அழுத்தம் [PRESSURE]


சூரியன் போல பிரகாசமாய் வான் உயர்ந்து துயர் துடைக்கும் ஆற்றல் உள்ள  கார்மேக "அழுத்தம்" தான் ஆழி பேரலை  சுனாமியாய், தடுப்பு ஊசியாய்  நம்மை பாதுகாக்கிறது சில சமயங்களில் அழிக்கிறது [PRESSURE DISCUSSING MEETING]கவிஞர் Valavanur V.ரா.SivaSaravanaLingam.


PRESSURE என்பது தான் நம்முடைய வாழ்க்கைஇதில் தான் நல்லது முதல் கெட்டது வரை அனைத்தும் நடக்கிறது. PRESSURE என்பதற்கு பல மறைமுக பெயர்கள் இருக்கிறது. அது தான் பொறுப்பு பயம், தண்டனை, பதவிஅப்பா, அம்மா, மகன்.  இதில் தான் நாடே இயங்குகிறது. 

சூரியன் போல பிரகாசமாய் வான் உயர்ந்து துயர் துடைக்கும் ஆற்றல் உள்ள  கார்மேக "அழுத்தம்" தான் ஆழி பேரலை சுனாமியாய், தடுப்பு ஊசியாய் நம்மை பாதுகாக்கிறது அதோடு சில சமயங்களில் அழிக்கிறது.

1) படிக்காமல் ARREARS வைத்திருப்பவன் கூட படித்தால் தான் PASS-ஆக முடியும் என்ற PRESSURE-ல் தான் படிக்கிறான் PASS ஆகிறான்.

 

2) வேலை வருடம் முழுக்க ஒழுங்காக செய்வதும் இதனால் தான். நமக்கு மேல் அதிகாரியோ, SUPERVISOR-ரோ, QC  இருப்பதால் தான் அவர் ஏதாவது சொல்லிவிடுவாரோ என்கிற PRESSURE.  இது போல் தான் அனைத்துமே.  இந்த SYSTEM என்பதே மறைமுகமாக PRESSURE தான். 

 

3) லஞ்சம் வாங்காமல் இருப்பதும் மாட்டிக்கொண்டு விடுவோமோ என்கிற Pressure-தான்.

 

4) நேர்மையாளனாகநாட்டு பற்று, மொழி பற்று இருப்பதும் நம் மனதின் Pressure-தான்.

 

5) ஒரு பெண்ணோ, ஆணோ ஒழுங்காக வளர்கிறார்கள் என்றால் அப்பா, அம்மா Pressure-தான்.  ஏதாவது தவறு செய்தால் கண்டிப்பார்கள் என்பதால் தான்.

 

6) தற்கொலை என்பதும் ஒருவிதமான அதிகமான அழுத்தத்தினால் தான் நடக்கிறது.

 

7) பல பேர்கள் தவறு செய்யாமல் இருப்பதும் சட்டம் இருக்கிறது தண்டித்துவிடும் என்பதனாலும்பாவம் செய்தால் கடவுள் தண்டனை வழங்கிவிடுவார் என்கிற அழுத்தத்தினால் தான்.  நம்மை தவறு செய்யாமலும், பாவம் செய்யாமலும் நம்மை இருக்க செய்கிறது.

 

8) பணம் சம்பாதிப்பதும் வசதியாக வாழ வேண்டும் என்கிற Pressure-னால் தான்.

 

9) அதனால் தான் பணக்காரனின் மகனைவிட ஏழையால் பலவற்றில் சாதிக்க முடிகிறது. பணக்காரன் ஆக முடிகிறது.

 

10) கடவுளை வணங்குவதும், அதற்கான முறைகள் ஒரு சிலவற்றில் கடுமையாக இருந்தாலும் பின்பற்றுவதும் அவருடைய இடத்தில் நமக்கு ஒரு இடம் வேண்டும் என்கிற Pressure-தான்.

இந்த Pressure-ஆனது அனைத்து இடங்களிலும் துறைகளிலும் Check and Balance-ஆக இருந்தால் அந்த நாட்டில் அனைத்து துறைகளிலும் அனைவரும் இருக்கிறார்கள் என்று அர்த்தம்.

