"எதுவும் எல்லாருக்கும் தெரியுமா? [The Big Monster Pocket Full Corruption ]

 


அப்பாவிகளிடம் செல்வங்களை வண்டல் மண் போல சுரண்டி திருட்டு பிழைப்பு நடத்தி மற்றும் பல சிலந்தி வலை பின்னல் கொண்டு கரக்கும் பிச்சைக்கார செல்லரிக்கும் கரையான்களை வெளிச்சத்திற்கு கொண்டு வர ஓர் ஊது குழல் போல உங்கள் பார்வைக்கு டிஜிட்டல் பேனா கொண்டு ஜித்தன் ஆக ஆந்தை போன்ற டிஜிட்டல் தளத்தில் பொறி பறக்கும் நீதி மணி ஒலியானது "எதுவும் எத்தனை பேருக்கு எல்லாருக்கும் தெரியுமா? யாருக்கு தெரியும் என்ற  வினாவாக?"பாய்கிறது ஒலிக்கிறது [The Big Monster Pocket Full Corruption ]★புரட்சி கவிஞர் Valavanur V.ரா.SivaSaravanaLingam.

வைராவீராராச என்று பல பெயர்களுடன் ஒரு பெயராய்ஓர் மனிதராய் என்னுள் கொண்டு உங்களில் ஒருவனாய் ஓர்


Messenger ஆக கட்டுரை வாயிலாக All In One ஆக வரார் JMN-ன் ரிதம் F.M 605 108 -லிருந்து justicemayel.blogspot.com தளத்தின் வாயிலாக அஸ்திவாரங்களாகிய வாசகர்களே.

அப்பாவிகளிடம் செல்வங்களை வண்டல் மண் போல பல சிலந்தி வலை பின்னல் கொண்டு சுரண்டி திருட்டு பிழைப்பு நடத்தி கரக்கும் பிச்சைக்கார செல்லரிக்கும் கரையான்களை வெளிச்சத்திற்கு கொண்டு வர ஓர் ஊது குழல் போல "எதுவும் எத்தனை பேருக்கு யாருக்கு தெரியும் என்ற வினாவாக?" உங்கள் பார்வைக்கு டிஜிட்டல் பேனா கொண்டு ஜித்தன் ஆக ஆந்தை போன்ற டிஜிட்டல் தளத்தில் பாய்கிறது மற்றும் பொறி பறக்கும் நீதியின் மணியானது ஒலிக்கிறது.  இந்த பாய்ச்சல் உங்களுக்காக. பல்வேறு துறைகள் உதாரணத்திற்காக மட்டுமே கூறபடுகிறது.  மற்றபடி யாரையும் குறிப்பிட்டு கூறவோ, புண்படுத்தவோ எழுதியது அல்ல.

