ஒன்றுபடு [ கூர்மையான ஈட்டி நீ ] TEAM WORK

ஒன்றுபடு [ கூர்மையான ஈட்டி நீ , நோ பெயின் வாட் கெயின்] THE TEAM WORK:- By VILLUPURAM V.ரா.SARAVANALINGAM CHETTIYAR

ஒன்றுபடு:- ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு. ஒற்றுமை கொள்வோம்.

இது ஒரு Motivation Article ஆகும்.  இந்த தனி தனியான தலைப்புகள் ஒன்றாகும் போது ஒரு Motivation உண்டாகிறது.  அது போலவே எப்போதும் நம் மனதும், உடலும், மூளையும் ஒன்றுபட்டு எந்த வேலை செய்தாலும் சரியாகதான் இருக்கும்.  ஒன்று நமக்கு வேண்டுமென்றால் ஒன்றுபட வேண்டும். ஒற்றுமையுடன் இருக்க வேண்டும்.

அனைத்தையும் ஒன்று சேர்த்து  ஒற்றுமையுடன் செயல்பட்டால் நாம் என்றென்றும் The One and Only  Star of the Star- ஆக இருக்கலாம்.

எல்லாமே டீம் ஒர்க்தான்.  "டீ"போடுவதற்கே மூன்று பொருட்கள் தேவைபடுகிறது.  அந்த மூன்றும் ஒன்று சேர்ந்தால் தான் ஓர் சுவையான டீயே கிடைக்கிறது.

Deal நன்றாக முடிய வேண்டுமென்றால் டீம் ஒர்க் இல்லாமல் முடியாது.  எதிரிகளுக்கு Deal போட்டு சாய்க்க வேண்டுமென்றாலும் Team இல்லாமல் முடியாது. தனியாக தான் இருக்கிறோம் ஆனால் எப்போதும் Team-மோடு தான் இருக்கிறோம். கீழ்கண்டவற்றை ஒன்றுபடுத்தி ஒற்றுமையுடன் செயல்பட்டால் நமக்கு எல்லாமே "GAIN"-தான்.

 A) "வலிஎனகிற வலிமை (STRENGTH OF PAIN):-

வரலாற்றில் எந்த வலியையும் பெறாமல் வலிமை அடைந்தவர்களும் இல்லை.  வலிமை பெறாமல் வளர்ச்சி அடைந்தவர்களும் இல்லை. வந்தோம் வளர்ந்தோம் ஆனால் எப்படி பிறந்தோம் தெரியுமா?  தாயின் வயிற்றில் என்போம். தாயின் வயிற்றில் தான். ஆனால் நாம் அதில் இருந்து வெளிவர வேண்டும் என்றால் வலியை தாங்கினால் தான் முடியும். குழந்தையாக பிறக்கவே மற்றும் குழந்தை நமக்கு வேண்டும் என்றாலே "Pain"-ஐ தாங்க வேண்டும்.  சாதாரணமாக கூறும் குழந்தை பெறுவதிலேயே இவ்வளவு வலியை தாங்கினால் தான் முடியும்.  வலி-க்கு "வலியைவர வைத்தால் தான் Strength கிடைக்கும்.

கட்டுமஸ்தான மற்றும் ஆரோக்கியமான உடல் வேண்டுமென்றால் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்பார்கள்.  ஆனால் அதை செய்பவர்களை கேட்டு பாருங்கள் அது எவ்வளவு கஷ்டம் மற்றும் எவ்வளவு Pain இருக்கிறது என்பது தெரியும்.  கட்டுமஸ்தான உடலை பெற்றவர்கள் அனைவரும் வலியை தாங்கியவர்கள் தான். 

எந்த இடத்திற்கும் பல தூரம் கடந்து வரலாம்.  வலியை தாங்கினால் தான்  வெற்றி பெற முடியும்.  வெற்றி பெற்றால் தான் எல்லா இடங்களிலும் வருக வருக என்று அழைப்பார்கள். 

இங்கு பெரும்பாலும் சாதித்தவர்கள் மற்றும் பொருள், வீடு வாங்கியவர்கள் பல பேர் வசை பாடும் வார்த்தைகளினாலும்வறுமையால் பட்ட கஷ்டத்தினாலும்வலியாலும் தான். 

வன்முறை என்பது நம் மனதிலும் மற்றும் நமக்கு வரும் "வலி"-யுடன் இருக்க வேண்டும். ஓர் உலோகமே பெயினை தாங்கினால் தான் பாத்திரமாகவோ, ஆயுதமாகவோ முடியும். வலியை தாங்கினால் தான் Strength-ஐ பெற முடியும்.

