தொண்ணூறு நாள் விஷயம்- சந்தோஷம் [NINETY DAYS-HAAPYNESS]

 


தொண்ணூறு நாள் விஷயம்- சந்தோஷம்[NINETY DAYS(90)-HAAPYNESS MATTER] கவிஞர் Valavanur V.ரா.SivaSaravanaLingam.

தொண்ணூறு நாள் விஷயம் சந்தோஷம் [NINETY DAYS HAAPYNESS MATTER] இதுதாங்க:-

சந்தோஷம் அதை அனுபவித்து கொண்டிருப்பவர்களுக்கு தெரியாது. அது இல்லாமல் கிடைத்தவர்களுக்கு தான் தெரியும், புரியும்.  


சந்தோஷத்திற்கு முற்று புள்ளி என்பதே கிடையாது.  நிரந்தரமாக ஒரு விஷயத்தில் சந்தோஷம் கிடைத்துவிட்டால் அது இன்னும் வேண்டும் வேண்டும் என்று அடம் பிடிக்கும். அந்த அடம்பிடிப்பு தான் Addict (அல்) அடிமை என்றாகி விடுகிறோம். அதற்காக எதையும் செய்ய தயாராக இருக்கிறோம்.  அந்த சந்தோஷத்தை பிரிய மனம் விடுவதில்லை. 


ஆண்கள்:- பேசாத பொருட்கள் கொடுக்கும் சந்தோஷத்தை தான் விரும்புகின்றனர்.  


1)சிகரெட்.


2)புகையிலை பழக்கம்.


3)மது.


மேற்கண்ட அனைத்தும் உடல் நலனிற்கு தீங்கானது. ஆனால் அட்டையில் போட்டு விற்பார்கள். அந்த Company-களிலும் பல பேர் வேலை பார்ப்பார்கள்.  அவர்களுக்கு பெண்ணையும் திருமணம் செய்து வைப்பார்கள். ஊருக்கே உலை வைக்கும் இடத்தில் வேலை செய்து சம்பாதித்து  தன் வீட்டில் பாஸ்மதி அரிசியில் உலை வைத்தால் போதும்.  ஆனால் அந்த பழக்கங்களில் உள்ளவர்கள் கெட்டவர்கள் , அதில் வேலை செய்து வாயில் வைக்க உதவியவர்கள் நல்லவர்கள். வாழ்க ஜனநாயகம்.


பேசும் மனிதர்கள் என்றால் பல பேர் Addict ஆக மறுக்கிறார்கள்.  ஏனென்றால் அது அவர்களுக்கு பிடிப்பதில்லை. Bottle உடன் பல மணி நேரம் செலவழிக்க தயார்.  ஆனால் மனைவியுடன் இருக்க சொன்னால் போர் அடிக்கிறது. "ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள்" என்ற  திருமணமான மூன்று மாதங்கள் பிடிப்பது போல் ஏன் வாழ் நாள் முழுக்க பிடிக்கவில்லை என்று தெரியவில்லை. E.g:- பட்டிமன்றம், பல படங்கள்.  அதோடு 25 வயது முதல் 555 வரை யாரை கேட்டாலும் திருமணம் ஆனால் சந்தோஷத்திற்கு நாங்க Guranty என்று ஒரு பேச்சிற்கு கூட கூற மாட்டேங்குகிறார்கள்.  ஆனால் Preety-க்கு நாங்க Guranty என்று Mixy-யை வாங்க சொல்கிறார்கள்.  இதில் பெண்ணை பெற்றவர்கள் உட்பட No Guranty .  


பெண்கள்:-


பெண்கள் நேர் Opposite பேசும் மனிதர்கள் தான் பிடிக்கும்.  அதனால் தான் இன்றைய தலைமுறையில் எல்லாம் கிடைத்தாலும், எந்த கெட்ட பழக்க வழக்கங்களும் இல்லாமல் Study-யாக உள்ளனர். 


அவர்களுக்கு பிடித்தது:-


1)குழந்தை. 


2) நாடகம்.


3)சமையல் Programe பார்ப்பது


4) கோயிலுக்கு செல்வது. 