 

ஒரு சில துறைகளோ, அனைத்து துறைகளோ முறை கேடுகளிலோ, ஊழலிலோ, நஷ்டத்திலோகலப்பட பொருட்களோ, Chemical-ஆக Vegetable முதல் அனைத்தும் இருக்கிறது என்றால் யாரும் யாருக்கும் Pressue கொடுக்கவில்லை என்று அர்த்தம்.  Pressure-கொடுக்க வேண்டிய ஒவ்வொருவரும் பிணம் போல இருந்ததினால் தான் நடைபெறுகிறது என்றே அர்த்தம். ஏனென்றால் ஒவ்வொருவருக்கும் அதிகாரமும், அதற்கான சட்ட விதி முறைகளும் , Designation-ம் வகுக்கபட்டுள்ளது இதற்கு மேல் உங்களுக்கு என்ன கொடுப்பது?  அனைத்தும் ஒவ்வொருவருக்கும் வேலைக்கு தகுந்தாற் போல் கொடுக்கபட்டுள்ளது.  அப்படி இருந்தும் மேற்கண்டவைகள் நடக்கிறது என்றால் யாருடைய குற்றம். CRIMINAL OFFENCE, திருட்டு சம்பந்தபட்டவற்றை செய்பவர்கள் மட்டும் குற்றவாளிகள் அல்ல. நீங்களும் தான். இதற்கு நீதிமன்றத்தில் தண்டனை உண்டு என்பதாவது தெரியுமா? நுகர்வோர் கோர்ட் என்பது எதற்கு என்று தெரியுமா?  தமிழன்அந்நியன் படத்தில் கூறுவதும் இதை தான். 

 

அந்த அழுத்தம் சரியான அளவில்சரியான முறையில் இருக்க வேண்டும்.  நம் உடம்பு போல தான் இதுவும் அதிகமானால் வியாதி (High B.P, Sugar Etc), குறைவாக இருந்தாலும் வியாதி (LOW B.P, SUGAR). சரியான அளவில் இயங்கினால் தான் வியாதி இல்லாத மனிதன். அது போல தான் ஒவ்வொரு துறையில் உள்ள அதிகாரிகளும் சரியான அளவில் PRESSURE கொடுக்க வேண்டும்.

வெளிநாடு அனைத்திலும் முன்னேறி இருக்கிறது என்றால் அதற்கு காரணம் ஒவ்வொரு துறையிலும் அதிகாரிகள் கொடுக்கும் சரியான அளவிலான PRESSURE தான்.  இதற்கு அறிவு என்பது பெரிதாக தேவையில்லை. நம்முடைய வேலையை ஒழுங்காக செய்ய கூடிய அளவிற்கு இருந்தாலே போதுமானது. பல வெளிநாடுகள் முன்னேறியதன் பிரம்ம சூத்திரமே இது தான்.  ஏனென்றால் அனைத்து துறைகளுக்கும் அனைத்தும் வகுத்தாகிவிட்டதுஅதை அவர்களுக்கு கொடுத்தாகிவிட்டது.

பிறகு முன்னேறாமல் இருக்கிறோம் என்றால் எவ்வளவு பெரிய அசிங்கம். உங்களை வானத்தை வில்லாக்க சொல்லவில்லை.  உங்களை உங்களுக்கு கீழ் உள்ளவர்களுக்கு PRESSURE தான் கொடுக்க சொல்கிறார்கள். 

 

இதுவே முடியாதவர்களெல்லாம் நான் யார் தெரியுமா?  என் தகுதி என்ன தெரியுமாஎன் அதிகாரம் என்ன தெரியுமா?  என்று சொல்ல எந்த தகுதியும் கிடையாது.  பிணம் கூட எரிக்கும் போது சூட்டின் PRESSURE-ல் இயங்கும். உயிருள்ள மனிதனுக்கு பதவி, அதிகாரம் வண்டி, அதிக சம்பளம், BONUS மற்றும் பிற சலுகைகள் அனைத்தும் கொடுக்கபட்டு உள்ளது.

 நீங்கள் ஒன்றும் செய்ய வேண்டியதில்லை.  உங்களுக்கு கீழ் உள்ளவர்கள், அவர்களுக்கு கீழ் உள்ளவர்கள் என்று சரியான முறையில் PRESSURE கொடுத்தாலே அனைத்து துறைகளிலும் சிறந்த முறையில் விளங்கி,  சிறந்த துறைகளுக்கான விருதையும், பெருமையையும் அனைவரும் பெறுவர்.

குறிப்பு:-

A) காதல் என்பது மனதில் வந்த ஒருவர் மீதான அன்பு சம்பந்தபட்ட Pressure தான்.  அதை சரியான அளவில் செலுத்தும் போது காதல் சந்தோஷமானதாகிறது.  அது அதிகமோ, குறைவாகவோ கொடுக்கும் போது நரகமாகிவிடுகிறதுகாதல் என்பது வெறுத்துவிடுகிறது.

B) குடும்ப உறவுகளிலும் சரியான அளவில் அழுத்தம் கொடுத்தால் கணவன்-மனைவி, தந்தை-மகன், தாய்-மகள், அண்ணன்-தம்பி, அண்ணன்-தங்கை உறவுகள்  இனிமையானதாக இருக்கும்.

 

சரியான அளவில் Pressure கொடுத்து Pressure இல்லா வாழ்வை வாழ்வோம். இத்துடன் PRESSURE DISCUSSING MEETING இனிதே நிறைவுற்றது.

இது அனைத்தும் உண்மையா, பொய்யா என தெரியவில்லை.