இதில் குறிப்பிடுவது எங்கேயோ நடக்கிறது என்று மட்டுமே.  எல்லா இடங்களிலும் அனைத்து தரப்புகளிலும் நடக்கிறது என்று இதற்கு அர்த்தம் கொள்ள தேவையில்லை அப்படி யாரையும் கூறவில்லை.  அதோடு இவ்வாறான சிறிய விஷயம் என்ற பெயரில் நாம் செல்லரிக்கும் கரையான்களிடம் மாட்டி கொண்டு எவ்வளவு இழக்கிறோம் என்பதை தெரிந்து கொள்ள தான் இந்த கட்டுரை.  நாம் பார்க்கும் தடை செய்யபட்ட Porn Videos-ன் ஒரு வருட லாபம் எவ்வளவு தெரியுமா?  நாம் வாங்கும் திடீர் தடை செய்யபட்ட குட்காபுகையிலை பல லஞ்சங்களுடன் சேர்த்து நாம் என்ன விலைக்கு வாங்குகிறோம்?  அது இந்தியா முழுக்க கணக்கிட்டால் எவ்வளவு கோடி வரும்?  இது அனைத்தும் கருப்பு பணமா? வெள்ளை பணமா?  யார் பாக்கெட்டிற்கு செல்கிறது? இவ்வாறான திடீர் தடையால் இந்தியா முழுக்க மக்களுக்கு நல்லது ஏற்பட்டுள்ளதா? அல் வேறொரு பெயரில் பண பறிப்பு நடக்கிறதா? ஏனென்றால் எல்லாமே எங்கும் கிடைக்கிறது.  அதோடு இது சட்ட சபைக்கே சரம் சரமாக கொண்டுவரபட்டது.  அப்படி என்றால் என்ன அர்த்தம்?  லஞ்சத்தையும் சேர்த்து காசு கொடுத்து வாங்கி எடுத்து வந்தவர்கள் குற்றவாளி என்றால் இந்த திடீர் தடையால் வந்த விலை ஏற்றம் மூலமாக லஞ்சத்தை பங்கிட்டு கொண்டவர்கள் தர்மத்தின் தலைவர்களா?  உத்தமர்களா?  ஏழை வாழும் நாட்டில் இவ்வளவு பண பறிப்புகள் நடந்தால் ஏழை ஏழையாக கூட இருக்க முடியாது தானே.  இந்த தடையே அவசியம் தானா என்பது போன்ற கேள்வி தான் இந்த பண பறிப்புகளை எல்லாம் கண்டால் தோன்றுகிறது.

இதுவெல்லாம் ஒரு விஷயமா என்றால் விட்டு விடுங்கள். அதோடு இது தான் பெரிய விஷயம் என்றால் அனைத்து துறைகளில் இருப்பவருக்கும் அது சம்பந்தபட்ட அத்தனை தகவல்களும், சட்டங்களும் தெரிய என்ன செய்யலாம் என்று ஆலோசியுங்கள். அனைத்தும் செல்போனில் அடக்கம் என்பது போல் நம் பாக்கெட்டில் அடக்கம் என்பது போன்று வர என்ன வழிகள் இருக்கிறது?  அதோடு இந்திய குடிமகனாக இருக்கும் யாரும் எதனை பற்றியும் சட்டம் சார்ந்தோ அல் வேறு எதையாவது தெரிந்து கொள்ள கூடிய ஓர் திறந்த வெளி அமைப்பு எதாவது இருந்தால் அதனை அனைவருக்கும் தெரியபடுத்துங்கள்.  நாம் இன்னும் படிப்பறிவு இல்லாதவர்கள் இருக்கும் உலகத்தில் தான் வாழ்கிறோம் என்பது குறிப்பிடதக்கது.

அதோடு பலருக்கு பல துறைகளில் ஒவ்வொருவருக்கும்  வெப் சைட்கள் இருக்கிறது மற்றபடி அவர்களின் முழுமையான பாலிசிகளோ, கொள்கைகளோ etc என்பது முழுமையாக இல்லை.  ஒரு சிலரது மட்டுமே முழுமையாக உள்ளது. எதற்கு வெப்சைட் அமைத்தார்கள் அல் அமைக்க வேண்டும் என்ற புரிதலே இல்லாமல் பலர் வெப் சைட் ஆரம்பித்து நடத்தி வருகின்றனர். 

அனைத்திற்கும் பல்வேறு பல்வேறு வழி முறைகள் உள்ளதா?  இருக்கிறது என்றால் ஏன் பின்பற்றவில்லை?  அனைத்தையும் அப்பாவி பொது மக்கள் மட்டுமே தப்பாமல் பின்பற்ற வேண்டும் என்று மட்டும் தான் சட்டம் உள்ளதா?

கீழ்கண்டவைகள் எல்லாம் ஓர் ஊது குழல் போல ஊதி பொறி கிளப்ப மட்டுமே கூறபட்டவை.  அதனால் பல துறைகளும் உதாரணத்திற்காக சுருக்கமாகவே கூறபட்டிருக்கும்.     

