குண்டு குழியில்லா சாலை [THE ROAD]

குண்டு குழியில்லா வழுக்கா சறுக்கா  சாலை [THE STRONG GRIP ROAD] மக்களில் ஒருவன்:-



லஞ்சத்தை விட மோசமானது இந்த முறைகேடுகள். முறைகேடுகள் என்பது கண்ணுக்கு தெரியாமல் நடக்கும் ஏமாற்று வேலை.  இதில் சிறிதாக சிறிதாக பல பேர்கள் நடத்தும் முறைகேடுகளின் தொகையை கூட்டினால் அது ஊழலைவிட மெகா சைஸ் ஊழல் இது தான் என்பது தெரியும்.  ஊழல் என்பது ஒரு விஷயத்தில் பெரிய தொகையாக மக்களுக்கு தெரியாமல் திருடுவது.  அதை கேட்டதும் ,தெரிந்ததும் சாபம் விடுகிறோம்.  அதனால் ஆட்சி மாற்றம் நடைபெற்ற மாநிலங்கள் எல்லாம் உள்ளது.  ஆனால் முறை கேடுகள் என்பது பெரிய அளவில் பேசபடுவதில்லை.  ஆனால் இது தான் நாட்டின் மிகபெரிய சாப கேடு.  அந்நியன் படத்தில் கூறுவது போல் சிறிய சிறிய AMOUNT -என்பது தான் நாட்டின் மிகபெரிய தவறு.  ஒருவன் 10 லட்சம் முறைகேட்டில் ஈடுபடுகிறான்.  அதே போலவே 10 பேர் என்றாலே ஒரு கோடி ரூபாய்அதுவும் தொடர்ந்து ஈடுபட்டு கொண்டிருந்தால் இந்த 10 பேர்களின் தொகையே மூன்று வருடத்தில் மூன்று கோடி ரூபாய்.  10 என்பது 50 ஆனால்.  இது போன்று அனைத்து துறைகளிலும் கணக்கிட்டால் எவ்வளவு தொகை இருக்கும்.  இது அனைத்தும் மக்கள் கஷ்டபட்டு,  உழைத்த பணம்.  இவ்வாறான முறை கேட்டால் தான் இன்று கஜானா காலியாகி , உலக வங்கியில் கடன் பெற்று அதுவும் அதிகமாக போய் கொண்டிருக்கிறது.  ஊழல், வளங்கள் கொள்ளை என்பதை விட மோசமான ஒன்று.  இந்த இரண்டும் வெளியில் தெரிந்துவிடும்.  ஆனால் முறைகேடுகள் என்பது அப்படி அல்ல.  சிறிய AMOUNT என்பதால் யாரும் பெரிதாக கண்டு கொள்ளாததன் விளைவு தான் இன்று நாட்டையே திவாலாக்கி கொண்டிருக்கிறது. 

குறிப்பிட்டு ரோடு போடுவது என்பது இதை கேட்டால் சாதாரணமாக ரோடு போடுவது என்று நினைப்போம்.  அது தான் இல்லை.  இதற்கு மட்டும் எவ்வளவு நிதி ஒதுக்கபடுகிறது என்று தெரியுமா? மாநிலம் முழுவதும் அனைத்து இடத்திலும் போடபடக்கூடிய இன்றியமையா ஒரு துறை.

இதில் நடக்கும் முறை கேடுகள் கேள்விபட்டாலும் பெரிதாக கண்டு கொள்ள வேண்டிய துறையில் கண்டு கொள்ளாமல் இருந்ததன் விளைவு எவ்வளவு மக்கள் உழைத்த பணம் வீணாகிறது தெரியுமா?  மக்கள் வரி பணம் இந்த துறையில் தான் அதிகமாக நேரடியாக செலவிடபடுகிறது மற்ற துறைகளைவிட. 

