ஜனரஞ்சகமான வாலிபனின் விசில் [ BIGIL]

அத்தி பூத்தால் போல ஏங்கும் ஜனரஞ்சகமான சப்தமான வாலிபனின் விசில் [THE YOUNGSTER BIGIL]★ புரட்சி கவிஞர் ValavanurV.ரா.SivaSaravanaLingam Chettiyar.

 

திருசிற்றம்பலம்

142-வது கட்டுரையாக ரிதம் F.M. 605 108-ல் வெளிவரும் இக்கட்டுரையானது எந்த ஒரு கட்சியையோ, அரசியல் தலைவரையோ குறிப்பிட எழுதியது அல்ல.  பல உண்மைகளை பலரும் உணர்ந்து விழிக்கவே இக்கட்டுரை.  அதோடு இதில் பல இயற்கையாகவே நடந்திருந்தாலும் அரசியல் உலகில் அது மர்மமாக அதோடு சுவாரஸ்யமாக எதிர்கட்சிகள் சந்தேகம் எழுப்பி பேசபட்டதால் அதை பற்றி கூறியிருப்பேன்.  மற்றபடி இயற்கையாக எது நடந்தாலும் அதை யார் என்ன குற்றம் சாட்டினாலும் அது இயற்கையானதே என்பது குறிப்பிடதக்கது.  அதோடு பல காலமாக கூறபட்ட பல ஆதாரம் இல்லா தகவலுக்கு ஆதாரத்துடன் பதிலளிக்க பலரை குறிப்பிட்டு எழுதியிருப்பேன் அவ்வளவே.  அத்தோடு அஸ்திவாரங்களின் அருமைகளை இந்த வாலிபன் என்னுடைய நிரந்தரமான 'விசில்எழுப்பி கூறியிருப்பேன்.

அரசியல் என்பது ஓர் ஆடு புலி ஆட்டம் மற்றும் சதுரங்க விளையாட்டு போன்றது.  இதில் யார் எந்த எண்ணத்துடன் நம்மிடம் பழகுகிறார்கள் என்பது அவ்வளவு சீக்கிரத்தில் கண்டுபிடிக்க முடியாது.  ஏனென்றால் இங்கு அனைத்துமே ஆழ்கடல் அமைதி போலவே இருந்து அரங்கேறும் இடம் ஆகும்.  இங்கு எவ்வளவு பெரிய நிகழ்வும் எந்த 'டென்ஷனும்இல்லாமல் அதே சமயத்தில் நம் காரியத்தில் எந்த 'டென்ஷனும்குறையாமல் நடைபெறும் பேரமைதி கூடாரமாகும்.  இங்கு யாரும் நிரந்தரமாக உயர்ந்தவர்களும் அல்ல தாழ்ந்தவர்களும் அல்ல என்று இருக்கும் ஓர் கட்டமைப்பை கொண்டது.  இங்கு எந்த உயிரும் கடவுள் போன்ற புனிதராய் இருந்தாலும் நமக்காக பலி கொடுக்க யாராவது நினைத்து விட்டால் அது ஒரு விஷயமே அல்ல.  அரசியல் தலைவர்கள் முதல் அரசியல் கட்சி மூலமாக பதவியில் அமர்ந்திருப்பவர்கள் வரை அற்ப பதர்கள் புற்களாய் புதர்கள் போல மண்டி கிடப்பதாக நினைத்து பிடுங்கி எரிந்து விடுவார்கள்.  அதற்கு ஏகபட்ட உதாரணங்கள் இந்திரகாந்திராஜீவ் காந்தி, MGR, ஜெயலலிதா முதல் கவுன்சிலர்கள்கட்சி பதவியில் உள்ளவர்கள் வரை செய்தி தாளில் செய்திகள் நீள்கிறது.  இதில் குறிப்பிட்ட தலைவர்கள் முதல் மற்றவர்கள் வரை இயற்கை மரணம் அடைந்திருந்தாலும் அல் சுடபட்டு உயிர் பிழைத்திருந்தாலும், கத்தியாலோ, அருவாவாலோ வெட்டபட்டிருந்தாலும், அகால மரணமாக இருந்தாலும் அது ஓர் சொற்ப விஷம் போல் நடந்திருக்கும்.  இது  அவர்களுக்குள் நடந்த சண்டையாலோ, வாக்குவாதம் முற்றியதாலோ அல் பொது வெளியில் ஏதோ ஒன்று நடந்ததாலோ அல் இது ஓர் மர்ம மரணம் என்றாலும் அது ஏன் அது இது நாள்வரை நடக்காமல் இப்போது எப்படி சர்வசாதாரணமாக அரங்கேறியது?  அப்படியென்றால் இவர்கள் உயிர் எல்லாம் ஓர் அற்ப உயிர் போல் தானே எண்ணி  நடத்தி முடித்துள்ளனர்.  அதனால்தான் என்னவோ அவர்களின் உயிர் பயத்தால் அவர்களுக்கு அவர்களே ஏகபட்ட Buildup-களை அவர்களே கொடுத்து கொண்டு அதை வெளியில் கசியவிட்டு பயத்துடன் ஆனால் தயிரியமாய் உள்ளது போல் கூட்டத்துடன் திரிகிறார்கள் போலும்.  இதற்கு பெரிய பதவிகள் என்ற பேதமில்லை.