குற்றங்கள்திருட்டுத்தனம் என்றால் ரவுடிகள், தாதாக்கள் செய்யும் கொலைகள் மற்றும் பிக் பாக்கெட் மட்டும் தானா மற்றவைகள் கிடையாதா?  அப்படி என்றால் இதற்கெல்லாம் என்ன பெயர்.  அவர்களாவது சரியோதவறோ அவர்களுக்குள்ளோ அல் பணத்தை வாங்கி கொண்டு அடிப்பதுஉதைப்பது மற்றும் கொலைகொள்ளையில் ஈடுபடுகின்றனர்.  கொலைகளில் பொது மக்கள் என்பது மிகவும் சொற்பமே என்று நினைக்கிறேன். அவ்வாறாக எதாவது நடந்தாலும் அவர்களுக்கு ரவுடி என்று முத்திரை குத்தப்பட்டு சொந்த காரர்கள் முதல் பொது மக்கள் வரை அனைவரும் இவர்களை ஒதுக்கி வைக்கின்றனர்.  அதோடு போலிஸ் -ஆல் கைது செய்யபட்டு பலர் குற்றவாளியாகி சிறைக்கு சென்று வந்துள்ளனர். அதோடு அந்த ஏரியாவில் எதாவது குற்ற சம்பவங்கள் நடந்தாலும் சந்தேகத்தின் பெயரில் கைது செய்யபடுகின்றனர். அதோடு குற்ற சம்பவத்தில் தொடர்ந்து ஈடுபட்டால் அவர்கள் தொடர் குற்றவாளிகள் ஆகி போலிஸ் ஸ்டேஷனில் மற்றும் பொது இடங்களில் அவர்களின் போட்டோ போட்டு பொதுமக்கள் கவனமாக இருக்க அறிவுறுத்தபடுகின்றனர்.  அதோடு இவர்கள் மீது இவர்களை போலவே உள்ள எதிரிகளால் பல அச்சுறுத்தல்கள் இருப்பதால் யாவரும் அனைத்து இடங்களுக்கும் சுதந்திரமாக போக முடியாது அதோடு இவர்களை அறிந்த போலிஸார் கண்ணில் பட்டால் முழுவதும் அவர்களை சோதனை செய்தே அனுப்புகின்றனர்.  இவ்வாறான பயந்த மற்றும் மோசமான வாழ்க்கை தான் இவர்களுக்கு.

இவர்களை விட்டால் வழக்கம் போல் அரசியல்வாதிகளைமளிகை கடை, பால் ஊற்றுபவரை அல் எதற்கும் GST கட்டாமல், பில் கொடுக்காமல் துண்டு சீட்டில் எழுதி கொடுப்பவரை கூறுவோம்.  அவர்களுக்கும் எதிர்கட்சியிடம் எப்போது சிக்குவோமோ அல் CBI, InCome Tax, GST-யிடம் எப்போது மாட்டுவோமா என்ற பதற்றத்துடன் தான் வாழ்க்கை. 

அது எவ்வளவு பெரிய அரியனையில் அமர்ந்திருந்தாலும் அவர்களின் நிலமை இது தான்.  இதுவெல்லாம் நாம் அறிந்ததே. இவர்களெல்லாம் நம் கண்கள் முதல் பலர் கண்களுக்கு தெரிந்தவர்கள். இவர்கள் ஏதாவது கூறினால் "சும்மா கிழி" என்பது போன்றது தான்.  அது இவர்களுக்கு நேராகவோ அல் இவருக்கு பின்னாலோ கிழிக்கபட்டு கொண்டிருக்கிறார்கள் பலரால்.

ஆனால் கீழ்கண்டவர்கள் செய்யும் குற்றத்திற்கு இது வரை எந்த நடவடிக்கை எடுத்து அதற்கான தண்டனைகள் எத்தனை பேருக்கு தரபட்டுள்ளது.  சட்டம் எதாவது உள்ளதா?  

