SIX(9) SERIES → எந்த காசும் கூட உங்களிடம் வாங்காமல் ஒருவித போதையில் தள்ளாட்டம் அடையாமல் தைய்ய தக்க தைய்ய தக்க என்று உள்ளத்தை தையல் போட்டு தச்சி உற்சாகத்தில் ஆட்டம் போட வைக்கும் திரை துறையில் வராத மை OWN பஞ்ச் வசனங்கள். இது வாடகைக்கு கிடையாது என்பது குறிப்பிடதக்கது. [ Top Knockout Power Punch Dialogues]
1) U(அ)nderla-இருந்து Upstair -க்கு வந்தவன் அழிச்சிடுவன்.
2) சரவணன எதிர்த்த சரவெடி வெடிக்கும். [Om SHANTHI]
3) சாவையே சாவடிக்கறவன் இந்த சரவணன் , சூரியா , ஜஸ்டிஸ் , ஜான், ஜின்னா,லிங்கம்,வீரா, வைரா.( Over Dose உடம்புக்கு நல்லதல்ல). எந்த பெயரை வேண்டுமானாலும் போட்டு கொள்ளலாம்.
4) சிவன வணங்குறவன் எதிர்த்த சிதச்சுறவன் (அல்) சின்னாபின்னாக்கிடுவன்.
5) Software-ல இருக்குறேன்னு Soft-ஆ இருப்பன்னு நினைக்காத சங்கு ஊதிறுவேன்.
6) எதிரி இருக்கான்ன ஏற்பாடோட இருக்குனும். இல்ல நாம இருக்கமாட்டோம்.
7) முட்டாள்னு நினைச்சவன் எல்லாம் முட்டாளான வரலாறு என்னது. அறிவாளின்னு நினைச்சு அழிஞ்சு போன வரலாறு உன்னது.
8) கத்தி முதல் துப்பாக்கி வரை நாங்கதான் (Royal Mech Dept). மொத்தமா எடுத்துக்கனும் வந்தோம் தாங்கமாட்ட.
9) படிப்ப வெச்சி விளையாடின FAIL-ஆன. பெண்ண வெச்சி விளையாடின FUSE போசசு. இப்படியே விளையாடின மொத்தமா போச்சு. பாத்து ஒரேயடியா போயிட போற.
10) எல்லாமே போன வரலாறு உன்னது. எல்லாமே அதிகமான வரலாறு என்னது.
11) நீயே சேர்த்த கூட்டம் சேர்த்துக்குனே இருக்குற வரைக்கும். தானா சேர்ந்த கூட்டம் தலைமுறை வரைக்கும். நான் தலைமுறை (Generation) டா.
12) மரியாதை-ன்னு சொன்ன மரியாதை போச்சு. கௌரவம்ன்னு சொன்ன கௌரவம் போச்சு. என்னென்னவோ சொன்ன குடும்பம் போச்சு. மூச்சு மட்டும் தான் பாக்கி இருக்கு போயிட போது.
13) Cell-ல்ல வெச்சியே Sell (Jail)-க்குள்ள அனுப்புறவன். எல்லாம் இருக்கு எங்க வேணாலும் அனுப்புவன்.
14) Jio-வை வெச்சி Genius-ஆ Plan போட்டு. Samsung -வெச்சி சங்கு ஊதிடுவேன்.
15) Airtel-ல்ல மானம் மரியாதையை Air-ல Rediff Mail (சிவப்பு மயில்ல) பறக்க விட்டுறவன் ஜாக்கிரதை.
16) Hot Mail-ல்ல Hot-ஆ அடிச்சு. Nokia-ல்ல Cool-ஆ Game விளையாடுறவன். எங்கிட்டியே விளையாட்டா.
17) பணம் எந்த திட்டத்திலும் சம்பாதிக்கலாம். ஆட்சி போனா வராது. ஆட்சிக்கு காட்சி அமைக்குறவனே நான் தான்.