)

அதே போல் ஒரு ஆட்சியில் ஊழல்களோ, முறைகேடுகளோ நடந்தால் கண்டுகொள்ள மாட்டார்களாம்.  அப்படியே விமர்சனங்கள் கூறினாலும் அது காரம்சாரமாகவோ, மாநிலம் மற்றும் நாடு தழுவிய போராட்டமாக இல்லாமல் அதற்கு தானும் உடந்தையாக இருந்து அவர்களை ஆர கட்டி தழுவியது போல் இருக்கும் என்ற ஓர் குற்றசாட்டு கூறபடுகிறது.  ஏனென்றால் அப்போது தான் எதிர் கட்சி ஆட்சிக்கு வந்தால் கண்டு கொள்ள மாட்டார்களாம்.  இது முற்றிலும் பொய்யான தகவல் ஆக இருக்கவே வாய்ப்பிருக்கிறது.  யாராவது ஒரு சிலர் அப்படி இருக்கலாம் அவ்வளவே.  ஏனென்றால் இப்படி இருந்தால் எந்த பாரம்பர்ய கட்சியாக இருந்தாலும்எந்த பதவியில் உள்ளவர்களாக இருந்தாலும் சில வருடங்களில் எந்த தடமும் இல்லாமல் காணாமல் போவது உறுதி.  அதோடு அனைவரின் ஊழல் முறைகேடுகளின் பணத்தொகை சரிசமமாக ஒரே அளவாக இருந்திருக்கும்.  அதோடு ஐந்து வருடங்களில் அனைத்தையும் ஒரேயடியாக அனைத்து துறைகளிலும் சுருட்டி கொண்டு விட்டால் பிறகு அந்த துறைகளுக்கு ஆட்சி மாறி வருபவர்கள் என்ன சுருட்ட முடியும்.  .கா:- மாநிலம் முழுவதும் அனைத்து இடங்களிலும் இவர்களே Contract எடுத்து தரமில்லா சாலைகளை ரோடு போட்டு சுருட்டி கொண்டு விட்டால் அடுத்தவன் வந்து என்ன சுருட்ட முடியும்?  அதோடு இதனை குறை சொல்லி தானே எதிர்கட்சிகள் அந்த பதவிக்கு வர முடியும்.  இல்லையென்றால் அவர் உத்தமர் ஆயிற்றே.  மறுபடியும்  உத்தமருக்கே ஓட்டு போடாமல் எதிர் கட்சிக்கு ஏன் மகா ஜனங்கள் ஓட்டு போட்டு ஆளுங்கட்சி ஆக்க வேண்டும்?

