EMPTY

குப்பை போல ஆழ் மனதில் தேங்கி கிடப்பதை நீக்க தியானம் போல செருக்கில்லாமல் செவ்வனே செய்யுங்கள். "ஏதும் தீதும் கிடையாது"  ["EMPTY"]:-

நான் எழுதிய கட்டுரையில் முக்கியமான கட்டுரையாக கருத கூடிய கட்டுரை இது தான். அதோடு உலகிலேயே முதன் முறையாக குறைந்த

வார்த்தைகளில் அதிக கருத்துக்கள் பொதிந்த கட்டுரை இதுவாக தான் இருக்கும் என்று நினைக்கிறேன்.  MODERN PAINTING போல. இது அனைத்தும் உண்மையாபொய்யா என தெரியவில்லை.

கட்டுரை:-

நம் வாழ்க்கையில் சேமிப்பு இருக்க வேண்டும். ஆனால் மனதில் சேமிப்பு என்பது இருக்க கூடாது. அதுவும் கெட்ட சேமிப்பு நிச்சயமாக இருக்க கூடாது. அதனை களைந்தாலே நம் மனதில் அமைதி நிலவும். 

வாழ்க்கையில் எப்போதும் நாமும் நம் மனதும் ஓடி கொண்டே இருக்கிறது. அதனை நம் வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் ஒரு மணி நேரம் நிறுத்தி வைத்தாலே போதும். அதாவது நம்முடைய வாழ்க்கையில் நடந்த ஒவ்வொன்றை பற்றியும் நினைத்து பார்ப்பது.  இவ்வாறாக சிறிய வயதில் இருந்து இன்று வரை ஒவ்வொன்றையும் நாம் நினைத்து பார்க்கும் போது நம் மனதில் இருக்கும்  அனைத்தும் ஒவ்வொன்றாக நீங்கும். புதிய சிந்தனைகள் உருவானாலும் ஆச்சர்யபடுவதற்கில்லை.  இவ்வாறு நினைவுபடுத்தும் போது பல விஷயங்கள் உங்களுக்கு புரிய ஆரம்பிக்கும். ஆசைகள் நிறைவேறும் மற்றும் அப்போது நாம் பலரை அன்று தவறாக நினைத்து பிரிந்திருப்போம்இன்று அது சரி தான் என்பது புரியும்.  இது போல் நம் மனதில் பல விஷயங்கள் நமக்கே தெரிந்தோ, தெரியாமலோ குப்பை போல தேங்கி  இருக்கும். அது நீங்கள் நேரத்தை ஒதுக்காததால் அது சேர்ந்து கொண்டே இருக்கிறது. அதை நீக்குங்கள்.

மனதை EMPTY ஆக்க வேண்டும் என்றால் நீங்கள் தினமும் ஒரு மணி நேரம் மனதிற்காக  EMPTY-யாக நேரத்தை ஒதுக்குங்கள்.  இது தியானம் பற்றியதல்ல. இவ்வாறாக மாதகணக்கில் அல் வருட கணக்கில் தினமும் ஒருமணி நேரம் செருக்கில்லாமல் செவ்வனே ஒதுக்கும் போது ஒரு குறிப்பிட்ட நேரத்தில் மனதானது EMPTY ஆகும். அதை நீங்கள் உணர்வீர்கள்.  இதில் ஏதும் தீதும் கிடையாது.

justicemayel.blogspot.com