இவ்வாறு முறைகேடுகள் பண்ணி மக்கள் பணத்தை கபளீகரம் செய்தவர்கள் புண்ணியவான்கள். கஷ்டபட்டு பணத்தை கொடுத்த மக்கள் ஏழைகள்.  இவர்களுக்கு இருக்கும் மகன்கள் முதல் மகள்கள் வரை படிப்பு, திருமணம் என்று எல்லாவற்றிலும் கஷ்டபட்டு தான். ஆனால் ஏமாற்றி முறைகேடுகளை நடத்தியவர்களுக்கு ஜாலியாக அனைத்தும் நடக்கிறது. வாழ்க ஜனநாயகம். இப்படி இருப்பவர்கள் உழைப்பை பற்றியும், ஏமாற்றுவதை பற்றியும், முறை கேடுகளை பற்றியும் பேசுவார்கள். அதுவும் ஏமாற்றி பணத்தை சுருட்டி கொள்ளத்தான் இருக்கும். இவர்களெல்லாம்  இவருக்கு இதை கொடுங்கள் அதை கொடுங்கள் என்று அநீதியாக Command செய்வார்கள் அதை நாம் வாய் பொத்தி கேட்க வேண்டும்.  E.G:- உள்ளாட்ச்சி தேர்தல்-திமுக வழக்கு Etc.

இவர்கள் அனைவரின் குடும்ப உறுப்பினர்கள் இவரை ஏதும்  அசிங்கமாக , கேவலமாக கூறமாட்டார்கள். உழைப்பை பற்றியெல்லாம் பேசமாட்டார்கள்.  நேர்மையை பற்றியெல்லாம் பேசமாட்டார்கள். இந்த ஏமாற்று பணம் புனித பணம். கேட்டால் எங்களுக்கு தெரியாது என்பார்கள். ஆனால் அனைத்தும் எப்படி வந்தது என்றால் அதுவும் தெரியாது. இதிலும் ஏமாற்று வேலை தான்.  ஒரு வேலை இவரையே எந்த கேள்வியும் கேட்காத போது மற்றவர்களை மட்டும் ஏன் இது போல் கூற வேண்டும்?  சரி விஷயத்திற்கு வருவோம்.

 இந்த துறையில் இருக்கும் விதி முறைகள்:-

1) சிமெண்ட் ரோடோ, தார் ரோடோ அது தெருவிற்கும், தேசிய சாலைக்கும் வித்தியாச படும். அதுவும் இத்தனை Cm உயரம் தான் போட வேண்டும் என்றெல்லாம் உள்ளது. இது தெருவிற்கும், தேசிய சாலைக்கும் வேறுபடும்.

2) அது போல் இயற்கையை அழித்து சாலை போட வேண்டும் என்றால் அதற்கும் விதி முறைகள் இருக்கிறது.

3) அதே போல் ரோடு போட்டால் அதன் தரம் இத்தனை வருடங்கள் இருக்க வேண்டும் அனைத்து பருவ காலத்திலும் வெயில், குளிர், மழை.

4) மேற்கண்டவற்றில் ஏதாவது குறைபாடுகள் பெரிதளவிலோசிறிய அளவிலோ இருந்து அல் தேவையில்லாமல் ஏதோ காரணங்கள் சொல்லி ரோடு போட்டாலோதரத்திற்கான  விதிமுறைகளை கடைபிடிக்காமல் இருந்தாலோ, அவர் மீது Compliant வந்தாலோ அவருக்கு எந்த இடத்திலும் Road Contract கொடுக்க கூடாது.  அதோடு அந்த பணத்தையும் அவர் திருப்பி கொடுத்தாக வேண்டும்.

5) ரோடு போடுவதே மக்களுக்கு தான்.  அதனால் மக்கள் அதற்கு தடை சொல்ல கூடாது.  தடை சொன்னால் புரிய வைக்க வேண்டும். ஒரு வேலை மக்களை ஏமாற்ற நினைத்து நடந்ததால் ஏற்று கொள்ளவில்லையென்றால் ரோடு போட கூடாது.  ஏனென்றால் அனைத்துமே மக்களுக்காக தான்.  இது அவர்களுடைய பணம்.  அவர்கள் தான் முதலாளி. முதலாளிக்கு ஊழியம் செய்யும் வேலைக்காரர்கள் தான் இவர்கள் அதனால் தான் இத்தனை விதிமுறைகள்.  இவ்வளவு இருந்தே இவ்வளவு முறைகேடுகள் மற்றும் மக்களை ஏமாற்றுகிறார்கள்.

இது போல் பல விதி முறைகள் இருக்கிறது. 

