My Dear reading (கெத்து) & Original Legend Books

இரண்டு தலைப்புகளை வெவ்வேறு தளங்களில் ஒன்றை மையபடுத்திய இரண்டு கட்டுரைகளை  JMN வழங்குகிறது என்பதை பெருமிதத்துடன் தெரிவித்து கொள்கிறது.  HAPPY 95 PACKAGE 2 IN 1.  This is Knowledge வாசகர்களே.

 My Dear Reading Books (கெத்து):-

இதில் புத்தகங்கள் மற்றும் நூல்கள் என்பது எந்த புத்தகமானாலும்நூல்களானாலும் சரி.  அதை நம் டியர் ஆக எண்ணி படித்தால் தான் படிக்க பிடிக்கும்.  படிப்பது அளுப்பாக இல்லாமல் அது ஒரு அனுபவமாக இருக்கும் மற்றும் எளிதில் புரியும் மனப்பாடம் ஆகும். 

எந்த புத்தகமானாலும்நூலானாலும் சரி அதை முதலில் காதலியுங்கள்.  அதன் மீது விருப்பம் கொள்ளுங்கள்.  அதை டியர் ஆக ஏற்று கொண்டால் மனதிற்கு  அது பியர் அடித்தது போல்  இருக்கும்.

நாம் புத்தகத்தை படிக்கும் போது டியர் ஆக எண்ணி படிக்காததால் தான் அது மனப்பாடம் ஆவதில்லை மற்றும் ஒரு சிலருக்கு புரிவதுமில்லை.  பார்க்கிறோம், படிக்கிறோம் ஆனால் மண்டையில் ஏற மறுக்கிறது.  காரணம் இதுவே. 

நூல்கள் என்பது கடமைக்கு படிக்கும் புத்தகமல்ல.  Fashion-ற்காக வாங்கும் பொருள் அல்ல.  அதனை டியர் ஆக எண்ணி அதி காலையில் பிடித்த கவிதை நூல்களை படித்தால் மனது லேசாகும்.  இரவில் பிடித்த கதை நூல்களை வாசித்தால் தூக்கம் வரும்.

 Reading என்பதனை  ஒரு Read dear ஆக மாற்றுங்கள்.  பிறகு படிப்பதில் நாட்டம் அதிகரிக்கும். 

புத்தகங்கள், நூல்கள் என்பது புத்தியையும் திறக்கும்.

நூல்கள் என்பது காதலையும் திறக்கும்.

நூல்கள் என்பது அனைத்தையும் திறக்கும்.

புத்தகத்தை படிப்பதை டியர் ஆக்கி பின் அதை நூலாக்கி மூளையை பட்டமாக்கினால் Exam என்ற பயமும் பறந்து போகும்.  Gold Medal, Distinction எல்லாம்  உங்கள் காலில் பறந்து வந்து விழும்.

புத்தகத்தையும், நூலையும் காதலிப்பதா ?  இவ்வாறு யார் இருந்துள்ளார்கள்?  என்ற கேள்வி எழலாம்.  பல தலைவர்கள் நூல்களை காதலித்துள்ளனர்.  சிறையில் உன் ஆசை என்ன என்று கேட்கும் போது கூட ஒரு குறிப்பிட்ட நூலை படிப்பதே என் ஆசை என்று கூறியுள்ளனர். 

அதோடு படிப்பில் மட்டுமே நாட்டம் கொண்டவர்கள் என்று உள்ளவர்கள் அனைவரும் புத்தகத்தின் மீது நாட்டம் கொண்டவர்களே.  நன்றாக படிக்கும் மாணவர்கள் என்று கூறுபவர்கள் அனைவரும் ஏதோ ஒரு வகையில் குறிப்பிட்ட %  புத்தகத்தை காதலித்ததால் தான் அவர்களால் தினமும் படிக்க முடிகிறது.  மனப்பாடம் செய்ய முடிகிறது.  அதன் மீது தீராத காதல் இருந்தால் நீங்களும் ROBO போல படிக்கலாம்.  ஏனென்றால் நானும் ஒரு காலத்தில் ENGLISH -ல் இருக்கும் புத்தகத்தை மனப்பாடம் செய்ய முடியவில்லை.  ஏனென்றால் நான் TAMIL MEDIUM.  பிறகு தீராத துரத்தலால் நான் வெற்றி பெற்றேன்.  பிறகு புத்தகம் என்பது ரோபோ போல தான்.  நான் காதலித்தேனா என்று எனக்கு தெரியாது.  ஆனால் எதிலும் ஒரு அன்பு இல்லையென்றால் அதில் ஈடுபாடு வராது.