5)புருஷன் (இவர்கள் பேச தயார்.  ஆனால் அவர்கள் தான் தலை தெறிக்க ஓடுகிறார்கள்.  அப்படி என்ன தான் பேசுவார்களோ)


அதனால் தான் புருஷன் இல்லாவிட்டாலும் Alternate-ஆக குழந்தை, TV இருப்பதால் அமைதியாக உள்ளனர்.  Alternate-ல் தான் அமைதியாக உள்ளனர். ALTERNATE-ஐ கலைத்துபாருங்கள் கலவரம் தான் வீட்டில். மறுபடியும் அது சேரும் வரை விடமாட்டார்கள். கலைப்பதும், சேர்ப்பதும் நம் வேலை அல்ல. அது  முட்டாள்கள் மற்றும் வீணர்களின் வேலை. Alternate-ல் இருப்பதும் மனிதன் தான்.  அவரை மாட்டிவிட்டு இவர்கள் Escape ஆகிவிட்டனர்.  இனி இவர் தான் உன் சந்தோஷத்திற்கு "ஜவாப் தாரி" என்பது போல். குழந்தை என்பதில் இவர்கள் கொஞ்சுவது, பேசுவது என்று இருந்து விடுகிறார்கள்.  Tv என்பது தெரியவில்லை.  பல காமெடிகளில் புருஷனை கூட எதாவது செய்.  ஆனால் டிவி-யை ஒன்றும் செய்யாதே என்பது போல் காமெடி மற்றும் பரத் சந்தானம் காமெடி etc.


சந்தோஷம் என்பது நிலையில்லாதது.  இந்த நிலையில்லாதது இல்லையென்றால் நாம் நிலையாக வாழ முடியாது.  


1)  Two Wheeler இல்லாவனுக்கு Costly Two Wheeler என்கிற வண்டி வாங்கும் சந்தோஷம். வாங்கிய பொழுதில் எங்கு சென்றாலும் Two Wheeler தான்.  சில மாதங்கள் கழித்து பார்த்தால் அதை Service-ற்கு கூட எடுத்து செல்ல மாட்டார்கள்.


2) இதே போல் தான் நாம் வாங்கிய பல பொருட்களின் நிலமை. வாங்கிய பொழுதில் இருந்த பொருள் வாங்கும் சந்தோஷம் , தூசி படாமல் பார்த்து கொண்டது. சில மாதங்களில் அதன் மீது கல்லை போட்டால் கூட கவலைபடாத அளவிற்கு அந்த பொருளின் மீது இருந்த சந்தோஷம் போய் விடுகிறது.


3) வேலைக்கு செல்லும் புதிதில் இருக்கும் ஆர்வம் எனும் சந்தோஷம்.  சில மாதங்களில் போய் விடுகிறது.


அனைத்துமே தொண்ணூறு நாட்கள் தான் .  அதற்கு மேல் அது யாருக்கும் பிடிப்பதில்லை.  சந்தோஷம் கொடுத்த அது சந்தோஷமாக தெரியவில்லை.  ஆனால் இந்த ஒவ்வொரு NINETY DAYS-HAAPYNESS   தான் வாழ்க்கையில் நம்மை இயங்க வைக்கிறது.  இன்று நாம் பல பேர் பணக்காரர்களாக இருந்தாலும் சந்தோஷமாக இல்லாததற்கு காரணம் அது நமக்கு வாழ் நாள் முழுவதும் சந்தோஷம் தரவில்லை என்பதால் தான். 


எல்லாவற்றிற்கும் ஒரு Alternate இன்று நம்மிடம் இருக்கிறது.  Current போனால் Generator, Inverter.  இப்போது Phillips 4hrs Inverter Bulb புதிதாக வந்துள்ளது.  ஒரு வருட Warranty-யுடன். இது போல் Bus-ற்கு பதில் Auto, Share Auto.  Car-ற்கு பதில் Fast Track, Ola, Uber Travels. நம் வேலையை செய்வதற்கே நம்மால் முடியாமல் Alternate-ஆக வேலைக்காரியை அமர்த்துகிறோம். 