கட்சி காரர்களுக்கு பெரும்பாலும் இந்த Contract கொடுக்கபடுகிறது.  அப்படி கொடுப்பதே முதலில் தவறு.  சரி அப்படி இருந்தால் தரமாக இருக்கும்.  முறை கேடுகள் நடக்காது என்று நினைத்தால் அப்படி எதுவும் நடப்பதாக தெரியவில்லை. முறை கேடுகள் அதிகமாக நடப்பதே இதனால் தான் என்கின்றனர்.  கட்சி வைத்து நடத்துகிறார்களா (அல்) குற்றம் பண்ணுபவர்களுக்கு அடைக்கலம் கொடுக்கும் அமைப்பு நடத்துகிறார்களா என்றே புரியவில்லை. எந்த குற்றம் மற்றும் முறைகேடு  செய்தாலும் காப்பாற்றும் ஏவல் ஆளா அந்த  தலைவர்கள்?. அதனால் தான் பலர் மக்களை ஏமாற்றி மற்றும் சட்டத்திற்கு புறம்பான முறையில் சம்பாதிக்க வேண்டுமென்றால் அந்த கட்சியில் சேர்.  அந்த தலைவர்கள் உன்னுடைய அடிமை போல எல்லாவற்றிலும் காப்பாற்றுவார்கள் என்று Advice கொடுக்கிறார்கள். இதனால் தலைவர்களுக்கு கெட்ட பெயர் மற்றும் அசிங்கம்.  இவ்வளவு அசிங்கத்துடன் இருக்கும் தலைவர்கள் குற்றம் செய்வது தவறு என்று கூறினாலோ, இவருக்கு இவ்வளவு தான் கொடுக்க வேண்டும் மற்றும் நான் சொல்வதை தான் கேட்க வேண்டும் என்று கூறினால் நான் சம்பாதிப்பதில் பிரச்சனையா? (அல்) உன் கட்சியில் இல்லை என்பது பிரச்சனையா?  அப்படி இது தான் பிரச்சனை என்றால் ஓடி போய் உன் கட்சி Id Card-ஐ கொண்டு வந்து கொடு என்கிறார்கள். காரணம் உன் கட்சியில் இருப்பவர்கள் இவ்வளவு முறைகேடு செய்வார்கள் லட்ச கணக்கில் தவறான முறையில் சம்பாதிப்பார்கள் அதை நீ தவறே நடக்கவில்லை என்று கூறி நீ  கூறுவாய் மற்றும் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வாய். இப்படி இருந்தால் நீ அவருக்கு தலைவரா?  ஏவல் ஆளா? அடிமையா?  இப்படி இருக்கும் தலைவர் சொல்வதை சரியோ , தவறோ யார் கேட்பார்கள்.  உன்னை தலைவராக அல்ல மனிதனாக கூட யாரும் மதிக்கமாட்டார்கள். இவர்களெல்லாம் அடிமைதனத்தை பற்றி பேசுவார்கள் மற்றும் அடுத்தவர்களை திருத்துவார்கள். முதலில் நீங்க திருந்துங்கள் என்பார்கள்.

இதில் தலைவர் என்பது தனக்கு மேல் உள்ளவர்களை அனைவரையும் பலர் தலைவர் என்று தான் அழைக்கின்றனர்.  அவர்கள் மானம், மரியாதை, கௌரவம், செல்வாக்கை அழிக்கின்றனர்அதன் மூலமாக இவர்கள் நோகாமல் செழிக்கின்றனர்.

இவ்வாறு இவர்கள் இருந்துவிட்டு தலைவர்களின் மீது பழியை போட்டுவிடுகிறார்கள்.

தமிழ்நாட்டில் நடக்கும் அத்தனை தவறுகளுக்கும் கட்சியின் தலைவருக்கு பங்கு இருப்பது போல் தோற்றத்தை ஏற்படுத்தி விடுகின்றனர். மாநிலத்தில் நடக்கும் அத்தனையும் தெரிய PRACTICAL-ஆக வாய்ப்பில்லை. அப்படியே தெரிந்தாலும் நீக்கும் இடத்தில் அவர் உள்ளார்.  ஒழுங்காக இருக்கும் இடத்தில் இவர்கள் உள்ளனர்.

