆

ஊழல்களை கண்டால் குமுறு நெஞ்சமே!  அது போதும்!

☆☆☆☆

பெண்களுக்கு தீங்கான கொடுமை நடந்தால் குமுறு நெஞ்சமே!  அது போதும்!

☆☆☆☆☆

கிராமத்திற்கு ஊறு விளைந்தால் குமுறு நெஞ்சமே!  அது போதும்!

☆☆☆☆☆☆

தரமற்ற பொருட்கள் விற்கபட்டால் குமுறு நெஞ்சமே! அது போதும்!

☆☆☆☆☆☆☆

ஊருக்கு தூரோகம் செய்தவர்களை கண்டால் குமுறு நெஞ்சமே! அது போதும்!

☆☆☆☆☆☆☆☆

நல்ல ஆன்மீகத்தை காக்க குமுறு நெஞ்சமே! அது போதும்!

☆☆☆☆☆☆☆☆☆ 

ஜீவசமாதிகளை காப்பாற்ற குமுறு நெஞ்சமே! அது போதும்!

☆☆☆☆☆☆☆☆☆☆

நல்ல மனிதர்களை காப்பாற்ற குமுறு நெஞ்சமே! அது போதும்!

1☆

சமூக அவலங்களை தடுக்க குமுறு நெஞ்சமே! அது போதும்!

1☆☆

இயற்கையை பாதுகாக்க குமுறு நெஞ்சமே! அது போதும்!

1☆☆☆

குடும்பத்திற்காக குமுறு நெஞ்சமே! அது போதும்!

1☆☆☆☆

உனக்காக குமுறு நெஞ்சமே! அது போதும்!

1☆☆☆☆☆

நம் உரிமைக்காக போராட குமுறு நெஞ்சமே! அது போதும்!

இவ்வாறு கெட்டது எதுவானாலும் குமுறு குமுறுவோமா!

இது அனைத்துமே Best Social Activityies ஆகும்.

NOTE:-

உடனே "ரமணா" பட பாணியில் ஒரு மாநிலத்தில் 10 பேராவது கள்ள நோட்டு அடித்தோ அல் மாற்றியோ பணக்காரர்கள் ஆகி உள்ளனர். 100 பேராவது லஞ்சம் பெற்று சகல வசதிகளுடன் வாழ்கிறார்கள்இன்னும் சிலர் ஊழலில் திளைத்து சொகுசு பங்களாவில் சொகுசு ஆக வாழ்கின்றனர்.  இது அனைத்தும் செய்தி தாளில், செய்தி தொலைகாட்சியில், தேர்தல் பிரச்சாரத்தின் போதும், பல திரைபடங்களிலும் கூறபட்ட ஊரறிந்த ரகசியம் ஆகும். இதே போல் ஒவ்வொரு மாவட்டத்திலும் இவ்வாறு இருப்பவர்களை மாவு ஆட்டுவது போல் வாயால் ஆட்டி அரைத்து கொண்டிருக்கின்றனர் சில பேர் உண்மையோ, பொய்யோ அவர்களுக்கே வெளிச்சம்.  அதோடு இவ்வளவு பேர் சட்டத்தை பின்பற்றாமல் இழுக்கான முறையில் சம்பாதித்து வாழும் போது நாம் உழைத்து சம்பாதித்த பணத்தை கொடுக்க மட்டும் ஆயிரெத்தெட்டு பித்தலாட்டங்கள் அரங்கேற்றபடுகிறதே என்றெல்லாம் குமுறி போய் கொதித்தெழுந்து கேட்க கூடாது. வழக்கு போட்டாலும் வழக்கம் போல வருட கணக்கில் நடை பெறுகிறது என்றெல்லாம் கூற கூடாது. இவ்வாறெல்லாம் பலவற்றை எதையும் பெண்கள் முதல் யாரும்  சொல்ல கூடாது. நான் சொல்வதை கேட்கவா போறீங்க. 

வாழ்க ஜனநாயகம்.

மேற்கண்ட அனைத்தும் வழக்கம் போல் உண்மையா, பொய்யா என தெரியவில்லை.