கீழ்கண்ட எதுவும் எந்த ஒரு தனி நபரையும் குறை கூறவோ, குற்றம் சாட்டவோ எழுதவில்லை.  இதுவெல்லாம் திருட்டு தனம் கிடையாதா?   அதோடு அந்நியனில் கூறுவது போல் இதுவெல்லாம் பெரிய மக்கள் தொகையில் கணக்குகள் போட்டால் ஊழலை விட மிக மோசமாக இருக்கிறதே. ஆனால் இவர்கள் எந்தவித அசிங்கமும், கேவலமும் குறைந்தபட்சமாக கூட அடையாமல் காரில் வலம் வருகிறார்களே இது என்ன நியாயம்?.  ஒரு வேலை White Collar Fraud தனம் பண்ணினால் கம்பி எண்ணி களி திண்ணாமல் ராஜ மரியாதையோடு உலா வரலாமா?  இது என்னங்க அநியாமா இருக்கு?  சாதாரணமாக நினைக்கும் எந்தவொரு சின்ன திருட்டு தனமும் முதல்வன்அந்நியன் படத்தில் கூறுவது போல் நாள் கணக்கில், மாத கணக்கில் பெரிய மக்கள் தொகையில் பார்த்தால் The Big Monster-ஆக நம் கண் முன்னே விரிவடைகிறது அதை விளக்கவே இக்கட்டுரை. இதோடு இவர்கள் தான் பெரிய தில்லாங்கடி திருடர்கள். 

Cell Network:-

நாம் உபயோகிக்கும் ஒரு செல் நெட்வொர்க்கில் ஒரு ரூபாய் நாம் எதுவும் உபயோகிக்காமல் எடுத்தால் அது சாதாரண விஷயமாக நமக்கு தெரியலாம்.  அதனை அந்த நெட்வொர்க்-டம் கேட்டால் ஏதாவது காரணங்களோ அல் சின்ன Error என்று கூட கூறலாம்.  ஆனால் அது இந்திய மக்கள் தொகையில் பார்த்தால் அது The Big Monster Corruption/day என்பது போன்றதாகும். இது One Rupee தான் என்று இல்லை. Net-ன் M.B என்றாலும் சரி அல் வேறு எதுவானாலும் இந்திய அளவில் நடக்கிறது என்றால் அது மிக பெரிய ஊழல் போன்றதாகும்.  ஒரு Customer Care-ற்கு ஒரு நாளில் ஒரு நெட்வொர்க்ல் மட்டும் எவ்வளவு கால்கள் வருகிறது என்று தெரியுமா? இதில் கால் பண்ணாமல் தன் கவனத்திற்கு வராமல் இருப்பவர்கள் எத்தனை பேர் தெரியுமா?  இப்போது எல்லாம் இவ்வாறெல்லாம் பெரிதாக நடப்பதில்லை. காரணம் Jio வந்ததால்.  ஆனால் இன்றும் Jio-விலேயே என் தம்பியின் நெட் ஆனது போன இரண்டு மாதங்களில் நான்கு நாட்கள் முழுவதும் உபயோகிக்காமலேயே நெட் காலியாகிவிட்டது என்று வருகிறது.  ஒரு சில சமயங்களில் M.B. குறைகிறது.  இது இந்திய அளவில் என்றால் இதுவே நாட்டின் மிக பெரிய குற்றம்? அதோடு அடுத்த நாள் என்பது இந்த நாளின் நள்ளிரவு 12 மணியில் இருந்து தானே.  ஆனால் நெட் முழுவதும் காலியாக இருந்தால் நள்ளிரவு 12 மணிக்கு இன்றைய நாளின் 2 GB Neவராது.  12.45 PM-ஐ கடந்து தான் 4G Work ஆகும்.  இவ்வாறு இருந்தால் தானே 200 MB-யாவது Customer-கள் அதில் அப்படியே விடுவார்கள்.  இதிலும் சுரண்டி திண்ணத்தான் இந்த டகால்டி வேலைகள் எல்லாம்.