18) பினாமி 1,2 இருக்குற உனக்கே அவ்வளவுனா. சுனாமி போல பினாமி இருக்குற எனக்கு எவ்வளவு இருக்கும்.
19) நீ பினாமி நான் சுனாமி.
20) வைக்குற உனக்கே அவ்வளவுன்னா வெச்சிருக்குற எனக்கு எவ்வளவு இருக்கும்.
21) ஏமாத்தனும் நினைச்ச ஏமாந்து போன . இன்னமும் நினைச்ச எமன்கிட்ட போவ.
22) பணத்தை எல்லாம் அவன் பணத்தை கொடுத்து ஏமாத்த நினைச்ச. Demonitorization போல அவன் Monitorization எப்படி இருக்கு?.
23) சொல்றவன் பண்ணதில்லை. பண்றவன் சொல்வதில்லை. சுயநலம் என்ற பெயரில் பொதுநலம் என்னது. பொதுநலம் என்ற பெயரில் சுயநலம் உன்னது. தெரியாதுன்னு நினைச்சியா?
ii)ஏமாத்துனவன் இதுவரைக்கும் வாழ்ந்ததா வரலாறு இல்லை.
iii)வரலாற்றின் பக்கத்தில் நான் வெள்ளையில் புதிய நீல பக்கம். நீ கருப்பு பக்கம்.
24) Vibration 25 வயதுவரைக்கும் எனக்கு என்னாச்சு. செயற்கையா ஏமாற்ற நீ சொன்ன Vibration உன்ன அழிச்சிட்டு போச்சு.
25) ஆறெழுத்து My Birth. அதில காமெடி பண்ண உயிர் இருந்தும் நீ Death.
26) எழுத்து பாதியில சேர வந்தது இல்லை. My Birth-லேயே சேர்ந்துவந்தது.
27) ஏமாற்றி சுருட்டுன பணம் எமனுக்கு சமானம் சும்மாவிடாது கண்டிப்பா உன்ன அழிக்கும்.
28) அடுத்தவன் நல்லா இருந்தா உனக்கு பிடிக்காது. இம்மாதிரி இருப்பவனை கடவுளுக்கு பிடிக்காது. இருப்ப மனிதன்னு சொல்லிக்க எதுவும் இருக்காது. பணம் இருக்கும் ஆனா நாற்றம் அடிக்கும்.
29) Power Punch என்னைக்குமே ஏன் Punch.
Comedy Punch:-
30) Under-ல்ல இருந்து வந்தவனுக்கு ஆழம் தெரியும். ஆனா Swiming தெரியாது காப்பாத்துடா.
31) Shock அடிக்கற மாதிரி பேசுறவன். ஆனா Current-எ பார்த்தாலே ஓடிடுவேன்.
32) பாம்பா பார்த்தா படையே நடுங்கும். ஆனா எனக்கு எல்லாமே நடுங்கும்.
33) Royal Enfield-ல கெத்தா போவேன். நாயா பார்த்தா பொத்திக்கின்னு போவேன். யாரு Skid -ஆகி கீழ விழறது.
சபரிமலை ஐயப்பன்:- பெண்களை அனுமதிப்பது தொடர்பாக
1)
கருத்தில் கொள்ள வேண்டியவற்றை மறந்து விட்டோமா அல் புரிந்து கொள்ளவில்லையா?
2)
ஐயப்பன் ஒரு பிரம்மச்சாரி. அவரை திருமணம் செய்து கொள்ள இன்னமும் ஒரு பெண் காத்திருக்கிறாள்.
3) பெண் உரிமை என்று கூறபடுவது பிரம்மசாரியான இவர் கோவிலுக்கு செல்ல இதற்கு பொருந்துமா?
4) ஒரு வேலை பிரம்மசரிய கோவிலில் நிறைவேற்றிவிட்டால் பெண் உரிமை நிலை நாட்டபட்டுவிட்டது. இனி பெண்களின் வாழ்க்கையில் இன்பம் மற்றும் நிம்மதிதான் என்று கூற முடியுமா? முதலில் பிரம்மசரிய சுவாமியிடமிருந்து அனுக்கிரகம், ஆசி கிடைக்குமா?