ஓதுவார்கள் என்பவர்களே பக்தி நூலில் திளைப்பவர்கள்.  அவ்வாறு பக்தி நூலை படித்து இறை நிலை அடைய முயற்சிப்பவர்கள் தான் ஓதுவார்கள்.  எழுத்துக்கள் மூலமாக உடலில் உள்ளவற்றை எழுப்பி இறை நிலை அடைவது தான் அவர்களின்  வாழ் நாள் தவம்.  அதை தான் ஓதுவார்கள் செய்கின்றனர்.  இதற்கு என்று ஒரு மிக பெரிய ஆதினமே உள்ளது.  அதன் பெயர் திருவாடு துறை தரும புரம் ஆதினம்.  எழுத்துக்களுக்கு என்று ஒரு வல்லரசு போன்ற மிக பெரிய ஆதினம் இருக்கிறது என்றால் மற்றும் அது உலக அளவில் உள்ளது என்றால் அது திருவாடு துறை தரும புர ஆதினம் ஆகும்.  இவர்கள் எழுத்துக்களுக்காக வாழ்பவர்கள் மற்றும் செலவு செய்பவர்கள்.  எழுத்துக்கள் என்றாலும் நூல்கள் என்றாலும் ஒன்றே. ஒன்றாய் சேர்ந்த எழுத்துக்களின் வடிவம் தான் நூல்கள்.  நூல்களை காப்பாற்றுவது எழுத்துக்களை காப்பாற்றியதற்கு சமம்.  அது எந்த நூலாக இருந்தாலும் சரி.

நூல்களுக்கும் உயிர் இருக்கிறதுஅதனால் தான் காதல் கதைகள் படித்தால் மனது இன்பமாகிறது.  சோக கதைகள் படித்தால் மனதில் சோகம் ஏற்படுகிறது.  பக்தி நூல்கள் படித்தால் மனது பக்தியில் ஆனந்த கூத்தாடுகிறது.  இது அனைத்தும் நடக்கிறதுயென்றால் அது மௌனமாய் பேசுகிறது.  உருவம் இல்லாமல் உயிர்ப்புடன் இருக்கிறது என்று தானே அர்த்தம்.  கள்ள காதல், அமர காதல், நல்ல காதல் என்று பெண் மீது வைக்கின்ற காதலை கொஞ்சம் புத்தகம் மற்றும் நூலின் மீதும் வைப்போம். டியர் ஆக ஏற்று கொள்வோம்.

என்னுடைய படித்த மற்றும் படிக்க போகிற அனைத்து  My Dear BOOKS-ற்கும்அதோடு என்னை போல My Dear Books-ஆக நினைத்து படிக்கும் வாசிப்பாளர்களுக்கும்  சங்கட ஹர சதுர்த்தியன்று ADVANCE  காதலர் தின வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். 

இது போல

நாமும் ஓதுவோம் அன்புடன், காதலுடன் அதை டியர் ஆக எண்ணி.

நம்முடைய நூல்கள் தான் நம்முடைய கெத்து.

நாட்டின் மற்றும் நம்முடைய தலைமுறையின் கெத்து நூல்களே.  கெத்துடன் வாழ வேண்டுமென்றால் இதனை கெத்துடன் பாதுகாப்போம்.  யாழ்ப்பாணத்தில் நாம் துளைத்தது  மற்றும் அதை எந்த கரபோக்கோ எரித்தது என்பது சொந்த காசில் சூன்யம் வைத்து கொண்டது போல தான்.  ஏனென்றால் எண்ணற்ற நம்முடைய தலைமுறையினரின் வீர தீர மற்றும் அனைத்து கலைகளிலும்மருத்துவத்திலும் கெத்தாக வாழ்ந்த நம்முடைய வரலாறுஅடையாளம், கௌரவம் அழிந்தது என்றே அர்த்தம்.  இது ஒரு கேவலமானஅசிங்கமான  நீச்ச வேலை செய்ததற்கு சமமானதே.

காதல் முதல் அனைத்திற்குமான கெத்து நம் நூல்களே.  கெத்து அழிந்தால், தொலைந்தால் நாம் வெத்து என்பதை மறவாதே. 

