நித்திரையில்லாத "சென்டிமென்ட்" HeroVillan "The Sentiment"

 

நித்திரையில்லாத நிஜமான "சென்டிமென்ட்" HeroVillan "The Sentiment":- 

வாழ்க்கையில் நம்மை செக்கு போல சுற்றி வருவது இந்த "சென்டிமென்ட்ஆகும்.  இந்த சென்டிமென்ட் ஒன்றிற்கு மட்டுமே ஒரு சென்டிமீட்டர் அளவு கூட செண்டிமென்ட் கிடையாது. ஆனால் இது பலரை செயலிழக்கவும் செய்துள்ளதுமுன்னேறவும் செய்துள்ளதுபோராடவும் செய்துள்ளது.

உலகை இயக்கி கொண்டிருப்பது இந்த "Sentiment"-தான் என்றால் நம்ப முடிகிறதாஆனால் இது தான் நிஜம். இது ஹீரோ போல அதிசயங்களையும் நிகழ்த்தி உள்ளது. வில்லன் போல பலரும் நிந்தனை செய்ய கூடிய அளவிற்கும் நம்மை ஆட்படுத்தி உள்ளது.

இன்று நாம் பாசம்,பற்று நிறைந்த ஒரு மனிதனாக இருக்க காரணம் இந்த சென்டிமென்ட் தான்.  நிர்மூலமும்  இதுவே.  நிம்மதியும் இதுவே.  நம்முடைய முன்னோர்களின் நினைவுகள் கூட ஓர் Sentiment தான். அதனால் தான் இன்று நானே உலக அளவில் கிங் ஆக கூடிய அளவிற்கு என்னால் சம்பாதிக்க முடிந்தது.  கொலைகாரனாக ஆவதிலிருந்து கோயில் கட்டுவது வரை இந்த Sentiment-தான். கலாச்சாரம்பண்பாடு, ஜோதிடம் இன்றும் இருக்கிறதுயென்றால் காரணம் சென்டிமென்ட் தான். சென்டிமென்டா  சரிவரலடா.  சென்டிமென்டா எதுவும் நிலைக்கலடா என்று கூறி கேட்டிருப்பீர்கள். இது நம்மை ஹீரோ போல கெத்தாகவும் இருக்க செய்யும். வில்லன் போன்று நம்மை வெத்து ஆக்கி வத்தல் போல வெயிலிலும் காய வைக்கும்.

நாம் பிறப்பது முதல் இறப்பது வரை Sentiment இருக்கிறது.  செழிப்பாக வாழ்வது முதல் செடிகொடி,விலங்கு வரை Sentiment இருக்கிறது.  செங்குருவி முதல் செந்தாமரை வரை  இது இருக்கிறது.

ஒரு சென்டு நிலம் இல்லாதவர்கள் கூட இருப்பார்கள்.  சென்டிமென்ட் இல்லாதவர்கள் இல்லை. இது செங்கல் மூலமாக கட்டியது அல்ல. இதற்கு நிறம் கிடையாது. இதற்கு தெரிந்ததுயெல்லாம் சரியோ, தவறோ செயல்கள் மட்டுமே.

இன்றும் பல அதிசயங்கள்தலைவர்கள்  நிலைத்து நிற்கிறார்கள்யென்றால் அது சென்டிமென்ட்டால் தான்.  இது நித்திரை கொண்டால் உலகத்தில் எதுவும் இருக்காது. இந்த நிஜம் இருக்கும் வரை உலகத்தில் எல்லாம் இருக்கும்.

விலங்கிற்கான அமைப்பு- Blue Cross, Red Cross Etc. இதற்கு காரணம் விலங்கின் மீது உள்ள பாசம் என்கிற Sentiment.

மரம், செடி, கொடி, காட்டிற்கும் பல சட்டங்கள் உள்ளது. பல இடங்களில் "Potanical Garden" எல்லாம் உள்ளது.  இன்று பனை மரத்தை காப்பாற்ற பல முயற்சிகள் நடை பெறுகிறதுபல இடங்களில் இந்த மரம் விதைக்கபட்டுள்ளது.  காரணம் அதுவும் உயிர் உள்ள ஜீவன் என்கிற சென்டிமென்ட் தான். நம்மால் ஓரறிவு உள்ள இதனையே காப்பாற்ற முடியவில்லையென்றால் நாமெல்லாம் வாழ்ந்து என்ன பயன்சாதனை செய்து என்ன பயன்?  இதைவிட ஓர் பெரிய கேவலம் உள்ளதா என்ன?.