ல்)

 இரண்டு கட்சிகள் உள்ள இடங்களில் அவர்கள் மட்டுமே இருக்க இரண்டு கட்சிகளும் ஒன்று சேர்ந்து மூன்றாவது கட்சியை விரட்டி அடிக்குமாம்.  இது மட்டும் உண்மையென்றால் காங்கிரஸ் மற்றும் பிஜேபியை தவிர்த்து எந்த கட்சியும் இந்தியாவில் பல மாநிலங்களில் மாநில கட்சியாக சக்தி வாய்ந்து இருக்க முடியாது.  தமிழ்நாடும் இதற்கு விதிவிலக்கு அல்ல.  MGR வர வாய்ப்பே இல்லை.  அதோடு டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியை பிடிக்க துளியும் வாய்ப்பே இல்லை.  ஆரம்பத்தில் முரசொலி மாறன் முதல்  சசிகலா வரை எப்படி நுழைந்து பிறகு அங்கு வலிமை மிக்கவர்களாக ஆனார்கள்.  சசிகலா ஒரு திமுக.  முரசொலி மாறன் இலங்கையிலிருந்து வந்தவர்.    

அதோடு பழம் தின்று கொட்ட போட்ட கட்சியை விட புதிதாக வந்த கட்சி ஆட்சியே பிடித்திருந்தாலும் சதி வேலைகள் முதல் குள்ள நரி வேலை செய்து வீழ்த்துவது வரை அவர்கள் அளவுக்கு இவர்களால் முடியாது.  அதாவது Voteing Booth-ஐ கைப்பற்றுவதுகள்ள ஓட்டு போடுவதுஓட்டிற்கு பணம் கொடுப்பது என்று இருப்பதை கூறினேன்.  வேண்டுமென்றால் புதிதாக வந்த மாநில கட்சியும்கொட்டை போட்ட கட்சியும் ஒன்று சேர்ந்து வேண்டுமென்றால் வேறொரு கொட்டை போட்ட கட்சியை விரட்டலாம்.  அது தான் அனுபவமிக்க அரசியல் சாணக்கியனுக்கு அழகு.  அது தமிழ்நாட்டில் அரங்கேறியும் உள்ளது.  முதலில் காங்கிரஸ் இருந்தது பிறகு திமுக ஆட்சி பிடித்தது.  சில வருடங்களுக்கு பிறகு MGR திமுக-வில் பிரிந்து வந்து அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்ற கட்சியை ஆரம்பித்து ஆட்சிக்கு வந்தார்.  பிறகு இரண்டு பேரும் சேர்ந்து தேசிய கட்சிகளின் சுவடே இல்லாமல் ஆக்கினார்கள்.  இதுவெல்லாம் அரசியல் அரி சுவடிகள் ஆகும்.  

எப்போதும் அரசியலில் பாசமலர் சகோதர்களே எதிர் எதிர் துருவங்களாக தான் செயல்பட முடியும்.   பாசத்துடன் செயல்பட்டால் பதவியில் இருக்க முடியாது என்பதால்.  மாறன் சகோதரர்களே திமுக கட்சியை கைப்பற்ற முயற்சிக்கவில்லையா?  மு.க.அழகரி எங்கே?  இது தான் அரசியல் உலகின் சதுரங்க விளையாட்டு ஆகும்.  இது ஆழ்கடல் அமைதி போல இருந்து இவனா இப்படி?  என்று அதிர்ச்சியடையும் அளவிற்கு செயல்பட கூடிய இடமாகும்.

நிலமை இப்படி இருக்க எந்த கட்சியாக இருந்தாலும் சரி அதில் உறுப்பினர்களாக அதோடு எந்த பதவியில் யார் இருந்தாலும் சரி கட்சி முதல் எவராயினும் ஒழிந்தால் போதும் என்ற மனநிலையே அங்கு பிரதானம்.  எப்படியும் எப்போதும் இருமுனை போட்டி தான் எங்கும் இருக்கும்.  ஒன்று ஆளும் கட்சி மற்றொன்று எத்தனை கட்சிகள் இருந்தாலும் அது எதிர்கட்சிகள்.  அதோடு இது உண்மை என்றால் உலக கோடிஸ்வர பட்டியலில் அல் பினாமி பட்டியலில் அனைத்து கட்சிகளும் பணம், சொத்து என்கிற பட்டியலில் ஒரே மாதிரி இருந்திருப்பார்கள்.  அதோடு எதற்கு இவ்வளவு ஊழல் வழக்குகளை ஆளும் கட்சி எதிர் கட்சி மீது  தொடுக்க வேண்டும்?  எதிர் கட்சிகள் ஏன் ஆளும் கட்சியின் ஊழலை கூற வேண்டும்?  இவ்வாறு கூறாமல் தட்டி கேட்காமல் அராஜக ஆட்சிக்கு ஆதரவு கரம் நீட்டி கொண்டு இருந்தால் இவர்களுக்கு ஏன் ஓட்டளிக்க வேண்டும் என்ற கேள்வி எழாதா?