5) பெண் உரிமையை இதற்குள் புகுத்தி என்ன பயன் இருக்கிறது? பெண்கள் வாழ்க்கையில் எவ்வளவோ கஷ்டங்கள் இருக்கிறது. அதை தீர்த்தால் அவர்களிடம் நிம்மதி வந்து சேரும்.
6)
பிரம்மசரிய கடவுளை கஷ்டபடுத்தி இப்படியெல்லாம் வணங்கினால் அவர் சந்தோஷபடுவரா?
7)
பெண் உரிமை , ஆண் உரிமை என்பதே இடத்திற்கு இடம் வேறுபடும். அது இந்த பிரம்மசர்ய கடவுளுக்கு பெண்கள் செல்வதில் கிடையாதா?
8)
இந்த Case போட்டதும் இந்த மாநிலத்தை சார்ந்தவர்கள் இல்லை. அந்த மாநிலத்திலேயே ஆயிரம் பிரச்சனைகள் இருக்கும். அதை பற்றியும், அந்த மக்களை பற்றியும் கவலைபடாமல் ஏன் சபரிமலையில் தலையிட வேண்டும்? பெண் ஐயப்ப பக்தர்களும் இல்லை. கோவிலுக்கு செல்ல முற்பட்டவர்களும் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள். இதிலிருந்தே தெரியவில்லையா? இது அந்த புனிதத்தை கெடுக்க நடந்த சதி என்று புரியவில்லையா? இதையெல்லாம் கருத்தில் கொள்ள வேண்டாமா?
9) கோவிலின் அஸ்திவாரமான புனிதத்தை கெடுப்பதால் என்ன பயன்? ஆண்கள் செல்வதிலேயே அங்கு ஆயிரம் (பீடி, சிகரெட் etc) நடக்கிறது என்று கூறபடுகிறது. நாமே மாலை போட்டவர்களை கண்டிருப்போம். பெண்களும் என்றால் என்ன நடக்கும். அதற்காக ஒட்டு மொத்தமாக செல்லும் ஐயப்ப பக்தர்களை கூறவில்லை.
10) இவ்வாறான நியமங்கள், ஆகம விதிகள் இருப்பதால் தான் பெண்களை அனுமதிக்கவில்லை. அப்படி இருந்தால் அன்றைய காலந்தொட்டே பெண்களையும் அனுமதித்து இருப்பார்கள். இதையும் இவர்கள் புரிந்துகொள்ளவில்லையா?
11) ஏன் காலந்தொட்டே அனுமதிக்கவில்லை? அதற்காக பெண்களும் அன்று முதல் இன்று வரை ஏன் கவலைபடவில்லை? ஏனென்றால் அவர் பிரம்மசர்ய கடவுள் அதனால் தான். உடனே ஆஞ்சநேயரும் பிரம்மசர்யர் தான் என்று கூற கூடாது. ஏனென்றால் அவர் வேறு, இவர் வேறு. ஆஞ்சநேயருக்கு வடைமாலை சாத்துவார்கள். இவருக்கு உணவு வேறு. ஆஞ்சநேயர் கோவில் அதிகமாக இருக்கும். ஆனால் இவர் கோவில் குறைவாக தான் இருக்கும். ஆஞ்ச நேயர் கோவிலுக்கு பெண்கள் செல்லலாம். இவர் கோயிலுக்கு எந்த இடத்தில் இருந்தாலும் போக கூடாது. இவ்வாறு பூஜை முறையில் இருந்து பல வேறுபடும். குருவிற்கு சுண்டலும் ,சனி பகவானுக்கு எள் தீபம் தானே இடுகிறோம். வினாயகருக்கு கொழுக்கட்டையும், முருகருக்கு பஞ்சாமிர்தமும் தானே படைக்கபடுகிறது. விஷ்ணுவின் அவதாரத்திலேயே எவ்வளவு வேறுபாடு ஒருவர் ஏக பத்தினி விரதர். இன்னொருவர் பெண்களை மயக்கும் கிருஷ்ணர். லக்ஷ்மி நரசிம்மர் கோவிலில் ஆண்கள் சட்டை அணிய கூடாது என்று இருக்கிறது. இன்னும் பல கோவில்களில் ஆண்கள் செல்ல கூடாது என்று இருக்கிறது.