இவ்வாறாக பலவற்றிற்கு Alternate இருப்பது போல் நாம் ஏன் நம் வாழ்க்கையில் சந்தோஷத்திற்கான  Alternate-ஐ கண்டுபிடிக்க கூடாது.  இவ்வாறாக நம் வாழ்க்கையில் புதியவற்றை Try-செய்தால்  அனைவரும் சந்தோஷமாக வாழலாம்.  இது ஒவ்வொரு வீட்டை பொறுத்து மாறுபடும். ஒரு சில Alternate-கள் நம்முடைய Budjet-ஐ அதிகபடுத்தும். அவரவர் குடும்பத்திற்கு ஏற்றாற் போல் Alternate செய்து சந்தோஷமாக வாழ வாழ்த்துக்கள். 


எதை எதையோ விவாதிக்கும் போது குடும்பத்தில் இதனை விவாதித்து தக்கபடி Alternate செய்தால் நிச்சயம் நம் வாழ்க்கையில் சந்தோஷம் என்கிற வசந்த காற்று 5 Speed Almonard, USHA FAN போல வீசாவிட்டாலும், தென்றல் காற்று போல சந்தோஷம் ஆனது நிச்சயம் நம்மை வருடி செல்லும் என்பதில் ஐயமில்லை.  


சந்தோஷத்தில் சிறிய மற்றும் அற்ப சந்தோஷங்கள் தான் மனிதனை உயிர்ப்புடன் வைத்திருக்கிறது. 


மேற்கண்டவற்றில் அனைத்துமே சரியோ, தவறோ சிறிய மற்றும் அற்ப சந்தோஷம் தான். ஆனால் அதில் தான் இன்று உலகமே வாழ்கிறது.  இதில் பல பேர் கடனாளியாகவும், பணமே Savings-ல் இல்லாதவர்களாகவும், கெட்ட பழக்கவழக்கத்தில் நோயாளி ஆனாலும் கவலைபட தயாராக இல்லை. அப்படியென்றால்  அவர்களுக்கு அது சரியோ, தவறோ ராஜ சந்தோஷமாகத்தானே உள்ளது.  இல்லையென்றால் இவ்வாறாக இருக்க வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது.  இதில் தான் வியாபாரம் முதல் அனைத்துமே நடைபெறுகிறது. பல அரசுகள்  Tourism-த்தை விளம்பரம் செய்கின்றனர். அதற்காக பணத்தை செலவிடுகின்றனர்.  இது நம்முடைய கருத்தை பற்றியதோ, சந்தோஷத்தை பற்றியதோ அல்ல. இது ஒவ்வொருவருக்கும் வேறுபடலாம். E.g:- மாப்பிள்ளை காமெடி.


இது அனைத்தும் உண்மையா, பொய்யா என தெரியவில்லை.


குறிப்பு:-

1) PUBLICITY-யில் சமையல் செய்து எல்லாம் பிரபலமாகி பின்னர் ADS-ல் நடித்தவர்கள் எல்லாம் இருக்கிறார்கள்.  மல்லிகா பத்ரி நாத், ஏரியல் WASHING POWDER-ல் வருபவர்.


2) இதை போல பட்டிமன்றத்தில் CHANNEL-ல் வந்து பிரபலமானவர்கள் இருக்கிறார்கள்.  சுகி சிவம், ஐ.லியோனி, சாலமன் பாப்பையா.


3) CHANNEL-ல் அரைமணி நேர PROGRAME-ல் POPULAR ஆனவர்கள் இருக்கிறார்கள்.  PEPSI உமா, செய்தியில் வணக்கத்தையே ஒரு திணிசாக சொல்லி POPULAR ஆகியுள்ளனர்.


4) எனக்கு ஒரு டவுட்டு என்று கூறியவர்கள்.  பல படங்களில் எந்த டவுட்டும் இல்லாமல் நடித்துள்ளனர்.


மக்கள் கோடிகணக்கில் உள்ளனர்.  திறமை உள்ளவர்கள் லட்சத்தில் மட்டுமே உள்ளனர். அது போலவே அனைத்திலும் சந்தோஷமாக உள்ளவர்களும்.