வா)

ஜாதி ஒழிப்பை பற்றி பேசும் எந்த ஜாதி பேதமில்லா கட்சியும் இதுவரை ஜாதி கட்சி மற்றும் இயக்கங்களுடன் கூட்டணி அமைக்காமல் பல தேர்தல்களை சந்தித்ததில்லை.  அதோடு வேட்பாளர்களையும் நிறுத்தியதில்லை.  ஆனால் ஜாதி ஒழிப்பை பற்றி வாய் கிழிய பேசுவார்கள்.  அதோடு அந்த ஜாதி காரரை அப்படி சொல்லிவிட்டான் இப்படி கூறிவிட்டான் மிக பெரிய மானக்கேடு நிகழ்ந்துவிட்டது என்பது போல் கூறி கடும் கண்டனத்தை தெரிவித்து ஜாதி அரசியலை முன்னெடுப்பார்கள். 

குடிப்பவனுக்கு பெண் முதல் எதையும் தராதீர்கள்.  அதோடு குடும்பமே நாசம் ஆகிவிடும் என்று கூறுபவர்கள் தான் டாஸ்மார்க்கை உச்ச நீதி மன்றம் வரை சென்று அதோடு பலதடவை கோர்ட் வாசல் ஏறி போராடி அந்த தமிழ் பூர்வ குடி மக்களுக்கு குடியை வினிநோயகம்  செய்கிறார்கள்.  அங்கும் எல்லாவற்றிலும் விலையேற்றி பகல் கொள்ளை?  அதை கேள்வி கேட்டால் அது நமக்கு அசிங்கமாம்.  எப்படி என்று விளக்கமாக விவரித்தால் நன்றாக இருக்கும்.  அப்படியென்றால் இது வெல்லாம் இவர்களுக்கு பாராட்டு தரவல்லதா?  அதோடு பலர் மதுபான ஆலைகளே நடத்துகிறார்களாம்.  அதோடு பாரை லீஸ்-க்கு எடுத்தவர்கள் பெரும்பாலும் கட்சி வட்டாரத்திற்கு நெருக்கமானவர்கள் என்று கூறபடுகிறது.  குடி குடியை கெடுக்கிறதோ இல்லையோ இவ்வாறு இவர்களின் ஏமாற்று பேச்சுக்கள் தொண்டர்கள் முதல் மக்கள் வரை அவர்களின் மனதை வருந்த செய்துள்ளது.

இயற்கை வளம், கனிம வளம், தாது மணல் கொள்ளை என்று நம்முடைய அனைத்து வளங்களும் சூரையாடபட்டுள்ளது.  கோயில் சொத்துக்களை கோர்ட்டு தலையிட்டு பல 'கிடுக்குபிடிபோட்டு காக்க முற்பட்டுள்ளது.  இவ்வாறாக இருந்துவிட்டு சட்டம் எல்லோருக்கும் ஒன்று தான் அது யாருக்கும் வளையாது எங்களுடைய ஆட்சியில் சட்டம் தன் கடமையை செய்யும் என்று சினிமா வசனங்கள் பேசுவது போல் பேசுவதை தவிர்த்து மேல்மட்டத்தில் பெரிய அளவில் கொள்ளை அடித்தவர்களுக்கு அனைவருக்கும் இவர்களின் ஆட்சியில் சட்டம் தன் கடமையை முழுமையாக செய்துவிட்டதா?  இதைவிட சிறிய தவறு செய்தவன் மோசமான குற்றவாளி போல் சித்தரிக்கபட்டு செய்தி தாள்களில் தினமும் வெவ்வேறு பெயர்களில் வலம் வருகிறார்கள் ஆனால் இவர்கள்?  இவ்வாறான அவலத்தை கண்டு யார் தலை குணிய வேண்டும்?  பலவற்றிற்கு ஆதாரம் போதுமானதாக இல்லையென்றால் தவறு யார் மீது?  அப்படியென்றால் எடுக்கபட்டது எங்கே?  மாயமாக அதுவே காணாமல் போய்விட்டதா

இவ்வாறாக அனைத்தும் பொய்யான பெய்யாத பாசமழையாகும்.  இதுவெல்லாம் ஓட்டுக்காக கூறுவது என்பது தெளிவாக புரியாமல் இல்லை.