Apps:-

Apps நம்முடைய அந்தரங்கம் முதல் அனைத்து தகவல்களையும் நம் போனில் இருந்து திருடி கொள்கிறது இல்லையென்றால் திருடி வேறொருவருக்கு விற்றுவிடுகிறது. வேவு பார்ப்பது என்பது உளவு பார்ப்பது என்று அர்த்தமாகும்.  உளவு பார்ப்பது என்றைக்கும் எப்பொழுதும் நியாயமாகாகது அது குற்றமே.  ஆனால் இவர்கள் விளம்பரத்தின் மூலமாக வரும் லாபத்திற்காக நியாயபடுத்த முனைகிறார்கள்.  அதாவது உங்களை உளவு பார்த்து உங்களுக்கு தேவையானவற்றை உடனே நொடி பொழுதில் தரும் piza பாய் போல உங்களுக்கு வேண்டிய விளம்பரங்களை தந்து உங்களை எந்த அபச்சாரமும் இன்றி திருப்திபடுத்துகிறார்களாம். விளம்பரத்தில் வரும் நிறுவனத்திற்கு வாரண்டியோ, கேரண்டியோ கிடையாது.  ஆனால் எக்கேடு கெட்டு போனாலும் போகவில்லையென்றாலும் அவர்களுக்கு விளம்பரத்தினால் நல்ல லாபம் கிடைத்துவிடுகிறது.

இது நம்முடைய செல்போன் நம்பரையும் விட்டு வைக்காமல் விபச்சார அழகி காலிங் என்பது போல் பல நம்பர்களில் இருந்து பல மெசெஜ்கள் வருகிறதே அது நம்முடைய நம்பரை விற்றுவிடுவதால் வருவது.  இதில் பல வங்கி மோசடிகளும் அரங்கேறுகிறது.  எவன் தான் நம்பரை கொடுக்கிறான் என்றே தெரியவில்லை.

இதை மேலும் உறுதிபடுத்தும் விதமாக நாட்டு மக்களையே வேறொரு நாடு உளவு பார்த்து பல தகவல்களை சேகரித்த அதிர்ச்சி தகவல் மத்திய அரசிற்கு வந்து பல Apps-களை Band செய்துள்ளனர்.

அதோடு இதற்கு எதற்கு இத்தனை Permissions என்றால் அது அந்த நாடு அனுமதியோடு நடப்பது போல் கூறபடுகிறது.  இதில் உண்மையும் இருக்கிறது பொய்யும் இருக்கிறது.

அதாவது பல முக்கியமான App-ற்கு மட்டுமே பல முக்கியமான அனுமதியை அந்த நாட்டு App கள் வாங்க அனுமதி அளிக்கபட்டுள்ளது.  மற்றபடி ஒரு App Lock, Themes, Browser-ற்கும் எதற்கு இத்தனை Permissions?  இதனை அந்தந்த நாட்டின் இறையாண்மையை காக்க பல வழிமுறைகளை வகுத்துள்ளார்களா?  மக்களை பேணி காக்க என்ன நடவடிக்கைகளை ஆக்க பூர்வமாக எடுத்துள்ளனர்?  அதோடு பல போலி வைரஸ், மால்வேர் App-கள் எப்படி எந்த நாட்டு அனுமதியோடு வெளி வருகிறது?  இதுவெல்லாம் உண்மை தானா?

ஏனென்றால் பிக் டீல் பிக் Investment பிக் Profit என்றில்லாமல் மக்கள் தகவல்களே மூலதனம் அதில் பெரிய Profit என்பது போல் செல்கிறது.  கேட்டால் இலவச Appவழங்குகிறோம் என்று கூறுகிறார்கள். முதலில் நாங்கள் எப்போது கேட்டோம்?  இலவசமாக மக்களுக்கு வழங்குகிறோம் என்று கூறி இதிலும் அதற்குண்டான செலவுகளை Income Tax-ல் கணக்கு காட்டி விட்டுஅதன் பின் பாரி வள்ளல் போல் பேசி விட்டு இப்படி வெளிச்சத்தில் ஆனால் இருட்டில் விளக்கு பிடித்து தகவல்களை திருடினால் நியாயமா?  அதற்காக அனைவரையும் கூறவில்லை.  தரமானவர்கள் என்றும் தரம் தாழாமல் அவர்களுடைய அனைத்து தரத்தையும் ஏற்றி குறைகளை முரத்தால் அடித்து துரத்துவது போல் துரத்தி திறம்பட நடத்துகின்றனர்.