 திருசிற்றம்பலம்.

 

96→ Original Legend Books (பொக்கிஷம் தான் நூல்கள்)→V.R.S.LINGAM

நூல்கள் என்பது நம்முடைய அடையாளங்கள், கலாச்சாரங்கள், வீரங்கள் etc ஆகும்.  அதோடு இது நம்முடைய  தலைமுறையின் அடையாளமாகும். 

நம்முடன் இருந்தவர்கள் சென்றாலும் செல்லாமல் இருக்க செய்கின்ற ஒரு பொக்கிஷமே நூல்கள் ஆகும்.

நம்முடைய வீரம் முதல் ஆட்சிசமையல் கலை, வீர கலை , மருத்துவ கலை என்கிற சித்த வைத்திய கலை, ஆன்மீக கலைகட்டிட கலை என்று ஒவ்வொரு துறை சார்ந்த Original Legend-களின் வரலாறுகள் மற்றும் அடையாளங்களே நம்முடைய நூல்கள் ஆகும்.

இந்த நூல்கள் தான் நம்மை பெருமை மற்றும் கர்வம் அடைய செய்கின்றன. 

கீழடி என்பதே கீழடி பற்றிய எனது கட்டுரைகள் வந்த பின்னர் அது சமூக ஆர்வலர்கள் மற்றும் அரசின் கவனத்திற்கு சென்று இன்று பல படி நிலைகளை அடைந்துள்ளது. கீழடி என்பதே நம் இந்திய நாட்டின் அடையாளங்களில் ஒன்றாகும்.  இதனை ஒரு மாநிலத்துடன் சுருக்கிவிடவோ, அடைத்துவிடவோ முடியாது.  இது இந்தியாவின் கர்வம், பெருமைகளில் ஒன்றாகும். 

இதனை அத்தனை ஆதாரத்துடன் ஒரு நூலாக வெளியிட வேண்டும்.  அதனை அனைவரும் வாங்கி படித்து நம் தலைமுறையை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்.  இது ஒவ்வொருவரின் தலையாய கடமை ஆகும்.  பிக்பாஸ், CRICKET SCORE, நாடகத்தை பற்றி தெரிந்து கொள்வதைவிட முக்கியமான ஒன்றாகும்.  இவ்வாறான நூல்களை படித்தால் நமக்கு வீரமும் மற்றும் நல்லதொரு MOTIVATION-ஆகவும் இருக்கும்.  இவ்வாறான அடையாளங்களை நம்முடைய அரசும் நாமும் பாதுகாப்போம்.  இவ்வாறாக பல துறைகளில் சாதித்தவர்கள் பல பேர் இருக்கிறார்கள்.  அத்தனையும் மீட்டெடுப்போம்.

இந்த நூல்கள் இருக்கும் வரை நம்முடைய அனைத்துமே இருப்பதாக தான் அர்த்தம்.  அதனை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வோம்.  நம்முடையதையும் சேர்த்து நாம் இல்லையென்றாலும் நம் தலைமுறையினர் உயிரோடு வாழும் நூல்களை பரிசாக கொடுப்போம் மற்றும் அவர்களுக்கு வாங்கி தருவோம். 

எந்த நாட்டில் வாழ்ந்தாலும் அடையாளத்தை இழந்தவன் சொந்த நாட்டில் இருந்தாலும் அவன் அகதியோ (அல்) அனாதைக்கோ சமமானவனே.  ஏனென்றால் உன்னுடைய அடையாளம் எங்கே என்று கேட்டால் நாம் வேறு ஒரு நாட்டின் அடையாளத்தையும், மொழியையும் சுட்டி காட்டினால் அது உன்னுடையது அல்ல.  ஏனென்றால் அது தற்காலிகமானது.  இன்று இருக்கும் நாளை இருக்குமா என்று தெரியாது.  அடையாளம் என்பது பரம்பரை பரம்பரையாய் தொன்றுதொட்டு வருவது.  அது உனக்கு இல்லையென்றாலும் மற்றும் அதை நீயே அழித்துவிட்டாளும் நாமே அனாதையானதற்கு சமம்.  சுருங்க சொன்னால் பொரம் போக்கு போல வாழும் ஒரு வாழ்க்கையாகும்.  யார் வேண்டுமென்றாலும், எந்த நாட்டு காரர்களும் அவர்களுடைய கலாச்சாரத்தை மற்றும் உணவுகளை ETC  நம்மிடம் எளிதில் புகுத்திவிடலாம் பொரம்போக்கு போல வாழ்பவர்களிடம். பிற நாட்டு   அனைத்து வகையான உணவுகளும், உடைகளும்மொழிகளும் நம்முடைய சட்டை போல இருக்க வேண்டும். 