கட்சி கொள்கை மற்றும் கட்சியின் மீதான பாசம் அத்துடன் மக்கள் மீது உள்ள நேசம் ஆகியவை ஓர் அடித்தட்டு என்று சொல்லக்கூடிய அஸ்திவாரமான தொண்டனுக்கு இருக்க கூடிய பற்று எதுவும் அந்தந்த கட்சி தலைவர்களுக்கு இருக்கிறதோ இல்லையோ ஆனால் அஸ்திவாரங்களுக்கு மிக அதிகமாகவே இருக்கிறது.

ஒவ்வொரு எதிர்கட்சியும் மற்றொரு கட்சியை பற்றி எக்கசக்கமாக சாடுகிறது.  அதில் பல உண்மைகளும் இருக்கவே செய்கிறது.  ஆனால் அதை பற்றி எந்த தலைவர்களும் அசிங்கமாக, கௌரவ குறைவாக, மானக்கேடாக நினைக்க யாரும் தயாராய் இல்லை அதோடு கண்டு கொள்வதாகவும் தெரியவில்லை.  அது ஊழலாக இருந்தாலும் சரி கட்சியின் கொள்கை மீறலாக இருந்தாலும் சரி மற்றும் பச்சோந்தி தனமான செயலாக இருந்தாலும் சரி.  கேட்டால் எதிர்கட்சிகள் திட்டமிட்டு சதி செய்து பொய்யான குற்றச்சாட்டுகளை கூறுகிறது என்று கூறுவது இப்படி கூறிவிட்டால் அப்பழுக்கற்றவர்களாக ஆக முடியுமா?  ஆனால் தொண்டர்களிடம் இதை பற்றி பேசினால் கூனி குருகி தலை குணிவார்கள்.  இதுவரை மேல்மட்டத்தில் செய்கின்ற எந்த தவறையும்  அஸ்திவாரங்கள் பெரிய அளவில் கட்சி பதவியில் மற்றும் மக்கள் சார்ந்த பதவியில் இருப்பவர்கள் பெரிதாய் செய்ததில்லை அது எந்த கட்சியாக இருந்தாலும்.  அதோடு கட்சிக்கு களங்கம் ஏற்படாமல் இருக்க இன்றளவும் அதனை கட்டி காத்து கொண்டிருக்க பல தியாகங்களை செய்வது இந்த அஸ்திவாரங்களே.

அதோடு கக்கூஸ் என்பதை சரியாக சுத்தம் செய்யவில்லையென்றால் குடலை பிடுங்கும் நாற்றம் அடிக்குமே அவ்வாறாக எவ்வளவு நாற்றம் ஊழல், முறைகேடு, அராஜகம்கொள்கை பற்றின்மைஆட்சியின் மீது அதிருப்தி, உட்கட்சி பூசல், பதவி சண்டை etc என்ற பெயரில் அடித்தாலும் அதனை Domex, Harpic, Bleeching பவுடர் போட்டு தற்காலிகமாக கழுவி சுத்தம் செய்வது இந்த அஸ்திவாரங்கள் தான்.  அதாவது இளநீர் எப்படி சூட்டை தணிக்கிறதோ அது போல் கட்சியில் மீது ஏற்படும் களங்க சூட்டை அப்போதைக்கு எப்பாடுபட்டாவது தணிப்பது இந்த அஸ்திவார இளநீர்கள் தான்.  இதில் தலை வழுக்கையாக கொண்டவர்கள் கூட உச்சி வெயிலில் கட்சிக்காக போராடுவார்கள், தீக்குளிப்பார்கள்எந்த எல்லைக்கும் சென்று சமாதானம் செய்வார்கள்.   

தென்னைமரத்தில் தேங்காய், இளநீர், தென்ன ஓலை என்று ஆயிரம் நன்மைகள் உள்ளது போல் இவர்களும் ஆயிரம் நன்மை கொண்டு கட்சியை அழியாமல் பாதுகாப்பவர்கள்.