இவ்வாறு திருடிய பிச்சைகாரர்களிடம் ஏன் இந்த எச்சை புத்தி என்று கேட்டால் அதற்கு ஓர் அழகிய விளக்கம் கொடுப்பார்கள்.  குற்றவாளிகளிடம் ஏன் விளக்கம் கேட்கபடுகிறது?  அப்படியானால் மேற்கண்டவற்றிற்கு தண்டனை இல்லையா?  அப்படி கடுமையான தண்டனை இல்லையென்றால் தவறு யாருடையது? ஏன் சட்டங்கள் இயற்றபடாமல் உள்ளது? உலக அளவில் சைபர் குற்றங்கள் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா?

இது போன்றே ஒரு சில கம்பெனிகளில் எங்களிடம் கூறாமல் வேறு கம்பெனிக்கு பணியில் அமர்ந்தால்  அவர்களுக்கு அந்த மாத ஊதியம் வழங்கபட மாட்டாது.  இன்னும் ஒரு சில இடங்களில் P.F வழங்கபட மாட்டாது என்று கூறியுள்ளனர்.  இது கம்பெனி தொழிலாளர் சட்டபடி தவறான ஒன்றாகும்.  அதோடு இவ்வாறு கூறுவது சட்டபடி செல்லாது.  இவ்வாறு கூறி அங்கிருப்பவர்களே போலியாக பல மோசடிகளை செய்து உங்கள் ஊதியம் முதல் P.F வரை பெற வாய்ப்பிருக்கிறது.  ஏற்கனவே P.F. மோசடி என்று ஒன்றை அனுப்பி உள்ளேன்.

இது போன்று பலவற்றிற்கான கம்பெனி சட்டங்கள், நுகர்வோர் சட்டங்கள் அதற்கான கம்பெனி, நுகர்வோர் வக்கீல்கள் முதல் தொலைபேசி, இடம் வரை பலருக்கு தெரியவில்லை.  இதுவெல்லாம் தெரிய வைப்பது யார் கடமை? யார் பொறுப்பு?  

Consultancy-யில் கம்பெனி Interview-ற்கு செல்லும் நபர் அந்த Consultancy-யில் பணம் கொடுத்தால் தான் அந்த Company உயர் வேலைக்கு  போக முடியும் என்றால் ஜனநாயகம் நிலை நாட்டபட்டுவிட்டதா?  நீட் தேர்விற்கு போராடுகிறோம்.  இந்திய அளவில் ஒரு வருடத்தில் மொத்த கன்சல்டன்சிகள் சம்பாதிக்கும் வருமானம் எவ்வளவு தெரியுமா?  இவ்வாறான முறையில் வேலைக்கு அமர்த்த சட்டபடி முடியுமா?  கன்சல்டன்சிக்கு அதிகாரம் இருக்கிறதா?

மேற்கண்ட அனைத்தின் விபரங்களும் உங்களுக்கு கிடைத்தால் நீங்களே சொல்லி விடுவீர்கள்.  அனைத்திலும் பறிப்புகள் நடக்கிறது என்று.  அது பண பறிப்போ அல் நம்முடைய தகவல் பறிப்போ எதுவாயினும் அடுத்தவர்களுடையதை பறித்து சாப்பிடும் உலகத்தில் வாழ்கிறோம் என்றால் அது ஆனந்தபட கூடிய ஒன்றா?  அசிங்கபட கூடிய ஒன்றா?