இதில் நடக்கும் அலங்கோலங்கள்:-

1) ஒரு சாலை போட்டால் அதன் மதிப்பீடு 25 லட்சத்திற்கு மேல் இருந்தால் அந்த ரோடு போடும் Contract-ஐ பல பேருக்கு கொடுக்கபட வேண்டும்.  அவ்வாறு இருந்தால் ஒருவர் தவறு செய்திருந்தாலும் , மற்ற ரோடு நன்றாக இருந்தது.  இப்போது Road Contractor-கள் பல பேர் பலன் அடையாமல் ஒருவரிடமே கொடுக்கபடுகிறது.  இதனால் மொத்த Road-ம் தரம் இல்லாமல் இருக்கிறது.  அதற்காக இது தமிழ் நாடு முழுவதும் இப்படி தான் நடக்கிறது  என்று கூறவில்லை.

2) இப்போது பல இடங்களில் சாலைகள் குண்டு குழியுமாக இருப்பதற்கு காரணம்.  அந்த சாலைக்கு ரோடு போட்டு விட்டால் இத்தனை வருடங்கள் வரை அது தரமாக இருக்க வேண்டும்.  அதோடு Maintenance வேண்டுமென்றால் பண்ணலாம். ஆனால் அந்த வருடங்களுக்குள் மறுபடியும் அதே இடத்தில் பெரிய தொகை செலவு பண்ணி ரோடு போட கூடாது.

இவ்வாறு தரமற்ற சாலைகளை போட்டு மக்களின் பணத்தை கொள்ளையடித்துவிட்டு , மக்களையும் பல துன்பத்திற்கு ஆளாக்குகின்றனர். அதோடு பல இடங்களில் பலவருடங்களாக அந்த இடத்தில் பெயருக்கு ரோடு இருக்கும். ஆனால் அது ரோடாக இருக்காது. அதற்கு காரணம் அந்த இடத்தில் ரோடு போட்டதாக கணக்கு காண்பித்து மொத்தமாகவே முறை கேடு செய்து மக்களை ஏமாற்றி இருப்பார்கள் Citizen படத்தில் வருவதை போல.  ஏனென்றால் Record தான் பேசும் நீதிமன்றம் முதல் எல்லா இடத்திலும். இது மக்களுக்கு தெரியாது. 

எதிர் கட்சிகள் இதனை எதிர்த்து குரல் கொடுத்தாலும்,  அவர்கள்  பெரிதாக கண்டு கொள்ளமாட்டார்கள்.  அப்போது தான் அவர்களை இவர்கள் கண்டுகொள்ள மாட்டார்கள் என்கின்றனர்.  இது பொய் சரியோ, தவறோ உதாரணத்திற்கு ரோடு போடுவது தமிழ் நாடு முழுவதும் தான் நடக்கிறது.  மொத்தமாக அவர்களே சம்பாதித்து கொண்டு சென்றுவிடுவார்கள்.  இவர்களுக்கு என்ன இருக்கும்?  இது போல் தான் அனைத்திலும்.  அவர் என்ன நீ சம்பாதிக்க பெத்து போட்டார்களா என்ன? இவர்களுக்கு ஒதுக்க?  பணம் கீழே கிடந்தால் அனைத்தையும் தான் எடுத்து செல்வோம். மற்றவர்களுக்கு வேண்டுமென்று யாரும் எடுக்காமல் செல்ல மாட்டார்கள்.  அதுவும் மக்கள் இவர்களுக்கு ஓட்டு போட்டு வந்துள்ளார்கள்.  அவர்கள் வரவில்லை.  அதோடு ஐந்து வருடங்கள் இவர்கள் தான்.  அதோடு அடுத்த தடவை நீங்கள் வருவீர்களா என்றும் தெரியாது.  அதோடு நான் இந்த தடவை வந்துவிட்டேன் நீங்கள் அடுத்த ஐந்து ஆண்டுகள் எடுத்து கொள்ளுங்கள் என்றா கூறுகிறார்கள்இல்லை விட்டுவிடுகிறார்களா? பின் திருமங்கலம் FORMULA எதற்கு?  RESORT-ற்கு கூட்டி சென்றது எதற்கு?  திமுக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்த போது.  உள்ளாட்சி தேர்தலில் திமுக-விற்கு இந்த ஐந்து வருடங்கள் கொடுக்க இவர்கள் விலகி விட வேண்டியது தானே. சரியோ, தவறோ சுயநலத்தை பற்றி எல்லாம் பேச தகுதியில்லாதவர்கள்.