எந்த ஒரு விஷயத்திலும் Gain  அடைய வேண்டுமென்றால் Pain இல்லாமல் முடியாது.  Pain இல்லாமல் Gain கிடையாது. Gain-ஐ துரத்துவதற்கு முன் பெயினை வரவேற்க வேண்டும். Pain-ஐ கண்டு ஓட கூடாது. 

ஓடினாலோ, ஒழிந்தாலோ Gain-ம் உங்களை விட்டு ஓரேயடியாக ஒழிந்து விடும். Pain-ஐ ஒழித்து கட்டினால் நம்முடன் Gain ஒன்றுபடும்ஒன்றுபட்ட ஒற்றுமை எதையும் ஒழித்துகட்டும்.

B) கூர்மையான ஈட்டி நீ ( You Sharpness Weapon):-

நாம் எல்லாவற்றிலும் கூர்மையாக இருக்க வேண்டும்.  கூரிய பார்வை, கூரிய பேச்சு, கூரிய கவனம் என்று இருக்க வேண்டும். இந்த "கூரியஇல்லாமல் கூப்பாடு போட்டு எந்த பலனும் இல்லை.  நாம் ஓர் கூர்மையான "ஈட்டி" போல இருக்க வேண்டும். ஈட்டி-க்கு மட்டுமே எதையும் துளைக்க கூடிய கூர்மையான வலிமை உண்டு. அது போல் நம் மனதும் இருக்க வேண்டும்நம்மை பல பேர் வட்டமிட வேண்டுமென்றால் நீ  எல்லாவற்றிலும் கூர்மையாக Sharp-ஆக இருக்க வேண்டும்.  ஓர் வரைபடம் வரையவே பென்சிலை கூர் செய்தால் தான் வரைவது நன்றாக வரைய முடியும். வரைபடத்திற்கே "கூர்தேவைபடுகிறது.  வாழ்க்கைக்கு தேவைபடாதா Sharpness.

ஈட்டி போல நம்முடைய வார்த்தைகள், செயல்கள், வேலைகள் இருக்க வேண்டும். அது எதிரில் யார் இருந்தாலும் துளைக்க வேண்டும். காதல் என்றால் மனதை துளைக்க வேண்டும்.  வேலையென்றால் "Customer"-களை  துளைக்க வேண்டும்.

கூர்மையான ஈட்டி தான் நீ.  அதனால் தான் பல கோடி விந்தனுக்களில் கூரிய பார்வையோடு, முனைப்போடு முதலில் நீ ஈட்டி போல நுழைந்ததால் தான் இன்று நீ பிறந்துள்ளாய்.

 இது அனைத்தும் உண்மையா, பொய்யா என தெரியவில்லை.

 சிவராத்திரி:-

இதனை சிவராத்திரியன்று அனுப்பலாம் என்று தான் எண்ணம் இருந்தது.  ஆனால் அதற்கு முன்னரே அனுப்பினால் நாம் சிந்தித்து சிவனிடம் நமக்கு இல்லாததை கேட்டு வழிபட முடியும்.  பக்தி என்பதே ஒரு வகையான MOTIVATION தான். சிவராத்திரி-யன்று பார்வதி அதே இறைவனை வேண்டி அவரே கணவனாக வேண்டும் என நினைத்து மனமுறுகி வேண்டியதை போல் நம்மிடம் இல்லாத பலவற்றை மனமுறுகி இரவு முழுவதும் ஈஸ்வரனை எண்ணி பிராத்தித்து வணங்கிய பின் அவரிடம் கேட்டால் நிச்சயம் அதற்கான உபாயத்திற்கான வழியை  நிச்சயம் காட்டுவார் என்பது ஐதீகம். அதை நம்புவோமாக பிராத்திப்போமாக. உபாயம் கிடைத்துவிட்டதுயென்றால்  ஈஸ்வரனுக்கு நன்றி கூறுவோம். உபாயத்தை எந்த உபயமும் தற்சமயம் வரை வாங்காமல் உங்கள் அனைவருக்கும் ஓர் உபயதாரர் போல உங்களுக்கு கூறுகிறேன். இந்த உபயத்தை பெற்று கொண்டு இந்த உபயத்தை நீங்கள் பெறுவதற்கு சிவனை வழிபடுங்கள். 

சிவராத்திரி சிவனுக்கான ராத்திரி அல்ல. அது ஒரு பிராத்தனை ராத்திரி. நமக்கு எது தேவையோ அதை பார்வதி வணங்கி பெற்ற நாளன்று நாம் வணங்கினால் நமக்கு கிடைக்கும் என்பது நம்பிக்கை.  நம்பிக்கையை நம்புவோமாக. கடவுளை பிராத்தனை செய்வோமாக.

திருசிற்றம்பலம்  திருசிற்றம்பலம்.

justicemayel.blogspot.com