இன்றும் பலவிதமான அரிசிகள், காய்கறிகள், இயற்கை விவசாயம், நல்ல ஆரோக்கியமான திண்பண்டங்கள், உணவு இருக்கிறதென்றால் காரணம் அது மக்கள் ஆரோக்கியமற்று வாழ கூடாது மற்றும் அந்த நல்லவைகள் அழிந்து போக கூடாது என்கிற Sentiment தான்.

இது போன்று தான் கற்காலத்து கட்டிடங்கள் அழியகூடாது மற்றும் அது நம்முடைய அடையாளங்கள் என்கிற சென்டிமென்ட் தான் இன்று அது அதிசயங்களாக நிலைத்து நின்று கொண்டிருக்கிறது.

இது போன்று ஏராளமாக எத்தனையோ இருப்பதற்கு காரணம் இந்த நிஜமான சென்டிமென்ட்டால் தான்.  நல்லாட்சி பல அரசியல் தலைவர்கள் செய்ததற்கு காரணம் பணத்தை கொடுத்துவிட்டு கஷ்டபட்டு கொண்டிருக்கிற மக்கள் மீது இருந்த செண்டிமெட் தான்.

இந்த சென்டிமென்ட்டால் தான் நாம் பல காரியங்களை செய்கிறோம். நித்திரையின்றி நம்முடன் நிழல் போல இது இருக்கும் வரை நிஜங்களுக்கு சாவில்லை.  எழுத்துக்கள் மீதான "சென்டிமென்டால்தான் நூல்கள்கட்டுரைகள், கதைகள் உருவாயின.  நூல்கள் மற்றும் நான் எழுதும் ஆர்டிக்கல்கள் மற்றும் பலர் எழுதும் அனைத்தும் மக்களுக்கு  ஏதோ ஒரு வகையில் பயனைய வேண்டும்.  மக்கள் அறிவுகண் இல்லாமல் கஷ்டபடகூடாது என்கிற சென்டிமென்ட் தான். அதோடு நம்முடைய மொழியை காப்பாற்றவும், நான் பிறந்துவளர்ந்த இம்மாநிலத்து மொழியில் எழுதுவதால் இம்மொழிக்கு பெருமை.  அது நான் செலுத்தும்  நிறைவான ஒரு நன்றி கடன் ஆகும்.  இதுவும் ஒரு வகையில் "சென்டிமென்ட்தானே.  இது ஒரு நிர்வாணமான நிஜம் .  இது செம்மையான செயல்பாடு செய்யும் வரை நிறைவான வாழ்க்கை தான் அனைவருக்கும்.  இது செயற்கை இல்லாத இயற்கையாகும்.

இந்த சென்டிமென்ட் ஆனது  வானத்தில் உள்ள நிலவை போன்றது.  இது பல பேருக்கு வாழ்க்கை முழுக்க பௌர்ணமி போல பிரகாசமானஇன்பமானசந்தோஷமான வாழ்க்கையை தருகிறது.  இது சிலருக்கு அமாவாசை போல எப்போதும்  சோர்வையும், வலியையும், துன்பத்தையும் தருகிறது.  இது சில பேருக்கு பௌர்ணமி மற்றும் அமாவாசை போல சந்தோஷமும், துர்க்கத்தையும் கலந்து தருகிறது. 

மொத்தத்தில் ஹீரோவும் இது தான் வில்லனும் இது தான்இது ஹீரோ போல நல்லது பல செவ்வனே செய்யும்.  வில்லன் போல பல துன்பங்களை கொடுக்கவல்லது.  ஹீரோ போல இது சிரிக்கவும் வைக்கும்.  வில்லன் பலரை அழவைப்பது போல அழவைப்பதும்  இந்த நித்திரை இல்லாத நிஜமே. நீ ஹீரோவா? வில்லனா?  காமெடியனா?  வாழ்க்கை ஒரு மசாலா சினிமா படம் போல இருப்பதும், ஆக் ஷன், ஹாரர் etc சினிமா படம் போல இருப்பதும் மற்றும் அதில் வரும் ஹீரோ, வில்லன்களை போல நம் வாழ்க்கை இருப்பதும் இந்த "சென்டிமென்ட்டால்"தான்.

செத்தா தெரியும் செட்டியார் வாழ்வு என்கிற பழமொழி போல.  எந்த இடத்தில் சென்டிமென்ட் சாகிறதோ அதாவது இல்லையோ அங்கு நிம்மதி மற்றும் செழுமைசெம்மையான வாழ்க்கை இருக்காது.

இது அனைத்தும் நிஜங்களா, நிஜம்யில்லாததா என்று தெரியவில்லை.

திருசிற்றம்பலம் திருசிற்றம்பலம்.

justicemayel.blogspot.com