3) அதே போல் போட்ட ரோடு வருடங்களை கடந்து Grip-ஆக வழுக்காமல் அல்   சறுக்காமல்  தரமாக  இருந்தால் ரோடு போட கூடாது.  அதனால் வேண்டுமென்றே ரோட்டை மேடு ஆக்கி போடகூடாது.  ஆனால் வேண்டுமென்றே போட்டுவிட்டோ (அல்) மேட்டை காரணம் சொல்லி அனைத்து இடத்திலும் இந்த அளவிற்கு ரோடு போட வேண்டும் என்று சொல்லி சட்டத்திற்கு புறம்பாக செயல்படுவதாக கூறபடுகிறது.   இவ்வாறாக மொத்த திருட்டு தனத்தையும், ஏமாற்றுதனத்தையும் அரங்கேற்றுகிறார்கள்.  இது போல பல விதிமுறைகளும், அலங்கோலங்களும் நடக்கிறது. இவ்வாறு நடந்தாலோ, அது ஒரு சில வருடங்கள் ஆகியிருந்தாலும் ரோடு போட்ட CONTRACTOR மீது COMPLIANT கொடுத்தால் அவரிடமிருந்து நஷ்ட ஈடு பெறபடும்.

முறைகேடுகள் நடந்தால் முன்னேற முடியாது.

ஊழலைவிட பெரிய சாபக்கேடு இந்த முறை கேடு தான்.

இந்த சிறிய லட்சகணக்கானமுறைகேடுகள் தான் பல கோடிகளாக நாட்டின் கஜானாவையே கபளீகரம் செய்தது.  கஜானா என்பது மக்களின் பணம்.  இவ்வாறெல்லாம் சட்டத்திற்கு புறம்பாக மக்களை ஏமாற்றி சம்பாதித்து விட்டு உழைப்பை பற்றியோ வேறு எதை பற்றியோ இவர்கள் பேச யோக்கிதையோ, தகுதியோ இல்லாதவர்கள்.

முறைகேடுகளை முடித்தால் தான் நாடு முன்னேறும் .  இனியாவது விழிப்போமாக.  நல்ல Channel-கள் , அதிகாரிகள், அரசியல்வாதிகள் இருக்கவே செய்கிறார்கள்.  அதனால் ஒரு துறையில் இவ்வாறு நடந்தால் அதனுடைய அத்தனை ஆதாரங்களையும் , மக்களின் எண்ணங்களையும் எழுத்து பூர்வமாகவும், Video, Photos மூலமாக அதனை அந்த துறை சார்ந்தவர்கள் முதல் அனைவருக்கும் தெரியபடுத்துங்கள்.  V.A.O,  தாசில்தார், Councilor, பேருராட்சி மன்ற தலைவர், எதிர்கட்சி தலைவர், எதிர் கட்சியில் இருப்பவர்கள், Block Development Officer, PWD, COLLECTOR, MLA, MP, CM CELL-என்று EMAIL -ல் ஆதாரத்துடன் அனுப்புங்கள்.  நிச்சயம் நல்லது நடக்கும்.  அனைவரும் கெட்டவர்களும் அல்ல.  அனைவரும் நல்லவர்களும் அல்ல. ஜனநாயகமும்சட்டத்தின் ஆட்சியும், நேர்மையாளர்களின் ஆட்சியும் இன்றும் அனைத்து இடங்களிலும் இருக்கிறது.  இதில் தவறான துறையில் நீங்கள் MAIL அனுப்பினாலும் அதனை சரியான துறைக்கு FORWARD பண்ணும் அதிகாரிகளும் அதோடு இவர்களுக்கு அனுப்புங்கள் என்று அந்த MAIL ID-யை அனுப்பும் நல்லவர்களும் இருக்கவே செய்கிறார்கள்.

மேற்கண்ட அனைத்தும் செவி வழி செய்தியே. உண்மையை உணரவே இக்கட்டுரைமுறை கேடுகள் எவ்வளவு பெரிய  ஒரு நாட்டின்நோய் என்பதை விளக்கவே இக்கட்டுரை.  மற்றபடி எந்த ஒரு கட்சியையோ, தனி நபரையோ குறிப்பிட அல்ல.  இது அனைத்தும் உண்மையா, பொய்யா என தெரியவில்லை.

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு இந்த  சிவபக்தர் எழுதியது இந்த கட்டுரை.

justicemayel.blogspot.com