போனால் போகட்டும் போடா என்ற நினைப்பு தான் இத்தனை திருட்டுக்கும், தவறுகளுக்கும் காரணம். ஒரு பெரிய திருட்டு, மோசடிஏமாற்று வேலை என்பது அதிகாரம், பதவி, பணத்தை கொண்டு நடக்கும்.  ஆனால் இங்கு நம்முடைய Careless-னால் மட்டும் எவ்வளவு கோடிகள் பல துறைகளையும் சேர்த்து பல பாக்கெட்களுக்கு போகிறது என்று தெரியுமா? மேற்கண்ட தவறுகளுக்கு காரணம் நாம் மட்டுமே ஆகும்.

அனைத்து சட்டத்தையும் மற்றும் அதனுடைய Update-ஐயும் அனைத்து துறைகளில் இருப்பவர்களும் தெரிந்து கொள்ள வேண்டியது முக்கியமான ஒன்றாகும்.  உதா:- தமிழன் படம்.  

ஏனென்றால் பலர் கூறும் பல துறைகளில் இருக்கும் கம்பெனி Rules, Policy என்பது One Side Agreement போல உள்ளவைகளாக இருக்கிறது. பலரது பாலிசி வேறு நம்மிடம் கூறுவது வேறாக இருக்கிறது.  இதனாலும் பல குழப்பங்கள் ஏற்படுகிறது. இது சட்டத்திற்கு முன் பல செல்லாது.  வேண்டுமென்றால் உங்கள் துறை சார்ந்த அத்தனையையும் துறை சார்ந்த லாயர்ஸ் இடம் கொடுத்து ஆலோசனை கேளுங்கள் பிறகு அனைத்தும் உங்களுக்கு வெட்ட வெளிச்சமாகி விடும்.

எடுத்துகாட்டிற்கு:-

ஆசிரமம் முதல் மடங்கள், ஆதினங்கள் etc வரை பல இருக்கிறது.  அதற்கு பல Rules, Policy, கொள்கைகள் என்று இருக்கிறது. அதனை மொத்தமாக அனைத்து இடங்களில் இருந்தும் வாங்கி அதனை இது சார்ந்த, தேர்ந்த வக்கீலிடம் கொடுத்து இது சட்டபடி செல்லுமா என்று கேளுங்கள்.  பிறகு உங்களுக்கே பலது புரியும்.

அதோடு அதனை தொடர்ந்து பின்பற்றுகிறார்களா என்று கவனியுங்கள்.  18 வயது ஆகிவிட்டால் அதோடு அவன் கையெழுத்து இட்டுவிட்டால் எந்தவொரு மனிதனையும் தன் இஷ்டத்திற்கு நடத்தவும் முடியாது.  அதோடு அடிமை போல் நடத்த அனுமதி இல்லை.

அவர்கள் இஷ்டத்திற்கு ஒரு ஆன்மீக கருத்து என்றால் அது அவர்களோடு இருக்கும் வரை அது தனி மனித கருத்து. ஆனால் அது ஆதினம், ஆஸ்ரமம், மடம் ஆனால் அனைத்திற்கும் ஆதாரங்கள் தேவை. ஆதாரங்களுடன் தான் அங்கீகாரம் வழங்க முடியும். இவ்வாறு ஒரு வேலை இல்லை என்றால் பல சட்டங்களை வகுக்க வேண்டியது அரசின் கடமையாகும்இல்லையென்றால் சாமியார்களின் கூட்டம் பெருகி கொண்டே தான் இருக்கும். 

அசல் எது நகல் எது என்று தெரியாமல் நகத்தை பிய்த்து கொண்டு நஷ்டம் அடைவதே நம்முடைய தலையெழுத்து என்பது போல் தான் அனைத்திலும் ஆக வாய்ப்பிருக்கிறது.

இவ்வாறு  பல துறைகளில் பலவற்றை ஆராய்ந்து பல சட்டங்களை மற்றும் பலரின் பாலிசிகளை, ரூல்ஸ்களை அனைத்து துறைகளிலும் கவனிக்காவிட்டால் இந்த செல்லரிக்கும் விஷயம் கொரானா பரவல் போல நாளுக்கு நாள் பெருகி கொண்டே போகும். இவ்வாறு பெருகினால் நல்லவர்கள் வாழவே முடியாது என்ற நிலை மட்டுமல்ல.  யாருமே எங்குமே எந்த திருட்டு தன மோசடிகளும் இல்லாமல் வாழவே முடியாது என்ற நிலை வந்துவிடும்.