நம்முடைய முன்னோர்களின் மொழிகளும், கலாச்சாரம் மற்றும் பண்பாடுகளுமே நம்முடைய தோல்களாக இருக்க வேண்டும்.  பாம்பு சட்டையை உரித்து போடுவது போல் நாம் இருந்தால் நமக்கென்று பெருமைகளோ, அடையாளங்களோ, மொழி திறனோ, நாட்டின் மீதான கர்வமோ, திமிறோ, கெத்தோபொக்கிஷங்களோ இருக்காது.  ஏனென்றால் அது எதுவும் நம்முடையது இல்லை.

இதில் கூறபட்டுள்ள கருத்துக்கள் ஒரு நாடு சம்பந்தபட்டது அல்ல.  உலக நாடுகள் சம்பந்தபட்டது.  அந்த நாட்டின் அடையாளமாகிய, கர்வமாகிய நூல்களை காப்பாற்றவே இக்கட்டுரை.  நம்மால் அவர்களை தான் காப்பாற்ற முடியவில்லை.  நூல்களையாவது காப்பாற்றுவோமே.  இதனை காப்பாற்றினால் நாம் ஏழையாக இருந்தாலும் கர்வமாக நடக்கலாம்.  நம்முடைய அடையாளங்களை பெருமையாக சொல்லலாம்.    இவ்வாறான பொக்கிஷமான Original Legends Books-களை காப்பாற்றுவோம்.  அடுத்த தலைமுறையையும் பெருமை பட , கர்வம் கொண்டு தலைநிமிர்ந்து வீறு நடை போடுவோமாக.

இவர்கள் தான் உண்மையான ஒவ்வொரு துறை சார்ந்த Original கதாநாயகர்கள்.  இவர்கள் தான் REAL HEROS, ADMINISTRATORS, DOCTORS, ARTITECTURES ETC.  அதோடு சிறந்த ஆன்மீகவாதிகளும் கூட.  ஆன்மீகத்தில் பல பிரிவுகளில் பல அற்புதங்களை நிகழ்த்தி காட்டியுள்ளனர்.  இவர்களை படிக்கும் போது நமக்கு புதிய சிந்தனைகள் வர வாய்ப்புண்டு. 

யாராவது ஏற்கனவே எதிலாவது ஆரம்பித்து வைத்து விட்டால் போதும்.  அதை நாம் பின் தொடரலாம் மற்றும் புதியதை கண்டுபிடிக்கலாம், சாதிக்கலாம்.  அவ்வாறாக அனைத்தையும் நம் முன்னோர்கள் ஆரம்பித்து வைத்து விட்டார்கள்.  இதனை தெரிவிக்க கூடியதே நூல்கள் ஆகும். நாம் செய்ய வேண்டியது ஒன்றே ஆகும் இதனை அனைத்து மக்களிடமும் கொண்டு சேர்ப்பது.  சேர்ப்போமாக நம் தலைமுறையினருக்காக செய்வோமாக.  இதனை எந்த நாட்டில் வேண்டுமென்றாலும் கொண்டு போய் சேர்க்கலாம்.  இன்று ஆப்ரஹாம் லிங்கனை பற்றி எனக்கு தெரிந்ததால் தான் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பது போல நான் இக்கட்டுரையை 2 IN 1 -ஆக இன்று அனுப்புகிறேன்.

இதில் கூறபட்டுள்ள அனைத்தும் எந்த நாட்டையும்மக்களையும் குறிப்பிட அல்ல.  அதோடு இது அனைத்தும் உண்மையா, பொய்யா என தெரியவில்லை.

தமிழ் நாட்டின் நெல் களஞ்சியம் தஞ்சாவூர் என்றால் இந்தியாவின் பொக்கிஷம் நம்முடைய நூல்கள்.

திருசிற்றம்பலம்.

https://justicemayel.blogspot.com/2020/11/justicemayelblogspotcom.html