இவர்கள் பனைமரம் போன்றவர்கள் அது எப்படி கடல் அரிப்பை தடுத்து, குடிசை போட பனை ஓலை தந்து, வெயிலுக்கு நுங்கு கொடுக்கிறதோ அதே போல் கட்சி எந்தவிதத்திலும்யாராலும் பெரிய அளவில் அரிப்பு ஏற்பட்டு அழியாமல் காத்து நிற்பவர்கள்.

கட்சியில் இருப்பவர்கள் அத்தனை பேரும் கெட்டவர்களும் அல்ல.  அதோடு அங்கு இருக்கும் அனைவரும் மோசமானவர்களும் அல்ல.  அவ்வாறாக இல்லாததால் தான் இன்றளவும் அக்கட்சிகள் நிலை பெற்று இருக்கிறது.

எவ்வளவு கலவரம்போரட்டத்தை சுமந்தவர்கள் இவர்கள்.  ஆனால் எந்த குற்றத்தையும் இந்த தொண்டர்கள் பெரிதாக சுமந்ததில்லை.  ஆனால் எதையும் சுமக்க தயாராக இருக்கும் சுமைதாங்கிகள் இவர்கள்.

கஜானா கதாநாயகர்கள் எவ்வளவு தான் தொண்டர்களின் பணத்தை கரைத்தாலும்கேட்டால் கட்சிக்காக என்று கூறினாலும்அதோடு கட்சி சொத்துக்களை தலைவர்கள் பெயர்களில் மாற்றி கொண்டாலும்கட்சி தலைவர்கள் பெயரில் இருந்தாலும் அள்ள அள்ள குறையாத அக்ஷபாத்திர கஜானாவாக ஆக்க தனக்கென்று இல்லையென்றாலும் தன்னுடைய பணத்தை நிதியாக கொடுக்கும் வள்ளல்கள் இவர்கள்.  அதோடு பலரிடம் நிதி திரட்டி கஜானா நிதியை உயர்த்தும் உயர்வாளர்கள் இந்த தொண்டர்கள் என்பது குறிப்பிட தக்கது.  எதற்கு எவ்வளவு பணம் கேட்டாலும் எடுத்து கொண்டு வந்து தருவது இவர்கள் தான்இது வரை தலைவர்கள் போட்ட சொற்ப பண முதலீட்டை விட கட்சி காரர்கள் போட்ட பண முதலீடே அதிகமாகும். அதனால் தான் பலகட்சிகளில் இப்பிரச்சனை எழுப்பபட்டது.  

இவ்வாறு ஜனரஞ்சகமான ஏராளமான விஷயங்கள் கட்சிகளில் வெட்ட வெளிச்ச  ஜனரஞ்சமாக அங்காங்கே அப்படியே இருக்கிறது.  எது எப்படி இருந்தாலும் அஸ்திவாரங்களாகிய  கட்சி தொண்டர்களுக்கு எப்போதும் இந்த அத்தி பூத்தால் போன்ற வாலிபனின் 'விசில்அதிக 'சப்தமாகஒளித்து கொண்டிருக்கும்.  இத்துடன் பல தலைவர்களுக்காகவும் இருந்தாலும்,  இறந்திருந்தாலும் அவர்களின் சிறந்த நிர்வாக செயல்பாடு மற்றும் மக்களுக்காக ஆற்றிய பணிகளுக்காக என்னுடைய "விசில்அவர்களுக்காகவும் ஒளிக்கும்.

களங்கத்தை துடைத்து கொண்டே இருந்தால் களங்கம் மறைந்து விடாது. இதை விட்டு கட்சியின் உள்ளே  களங்கம் ஏற்படுத்தியவர்களுக்கு கலக்கம் ஏற்பட செய்ய வேண்டும்.  அதோடு களங்கம் ஏற்படுத்தியவர்களை துடைத்தெறிய வேண்டும் அப்போது தான் தலை நிமிர முடியும்.  இல்லையென்றால் தலை குனிந்து துடைத்து கொண்டே தான் இருக்க வேண்டும்.  இவ்வாறு துடைப்பதால் உங்கள் மீதும் அக் கறை ஏற்பட்டு ஏதோ நீங்களும் களங்கம் அடைந்தது போல் ஆகிவிடுகிறது.  கட்சியின் 'தருமம்களங்கம் அடைந்தவர்களை காப்பாற்றி கரை சேர்ப்பது அல்ல.  அப்படி யாராவது கூறினால் அது கட்சிக்கே மிக பெரிய 'கருமம்ஆகிவிடும்.  நீங்கள் இரவு பகல் பாராமல் கம்பம் நட்டுகொடி கட்டிவிளக்கு அமைத்து பிரகாசமாக்கி கட்சியும் கட்சி தலைவர்களையும் ஜொலிக்க செய்தும் ஜொலிக்காமல் இருப்பதற்கு காரணம் அந்த இடத்தில் அப்பழுக்கற்ற "விசில்பறக்க வைக்க கூடிய அஸ்திவாரங்களாகிய நீங்கள் பல பதவிகளில் இல்லாததே காரணம்.