அதோடு கத்தி எடுத்து குத்தினால் தான் குற்றம் அதற்கு சிறை தண்டனை என்பது போலவும், இம்மாதிரியாக கொஞ்சம் கொஞ்சமாக கொசு போல் இரத்தம் உறிஞ்சுவது போல் உறிஞ்சினால் குற்றமல்ல அதோடு நமக்கு சிவப்பு கம்பள விரிப்பு வரவேற்பு கிடைக்கும் என்றால் இது நீதி நிலைநாட்ட பட்டதன் சாட்சியா? இது நீதியை நிலை நாட்டுவதற்கான நீதி மணி ஓசையாகும்.

ஏனென்றால் இது ஓர் வேலைகாரன் என்கிற சிவகார்த்திகேயன் படத்தில் கூறுவது போல் ஒவ்வொருவன் பாக்கெட்டிலிருந்தும் எடுத்து அவன் பாக்கெட்டை Full-ஆக்கி கொள்ளும் ஓர் பிக் மான்ஸ்டர் கிரைம் Corruption ஆகும்.

வக்கீல்களுக்கு Income Tax உண்டா?  இல்லையா?  நீதிக்காக போராடும் எந்த வக்கீலும் இது வரை நாம் கொடுத்த Fees-ற்கு பில் கொடுத்ததாய் தெரியவில்லை.  அப்படியென்றால் ஒரு பிரபலமான பல இலட்சங்கள் அல் கோடிகள் வாங்கும் வக்கீல் நினைத்தால் தன் இஷ்டத்திற்கு வரி கட்டாமல் இருந்துவிட முடியுமா?  இப்படி  வரிகட்டாதவர்கள் தான் நீதியை நிலைநாட்ட போகிறார்களா? ஏழை வக்கீல் சிவாஜி படத்தில் கூறுவது போல் இன்றும் ஏழையாகவே உள்ளார் என்பது குறிப்பிடதக்கது.  யாருக்காக இது யாருக்காக? உதா:- சர்க்கார் திரைபடம்.

இப்படியே அனைத்திலும் சென்றால் எதிலும் நிதி அப்படி இருந்தால் தான் நீதிதர்மம் என்பது போல் ஆகிவிடாதா?  மேற்கண்டது அனைத்துமே நம்முடைய தகவல் மூலமாக பலருக்கு நிதி, விளம்பர நிதிபண நிதி etc என்று தானே உள்ளது.

எல்லாவற்றையும் ஓர் ஊது குழல் போல ஊதி டிஜிட்டல் பேனாவில் டிஜிட்டல் தளத்தில் டிஜிட்டல் சத்தத்தில் ஒலி எழுப்பி சங்கே முழங்கு என்பது போல் முழங்கி  ஒலி எழுப்பிவிட்டேன்.     

முகமதியர்களின் சுல்தான் ஆட்சியில் "பராக்என்றால் "வரார்என்று அர்த்தம்பேட்ட பராக் போல வீரா வரார்வைரா வரார்ராச வரார் என்பது.  இது அனைத்தும் ஒன்றாக அதோடு பெயரில் பல PUNCH வசனங்களுடன் இருக்கும் நான் என்றென்றும் உங்களுக்காக நான் எழுத்துக்கள் அடங்கிய ஆர்டிகல்லாக உங்கள் மனதில் வரைய "வரார்என்று வந்து கொண்டே இருப்பேன்.  அதோடு என் கட்டுரை எதுவும் ending அல்ல அது மனதிற்கான Begining ஆகும்.

இது அனைத்தும் ரைட்டா, ராங்கா என தெரியவில்லை. 

Headlines

Silent human speech

https://justicemayel.blogspot.com/2020/11/justicemayelblogspotcom.html