அதையெல்லாம் புரிந்து தானே நாம் வழிபடுகிறோம். பிறகு இதில் மட்டும் ஏன்?
13)
முதலில் இந்த தீர்ப்பே பாதி வெற்றி. பெண்கள் செல்லகூடாது என்று கூறிய நீதிபதிகளுக்கு நன்றி. இவ்வாறு சொன்ன அந்த நீதிபதிகளின் கருத்துக்களும் முக்கியத்துவம் வாய்ந்தது.
பெண் உரிமை, சம உரிமை-யை கூறிய நீதிபதிகளுக்கு அதிக கேள்விகள் இல்லை. ஒரே கேள்விதான். அனைவரும் மனிதர்களே. அனைவரும் சமம் என்று சட்டம் சொல்கிறது. ஆனால் நீங்கள் வந்தால் நாங்கள் எழுந்து நிற்கிறோம். அதோடு இல்லாமல் கீழே குனிந்தவாறு தான் செல்ல வேண்டும். Glass அணிய கூடாது. இன்னும் பல இருக்கிறது. இது பிடிக்கிறதோ இல்லையோ வயது 25 முதல் 75 வரை இதை பின்பற்றி தான் ஆக வேண்டும்.
சில Case-களில் Judgement எப்போது கொடுக்கிறீர்களோ அப்போது தான் நாங்கள் பெற முடியும். அதுவரை பொத்தி கொண்டு இருக்க வேண்டும். ஜனநாயகம் எங்கே? நீதி எங்கே? உரிமை எங்கே? நான் கேட்கவில்லை. கோர்ட்டில் Case போட்டு காத்திருப்பவர்களின் செவி வழி செய்திகள். வழக்கம் போல உண்மையா என்று தெரியவில்லை.
அதோடு தீண்டாமை முதலில் அங்கு தான் இருக்கிறது. குற்றவாளி என்றால் ஒரு கூண்டு. அது உங்களுக்கு கீழ் தான் இருக்கும். ஏனென்றால் நீங்கள் தான் கடவுள், பெரியவர் என்பது போல். சாதாரண மனிதர் நீங்கள் அதில் உட்கார்ந்திருக்கும் வரை தான் அதுவும். உங்களுக்கே இவ்வளவு என்றால் கடவுளுக்கு இருக்க கூடாதா?
குற்றவாளி கூண்டில் நிறுத்தி ஒருவரிடம் உறுதி மொழி வாங்குகிறீர்கள். அது என்ன புனிதமான இடமா சாமி கண்ணை குத்திவிடும், பாவம் என்று அவன் பயபடுவதற்கு. குற்றவாளி கூண்டில் அவன் எதையும் கூறுவான். அதனால் அவனுக்கு என்ன ஆக போகிறது? கோயிலிலேயே கவலைபடாமல் என்ன என்னவோ நடக்கிறது?. அதுவும் நான் சொல்வதெல்லாம் உண்மை. உண்மையை தவிற வேறில்லை என்ற சத்தியத்தை வாங்குகிறீர்கள். இது கூட அந்த காலத்து நடை முறை தான். அதை குற்றவாளி கூண்டில் வாங்குகிறீர்கள். புனிதமான இடமாக இருந்தாலும் பரவாயில்லை. அவன் எப்படி அந்த சத்தியத்தை அந்த இடத்தில் பின்பற்றுவான்? பின்பற்ற என்ன முகாந்திரம் இருக்கிறது அந்த குற்றவாளி கூண்டில்? இவ்வாறு கேட்பதற்கும் உரிமை இருக்கிறது.
இது உண்மையா, பொய்யா என தெரியவில்லை.