நாம் என்ன ஜொலிககும் விளக்கை நம்பி ஜொலிக்க காத்திருக்கும் ஆட்களா? அதோடு தோரணங்கள் கட்டி உட்கார்ந்து எதையாவது பேசினால் போதும் 'கைதட்டல்பெற்றுவிடலாம் என்றிருக்க.  நாம் நட்சத்திரங்கள், சூரியன்கள், அமாவாசை இல்லாத பௌர்ணமிகள் நமக்கு நாமே பிரகாசத்தை தரக்கூடிய ஆற்றலை பெற்றவர்கள் அஸ்திவாரங்கள் என்பதை மறந்து விடாதீர்கள்.

பழக பழக பாலும் புளிக்கும் என்பார்கள். நான் புளித்தாலும் அது அஸ்திவாரங்களை பேச்சால் உற்சாகபடுத்தும் ஆரோக்கியமான பனங்கல் போல இருப்பேன் என்பதை இந்த நேரத்தில் தெரிவித்து கொள்கிறேன்.  சரி இத்துடன் எனது கட்டுரை உரையை முடித்து கொள்கிறேன். அஸ்திவாரங்கள் பற்றிய போற்றல் அனைத்தும் மனதின் இயக்கத்தில் என்னை தலைவராய் கொண்டுள்ள அனைவருக்கும் சேர்த்தே என் சமர்பணம்.

ஏதோ என் பாணியில் என் இயக்க அஸ்திவாரங்களேஉங்களுக்கு வணக்கம் என்று ஆரம்பித்து என்னுடைய உண்மையான வாசகர்களேரசிகர்களேதொண்டர்களேஎன்று கூறி நம் இயக்கத்திற்கு களங்கம் அடைய வைப்பவர்களை இயக்க கடலில் ஜல சமாதி செய்வது போல் அவர்களை கரைத்துதுடைத்து முன்னே வா!  அதோடு பசுந்தோல் போர்த்திய ஓநாயை எனக்கு அடையாளம் காட்டு! உன்னை அறிமுகபடுத்தி கொள்!  முகவரி தெரியா அஸ்திவாரமே இயக்கத்தை வானுயர்த்த தோல் கொடுஎன்று முழங்குவது போல் ஆகிவிட போகிறது.  இது அஸ்திவாரமாகிய என்னுடைய மற்றும் அனைத்து தொண்டனுக்கான என்னுடைய ஜனரஞ்சகமான விசில் மட்டுமே.  வேண்டுமென்றால் பசுந்தோல் போர்த்திய நரிகளை ஓட்டமெடுக்க வைக்க உன்னுடைய கரத்தை கொடுத்து அவர்களின் கரத்தை எடு என்று என்னுடன் யாராவது இருந்தால் கூறியதாக வேண்டுமென்றால் எடுத்து கொள்ளுங்கள்.  ஏனென்றால் மக்கள் பணிகள் எனக்கு ஆயிரம்.  ஆனால் உங்கள் பணிகளோ வாரணம் ஆயிரம் ஆகும்.  போகிற போக்கை பார்த்தால்  என்னையும் முழு நேர அரசியல்வாதியாக்கி விடுவார்கள் போலிருக்கிறது. அதனால் அஸ்திவாரங்களாகிய உங்களிடமிருந்து விடை பெறுகிறேன் நன்றி வணக்கம்.

இது அனைத்தும் ரைட்டா, ராங்கா என தெரியவில்லை.

justicemayel.blogspot.com